விசுவாசமும் அதற்கெதிரான அறிவுக்கூர்மையும் Jeffersonville, Indiana, USA 62-0401 1சகோதரன் நெவில், உங்களுக்கு நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. காலை வணக்கம். நண்பர்களே, காலை வணக்கம். கர்த்தருடைய வீட்டிற்கு வந்துள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி. சற்று முன்னர் ஒரு வயதான போதகருக்கு ஜெபம் ஏறெடுக்க நான் அழைக்கப்பட்டேன். அவருக்கு மயக்கம் போன்றதான ஒன்று ஏற்பட்டு விட்டது. அவருடைய உடல்நிலையில் எந்த ஒரு கோளாறும் இல்லை; அவர் கர்த்தருடைய வயது சென்ற பரிசுத்தவான் ஆவார். நான் இங்கே வந்துக் கொண்டிருந்தபோது சாத்தான் என்னை வாந்தி எடுக்க வைத்து வியாதிக்குள்ளாகத் தள்ள முயற்சித்தான், அப்பொழுது நான் “நாம் ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்” என்றேன். ஆகவே அவர் தான் சகோதரன் காகின்ஸ் ; இங்கே கூடாரத்தில் நாங்களெல்லாரும் அவரை நன்றாக அறிவோம். அவர் கரோலினாவிலிருந்து வருகின்றார். அவர் மிக மிக நோய்வாய்ப்பட்டு எழுந்து நின்று சுய நினைவு இழந்து விழுந்து விட்டார். சரீரப்பிரகாரமாக எந்த ஒரு கோளாறும் அவருக்கு இல்லை; ஆகவே அது பிசாசானவன் அவரை சோதிக்க முயற்சித்துக் கொண்டிருத்தல் ஆகும். அவன் தொல்லைக்குள்ளாக்குவதில் மகத்தானவன், அதில் மிகச்சிறந்தவனும் கூட. சபைக்குச் சென்று கொண்டிருந்த அந்த வயதான சகோதரியைக் குறித்த கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள், அச்சகோதரி யாரைக் குறித்தும் கெட்டதாகக் கூறவேமாட்டார்கள். “பிசாசைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?” என்று கேட்ட பொழுது, அச்சகோதரி, “உம், அவன் அருமையான ஒரு எதிராளியானவன்” என்று கூறினார்கள். அவன் அந்த விதமாகத்தான் இருக்கிறான். 2இந்த வாரத்தில் மறுபடியுமாக நாம் கர்த்தருடைய வீட்டில் இருந்து, கர்த்தராகிய இயேசுவின் வருகைக்காக காத்திருப்பதில் நமக்கு மகிழ்ச்சியானதாகும். ஆகவே இப்பொழுது, இக்காலையில் இரத்தத்தினால் பாதுகாக்கப்படுதல் என்ற பொருளின் பேரில் பேசலாம் என்றிருந்தேன்; ஆனால் பரிசுத்த ஆவியானவர் அப்பொரு ளிலிருந்து என் மனதை மாற்றினது போல காணப்பட்டது. ஆகவே போதிக்கப்படத்தக்கதாக வேறொரு பொருளை நான் கொண்டிருக்கின்றேன், ஏனென்றால் . . . அதற்குப் பிறகு . . . கடந்த இரவில் நான் “இரத்தத்தினால் பாதுகாக்கப்படுதல் என்பதான ஒரு தலைப்பிலிருந்து வேறொன்றுக்கு ஏன் அவர் என் மனதை மாற்றினார்?'' என்றேன். அந்தப் பொருள் எங்கிருக்கும் என்பதை நீங்கள் புரிந்துக் கொண்டிருப்பீர்கள் ; இஸ்ரவேல் இரத்தத்தின் கீழாக இருந்து வாக்குத்தத்தத்திற்கு அணிவகுத்து செல்லுதல். உங்களுக்குப் புரிகின்றதா? அதை நான் வேறொரு சமயம் பேசக்கூடும். 3இங்கே சில காலத்திற்கு முன்னர் நான் கண்ட ஒரு சொப்பனத்தை அப்போது நினைவு கூர்ந்தேன், அந்தச் சொப்பனத்தில் நான் கூடாரத்தில் ஆகாரத்தைச் சேமித்து வைத்துக்கொண்டிருப்பதாக அமைந்திருந்தது. (பாருங்கள்?) ஒரு சில வாரங்களுக்கு முன்பு அந்தச் சொப்பனம் எனக்கு வந்ததை எத்தனைப்பேர் நினைவில் கொண்டுள்ளீர்கள்? அதனுடைய வியாக்கினத்தை உங்களுக்கு நான் அளிக்க முடியாதிருந்தது, ஆனால் இப்பொழுது அதன்வியாக்கியானத்தைக் கேட்க உங்களுக்கு விருப்பமானால், அதற்கு நீண்ட நேரமாகாமல் இருந்தால் அதை நான் உங்களுக்குக் கூறுவேன். 4அர்த்தமுள்ள ஒரு சொப்பனத்தை அடிக்கடியின்றி நான் எப்பொழுதாவது காண்பதுண்டு. வழக்கமாக நான் படுக்கைக்கு நேரம் கடந்து தான் செல்வேன், சிறிது நேரம் கழித்து விழித்துக்கொள்வேன், நரம்பு தளர்ச்சியுற்றோ அல்லது சோர்ந்து போய் இருப்பேன் ; நீங்களும் சொப்பனம் கண்டு, பிறகு உறங்கி திரும்பவும் சொப்பனம் கண்டு, மறுபடியுமாக விழித்துக்கொள்வீர்கள். அது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும், என்னைப்போன்று நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் அதை அறிவர். நான் சகோதரன் உட் மற்றும் சகோதரன் சாத்மனுடன் வெளியே சென்றிருந்தேன், அப்பொழுது கர்த்தர் மக்களுக்கு ..... வியாக்கியானத்தை .... இது அரிசோனாவிலுள்ள டூசானில் சம்பவித்தது. ஒவ்வொரு நபருடைய காரியங்களில் கர்த்தர் பரிபூரணமாக சொப்பனங்களுக்கு வியாக்கியானங்களை அளித்துக்கொண்டிருந்தார். 5இப்பொழுது, நீங்கள் பாருங்கள், யாராவது ஒருவர் ஒரு சொப்பனத்தைக் குறித்துக் கூறும்போது, அதன் வியாக்கியானத்தை நான் அளிக்க எனக்கு இருக்கும் ஒரே வழி, நான் அந்த சொப்பனத்தை அப்படியே தரிசனத்தில் பார்ப்பதேயாகும். இங்கே இருக்கின்ற அநேகர் இதை அறிவீர்கள், உங்களில் சிலர் சொப்பனங்களை என்னிடம் கூறுகையில், அந்த சொப்பனத்தில் காணப்பட்ட எல்லாவற்றையும் முழுவதுமாக என்னிடம் கூறுவதில்லை ; ஆனால் நான் அச்சொப்பனத்தை மறுபடியுமாக தரிசனத்தில் காண்கையில் நீங்கள் என்னிடத்தில் கூறாமல் விட்டுவிட்ட காரியங்களை நான் உங்களுக்குக் கூறுவேன். பாருங்கள்? அதை நீங்கள் மறுபடியுமாக காண வேண்டியதாயிருக்கும், பிறகு தேவன் அதின் வியாக்கியானத்தை உங்களுக்குக் கூறுகிறார். ஆகையால், சில சமயங்களில் அது உங்களை புண்படுத்துவதாக இருக்கும், சில சமயங்களில் அந்த வியாக்கியானம் சொப்பனம் கண்ட நபருக்குக் கடினமானதாக இருக்கும். அவர் கொண்டிருக்கின்ற கருத்துக்கு முரண்பாடானதாக இருக்கும்; ஆனால் நீங்கள் உத்தம மனதுள்ளவர்களாக இருக்க வேண்டும், ஏனெனில் அது கர்த்தருடைய வார்த்தையாகும். பாருங்கள்? ஏனெனில் அவர்கள் அதைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு போதும் ..... சொப்பனத்தின் வியாக்கியானங்கள் எப்பொழுதும் சரியானதாகவே இருக்கும்படியாக தேவன் என்னிடமாக அன்புள்ளவராக இருக்கின்றார். 6ஆகவே அன்றைய இரவு நான் உறங்கச் சென்றேன், அப்பொழுது நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன். அப்பொழுது நான் நினைத்தேன்... அநேக வருடங்களுக்கு முன்னர் நான் ஒரு நபருடன் குத்துச்சண்டையிடுவதுண்டு. உங்களில் பழங்கால நபர்கள் ..... அங்கே கதவண்டையில் நின்று கொண்டிருக்கின்ற சகோதரன் ராய் ஸ்லாட்டரைக் குறித்து இப்பொழுது தான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் நம்மோடே இருப்பது, இங்கே சபையில் இருக்கின்ற மூத்த அங்கத்தினர்களில் அவரும் ஒருவர் என்று நான் யூகிக்கின்றேன். சகோதரன் ஸ்லாட்டர் சபையின் வயது மூத்த அங்கத்தினர்களில் சரியாக அவரும் ஒருவராவார் என்று யூகிக்கிறேன். நான் ..... நான் அவரைக்குறித்து பேசிக்கொண்டிருக்கையில், ராய் ஸ்லாட்டரைக் குறித்து மக்கள் அறியாதிருக்கின்ற அநேக நல்ல காரியங்கள் உண்டு. அது சரியே, அவர் என்னுடைய சகோதரன், அவர் மரித்த பின்பு, அவருக்கு ஒரு முழு மலர் வளையம் வைப்பதைக் காட்டிலும் இப்பொழுதே அவருக்கு ஒரு சிறு பூச்செண்டு அல்லது மலர் மொட்டை நான் கொடுப்பேன். அது சரி, அவரைக்குறித்து அநேக நல்ல காரியங்கள் உண்டு. சகோதரன் ராய் எனக்கு மிகவும் நெருங்கிய சகோதரனாக இருந்து வருகின்றார், அவரும் அவருடைய குடும்பத்தாரும் கூட. அவர்கள் அங்கே வசிக்கின்றனர். அவர் அந்தச் சிறு குடும்பத்திற்காக கடுமையாக உழைத்தார், அவருடைய பிள்ளைகளை அருமையாக வளர்த்தார். அவருடைய மகன்கள், மகள்கள் எல்லாரையும் எனக்குத் தெரியும். அவருடைய சிறு பையன் மரித்த போது அந்தப் பையனுடைய அடக்க ஆராதனையில் நான் பிரசங்கித்தேன். 7ஒரு காலத்தில் இங்கே சபையில் ஒரு ஆள் வேலை செய்துக் கொண்டிருந்ததை நான் நினைவு கூருகிறேன். அவன் அந்த வேலையைச் செய்ய வேண்டியவனாக இருந்தான், அவன் ஒரு தச்சு வேலை செய்பவனாவான். எங்களிடம் அவ்வளவாகப் பணம் இல்லை , அவன் இங்கே உள் (Interior) வேலையைச் செய்ய வேண்டியவனாக இருந்தான், யாரோ ஒருவன் வேலை செய்ய விருப்பங்கொண்டு வேலைக்கு வந்தான், ஆனால் அவன் வேலை செய்யவில்லை. அவன் வந்து அரை மணி நேரம் தான் வேலை செய்தான் என்றும் வேலை செய்யும் போது தன் கால் காயமுற்றது என்று கூறினான், அந்த காயத்திற்கு எங்களிடம் பத்தாயிரம் டாலர்கள் நஷ்ட ஈடு கோரினான். (சபைக்கு எதிராக அவன் நஷ்ட ஈடு வழக்கைக் கொண்டு வந்தான். ஆம், அப்போது எங்களிடம் ஒன்றுமே இல்லை. அவர்கள் அந்த வழக்கிற்கான தீர்ப்பைப் பெறும் வரைக்கும் அதைக்குறித்து எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. பாருங்கள்? அவர்கள் வழக்கு தொடர்ந்த னர்.... அந்த மனிதன், அவனுக்கு காப்பீடு (insurance) இல்லாதிருந்தது, ஆகவே அக்காரியமானது எங்கள் மீது விழுந்தது, நாங்கள் பணம் செலுத்த வேண்டிய அவசியமே இல்லை . 8அந்த இரவை நான் மறக்கவே மாட்டேன், அங்கே பின்புறத்தில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம், ராய் தன்னுடைய பாக்கெட்டிற்குள்ளாக கையை வைத்து, ஒரு பழைய (சகோதரன் ராய், இப்படிக் கூறுவதற்கு மன்னிக்கவும்) ... ஒரு பழைய, கிழிந்த நிலையில் இருந்த சிறு குறிப்புப் புத்தகத்தை எடுத்து, அதில் தான் செய்த துணி சரக்குகள் ஏற்றிச்செல்லும் வேலை மற்ற வேலைகளைச் செய்து அதினால் கிடைத்த சில பண நோட்டை எடுத்து, “சரி, சகோதரன் பிரன்ஹாம், நான் இதை அளிக்கிறேன்” என்றார். அவருடைய சகோதரியான, வயது சென்ற ஈவ்லினா அவர்கள், (இப்பொழுது இங்கே எங்கோ உட்கார்ந்து கொண்டு இருக்கலாம்), அவர்கள், “சகோதரன் பிரன்ஹாம், என்னுடைய சிறு பழைய வீடு முன்னூறு டாலர்கள் மதிப்பு மாத்திரம் கொண்டது, ஆனாலும் அதை விற்று ஏதாவது செய்யலாம்'' என்று கூறினார்கள். பாருங்கள்? அது உத்தமமான ஒன்றாகும், என்னைப் பொறுத்தவரையில் உண்மையான பொருளுதவியாகும். அது ... என்னைப் பொறுத்தவரையில் உத்தமமான ஒன்றாகும். மேலும் நான் நினைவுகூருகிறேன், அச்சம்பவத்திற்குப் பிறகு சிறிது காலம் கழித்து, நான் வெளியே என் முதல் கூட்டத்தை நடத்தினேன், என்னுடைய முதல் பெரிய கூட்டங்களை நான் செயிண்ட் லூயிசில் நடத்திக் கொண்டிருந்த போது, ஒரு தந்திச் செய்தி வந்தது, அதில், “என் சிறிய மகள் மரணத்தருவாயில் படுத்துக் கிடக்கின்றாள். உடனடியாக வரவும். சகோதரன் ஸ்லாட்டர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நான் உடனடியாக நடந்து சென்று என் துணிகளை சூட்கேஸில் வைக்கத் துவங்கினேன். அவ்வளவு தான் நான் செய்ய வேண்டியிருந்தது; அவருடைய கோரிக்கையை என்னால் தள்ளிப்போடவே முடியவில்லை, நான் உடனடியாகப் புறப்பட்டேன். நான் வீட்டுக்கு வந்தேன், அறைக்குள்ளாக நடந்து சென்றேன், அங்கே நியூ ஆல்பனியில் உள்ள கத்தோலிக்க மருத்துவ மனையில், அதிலிருந்த செவிலியர்கள், இந்தச் சிறு பெண் பிள்ளை பிழைக்காது என்று கைவிட்டு விட்டனர். ஆகவே நாங்கள் அறைக்குள்ளே நடந்து சென்றோம், கர்த்தராகிய இயேசு அவளைச் சுகப்படுத்தினார். அங்கே அவள் ...? ...பாருங்கள்? தண்ணீரின் மேல் ஆகாரத்தைப் போடுவது போல, அது என்றாவது ஒரு நாளிலே உன்னிடமாகத் திரும்பி வரும். 9நான் பேச எத்தனித்ததை விட்டு அப்பால் சென்று விட்டேன், ஆகவே திரும்பவுமாக துவக்கத்திலிருந்து பார்ப்போம். நான் குத்துச்சண்டை விளையாட்டில் ஈடுபடுவது வழக்கம், ஒரு நபர் இருந்தார், (இங்கே இப்பட்டினத்தில் இருக்கிறார், அந்த நபரின் நிலைமை பரிதாபமானது, இப்பொழுது மிக அதிகக்குடிப்பழக்கத்தில் சிக்கியிருக்கின்றார்; அவருடைய மகன்களில் ஒருவன் காவல் துறையில் இருக்கின்றான்) அவருடைய பெயர் ஸ்மித், ஜார்ஜ் ஸ்மித் ; அவரை “ஆறு வினாடி ஸ்மித்” என்று அழைத்தனர். அவர் எனக்குக் குத்துச்சண்டை பயிற்சி அளித்தார். அது இப்பொழுதுள்ள பொன் குத்துச்சண்டை கையுறை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டதற்கு முன்பாகவே நடந்த ஒன்று. நாங்கள் இங்கே அரசாங்க அரங்கத்தில் இருந்தோம். அதில், நான் பார்த்ததிலேயே மிகவும் கரடு முரடான கடினமான நபராவார். அவர் எனக்கு ஒரு அடி மாத்திரமே கொடுப்பார், நான் அப்படியே அந்தரத்தில் சுழன்று விடுவேன். நான் எழுந்து நின்று “நீங்கள் என்னை இவ்வளவு கடினமாக அடிக்கக் கூடாது. என் மூச்சு நின்றுவிடுமளவிற்கு அடித்துக் கீழே தள்ளி விடுகிறீரே” என்று கூறினேன். பாருங்கள்? அதற்கு அவர், “இதோ பாருங்கள், பில்லி, நான் சொல்வதைக் கேளுங்கள், நீங்கள் எவ்வளவாகப் பயிற்சிப் பெற்றவராக இருந்தாலும் சரி, எவ்வளவாக உடற்பயிற்சி விளையாட்டுகளில் வல்லவராக இருந்தாலும் சரி, உங்கள் உடல் அளவிற்கேற்றாற்போல எவ்வளவு வலிமையுள்ளவராக நீங்கள் இருந்தாலும் சரி, அந்த விதமாகக் குத்தப்படும் ஒரு குத்து இரத்தத்தையே நிறுத்தி விடும்” என்றார். (சகோதரன் குத்துச் சண்டையில் குத்துவதை செய்து காட்டுகின்றார் - ஆசி) மேலும் அவர், “இப்பொழுது நீங்கள் என்னை வெறுக்கலாம், ஆனால் நீங்கள் அந்தக் குத்துச் சண்டை வட்டரங்கில் நிற்கும் போது நானளிக்கும் பயிற்சியை மெச்சுவீர், பயிற்சியில் உங்கள் உடம்பு உடனடியாக அடியை எதிர்க்க வலிமையைப் பெறும். நீங்கள் கையால் குத்தப்படும் போது, உடனடியாக நீங்கள் தரையில் விழுந்து விடுவீர்கள்; அப்பொழுது போட்டியின் நடுவர் எண்களை கூறத்தொடங்குவார். ஆனால் உங்கள் உடம்பு பயிற்சியினால் உறுதியாக்கப்பட்டால் அந்த குத்துகளை உங்களால் தாங்க இயலும். ஒரு பலமான குத்து உங்களுக்கு விடப்படும் போது நீங்கள் உடனடியாக திருப்பித் தாக்க தயாராகி விடுவீர்கள், உடனடியாக எழுந்து மறுபடியுமாக நிற்பீர்கள். குத்துச்சண்டை வளையத்திற்கு வெளியேயும் கூட நீங்கள் குத்தித் தள்ளப்படும்போது உடனடியாக உள்ளே குதித்து வருவீர்கள். நீங்கள் அந்தப் பயிற்சியைப் பெற்றுத் தானாக வேண்டும், புரிகின்றதா?” என்றார். அப்பொழுது தான் அவர் என்னை பலமாகக் குத்தி வளையத்தை விட்டே வெளியே போட்டார். அவர் என்னைக் கொன்று போடும் அளவிற்கு அடிக்க விரும்பினார். அவர் என்னை விட முப்பது அல்லது நாற்பது பவுண்டுகள் எடை அதிகமாக இருந்தார், அவராலே.... அவர் ஒரு குத்துச்சண்டை வீரராக இருந்தார்; நான் ஒரு மாணவனாக மாத்திரமே இருந்தேன். ஆகவே அவர் என்னை ஏறக்குறைய கொன்று போடும் அளவிற்கு அடித்துக் கொண்டே இருந்தார். அவர், “நீங்கள் குத்துச்சண்டை வட்டரங்கில் நிற்கும் போது இப்பயிற்சியை மெச்சுவீர்கள்” என்றார். பாருங்கள்? அது உண்மையென்பதை நான் கண்டேன். 10இராணுவத்தில் சார்ஜெண்டுகள் வீரர்களுக்கு கடுமையான பயிற்சி அளிப்பதைக் குறித்து நான் கேட்டிருக்கின்றேன். அவர்கள் அந்த சார்ஜெண்ட்டை வெறுப்பார்கள் ; ஆனால் யுத்தம் வரும்போது அவனை அவர்கள் நேசிப்பார்கள். ஏனென்றால் அந்த அதிகாரி அளித்த கடுமையான பயிற்சி அப்பொழுது உதவுகின்றது. அந்த விதமாகத் தான் நானும் கிறிஸ்தவர்களுக்கு பயிற்சி அளிக்க முயன்று கொண்டிருக்கிறேன். உங்கள் தலையைக் குட்டையாக “பாப் கட்டிங்” வெட்டிக் கொள்ளாதீர்கள்; முகத்திற்கு ஒப்பனை, மேக்கப் போட்டுக் கொள்ளாதீர்கள் ; இதைச் செய்யாதீர்கள் ; கடின பயிற்சியை மேற்கொள்ளுங்கள். நான் பாதையின் முடிவில் உங்களை நான் கொண்டு வரும் போது அதை நீங்கள் மெச்சுவீர்கள். பாருங்கள்? அந்தப் பயிற்சியைச் சரியாக எடுத்துக்கொள்வது - நீங்கள் ஒருக்கால் ..... சரியாக நாம் வார்த்தையோடு தரித்திருப்போமாக. அது கடுமையான ஒன்றாக இருக்கலாம். ஸ்தாபன பேதங்கள் துண்டு துண்டாக வெட்டும், ஆனால் நீங்கள் பாதையின் முடிவில் வரும் போது இப்பயிற்சியை நீங்கள் மெச்சுவீர்கள். பாருங்கள்? நீங்கள் அந்த புஸ்தகத்துடனே தரித்து நின்றீர்கள். 11ஆகவே என் மனைவி கரத்தைக் கொண்டு என்னை தாங்கிப் பிடித்தாள், நாங்கள் மேலே நடந்தோம் ; ஆகவே ஜார்ஜ் ஸ்மித் (இப்பொழுது அவர் தலை நரைத்துப் போயிருக்கின்ற ஒரு மனிதனாக உள்ளார் ; அவர் என்னை விட ஏழு அல்லது எட்டு, பத்து வருடங்கள் வயது மூத்தவர் என்று நான் யூகிக்கின்றேன்) அவர் குத்துச்சண்டை வளையத்தில் திரும்பவும் வந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தார். அங்கே வந்த இந்த வாலிபர்களை, பரந்த தோள்களையுடைய அந்தப் பையன்கள், அவருக்கு ஈடாகக் குத்துச்சண்டை போட அந்தப் பையன்களால் முடியவில்லை . அவர்கள் ...... அவர் அந்தப் பையன்களை ஒரு நிமிடத்தில் அடித்து வீழ்த்தி விடுவார். ஒரு வாலிபப் பையன் “அந்த வயதான மனிதனை அடித்து வீழ்த்தி விட என்னால் முடியும் ; என்னால் முடியும் என்று நானறிவேன்'' என்று கூறினான். ஆகவே அந்தப் பெரிய உறுதியான உடலைக் கொண்டிருந்த அவன் குத்துச்சண்டை வளையத்திற்குள் குதித்தான் ; அரை நிமிடம் கூட அவனால் நின்று சண்டையிடமுடியவில்லை. அவன் வளையத்தை விட்டு வெளியே வந்து, ”அந்த பலம் வாய்ந்த குத்து எங்கிருந்து வருகிறது என்று கூட எனக்குத் தெரியவில்லை , நிச்சயமாகவே அவர் ஒரு வீரம் மிக்கவர்“ என்று கூறினான். 12அப்பொழுது, சொப்பனத்தில் நான் என் மனைவியை நோக்கிப் பார்த்தேன், நான், “மனைவியே, அந்த நபர் தான் என்னுடைய முதல் பயிற்சியை அளித்தவர் என்பதை நீ அறிவாயா” என்று கூறினேன். ஆகவே அப்பொழுது (சொப்பனங்கள் விசித்திரமானவை என்று நீங்கள் அறிவீர்கள்), நான் ஒரு பெரிய கடல் அருகே வந்தேன், அது மிகவுமாக அலைகளால் கொந்தளித்துக்கொண்டிருந்தது. அப்பொழுது அந்த படகோட்டி ... (இப்பொழுது, என் மனைவியாகிய மேடா அப்பொழுது என்னுடன் இருக்கவில்லை) மேலும் இந்த சொப்பனத்தில், அந்த படகோட்டி அங்கே வந்தார். சுமார் இரண்டரை, மூன்று அடி நீளமுள்ள கைத்துடுப்பால் இயக்கப் பெறும் ஒரு சிறு படகை என்னிடமாக அளித்தார் ; அப்பொழுது அவர் கூறினார் ..... அப்படகு மிக வெள்ளையாக இருந்தது, 'பிளாஸ்டிக்' கால் மாத்திரம் உருவாக்கப்பட்டு வெள்ளையாக இருந்தது. அப்படகோட்டி “இதோ உன்னுடைய படகு” என்றார். நான் “ஓ, இதைக்கொண்டு நான் கடந்து செல்ல முடியாதே” என்றேன். அதற்கு அப்படகோட்டி, “உம், இந்த வழியாக மேலும் கீழுமாக மணிக்கு ஐம்பது மைல் வேகத்தில் இது ஓடும்” என்றார். அதற்கு நான், “இது ஒருக்கால் கடற்கரையருகில் மேலும் கீழுமாகச் செல்லலாம், ஆனால் அங்கே கடலில் அது செல்லாதே” என்றேன். பாருங்கள்? நான் ..... அதற்கு அந்தப் படகோட்டி, “சரி, அவர்களோடு செல்” என்றார். நான் பார்த்த போது நான் சொப்பனத்தைக் கண்ட அந்த இரவு பொழுதில் என்னோடு இருந்த அந்த இரண்டு சகோதரரான, சகோதரன் உட் மற்றும் சகோதரன் ஃபிரட் சாத்மன் அங்கே உட்கார்ந்திருந்தனர். அவர்கள் ஒரு சிறு பச்சை நிறப்படகில் நிறைய கயிறுகள், கூட்டம் நடத்தப் பயன்படும் கூடாரங்கள், கூடாரக் கயிறுகளை நிரப்பி அதில் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் அதில் உட்கார்ந்திருந்தனர். அந்தப் படகோட்டி “ அவர்களோடு செல்” என்றார். நானோ, “அவர்களுக்குப் படகு கூட இயக்கத் தெரியாதே, அவர்கள் படகோட்டிகள் அல்லவே” என்றேன். அதற்கு அவர், “அது எனக்குத் தெரியும் .... ” என்றார். நான், “நான் படகோட்டி, இந்த சிறு படகைக் குறித்து எனக்குத் தெரியும். அதை எப்படிக் கையாளுவது என்று கூட எனக்குத் தெரியும்., ஆனால் அவர்களாலே அதில் செல்ல முடியாதே, எப்படியாயினும் அந்த விதமாக நான் செல்ல மாட்டேன்” என்று கூறினேன். அவர், “சரி, அவர்கள் உன்னை நேசிக்கின்றனர். நீ இங்கே திரும்பிச் சென்று சேமித்து வைக்கலாம் அல்லவா?” என்றார். 13ஆகவே நான் திரும்பிச் சென்றேன், நாங்கள் ஏற்கனவே சென்றிருந்த அந்த சிறு இடம் (கிளாண்டிகே என்று அழைக்கப் பட்ட ஒரு சிறு இடம், நாகரீக மக்கள் நடமாட்டத்திற்கு சுமார் நாற்பது மைல்களுக்கு அப்பால் அந்த இடம் இருந்தது, பண்ணையில் பணிபுரிபவர்கள், மற்றவர்களுக்கு ஒரு சிறு பண்டகசாலை இருந்தது). அந்த இடம் கிளாண்டிகே போன்று இருந்தது ; ஆனால் பார்த்த போது இக்கூடாரமாக இருந்தது. நான் சரியாக இந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தேன், நான் இதுவரைக் கண்டதிலேயே மிக அழகிய ஆகாரத்தால் நிறைந்த பெரிய பீப்பாய்களை கொண்டு வந்து வைக்கும் படிக்கு உரத்த சத்தமாய் அழைத்துக் கொண்டிருந்தேன். முள்ளங்கிக் கிழங்குகள் மூன்று அடி நீளத்திற்கு காணப்பட்டது, கிழக்கு கீரைகள், காய்கறிகள், உருளைக் கிழங்குகள், மற்றும் எல்லாக் காய்கறிகளும் இருந்தன. அவர், “அவைகளை அதிகளவில் சேமித்து வை”, என்றார். பாருங்கள்? ஆகவே நான் அங்கே நின்று கொண்டு அவைகளைச் சேமித்து வைத்துக்கொண்டிருந்தேன், அப்பொழுது நான் விழித்துக் கொண்டேன். என்னால் அதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை ; அது ஒரு சாதாரண சொப்பனம் என்று நினைத்து அப்படியே விட்டு விட்டேன். சகோதரன் உட் மற்றும் அநேகரை இந்த சொப்பனத்தின் அர்த்தத்தைக் கேட்டு தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தேன், ஆகவே இதோ அதன் வியாக்கியானம். உங்களிடம் அநேக முறை நான் கூறியுள்ளவாறு நானும் அதற்காக காத்திருக்க வேண்டி இருந்தது. காரியம் சரியாக அமைவதற்கு முன்னர் சில குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்தாக வேண்டும். 14இதோ அதன் வியாக்கியானம் ; பாருங்கள் அவர்கள் ..... நாங்கள் வெளிநாட்டு ஊழிய அழைப்பிற்காக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தோம். என்னுடைய நெருங்கிய நண்பரான சகோதரன்மைனர் ஆர்கன்பிரைட், பாலஸ்தீன பிரயாணத்திற்குத் தேவையான என்னுடைய மற்றும் என் மனைவியினுடைய பிரயாண செலவுகளை அளிக்கவிருந்தார். ஜூன் மாதத்தில் ஊழியத்திற்காக ஆப்பிரிக்கா செல்லும் வழியில் நாங்கள் ஸ்விட்சர்லாந்துக்கு செல்ல எத்தனித்திருந்தோம். என் மனைவியும் ரெபேக்காவும் தாங்கள் ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் வழியாக பாலஸ்தீனாவிற்கு செல்லப்போகிறோம் என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சிப் பூரிப்பு அடைந்தனர். நான் ஆப்பிரிக்க ஊழியத்தை முடித்து திரும்பி வந்து அவர்களையும் பிரயாணத்தில் சேர்த்துக் கொள்ளும் வரைக்கும் அவர்கள் அங்கே காத்திருக்கும்படிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆகவே அவர்கள் எல்லோரும் மிகுந்த பெரிய எதிர்ப்பார்ப்புடன் இருந்தனர். “கர்த்தருக்குச் சித்தமானால் (எப்பொழுதுமே), கர்த்தருக்குச் சித்தமானால், நான் வெளிநாட்டு ஊழியத்திற்குச் செல்ல வேண்டுமென்று முயற்சி செய்கின்றேன். ஆனால் இன்னும் சரியாக அதை அறிந்து கொள்ளாமல் இருக்கின்றேன்” என்று நான் கூறினதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். ஆகவே நான் அதன் பேரில் காத்திருந்தேன். ஆனால் இதோ அந்த சொப்பனத்தின் அர்த்தம் : இந்த திரு ஸ்மித், ஜார்ஜ் ஸ்மித் (அங்கே குத்துச்சண்டை வளையத்தில் அவர் தான் என்னுடைய முதல் பயிற்சியாளர், அவருடைய சண்டைக்கு இந்த தேசத்தில் இன்றைக்கு காணப்படுகின்ற வாலிப ஜனங்கள் யாருமே நிகராகமாட்டார்கள்). ஜெப வரிசைக்கும் அவர் தான் என் முதல் பயிற்சியாளர் ஆவார். பாருங்கள்? அநேக முறை நான் ஜனங்களை மேலே கொண்டு வரும் போது, தரிசனங்கள் உண்டாகும் - பொறுங்கள், இதைப் பாருங்கள், இந்த தரிசனம்; அந்த ஒன்றைப் பாருங்கள், அந்த தரிசனம், என்பேன். உண்மையிலே அது சரியான கிரியையை உண்டாக்கவில்லை. 15இப்பொழுது நான் முதன் முதலில் ஜெப வரிசையை ஆரம்பித்த போது, ஜெப வரிசையில் ஏதோ ஒன்று சரியாக இல்லை என்று நான் கண்டுபிடிக்கும் வரையில் எந்த ஒரு நபரையும் நான் அனுமதிக்க மாட்டேன், அவர் தாமே என்னை நிறுத்தும்படிக்குச் செய்து விடுவார். (பாருங்கள்?) அதைக் குறித்து என்னிடம் கூறுவார். பிறகு நான் ஜெப வரிசையில் மக்களுக்காக ஜெபிக்க ஆரம்பிப்பேன், ஓ என்னே, ஜெபத்தின் பலன்கள் நூற்றுக்கணக்கான முறை அதிகமாக இருக்கும், ஏனெனில் நாம் .... ஒரே இரவில் நான் நானூறு அல்லது ஐந்நூறு பேர்களுக்கு ஜெபிப்பேன் ; இந்த விதமாக, ஒருக்கால் இருபத்தைந்து அல்லது முப்பது, ஒரு வேளை அதற்கதிகமாக தரிசனங்கள் இருக்காது. ஒருக்கால் பத்து அல்லது பதினைந்து தரிசனங்கள் உண்டாகும். அப்பொழுது நான் . . . நீங்கள் என்னை ஏறக்குறைய அப்படியே வெளியே தூக்கிச் செல்ல வேண்டி இருக்குமளவிற்கு சோர்ந்து விடுவேன். ஆனால் மறுபடியும் அதே ஜெபவரிசைக்கு ஜெபிக்க நான் வந்து விடுகிறேன் (பாருங்கள்?) மறுபடியும் என் முதல் பயிற்சிக்கு திரும்பி வருதல். ஊழியக்களத்தில் எதுவுமே அதே போல அல்லது அதனுடனே தரித்திருக்க முடியாது (பாருங்கள்?) ஏனெனில் அது வார்த்தையாகும். அது ஏதோ ஒரு ஸ்தாபனம் அல்ல; அது வார்த்தையாகும். பாருங்கள்? 16அதன் பிறகு ... இதோ, சொப்பனத்தில் அடுத்தப் பகுதியை நீங்கள் கவனியுங்கள்: அதன் பிறகு மேடா சொப்பனத்திலிருந்து சென்று விட்டாள். நான் கடலுக்கு வந்த போது, அது நான் வெளிநாடு செல்வதாகும். இப்பொழுது, அன்றொரு இரவு சகோதரன் ஆர்கன்பிரைட் என்னை தொலைப்பேசியில் அழைத்தார், மிக உடற் சிலிர்ப்புடன் பேசினார். “சகோதரன் பிரன்ஹாம், இப்பிரயாணம் ஒரு பெரிய விடுமுறைப் பிரயாணமாக இருக்கும், சகோதரன் ஷகரியானுக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டது, ஆகவே வெளிநாட்டு ஊழியக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டது” என்றார். ஆகவே அந்த ஸ்விட்சர்லாந்து கூட்டங்கள், அங்கே ஒரு இரவு கூட்டத்துக்கு நான் செல்ல வேண்டுமென்று அவர் விரும்பினார் ; அங்கே ஒரு இரவு கூட்டம் மாத்திரமே நடைபெறுவதாக இருந்தது ; பிறகு பிரயாணம் முழுவதும் ஒரு விடுமுறைப் பயணமாகக் கழிக்க வேண்டுமென்றிருந்தது. அந்நாட்டைச் சுற்றிலும் அப்படியே திரிந்து கொண்டிருப்பது போல அமைந்திருந்தது, அது மிக அருமையான ஒன்றாக இருந்தது. சகோதரன் ஆர்கன்பிரைட் கிறிஸ்தவர்களில் உயர்ந்த ஒருவர், மற்றும் எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் மிக நெருங்கிய நண்பர் ஆவார். 17மேலும் அச்சொப்பனத்தில் ஒரு சிறிய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒரு சிறு படகு இருந்ததே, நான் அதில் செல்ல வேண்டும் என்று அவர் விரும்பிய அந்த படகு, அது தேவனுடைய வார்த்தையாகும்; என்னை வெளிநாட்டுக்கு அழைக்கத்தக்கதாக அதில் தேவையான பிரசங்கம் அதில் இல்லை . நான், “அஹ் - அஹ், அது அல்ல. அதற்காக மாத்திரமா? அஹ் - அஹ்” என்றேன். அவர், “அப்படியானால் அவர்களுடனே செல், அவர்கள் செல்வது போல” என்றார். நான், “அவர்கள் படகோட்டிகள் அல்ல, பிரசங்கிகள். நான் ஒரு போதகன். அவர்கள் தங்கள் கூடாரக் கயிறுகளுடன் புறப்பட்டார்களானால், அது அவர்கள் ஒரு முழு விடுமுறை பிரயாணம் செல்வதாகும்” என்றேன். ஆனால் நான் அதைச் செய்யமாட்டேன் ; நான் அந்த பிரயாண அழைப்பை ஏற்க மறுத்தேன். ஆகவே சொப்பனத்தின் வியாக்கியானம் இதுவேயாகும். பாருங்கள்? அதற்குப்பிறகு, சில இரவுகளுக்கு முன்பு சகோதரன் ஆர்கன் பிரைட் என்னைத் தொலைப் பேசியில் அழைத்து என்னிடமாக..... கூறினார். சகோதரன் ஷகரியானின் உடல் நிலை காரணமாக வெளிநாட்டு கூட்டங்கள் ரத்து செய்யப் பட்டன என்று நாம் கேள்விப்பட்டோம். ஆகவே ... ஸ்விட்சர்லாந்தில் ஒரே இரவு கூட்டம் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஆகவே நான்...... மேடா தான் பிரயாணத்திற்கு வர முடியாது என்று முதலில் கூற வேண்டி இருந்தது, அன்றொரு நாள் நான் பிளாரிடா அல்லது ஜார்ஜியாவிலிருந்து நான் மேடாவிற்கு தொலைபேசி அழைப்பு செய்தேன். நான் “சகோதரன் ஆர்கன்பிரைட் என்னை அழைத்து நாம் மே மாதம் 20ஆம் தேதி புறப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்” என்று நான் அவளிடம் கூறினேன். அதற்கு அவள், “இல்லை முடியாது. முடியவே முடியாது. (பாருங்கள்?) பிள்ளைகளுக்கு தேர்வு அப்பொழுது நடந்து கொண்டிருக்கும். ஆகவே செல்ல இயலாது'' என்றாள். பாருங்கள்? அவளே அழைப்பை ஏற்க மறுக்க வேண்டிய தாயிருந்தது, ஏனெனில் அவளும் பிரயாணத்தில் சேர்க்கப் பட்டிருந்தாள் ; இப்பிரயாணம் அவளுக்கும் கூட ஒரு விடுமுறைப் பிரயாணமாகும். ஆகவே இதோ அதன் அர்த்தம். சொப்பனங்களும் கூட, ஒவ்வொரு காரியமும் ஒரு அர்த்தத்திற்காகவே இருக்கின்றது. ஆகவே சொப்பனங்கள் வியாக்கியானங்களைக் கொண்டிருக்கின்றன. 18இது ஏன் ஒலி நாடாவில் பதிவு செய்யப்படுகிறது என்றால், நான் வந்து இதைக் கூறி அதினாலே நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பதற்காகவே. நான் வீட்டிற்கு வரும் வழியில் ... நான் அங்கே செல்வதற்கு சற்று முன்னர் . . . ஒரு தரிசனத்திற்குப் பிறகு அறையில் ஒரு சத்தம் என்னிடம் வந்து ஒரு சர்ப்பத்தைக் குறித்தும், அது கட்டப்பட்டு விட்டது என்றும் ஆகவே எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என்று இங்கே அநேக முறை நான் மறுபடியும் மறுபடியுமாக கூறினது எத்தனைப் பேருக்கு நினைவிருக்கின்றது? அவர் “பயப்படாதே, நீ எங்கெல்லாம் போகின்றாயோ அங்கெல்லாம் நான் உன்னோடே இருக்கின்றேன் என்று நான் நிரூபித்திருக்கிறேன் அல்லவா? உன்னுடைய வேட்டைப் பயணங்களின் போதும் நான் உன்னோடு இருக்கிறேன் என்று நான் நிரூபித்திருக்கிறேன் அல்லவா? நீ புறப்படுவதற்கு முன்பாகவே நான் உனக்கு என்ன கொடுப்பேன் என்றும் மற்றவைகளையும் நான் உனக்குக் கூறினது நினைவிருக்கிறதா? நான் உன்னோடே இருக்கின்றேன் என்று நான் நிரூபித்துள்ளேன் அல்லவா?” என்று கூறினார். அப்பொழுது ஒரு மிக அருமையான இனிமையான சத்தம் வந்து “என்றென்றும் மாறாத இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் நீ போகுமிடமெல்லாம் உன்னோடு இருக்கின்றது'' என்றது. இவைகளெல்லாம் கருத்தில் கொண்டு நான் அறிந்து கொண்டிருப்பது என்னவென்றால், நாம் ஏதோ ஒன்றை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம்; அது என்னவென்று எனக்குத் தெரியாது; என்னால் கூற முடியவில்லை. 19அன்றொரு இரவு இல்லை அன்றொரு நாள் வீட்டிற்கு வருகையில், இல்லை வீட்டிற்கு வருவதற்கு முன்னர், நான் ஒரு தரிசனத்திற்குள்ளாகச் சென்றேன்; சில சிறு பையன்களை நான் கண்டேன். மிக ஒல்லியாக இருந்தனர். வாலிபப் பையன் களைப் போலக்காணப்பட்டனர். தலையில் தொப்பிகளை அணிந்திருந்தனர். நாங்கள் நின்று வேட்டையாடிக் கொண்டிருந்தோம். நான் ஒரு மிகப் பெரிய, பழுப்பு நிறம் போன்று காணப்பட்ட கரடியைச் சுட்டேன். அப்பொழுது அவர்கள் திரும்பி என்னிடமாக“ ஆனால் கூட்டத்தைக் குறித்து சில குழப்பங்கள் உள்ளன” என்று கூறினர். அதற்கு நான், “அது எந்த விதமான ஒரு குழப்பமாக இருந்தாலும் பரவாயில்லை, நான் போக வேண்டும் என்றிருந்தால், அது எங்கே இருந்தாலும் சரி, எப்படியாயினும் நான் செல்வேன். (பாருங்கள்?) அது என்னவாயிருந்தாலும் பரவாயில்லை” என்று கூறினேன். அப்பொழுது அந்தத்தரிசனம் முடிந்தது. அத்தரிசனம் எந்த இடத்தைக் குறிக்கின்றது என்று எனக்குத் தெரியாது, ஆனால் இது ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது சம்பவிக்கத் தான் போகின்றது. பாருங்கள்? நினைவில் மாத்திரம் கொள்ளுங்கள்; அது சம்பவிக்கத்தான் போகின்றது; அது ஒரு தரிசனமாகும். 20ஆகவே அடுத்த ஞாயிறு நான் கர்த்தருக்குச் சித்தமானால் டென்னஸ்ஸியில் இருக்கப் போகின்றேன், அடுத்த சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை சகோதரன் எம். இ.லிட்டில்ஃபீல்ட் அவர்களோடு, ஓ, அங்கே டென்னஸியிலுள்ள கிளவ்லாண்டில் இருக்கின்ற சர்ச் ஆஃப் காட் தலைமையகத்தில், சகோதரன் எம்.இ.லிட்டில் ஃபீல்டின் அவருடைய சபையில் (இரண்டு அல்லது மூன்று ஆண்டு களுக்கு முன்னர் நான் அவருக்கு பிரதிஷ்டை செய்து வைத்த சபை) டென்னஸ்ஸியிலுள்ள கிளவ்லாண்டில், அடுத்த சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிறு காலையில் அங்கு இருப்பேன். ஞாயிறு காலை ஆராதனை மட்டுமே இருக்கும். நானும் என் குடும்பத்தோடு சென்று திரும்பி வர அது எனக்கு ஒரு தருணத்தை அளிக்கும். நான் அவருடைய சபையில் திரும்பவும் வந்து பிரசங்கிப்பேன் என்று நான் அவருக்கு வாக்குறுதியளித்தேன். அது அடுத்த ஞாயிறாகும். பிறகு அடுத்து வருகின்ற ஞாயிறன்று, மூன்று அல்லது நான்கு ஜனாதிபதிகளுக்குக் கீழாக பணியாற்றின, வாஷிங்டன் நகர ராஜதந்திரியான (diplomat) சகோதரன் ரோவ்வுடன் சகோதரன் ஆர்கன்பிரைட் இங்கே இருக்கப் போகின்றார். ஒரு புதிய படத்துடன் அந்த ஞாயிறன்று அவர்கள் இங்கே இருக்கப் போகின்றனர். அப்பொழுது கூடுமானால் எல்லோரும் இங்கேயிருக்க முயற்சிக்கும்படிக்கு நான் விரும்புகிறேன். நானும் கூட இங்கே இருக்க விரும்புகிறேன். 21அடுத்து வருகின்ற ஞாயிறு ஈஸ்டர் ஆகும். இங்கே ஈஸ்டரன்று ஒரு மகத்தான கூட்டம் நடைபெறுமென்று நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம். கர்த்தருக்குச் சித்தமானால் நான் இங்கே ஈஸ்டர் ஞாயிறன்று இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஏனெனில் .... நாம் அதிகாலை ஆராதனையை நடத்தலாம்; அப்பொழுது ஞானஸ்நானம் கொடுப்பது வழக்கம். நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளப்போகின்றவர்கள் எல்லோரும் ஞாயிறன்று இங்கே இருங்கள். நாம் உட்காரும்படிக்கு போதுமான இடம் இருக்காது என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அல்லது சிறிது காலமாக பேசப்படுகின்றது. ஆகவே நாம் பாய்ஸ் கிளப் இடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் (700 அல்லது 800 பேர் உட்காரும் வசதி கொண்ட இடம், இங்கேயிருந்து சற்று தொலைவில் இருக்கின்றது, அருகாமையில், இங்கே அமைந்திருக்கின்ற ஒரு புதிய கிளப் கட்டிடம்), பிறகு ஞானஸ்நான ஆராதனைக்காக இங்கே திரும்பி வந்து ஞானஸ்நானத்தை முடித்துக் கொண்டு திரும்பி அங்கே சென்று விடலாம், ஆதலால் ஈஸ்டர் காலையன்று நாமெல்லாரும் வசதியாக அமரும்படிக்கு ஏதுவாக அது இருக்கும். அக்கட்டிடத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாமா என்று இந்த வாரத்தில் நாங்கள் சென்று பார்க்கலாமென்றிருக்கிறோம். 22பிறகு அடுத்து வருகின்ற ஆராதனைகள் .... இங்கிருந்து நான் இம்மாதம் இருபது . . . இருபத்தைந்து அல்லது இருபத்தாறு தேதி புறப்படுகிறேன். பிறகு இருபத்தேழு... ஆறு, இருபத்தெட்டு, இருபத்தொன்பது மற்றும் முப்பது தேதி நான் இன்னுமாக மேலே சென்று நான் வான் .... அல்லது விக்டோரியா தீவிற்கு சென்று அங்கு சில இந்தியர்களின் மத்தியில் நான் இருப்பேன், அவர்களிடம் செல்ல ஒரு படகில் செல்ல வேண்டியிருக்கின்றது. என்னுடைய மிஷனரி நண்பராகிய சகோதரன்.... கடந்த இலையுதிர்காலத்தில் ஒரு வேட்டைப் பயணத்தில் அவருடன் இருந்தேன் ; ஒரு அருமையான வீட்டில் அவருடனும் மற்றும் அவருடைய மனைவியுடனும் இருந்தேன். அவருடைய ஆயுதங்கள், மற்றும் எல்லாமும் புதிதாக இருக்கின்றன, வித்தியாசமான இடங்கள். ஆம், அப்படியாகத் தான் இருக்கிறது; அது தெள்ளுபூச்சிகள், படுக்கை மூட்டுப்பூச்சிகள், மற்ற காரியங்களுடன் அவர்கள் வாழ்கின்றனர் (பாருங்கள்?) இவர்களும் இவைகளின் மத்தியில் அந்த இந்தியர்களுடன் வசிக்கின்றனர். இச்சகோதரன் அவர்களெல்லாரையும் கூட்டத்திற்கு அழைத்து வந்திருந்தார். அவர்களுடைய தலைவர் - (அவர்கள் எல்லோரும் ஏறக்குறைய கத்தோலிக்கர்கள்) அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவர்கள் நடுவில் சென்று அந்தத் தலைவனையும் அவருடன் கூட இருந்த எல்லோரையும் சந்தித்து கூட்டத்திலேயே அவர்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்தினார். அவர்கள் தங்கள் படகுகள் மேலே கீழே சென்று, அந்த கடற்கரையைக் கொழுந்து விட்டு எரியச் செய்தனர். அவர்கள் அந்தக் கடற்கரை முழுவதுமாக மீன் பிடித்து வியாபாரம் செய்பவர்களாக இருந்தனர். ஆகவே சகோதரன் எட்டி என்னை அழைத்துக்கொண்டிருக்கிறார். அங்கே நான் செல்ல வேண்டு மென்று சிறிது எண்ணம் கொண்டுள்ளேன். (பாருங்கள்?) பிறகு நாங்கள் அங்கிருந்து புறப்பட்டு ஒரு நாள் பிரயாணம் செய்து, இரண்டு அல்லது மூன்று இரவுக் கூட்டங்கள் ஃபோர்ட் செயிண்ட் ஜான்னில் நடத்துகின்றோம். அது அலாஸ்கா நெடுஞ்சாலையில் உள்ளது - அங்கே இரண்டு இரவுகள். 23பிறகு வீட்டிற்கு வருகிறோம், அது ஜூன் மாதம் ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பத்து தேதி என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எல்லோரும் செல்லத்தக்கதான ஒரு இடமாகும்; இக்கூட்டங்கள் சதர்ன் பைன்ஸில் நடைபெறவிருக்கின்றது. சற்று முன்னர் இங்கு அருமையான ஒரு கட்டுரைத் தொகுப்பை அளித்த அந்த சகோதரனை நீங்கள் அறிவீர்கள். அது .... அவர் எனக்கு இன்னும் சில பத்திரிக்கைகளை அனுப்பி வைத்தார். நான் அதைக் கொண்டு வந்திருக்க வேண்டும். கர்த்தருக்குச் சித்தமானால் அடுத்த ஞாயிறு அவைகளை இங்கே நான் வைத்திருப்பேன். அது சதர்ன் பைன்ஸில் நடைபெறும், ஓ, அது இங்கிருந்து சுமார் ஆறு அல்லது எட்டு மணி நேர கார் பிரயாண தூரமாகும். நார்த் கரோலினாவிலுள்ள சதர்ன் பைன்ஸ் ...... அல்லது அது சவுத் கரோலினாவா? ஆமாம் நார்த் கரோலினா அது சரி. பிறகு, சரியாக நாங்கள்... நீங்கள் பத்தாம் தேதி அங்கிருந்து புறப்படலாம், பிறகு பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் தேதி சவுத் கரோலினாவிலுள்ள கொலம்பியாவில் சகோதரன் பிக்ஸ்பையுடன் இருப்போம். 24இவர்தான் அந்த கட்டுரையை எழுதின, பிரஸ்பிடேரியன் ஸ்தாபனத்தைச் சார்ந்த நபர் ஆவார். என்னைக் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளிலே என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை இது தான். அவர் பிரிஸ்பிடேரியன் ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர், டாக்டர் ஆஃப் டிவினிட்டி (D.D.) பட்டம் பெற்றவர், அவர் சிக்காகோவிற்கு வந்து ஒரு கட்டுரையை எழுதினார்.... அது எதைக் குறித்த கட்டுரை என்று இப்பொழுது நான் மறந்து விட்டேன். அது மிக அருமையாக இருந்தது ; எங்கிருந்தோ அதை நான் கண்டெடுத்தேன். அது ... ஒரு பத்திரிக்கையில் இருந்தது. ஒரு பிரஸ்பிடேரியன் ஒரு பெந்தெகொஸ்தே நபரை சந்திப்பதைக் குறித்து அல்லது அதைப் போன்ற ஒன்று. “பெந்தேகொஸ்தே தீர்க்கதரிசி ஒரு பிரஸ்பிடேரியனை சந்திப்பது'' என்பது போன்று, ஆகவே நான் அவருடன் இருப்பேன். கடந்த இரவு நாங்கள் சகோதரன் ராய் பார்டர்ஸ் அவர்களுடன் தொலைபேசியில் பேசினோம், அவர் முன்னதாகவே கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இருக்கின்றார் ; கூட்டங்களில் ஒத்துழைக்கத்தக்கதாக சுமார் முப்பத்தைந்து, நாற்பது சபைகள் அழைத்திருக்கின்ற சில மக்கள் அங்கே இருக்கின்றனர். கலிபோர்னியாவிலுள்ள சேடாலியா மற்றும் கிராஸ் சிட்டி மற்றும் அங்கிருந்து கிராஸ் பள்ளத்தாக்கு, பிறகு அங்கிருந்து ஓரிகான் - அதற்கப்பால் வாஷிங்கடனுக்குள். 25பிறகு, சகோதரன் ஆர்கன்பிரைட் வருகின்றார், நாங்கள் செல்கிறோம்..... ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் கிறிஸ்தவ வர்த்தகர் குழுவிற்காக ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்வதற்காக அலாஸ்காவிலுள்ள ஆங்கரேஜ் இடத்திற்கு செல்ல இப்பொழுது திட்டம் வகுத்துக்கொண்டிருக்கின்றோம், தொடர்ந்து கடினமான, கரடுமுரடான அலாஸ்காவில் ஆறு அல்லது எட்டு நாள் எழுப்புதல் கூட்டம் நடத்த நான் எதிர்பார்க்கின்றேன். அலாஸ்கா எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். அங்கு நில மற்றும் சுரங்க வேலைக்காரர் மாத்திரமே இருக்கின்ற ஓர் இடமாகும்; ஒரு தட்டு ஹாம் மற்றும் முட்டைகள் விலை சுமார் மூன்று டாலர்கள் ஐம்பது சென்டுகள். அது மிகவும் கரடுமுரடான ஒரு இடமாகும், ஆனால் அவர்களுக்கு சுவிசேஷம் தேவைப் படுகின்றது. இப்பொழுது நான் பிரயாசிப்பது என்னவெனில் இங்கே நான் போதிக்கின்ற இக்காரியங்களை, இந்த ஆகாரத்தை சேமித்து வைத்து அதைச் சரியாக வைப்பதே ஆகும். இப்பொழுது நான் செல்ல விரும்புகிறேன். எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்குரிய வழிநடத்துதல் இன்னுமாக என்னிடம் இல்லை, ஆனால் ஏதோ ஓரிடத்திற்கு நான் விதை விதைத்துக் கொண்டே செல்கின்றேன் (அது சரி). அது ... 26என் மனைவி (அவள் இங்கு எங்கோ இருக்கின்றாள்). அன்றொரு நாள் இல்லினாயிலிருந்து ஒரு பெண் என் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாள். அது என் இருதயத்திற்குள் இருக்கின்ற ஆத்துமாவுக்குள்ளாக என்னை பாதித்தது. அப்பெண்மணி கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தாள். “சகோதரி பிரன்ஹாம், உங்களுக்குத் திருமணம் ஆன முதற்கொண்டு நீங்கள் மிகவுமாகப் பாடுகள்பட வேண்டியிருப்பதைக் குறித்து எந்தவித சந்தேகமும் கிடையாது. சகோதரன் பிரன்ஹாம் ஊழியத்திற்குச் சென்று விட்டிருப்பார். அப்பொழுது பிள்ளைகளை வைத்துக் கொண்டிருப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாகும். பிள்ளைகள் தங்கள் அப்பாவிற்காகவும் இன்னும் மற்ற காரியங்களுக்காகவும் அழும் நிலைமை எவ்விதமாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும், ஏனெனில் எனக்கும் ஒரு அருமையான கணவர் இருக்கின்றார். ஆனால் என்னுடைய நிலைமையை உங்களுக்குக் கூறுகின்றேன். கடந்த நான்கு ஆண்டுகளில் எனக்கு நான்கு பெரிய அறுவைச் சிகிச்சைகள் நடந்தன. ஒரு நாளில் எனக்கு பதினைந்து அல்லது பதினாறு மயக்க மருந்து ஊசிகள் போடுகின்றார்கள். ஒரு வாரத்திற்கு மூன்று வித்தியாசமான லெக்ஸ்ட்ரான் ஊசிகள் போடுகிறார்கள். நிறைய தூக்க மாத்திரைகள் சாப்பிடுகிறேன், இன்னும் என் நரம்புகளை அமைதிப்படுத்த சமீபத்தில் இரவு வேளை இரண்டு தூக்க மாத்திரைகள் சாப்பிடுகிறேன், ஆனாலும் என்னால் உறங்க முடியவில்லை. என் மருத்துவர் நிலைமை மோசமாவதற்கு முன்னர் ஒரு மனநலக் காப்பகத்திற்கு செல்லுங்கள், என் மனநிலையைச் சீராக்க ஒருக்கால் அது உதவியாயிருக்கும் என்று கூறுகிறார். இந்நிலைமையில் எனக்கு உதவ மருத்துவ ஆராய்ச்சியின்படி மருத்துவ புத்தகத்தில் ஒரு வரி கூட இல்லை என்று மருத்துவர் கூறுகிறார். ஆகவே நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். என் அருமையான கணவரையும் என் சிறு பெண்ணையும் விட்டு கடந்து சென்று விடலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். நாங்கள் கான்சாஸில் குடியிருக்கின்றோம். அதை நான் விரும்புகிறேன். ஏனென்றால் கோதுமை முதிர்வடைவதை நாங்கள் காண்கிறோம். அறுவடையைக் குறித்து நாங்கள் சிந்திக்கின்றோம்” என்று எழுதியிருந்தாள். 27அவள் ஒரு மெத்தோடிஸ்ட் என்று நான் நினைக்கின்றேன். மேலும் . . . பதினோறு மாதங்களுக்கு முன்பாக இல்லினாயிலுள்ள புளூமிங்டனில் இருக்கின்ற மெத்தோடிஸ்ட் கல்லூரியில் நான் அங்கே வர இருப்பதாக அறிவித்த ஒரு தாளை அவர்கள் எடுத்தனர். அந்த புளூமிங்டன் கூட்டங்கள் பற்றி உங்கள் அநேகருக்கு நினைவிருக்கும் ; நீங்கள் அங்கே இருந்தீர்கள். மேலும் அவள் கடிதத்தில் குறிப்பிட்டது “என் கணவர் என்னையும் சில நண்பர்களையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். இன்னும் ஒரு நாள் கூட என்னால் தாங்க முடியாது என்பதைக் கர்த்தர் அறிவார். (அவள் மிக மோசமான நிலையை அடைந்திருந்தாள்). மேலும் அவள் ” உங்கள் மகன் பில்லிபால் ஜெப அட்டை கொடுத்த போது முதல் நபராக நான் தான் அதைப் பெற்றுக்கொண்டேன். அன்றிரவு உங்கள் கணவர் ஜெப அட்டை எண்களை அழைத்த போது, வரிசையில் ஜெபிக்கப்பட்ட முதல் நபராக நானிருந்தேன். நான் பிரசங்க மேடைக்கு வந்த உடனே அவர் என் வாழ்க்கையைக் குறித்தும் நான் என்ன செய்திருந்தேன் என்பதையும் அதைக் குறித்த எல்லாவற்றையும் என்னிடம் கூறினார். பிறகு கர்த்தர் உரைக்கிறதாவது அது முடிவு பெற்று விட்டது என்று கூறினார். அந்த நிமிடப் பொழுதிலேயே மேலும் வலி வருவது நின்று விட்டது. அப்பொழுது எனக்கு எழுபது பவுண்ட் எடை இருந்தது. இப்பொழுது என் எடை நூற்று அறுபது பவுண்டாக உயர்ந்து விட்டது. சகோதரி பிரன்ஹாம், நீங்கள் தனிமையில் இருக்கும் போது, உங்கள் கணவரை உலகத்தோடும் அதைப் போன்ற காரியங்களோடும் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் போது, தனிமையில் எவ்விதமாக நீங்கள் உணர்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர் கர்த்தருடைய காரியத்தைச் செய்ய மனதாயிருந்ததால் தான் ஒரு சிறு கான்சாஸ் குடும்பத்தலைவி இன்றைக்கு விடுவிக்கப்பட்டிருக்கின்றாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்“ என்று எழுதியிருந்தாள். இதை நான் பில்லியிடம் காண்பித்தேன் ; நான், “பில்லி, இக்கடிதத்தை அந்த மெத்தோடிஸ்ட் கல்லூரிக்கு அனுப்பு என்று கூறினேன். அவன் ஒரு கடிதக் குவியலைக் கொண்டு வந்து “இவைகளில் சிலவற்றை வாசித்துப் பாருங்கள்” என்றான். அதற்கு நான், “எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும் ..... அக்கடிதங்கள் அற்புதமானவை என்பது எனக்குத் தெரியும், ஆனால் இக்கடிதம் ஒன்று அவர்களுக்குப் போதும். இது அந்த இடத்திற்குப் போதுமானது” என்றேன். 28“அசுத்தம்! அசுத்தம்!” என்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அந்த தீய ஆவிகள் அவனை வெளியே விரட்டியிருந்தன (பாருங்கள்? அவன் மனநலத்தை பாதித்து கல்லறைகளுக்குள்ளாக அவனை விரட்டி விட்டன). இயேசு வந்த போது, அந்த கட்டுண்டு கிடந்தவனை விடுதலை யாக்கினார்; இயேசுதான் வார்த்தை. ஆகவே வார்த்தையைஎடுங்கள், அது கட்டுண்டு கிடப்பவர்களை விடுதலையாக்கும். இதோ நான் பேசிக்கொண்டே இருக்கின்றேன், என்னுடைய நேரத்தையும் எடுத்துக் கொள்கிறேன், உங்களுடைய நேரத்தையும் எடுத்துக் கொள்கிறேன், கூறவேண்டியது மிக அதிகம் இருக்கின்றது. நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 29கர்த்தாவே, அழிவுள்ள மானிடர்களாக, பேசுவதற்கு அதிக நேரம் எங்களுக்குக் கிடையாது என்பதை நாங்கள் அறிவோம். வயலிலிருந்து, விவசாய வேலையிலிருந்து வந்துள்ள இவர்கள், சிலர் பொதுத்துறையில் வேலை செய்து இங்கு வந்துள்ளனர் ; சிலர் மலைகள், பாலைவனங்கள், நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களினூடாக கடந்து காரோட்டி வந்து இங்கே கூடியிருக்கின்ற, இருதயத்தில் பசி கொண்டிருக்கின்ற இந்தச் சிறு யாத்ரீகர்கள் குழுவை நான் காண்கையில் ; இவர்கள் யாத்திரை செய்யும் யாத்ரீகர்களாவர். இவர்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல ; இவர்கள் சாட்சிகளாக மாத்திரமே மலையின் மேல் வைக்கட்ட விளக்குகளாக தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு மத்தியில் வெளிச்சத்தைப் பிரகாசிப்பிக்கச் செய்கின்ற மக்களாக மாத்திரமே இவர்கள் இருக்கின்றனர். வார்த்தையினாலே சக்தியூட்டப்பட்டு மறு பிரதிஷ்டைக்காக இவர்கள் ஒன்று கூடுகையில், அவர்கள் எழுந்து நிற்கின்றனர், தங்கள் கால்களில் தசைப்பிடிப்பு உண்டாகும் அளவிற்கு நின்று கொண்டே யிருக்கின்றனர், வாலிபர் மற்றும் வயோதிபர் ஒன்று சேர நிற்கின்றனர். கர்த்தாவே, அவர்கள் உம்மை நேசிக்கின்றனர் ; அதன் காரணமாகத்தான் இங்கே இருக்கின்றனர். மற்றவர்கள் காணத்தக்கதாக, மற்றவர்களுக்கு காணப்படும்படியாக ஒரு நபர் மைல்கள் கணக்காக காரோட்டி வந்து சுவர்களில் சார்ந்துக்கொண்டு, கால்களில் தசை பிடிப்பு உண்டாகும் அளவிற்கு நின்று கொண்டிருக்க மாட்டார் என்பதை எல்லோரும் அறிவார்கள். 30இந்த மக்கள் குழுவோடும், கர்த்தாவே, நாங்கள் ... நாங்கள் ஏழை ஜனங்கள். நாங்கள் அழகான உடையணிந்து இங்கே வரவில்லை; உம்மை ஆராதிக்கவே நாங்கள் இங்கே வந்துள்ளோம். எங்கள் இருதயத்தில் ஒரே ஒரு நோக்கம். ஒரேயொரு காரணம், ஒரேயொரு கருத்துதான் உள்ளது ; கர்த்தாவே அது நீர்தான். தேவனே, நீர் தாமே இவர்களுக்கு அதிகமான பலனை அளிக்கும்படியாக நான் ஜெபிக்கின்றேன். ஒரு நபர் கூட இன்று நித்திய ஜீவனை கொண்டிராமல் இந்த கதவினுள் கடந்து செல்ல வேண்டாம். பாதையின் முடிவை நாங்கள் சென்றடையும்போது பாதையின் பாடுகள், கஷ்டங்கள் ஒரு பொருட்டாக ஒன்றுமே இல்லாத ஒன்றாக காணப்படும். கர்த்தாவே, இவர்கள் வியாதிப்பட்டிருந்தால் இவர்களைச் சுகமாக்கும். இப்பொழுது மற்ற கூட்டங்களைக் குறித்துப் பேசினோம். கர்த்தாவே, நான் செல்லப் போகின்றேனா என்பதை நிச்சயமாக அறியாதவனாக இருக்கிறேன், அது உம்முடைய சித்தமாயிருக்குமானால், விதைகளை மாத்திரம் தூவி விட்டு வருகிறேன். அவை சரியான நிலத்தில் விழுமானால் முளைத்தெழும்பும், ஆதலால் நீர் தாமே அவ்விதைகள் சரியான நிலத்தில் விழச் செய்யும்படிக்கு வழி நடத்த வேண்டுமென்று கர்த்தாவே நான் ஜெபிக்கின்றேன். 31இங்கே பிரசங்க மேடையில் அல்லது பிரசங்க பீடத்தில் இங்கே இக்காலையில் இருக்கின்ற இந்த கைக்குட்டைகள், சிறு துணி மூட்டைகள் இருக்கிறதென்றால்; மக்கள் வியாதிப்பட்டு சுகம் அவசியமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதாகும். கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி இக்கடைசி நாளில் பரிசுத்த ஆவியின் ரூபத்திலே அவரை எங்களுக்கு அளித்துள்ள பரலோகத்தின் தேவனே, ஓ, எல்லா இடங்களிலும் நிறைந்திருந்து கீழே நோக்கிக் கொண்டிருக்கும் சர்வ வியாபியே, எல்லாவற்றையும் அறிந்திருக்கும் சர்வ ஞானம் படைத்தவரே, மிக சக்திவாய்ந்த சர்வ வல்லமையுள்ளவரே, கைகுட்டைகள் நிறைந்த இந்த சிறிய பெட்டிகளைக் கண்ணோக்கிப் பாரும் ; இவை தாமே வியாதியஸ்தரையும், அவதியுறுவோரையும் தொடுகையில், பரிசுத்த ஆவியானவர் தாமே தேவனுடைய காதுகளுக்கென இந்த ஜெபத்தை உயிர்ப்பியும், அப்பொழுது அவர்கள் முற்றிலும் சுகமடைவார்களாக. கர்த்தாவே, சற்று முன்னர் நான் கூறின அந்தச் சிறிய ஏழை பெண்ணை நாங்கள் நினைக்கின்றோம் ; கான்சாஸில் வசிக்கின்ற அவள், இன்றைக்கு மகிழ்ச்சியுடன் இருக்கின்றாள், ஒரு வலி கூட இல்லை ; அவளிடம் கோளாறு இருப்பதாக எந்த ஒரு மருத்துவராலும் இப்பொழுது கூற முடியாது, இனி வலி கிடையாது, மயக்க மருந்துகள் இனித் தேவையில்லை, தூக்க மாத்திரைகள் இனி தேவையில்லை. அருமையான ஆழ்ந்த உறக்கம் அவளுக்கு வருகிறது ; எல்லாமே சரியாக இருக்கின்றது, ஓ, கர்த்தாவே, உண்மையாகவே நீர்வரும் போது, அப்பொழுது எல்லாமே சரியாகி விடும். அதற்காக உமக்கு நாங்கள் நன்றி ஏறெடுக்கிறோம். 63. இப்பொழுது, பிதாவே, நாங்கள் வார்த்தைக்கு திரும்பும் போது உம்முடைய வார்த்தையை ஆசீர்வதியும் ; அது தாமே உம்மிடமாக வெறுமையாக திரும்பாதிருப்பதாக, ஆனால் எந்த நோக்கத்திற்காக அது வைக்கப்பட்டிருக்கிறதோ மற்றும் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தாமே நிறைவேற்றுவதாக இயேசுவின் நாமத்தில் நாங்கள் அதைக் கேட்கின்றோம். ஆமென். 32இப்பொழுது, எல்லோருக்கும் தெளிவாகக் கேட்கின்றதா? அங்கே பின்புறத்தில் உள்ளவர்களுக்குச் சரியாகக் கேட்கின்றதா? எந்த விதத்தில் சரியாக கேட்கின்றது? இந்த விதமாக பேசும் போதோ அல்லது இந்தப் புறமாக நின்று பேசும் போது கேட்கின்றதா? இந்த பக்கம் நின்று பேசும் போது? சரி. இதை என் அருகாமையில் இழுத்துக் கொள்கிறேன். கடந்த ஞாயிற்றுக்கிழமைகளில், ஒரு வாரத்திற்கு முன்னர், சிறிது தாமதமாக நான் முடித்தேன். சற்று நீண்ட ஒரு ஆராதனையை நான் நடத்தினேன். அந்த விதமாகச் செய்ய நான் விரும்புவதில்லை. ஆகவே எப்பொழுதாவது ஒரு சமயத்தில் (அது என்னைச் சிறிது கூட தொல்லைப்படுத்துவதில்லை) யாராவது உட்கார்ந்துக் கொண்டிருக்கையில், நின்று கொண்டிருப்பவர்களைக் காண்கையில், சிறிது அவர்களுக்கு தங்கள் இடத்தை அளித்து அவர்களுக்கு ஓய்வளிப்பது என்பது ஒரு அருமையான கிறிஸ்தவ செயலாகும். ஆகவே இப்பொழுது, வருகின்ற ஈஸ்டரன்று முக்கிய ஆராதனையை வேறொரு இடத்தில் நாம் நடத்தலாம். 33இப்பொழுது இக்காலை நாம் வேதத்தைத் திருப்ப விரும்புவது..... போர் வீரர்களாகிய நீங்களெல்லாரும் உங்கள் பட்டயத்தை இப்பொழுது எடுத்துக் கொள்ளுங்கள். நாம் சத்துருவின் மீது போர் பிரகடனஞ்செய்யப் போகிறோம். ஒரு சிறு பாடலை நாங்கள் பாடுவதுண்டு, உங்களுக்கும் அது தெரியும்; ஓ கிறிஸ்தவ போர்வீரனே, யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது வரிசையில் கடுமையான முகத்தைக் கொண்டு முகமுகமாக, (அந்தப் பாடலை நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள்) மினுக்கின்ற போர்க்கவசங்கள், காற்றில் அசைவாடும் வண்ணங்கள் சரியானதும் தவறும் ஒன்றுக்கொன்று இன்று எதிரெதிர்க் கொண்டுள்ளது (பாருங்கள்? அது சரி.) யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் சோர்ந்து போகாதே; பலங்கொண்டிரு. அவருடைய சத்துவத்தில் அப்படித்தரித்து நில்லு, தேவன் நமக்காக நிற்பார், அவருடைய கொடி நம்மீது பறக்கும், முடிவில் நாம் வெற்றியின் பாடலைப் பாடுவோம்! (அது சரி). 34பரிசுத்த யோவான் 10, காணப்படுகின்ற முதல் ஐந்து வசனங்களுக்குத் திருப்பி நாம் வாசிப்போமாக. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ; ஆட்டுத் தொழுவத்துக்குள் வாசல் வழியாய்ப் பிரவேசியாமல், வேறு வழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான் ; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு அவைகளை வெளியே நடத்திக்கொண்டு போகிறான். அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்ட பின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்து போகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின் செல்லுகிறது. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின் செல்லாமல் அவனை விட்டோடிப்போம் என்றார். 35இப்பொழுது, இக்காலை நான் சிறிது நேரம் போதிக்கத் தக்கதாக நான் தேர்ந்தெடுத்துள்ள பொருளானது விசுவாசமும் அதற்கெதிரான அறிவுக்கூர்மையும், விசுவாசமும் அதற்கெதிரான அறிவுக்கூர்மையும், என்பதேயாகும். இப்பொழுது, இரண்டு மூல ஆதாரம் அல்லது இந்த இரண்டு மூல ஆதாரங்களைக் கொண்டு நாம் வாழ வேண்டியவர்களாக இருக்கின்றோம். உங்களுக்கு அது தெரியுமா? இப்பொழுது, நாம்.... நான் இங்கே அநேக வேதவசனங்களை எழுதி வைத்திருக்கின்றேன், ஆகவே நான் விரும்புவது, நீங்கள் அதை ... நாம் தொடர்ந்து செய்தியினூடாக அவைகளை மேற்கோள்களாக எடுத்துக்கொள்ளலாம். ஆகவே நான் கூடிய வரையில் சீக்கிரமாக முடிக்க முயல்கின்றேன், நான் .... அதை அப்படியே முன் வைத்துவிடுகிறேன், அதிலிருந்து நீங்கள் காரியங்களை எடுத்துக்கொள்ளலாம், பாருங்கள்? நாம் நம்முடைய ஜீவியத்தை அமைக்கத் தக்கதாக இரண்டு மூல ஆதாரங்கள் மாத்திரமே இருக்கின்றன. அவைகளில் ஒன்று அறிவுக்கூர்மை, மற்றொன்று விசுவாசம் ஆகும். அறிவுக்கூர்மை எதைப் பிறப்பிக்கிறது என்றும், விசுவாசம் எதைப் பிறப்பிக்கின்றது என்றும் நாம் நினைக்கையில் . . . ஆனால் அந்த இரண்டு மூல ஆதாரங்களைக் குறித்து நாம் இக்காலையில் திரும்பிப் பார்த்து ஞாயிறு ஆராதனைப் பாடமாக அதை எடுத்துக்கொண்டு, அவைகளை வேதாகமத்திலிருந்து எடுத்து அவை என்னவென்றும், அவை என்ன செய்யப்போகின்றது என்றும், மற்றும் அவை என்ன செய்திருக்கின்றது என்றும் கர்த்தருடைய உதவியைக் கொண்டு நாம் பார்ப்போம். 36இப்பொழுது, விசுவாசம் மற்றும் அறிவுக்கூர்மை. இப்பொழுது, நாம் துவங்குகையில், ஆதியாகமம் 1ஆம் அதிகாரத்தில் விசுவாசம் காட்சியில் கொண்டு வரப்படுகின்றது மற்றும் அறிவுக்கூர்மையும் காட்சியில் கொண்டு வரப்படு கின்றது என்பதை நாம் கவனிக்கலாம். இன்றைக்கும் அந்த இரண்டு மூல ஆதாரங்களும் இன்னுமாக மனித இனத்திற்கு காட்சியில் கொண்டு வரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்கள் விசுவாசித்து தம்முடைய வார்த்தையை நம்பத்தக்கதாக, விசுவாசிக்கத்தக்கதாக, விசுவாசத்தின் ஆக்கியோன் தேவன் தான் என்றும் ; அறிவுக் கூர்மையின் ஆக்கியோன் சாத்தான் என்றும், மக்கள் தன்னுடைய மதிநுட்பத்தை ஏற்றுக் கொள்ளவும், தேவனுடைய வார்த்தையில் மக்கள் கொண்டுள்ள விசுவாசத்திலிருந்து அவர்களை அப்புறமாக இழுத்துக் கொள்ளவும் அவன் முயற்சித்துக் கொண்டிருக் கிறான் என்றும்..... இந்த இரண்டு மூல ஆதாரங்கள்... என்றும் நாம் காண்கிறோம். 37இந்த மூலமுதல் அதிகாரமாகிய இந்த ஆதியாகமம் அந்த விதமாகத் துவங்குவது மிக விநோதமான ஒன்றாக உள்ளதை நாம் காண்கிறோம். இன்றைக்கு நாம் கொண்டிருக்கின்ற இந்த எல்லாக் காரியங்களும் முதலாவதாக ஆதியாகமத்தில்தான் துவங்கின, ஏனெனில் “ஆதியாகமம்” என்கின்ற வார்த்தைக்கு “துவக்கம்” என்று அர்த்தமாகும். இன்றைக்கு இருக்கின்ற இந்த காரியங்கள், மற்றும் இவை எவ்வாறு இருக்கின்றன என்பதை நாம் காண்கிறோமென்றால், இக்காரியங்களுக்கு எங்கேயோ ஒரு துவக்கமானது இருந்தாக வேண்டும். ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு துவக்கம் இருப்பதை உங்களாலே பார்க்கக் கூடும். 38இப்பொழுது உங்களுக்கு ஒரு சிந்தனைக்கான ஒரு சிறு கருத்து : துவக்கத்தைக் கொண்டிருக்கின்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு முடிவு இருக்கின்றது ; ஆனால் துவக்கம் இல்லாத காரியங்களுக்கு முடிவென்பதே கிடையாது, நித்தியமான காரியங்களுக்கு மட்டுமே. ஆகவே, உங்களை ஒரு கேள்வி கேட்க நான் விரும்புகிறேன் : தேவனைக் குறித்த “நித்திய குமாரத்துவம்” என்கின்ற வார்த்தைக்கு ஒரு சிறு அர்த்தம் கூட நம்மாலே கண்டெடுக்க முடியுமா? அவர் ஒரு குமாரனானால் அவருக்கு ஒரு துவக்கம் இருந்தது. அவர் “நித்திய குமாரன்” என்றால், அவர் எப்படி ஒரு குமாரனாக இருந்து மேலும் நித்தியமானவராக இருக்க முடியும், ஏனென்றால் குமாரன் என்பது ஏதோ ஒன்றினால் பிறப்பிக்கப்பட்ட ஒன்றல்லவா? ஆனால் அவர் ..... அவர் ஒரு “நித்திய குமாரனாக” இருக்கவே முடியாது. தேவனுடைய “நித்திய குமாரன்” என்கின்ற ஒன்று கிடையவே கிடையாது. ஏனென்றால் அவருக்கு துவக்கம் என்கின்ற ஒன்று இல்லாதிருக்கும் பட்சத்தில், நித்தியமானவராக இருப்பதைத் தவிர வேறொன்றுமாக அவரால் இருக்க முடியாது. ஆனால் அவர் ஒருகுமாரனானால், ஒரு துவக்கத்தையுடையவராக இருப்பார்; ஆதலால் “நித்திய குமாரனாக” அவரால் இருக்க முடியாது. அது நித்திய தேவன் ஒரு குமாரனுக்குள் வெளிப் படுத்தப்பட்டதாகும். (அஹ் - அஹ்! பாருங்கள்?) - அந்த நித்திய தேவன், ஏனெனில் நித்தியமானதாக ஒன்று இருக்குமானால் அது தேவன் மாத்திரமேயாகும். 39நாம் நித்திய ஜீவனைக் கொண்டிருப்பதால் மாத்திரம் தான் நம்மால் முடிவில்லாமல் ஜீவிக்க ஏதுவாக இருக்கிறது. இந்தச் சரீரம் மரித்துப் போகின்றது, நம்முடைய எல்லா பாகங்களும் மரிக்கின்றன ; ஆனால் நித்தியமாக இருக்கின்ற பாகமானது தேவனாகும், அதினால் மரிக்கவே முடியாது. இப்பொழுது, இப்பொழுது அந்த வார்த்தை, வேதாகமம் நித்தியமானதாகும், ஏனெனில் அது வார்த்தையின் உருவிலுள்ள தேவன் ஆகும். ஆகவே தேவனுக்குள்ளாக, அவருடைய எண்ணங்களுக்குள்ளாக சிந்தைக்குள்ளாக, உரைக்கப்பட்ட வார்த்தை என்பது இருப்பதற்கு முன்பாக இருந்தது என்ன, அது தேவனே. உங்களால் காண முடிகின்றதா? அது தேவனாகும் ; ஆதலால், முன்குறிக்கப் பட்டவர்களாக நாம் “நாம் நம்புகிறோம்” என்று (நானும் கூட உங்களுடன் சேர்ந்து ) கூறுகிறோமே, முன்குறிக்கப்பட்டவை நித்தியத்தில் தேவனுடன் இருந்தன. ஆகவே, நீங்கள் மறுபடியும் பிறந்த தேவனுடைய பிள்ளையானால், நீங்கள் (உங்களில் பரிசுத்த ஆவியைக் கொண்டிருப்பீர்களானால்)... அது வார்த்தையாக இருப்பதற்கு முன்னதாகவே, நீங்கள் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையாவீர்கள். அது ஒரு வார்த்தையாக இருப்பதற்கு முன்னர் ஒரு எண்ணமாக அது இருந்தாக வேண்டும். ஒரு வார்த்தை'' என்பது “உரைக்கப்பட்ட எண்ணமாகும்”. ஆகவே அந்த எண்ணங்கள் தேவனுக்குள் இருந்தன, ஆகவே நாம் நித்தியத்தில் தேவனுக்குள்ளாக இருந்தோம். நாம் வார்த்தையாலே உரைக்கப்பட்டு காட்சிக்கு கொண்டுவரப் பட்டுள்ளோம். ஓ, என்ன ஒரு ... எந்த வார்த்தையைக் கொண்டு? இந்த வார்த்தை, தேவனுடைய வார்த்தையைக் கொண்டு மட்டுமே. 40இப்பொழுது, தேவன் விசுவாசத்தின் ஆக்கியோன் ஆவார்; சாத்தான் அறிவுக்கூர்மைக்கு ஆக்கியோன் ஆவான். ஏனெனில் தேவன் தம்முடைய முதல் பிள்ளைகளுக்கு தம்முடைய வார்த்தையை அளித்து அதை விசுவாசிக்க வேண்டுமென்று அவர்களிடம் கூறி, அவர்கள் அதை விசுவாசிக்கத் தவறுவார் களானால் மரணப் பிரிவினையை தண்டனையாக அவர்களுக்கு வைத்தார். பின்னர் சாத்தான் அங்கே வந்து ஏவாளுக்கு அறிவுக் கூர்மையை அளிக்க முயல்கின்றான் ; “நீ தேவனைப் போல சரியானதற்கும் தவறானதற்குமுள்ள வித்தியாசத்தை அறிந்து, அறிவுக்கூர்மையுள்ளவளாக இருப்பாய்” என்றான். இப்பொழுது (பாருங்கள்?) முதலாவதாகப் பார்க்கையில், அறிவுக்கூர்மை பிசாசினிடத்திலிருந்து வருகிறதென்பதை நீங்கள் மிக விரைவில் உங்களால் காணமுடியும். இக்கூற்று விசித்திரமாக இருக்கின்றதல்லவா, ஆனால் இது உண்மையாகும். அறிவுக்கூர்மை பிசாசினிடமிருந்து வருகின்றது ; அவன் அறிவுக் கூர்மையின் ஆக்கியோன் ஆவான். இப்பொழுது, பிசாசு கொண்டிருக்கின்ற எந்த ஒரு காரியமும் மூலமுதலான ஒன்றின் தாறுமாறாக்கப்பட்ட நிலையாகும். பாவம் என்பது நீதி தாறுமாறாக்கப்படுதலாகும். விபச்சாரம் என்பது சரியான ஒரு செயல் தாறுமாறாக்கப் படுதலாகும். பொய் என்பது உண்மை தாறுமாறாக்கப்படுதல் ஆகும். 41ஆகவே நாம் துவங்குவதற்கு முன்னர் இந்த அறிவுக் கூர்மையைக் (Wisdom) குறித்து சிறிது தெளிவாக்கிட விரும்புகிறேன்..... தேவனுடைய ஞானம் (Wisdom) என்பதும் இருக்கின்றது. அவருடைய வார்த்தையில் தரித்திருப்பது என்பது தேவனுடைய ஞானம் (Wisdom) ஆகும், ஆனால் சாத்தானோ தன்னுடைய அறிவுக்கூர்மையைக் (Wisdom) கொண்டு வார்த்தையை திரித்துக்கூற முயன்றான் ; ஆகவே இந்த அறிவுக்கூர்மையைக் குறித்துத் தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். சாத்தானோடே கூட ஒரு குறிப்பிட்ட அளவு விசுவாசமும் பொருந்திச் செல்கின்றது. சாத்தானை ஏற்றுக்கொள்ள வேண்டு மானால் நீங்கள் சாத்தானை விசுவாசித்தாக வேண்டும். ஆகவே தாறுமாறாக்கப்பட்ட ஒரு காரியத்திற்கு தாறுமாறாக்கப் பட்ட ஒரு விசுவாசம் இருக்கின்றது. தேவனுடைய வார்த்தையை திரித்து, அது கூறாத ஒன்றை அது கூறிடத்தக்கதாக முயற்சிக்கும் எந்த ஒரு காரியமாக இருந்தாலும், தேவனுடைய ஞானத்திற்கெதிராக அறிவுக்கூர்மையை அளிப்பதென்பதாக இருந்தாலும் (பாருங்கள்?) அது தவறான ஆவியாகும். ஆகவே அதை நாம் சாத்தானின் விசுவாசம் என்று குறிப்பிடாமல் அறிவுக்கூர்மை என்று நாம் குறிப்பிடப் போகிறோம். அதை விசுவாசிக்கின்ற அந்த அநேக மக்கள், மிகவும் உத்தமமானவர்களாக, தாங்கள் செய்வது சரியானது தான் என்று தாங்கள் கொண்டிருக்கின்ற முழு நம்பிக்கையைக் கொண்டு விசுவாசிக்கின்றனர். பாருங்கள் ? நீங்கள் சற்று கவனிக்க வேண்டும் ; இப்பொழுது காரியமானது இரண்டு வழிகளைக் கொண்டதாக இருக்கின்றது. ஆனால் அவன் - அவர்கள் ..... ஆனால் காரியத்தைச் சரியானதாக நிச்சயித்துக் கொள்ள இருக்கின்ற ஒரே வழி மூல வார்த்தைக்குத் திரும்ப வருதலே யாகும். வார்த்தையின் மேல் தான் எல்லா காரியமும் ஆதாரமாகக் கொள்ளப்பட்டு நிறுவப்பட்டிருக்கிறது. 42இப்பொழுது இந்த இரண்டு அணிகள் - அல்லது மூல ஆதாரங்கள் என்ன என்று நாம் காண்போமானால் : ஒன்று, அறிவுக்கூர்மை (Wisdom) மற்றொன்று விசுவாசம் ஆகும். ஏதேன் தோட்டத்தில் சிருஷ்டித்தல் ஆரம்பித்ததிலிருந்து இவை ஒன்றுக்கொன்று எதிராய் இருந்துக் கொண்டே வருகின்றது. இப்பொழுது, அந்த இரண்டு பிரிவுகளிலும் பிள்ளைகள் இருக்கின்றனர். இப்பொழுது நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த அறிவுக்கூர்மை என்பது என்ன? இந்த வார்த்தை முழுவதும் சத்தியம் என்று ஒத்துக்கொள்ளாத ஒன்று தான் அது. அது வார்த்தையிலிருந்து எடுத்துப் போட்டு விட்டு, ஒரு மேம்பட்ட அனுபவ அறிவு தனக்கே உரிதானதொன்று என்று தன்னையே திட்டவட்டமாக முன் நிலை நிறுத்தும் ஒன்றாக இருக்கின்ற, இன்னும் அறிவுக்கூர்மையான ஒன்றாகும். ஆகவே அந்த விதமான அறிவுக்கூர்மை சாத்தானிடமிருந்து வருகிற தென்றால், அவனுடைய பிள்ளைகளும் அந்த அறிவுக் கூர்மையால் தான் ஜீவிக்கின்றனர். தேவனுடைய விசுவாசம் தேவன் மூலமாக (தேவன் வார்த்தையாக இருக்கின்றார்) வருமானால், தேவனுடைய பிள்ளைகள் விசுவாசத்தினாலே ஜீவிக்கின்றனர். அறிவுக்கூர்மையாலே நீதிமான் பிழைப்பான் என்று வேதாகமம் கூறுகின்றதா? (சபையார் “இல்லை” என்று கூறுகின்றனர் - ஆசி) விசுவாசத்தினால் ! “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்,” தான் கற்றுக் கொள்ளப்போவதினால் அல்ல, ஆனால் தான் எதை விசுவாசிக்கின்றானோ அதன் பேரில். சரி. 43இப்பொழுது, இப்பொழுது, நாம் காண்பதென்ன வென்றால்... அறிவுக்கூர்மையை முதலாவதாக நாம் எடுத்துக் கொள்வோமாக. அறிவுக்கூர்மை சொந்த புத்தியைக் கொண்ட தாகும். விசுவாசத்திற்கு சொந்த புத்தியை பயன்படுத்துதல் என்பது கிடையாது. ஆனால் அறிவுக்கூர்மையோ சொந்த புத்தியை பயன்படுத்துதலைக் கொண்டிருக்கின்றது. நாம் வேதாகமத்தைத் திருப்புவோமாக, இப்பொழுது நாம் ஆதியாகமத்தைத் திருப்பு வோமாக, ஆதியாகமம் 3வது அதிகாரத்தை எடுத்து அதை போதிப்போம். இப்பொழுது, நாங்கள் இக்காலையில் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்? “ஆகாரத்தை எடுத்து வை” என்று கர்த்தர் கூறினதை அப்படியே செய்வோமாக. வருகின்ற நாட்களில் அது உங்களுக்குத் தேவையாயிருக்கும். “ஆகாரத்தை எடுத்து வை”. இப்பொழுது ஆதியாகமம் 3 : 1. இப்பொழுது அதை வாசிப்போமாக. அறிவுக்கூர்மை சொந்த புத்தியை, யோசனையை உடையதாக இருக்கிறதைக் காண்போம். தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ள தாயிருந்தது. (ஆங்கிலத்தில் - 'விலங்குகள்' என்றுள்ளது - தமிழாக்கியோன்) அது ஸ்திரீயை நோக்கி நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் ... (அது விசுவாசிக்கின்றது, வார்த்தையைக் கூறுகின்றது).... சொன்னது உண்டோ என்றது. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து : நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனியைப் புசிக்கலாம் ; ஆனாலும் தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்... (அது வார்த்தையை மேற்கோள் காட்டுகின்றாள்) .... நீங்கள் சாகாதபடிக்கு அதைப்புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். இப்பொழுது விசுவாசமானது அதை அப்படியே பிடித்து தரித்திருத்திருக்கிறது. பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள்! ... . சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி : நீங்கள் சாகவே சாவதில்லை ; 44மூளையை உபயோகித்தல், சொந்த புத்தியை பயன்படுத்துதல்..... “தேவன் மிகவும் நல்லவர்; தேவன் மிகவும் இரக்கமுள்ளவர்; அவர் உன்னை அதிகமாக நேசிக்கின்றார்”. அந்த அதே பழைய பிசாசு இன்றைக்கு இவ்விதமாகக் கூறுவதை நீங்கள் கேட்கலாம். “தேவன் அவ்விதமாகச் செய்யமாட்டார். அவர் மிகவும் நல்லவர், தேவன் அதைச் செய்ய மாட்டார். தேவன் தண்டிக்க மாட்டார்”. அவர் தாம் செய்யப்போவதாக தம்முடைய வார்த்தை என்ன கூறியிருக்கின்றதோ அதைச் சரியாக அப்படியே செய்வார். பாருங்கள்? “நீங்கள் சாகவே சாவதில்லை ”. பாருங்கள்? அவன் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறான்? அவன் அவளை தன்னுடன் கலந்தாலோசிக்கச் செய்ய விழைகிறான். தேவனுடைய வார்த்தையின் பேரில் ஒரு நிமிடம் கூட சுய புத்தியைக் கொண்டு யோசனை செய்ய விழைவீர்களானால், நீங்கள் விசுவாசத்தை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். பாருங்கள்? ஒருக்காலும் “அப்படியா, இல்லை, ஒருக்கால் இருக்கலாம்”, என்பவைகளைக் கொண்டிருக்கவே வேண்டாம், வார்த்தையுடன் அப்படியே தரித்து நில்லுங்கள். பாருங்கள்? ஏவாள் சரியான அணுகுமுறையைக் கொண்டவளாக இருந்தாள். ஆனால் அவள் சாத்தானுடைய ஆலோசனைக்குச் செவி கொடுத்தாள். 45இன்றைக்கு அநேக மக்கள் சரியானதொரு ஞானத்தைக் கொண்டிருந்தும், இந்த வார்த்தையானது தேவனுடைய வார்த்தையாகத்தான் இருக்க வேண்டும் என்றும், இது தேவனுடைய வார்த்தை தான் என்றும் அறிந்திருந்தும், யாரோ ஒரு வேதாகமக் கல்லூரி மாணவன் ஒருவன் அவர்களை வேதாகமத்திற்கப்பாற்பட்டு ஆலோசித்து யோசிக்கச் செய்து, பரிசுத்த ஆவியானவரிடமிருந்தும், தேவனுடைய காரியங்களி லிருந்தும் தூர விலகச் செய்ய தங்களை விட்டுக் கொடுத்து விடுகின்றனர். சொந்த யோசனைகளை, கருத்துக்களை நாம் அப்பாலே துரத்த வேண்டியவர்களாக இருக்கிறோம், இப்பொழுது 4வது வசனம். ஏனெனில் ....... சாத்தான் ஏன் இதைக் கூறினான் என்று நான் உங்களுக்கு கூறப்போகிறேன், முதலாவதாக நான் 4வது வசனத்தை வாசிக்கின்றேன், பிறகு 5வது வசனத்தை வாசிக்கிறேன். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி : நீங்கள் சாகவே சாவதில்லை ; நீங்கள் இதைப் புசிக்கும் நாட்களிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. 46பாருங்கள்? சாத்தான் ஏவாளுக்கு, தன் சொந்த கருத்தை அளிக்கின்றான். “தேவனுக்கு சமமாக இருக்க நீ விரும்புவாயல்லவா?” பாருங்கள்..... வேறு விதமாகக் கூறினால், “நீ உண்மையாகவே தேவனுடன் சரியாக இருக்க விரும்புகின்றாயானால் என்னுடைய அறிவுரையைக் கேள். நான் கூறுவதற்கு செவி கொடு ; தேவன் அவ்விதமாக உங்களிடம் கூறவில்லை . அவர் கூறினது....” அப்படிப்பட்ட ஒன்றை நீங்கள் கேட்பீர்களானால், அதிலிருந்து தூர சென்று விடுங்கள். அது சரி. அது சர்ப்பத்தினுடைய உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ...... என்கிற சத்தமாகும் ; அது செயல்முறைக்கு ஒத்த ஒன்றாக காணப்படும், ஆகவே அதைப்பற்றி மூளையைப் பயன்படுத்தி யோசிக்கவே வேண்டாம் ; தேவன் கூறியுள்ளதை அப்படியே விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். அந்த — அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும் ... (அது என்ன என்று பாருங்கள்? சர்ப்பத்தினுடைய ஆலோசனை, அது சரி என்று அவள் கண்டுகொள்ளும்படிக்கு அவளை உந்தித் தள்ளியது. அது உண்மை) .... அது பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு... நம்பிக்கைக் கொள்ளும்படியாக செய்கிறது? ஒருவன் அறிவைக் கொள்ளும்படிக்குச் செய்கிறதாக .... ஒருவன் புத்தியைத் தெளிவிக்கிற ஒன்றாக அது இருந்தது .... (அங்கு நடந்ததென்னவென்று பாருங்கள்? சாத்தான் அறிவை அளிக்கின்றான், வார்த்தைக்கு முரணாயிருந்த அறிவு, ஒருவன் புத்தியை தெளிவிக்கின்ற ஒன்றாக அது இருந்தது) ..... அவள் அதின் கனியைப் பறித்து, புசித்து தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது ; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக் கச்சைகளை உண்டு பண்ணினார்கள். 47இப்பொழுது, இக்காரியத்தைத்துவக்கினது எது? சொந்த மூளையை உபயோகித்து ஆலோசித்தல். பாருங்கள்? விசுவாசத்திற்கு மூளையைக் கொண்டு ஆலோசித்தல் என்பது கிடையாது; நீங்கள் ஒருக்காலும் மூளையைக் கொண்டு ஆலோசிப்பதே கிடையாது; நீங்கள் விசுவாசிக்கின்றீர்கள். உங்களுக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டு, சுகமளித்தலுக்கான தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டிருப்பீர்களானால், உங்களுடைய உணர்ச்சிகளோடு கூட மூளையைக் கொண்டு ஆலோசிக்காதீர்கள். எந்த ஒன்றைக் கொண்டும் ஆலோசிக்காதீர்கள். அந்த காரியத்திற்கு மூளையை உபயோகித்தல் என்பது கிடையவே கிடையாது. தேவன் அவ்விதமாகக் கூறியுள்ளார். அவ்வளவு தான். அதோடு காரியம் முற்று பெற்றாகி விட்டது. ஓ, இதன் பேரில் சில நிமிடங்கள் நான் பேசுவேனாக, இதிலிருந்து ஒரு பொருளை நான் எடுப்பேனாக, ஆனால் இங்கே நாற்பது அல்லது ஐம்பது வசனங்களை நான் எழுதி வைத்துள்ளதால் இதைக்குறித்து என்னால் இப்பொழுது பேச முடியாது. 48ஆகவே மூளையைக் கொண்டு யோசிப்பது என்பது, கர்த்தர் ஒரு தரிசனத்தை அளிக்கும் போது ... நான் கடைப்பிடிக்கின்ற என் சிறிய சொந்த வழியை இப்பொழுது கூறுகிறேன். நடக்கப் போகின்ற ஒன்றைக் குறித்த ஒரு தரிசனத்தை கர்த்தர் அளிக்கின்றார். என்ன, அத்தரிசனத்தைக் குறித்து முரண்பாடாக எது இருந்தாலும் அதைக்குறித்து நான் கவலை கொள்வதில்லை. நினைவில் கொள்ளுங்கள், முரண்பாடாக எதுவெல்லாம் இருக்கின்றதோ, அளிக்கப்பட முடிகின்றதோ, அவையெல்லாவற்றையுமே சாத்தான் செய்வான்.. ''உன்னால் அதைச் செய்ய முடியாது'' என்றெல்லாம் அவன் சீரிய சிந்தனையைக் கொண்டு வாதிடுவான். உதாரணத்திற்கு, சற்று முன்னர் நான் செல்லவிருப்பதாக மேற்கோள் காட்டின ஒன்றானது ..... இப்பொழுது, இது வழக்கமாக செய்யப்படுவதற்கு புறம்பாக இருந்த ஒன்றாகும், என் தாயார் கடந்து செல்வதற்கு சற்று முன்னர் வேட்டைக்குப் போவதைக் குறித்தும், அச்சகோதரருடன் செல்லத்தக்கதாக நான் திட்டமிருந்த அந்த பிரயாணத்தில் நான் செல்ல முடியாது என்பதை கர்த்தர் அறிந்திருந்தார், ஆகவே அவர் ஒரு தரிசனத்தை எனக்களித்து நேராக பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு என்னை அனுப்பினார். நாங்கள் அங்கு சென்றடைந்த போது, வழிகாட்டி, “நான் என் வாழ்க்கை முழுவதும் இங்கு தான் கழித்திருக்கிறேன், ஒரு வெள்ளி நிற ரோமம் கரடியை நான் இங்கே கண்டதேயில்லை. மேலும் நான் குதிரையின் மேல் இந்த ஷீப் கிராமங்களுக்கு செல்லப் போகின்றோம். ஒரு வெள்ளி நிற ரோமம் கொண்ட கரடி கிடையவே கிடையாது; இங்கே இல்லை ..... அவ்விதக் கரடியை நீங்கள் அங்கே மேலே பெறவே முடியாது!” என்றார். பாருங்கள், பாருங்கள்? சொந்த கருத்தைக் கொண்டு ஆலோசித்து காரியத்தைத் திசை திருப்ப முயற்சித்தல். பாருங்கள்? சாத்தான் என்னிடம், “நீதரிசனத்தைத் தவறாகப் புரிந்துக் கொண்டு விட்டாய். அங்கே ....'' என்று கூறினான். “ஆனால் அதற்கு நான் செவி சாய்க்கவில்லை ! அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கப் போகின்றது!” 49அப்பொழுது அந்த வட அமெரிக்க கலைமான் (Caribou) வந்த போது அதை நாங்கள் சுட்டோம். (அக்காரியம் தரிசனத்தில் இருந்தது, அதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்), அப்பொழுது அந்த வழிகாட்டி என்னிடம் கூறினான், (ஒரு மிக அருமையான சகோதரன் - சில வாரங்கள் அவருடன் இருந்த காரியமானது அருமையானது - வாலிப கிறிஸ்தவன்), அவன் “சகோதரன் பிரன்ஹாம், என் சகோதரனுக்கு காக்கை வலிப்பு நோய் வந்தது, அன்று நீங்கள் அந்தக் குதிரையின் மீது வந்து, நான் ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்தால் என் சகோதரனுடைய காக்கை வலிப்பு நின்று போய் விடும் என்று கூறினீர். நான் என்ன செய்ய வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் உரைத்து என்னிடமாக கூறச்சொன்ன அந்த காரியத்தை சரியாக நான் செய்த போது, அந்த நாளிலிருந்து காக்கை வலிப்பே அவனுக்கு வரவில்லை. இப்பொழுது இங்கே இந்த மலை உச்சியில் நாம் இருக்கின்றோம், சரியாக இங்கே கீழே மூன்று மைல் அளவிற்கு ஒரு நான்கு அங்குல உயர புதர் கூட இல்லை, மான் காளான்களும் சில புளுபெர்ரி செடிகளும் தான் உள்ளன. அவை இரண்டு அல்லது மூன்று அங்குலம் உயரம் தான் வளரும். மலையடிவாரத்திலுள்ள மர வரிசைவரை வெறும் மான் காளான்களும் புளூபெர்ரி செடிகள் மாத்திரமே இருக்கின்றன, நம்முடைய குதிரைகள் அங்கே மர வரிசையில் இணைத்து கட்டப்பட்டுள்ளன. ஆகவே இப்பொழுது, நீங்கள் என்னிடம் கூறின பிரகாரம், நாம் இங்கே வரும் முன்னர், இங்கே எங்கோ ஓரிடத்தில் கட்டம் போட்ட சட்டை அணிந்திருக்கும் அந்த பையன் நிற்குமிடத்திற்கும் இந்த இடத்திற்கும் இடையில் ஒரு ஒன்பது அடி உயர வெள்ளி நிற ரோமம் கொண்ட கரடியை சுடப்போவதாக என்னிடம் கூறியிருக்கின்றீர்கள்” என்று கூறினான். நான், “அது கர்த்தர் உரைக்கிறதாவது” என்று கூறினேன். பாருங்கள்? அது என்னவாயிருந்தது? நான் அதை அவிசுவாசிக்கும்படிக்கு சாத்தான் முயற்சி செய்வதாகும். 50நாங்கள் மலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தோம் ; நாங்கள் கீழே மலை அடிவாரத்தை நெருங்குகையில், அவன், “சகோதரன் பிரன்ஹாம் இங்கிருந்து இன்னும் ஒரு மைல் தூரம் தான் இருக்கின்றது” என்று கூறிக்கொண்டேயிருந்தான். நான், “நண்பனே, நீ சந்தேகிக்கின்றாயா?” என்றேன். “இல்லவே இல்லை” அரை மைல் தூர அருகாமைக்குச் சென்றோம். அவன், “இன்னும் அரை மைல் தூரத்தில் நாம் கீழே சென்று விடலாம்” என்றான். நான், “அது சரியே” என்றேன். ''சற்று யோசித்துப் பாருங்கள், இன்னும் அரை மைல் தூரத்தில் .....“ என்றான், சொந்த மூளையைக் கொண்டு சிந்தித்தல் ... அவன், ”பாருங்கள், கீழே உள்ள எல்லாவற்றையும் இப்பொழுது நம்மால் காண முடிகின்றது; ஒன்றுமே வரவில்லையே“ என்றான். அப்பொழுது நான், “வார்த்தையை எனக்களித்த தேவன் தாமே, ஒன்றை அங்கே சிருஷ்டிக்க வல்லவர். சொந்த புத்தியைக் கொண்டு யோசிக்காதே, அதை அப்படியே விசுவாசி! சொந்த கருத்துகளுக்கு எந்த ஒரு கவனத்தையும் செலுத்தாதே ; அதற்கும் யோசனை களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அவர் கூறியுள்ளதை அப்படியே விசுவாசி ; அவ்வளவுதான்” என்றேன். நான் அங்கே நின்று கொண்டிருந்தேன், மலையில் எல்லா இடங்களையும் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன், மஞ்சள் நிற காளான் செடிகள் மாத்திரம் இருந்தன. சூரியன் மறைந்துக் கொண்டிருந்தது, மலைகள் அழகாகக் காட்சியளித்தன ; சரியாக நான் நின்றிருந்த இடத்திலிருந்து மேல்நோக்கி மூன்று மைல்களுக்கு எந்த ஒரு சிறு புள்ளியைக் கூட நீங்கள் பார்க்கலாம். நான் திரும்பிப் பார்த்த போது எனக்கு மேல் இரண்டு மைல்கள் அல்லது ஒன்றரை மைல்கள் தூரத்தில் ஒன்பது அடி உயரமான வெள்ளி நிற ரோம கரடி நின்றுக் கொண்டிருந்தது. எப்படி அது அங்கே வந்தது ; எனக்குத் தெரியாது ; ஆனால் அக்கரடி அங்கிருந்தது. பாருங்கள்? சொந்த புத்தியில் சிந்திக்காதீர்கள்; விசுவாசியுங்கள். சூழ்நிலைகள் என்னவாயிருந்தாலும் பரவாயில்லை, சூழ்நிலை களுக்கு உங்கள் கவனத்தை செலுத்தாதீர்கள், விசுவாசியுங்கள்! 51இப்பொழுது, “நீங்கள் இதைப் புசிக்கும் அந்த நாளிலேயே நீங்கள் மரித்துப் போவீர்கள்” என்று தேவன் கூறியிருப்பாரானால், அந்த நாளிலே மரித்து விடுவீர்கள்“. சாத்தான், “உன்னிடம், ஒன்றை நான் கூறட்டும் (பாருங்கள்?) இப்பொழுது, அது என்னவென்றால் ... அது ..... ஓ, ஆமாம்! தேவன் உண்மையுள்ளவர் என்று நாம் கூறுகிறோம், நிச்சயமாக ; அது சரி. அந்த வார்த்தையை நாம் விசுவாசிக்கின்றோம். ஓ! அது உண்மையென்று நிச்சயமாக நான் விசுவாசிக்கிறேன். ஆனால் கவனி; உன்னிடம் ஒன்றை நான் கூறட்டும் ; அவர் அந்தவிதமான அர்த்தத்தில் கூறவில்லை ” என்று கூறினான். அவர் அதைத்தான் தெளிவாகக் கூறினார். அவர் காரியத்தை அப்படியே தெளிவாகக் கூறினார். சாத்தான், “இப்பொழுது, சற்று கவனி, அவர் ஏன் அவ்வாறு கூறினார் என்று நான் உனக்கு வெளிப்படையாய்க் கூறுகிறேன். அவர் உண்மையாகவே ..... இதோ பார், நீ இன்னுமாக சரியாகப் புத்தியைப் பெறவில்லை ; உனக்கு அறிவுக்கூர்மையே இல்லை . (பாருங்கள்?) நீ வழி நடத்தப் படக்கூடிய ஒரு செம்மறியாட்டைப் போன்று மாத்திரமே இருக்கின்றாய். உனக்கு சுய புத்தியில்லாமல், நீ, நீயாக இல்லாமலிருக்கின்றாய்” என்று சாத்தான் கூறினான். நீ அவ்விதமாகத் தான் இருக்க வேண்டு மென்று தேவன் விரும்புகின்றார்! மேலும் சாத்தான் “நீ இன்னுமாக பி.எச்.டி. (Ph.D.,) டாக்டர் பட்டம் பெறவில்லை . உனக்கு போதுமான அளவு கல்வியறிவு இல்லை . (பார்?) ஆனால் எனக்கு அறிவுக்கூர்மை, புத்தி உள்ளது, நான் அதை உனக்கு நிரூபிக்கப் போகின்றேன். இப்பொழுது பார், உனக்கு சரியானது எது, தவறானது என்று கூட உனக்குத் தெரியாது. அப்படிப்பட்ட ஒன்று இருக்கின்றது என்று உனக்குத் தெரியும். ஆனால் அது என்ன என்று உனக்குத் தெரியாது, அதை அறிந்து கொள்வது எப்படியென்று நான் உனக்குக் காண்பிப்பேனாக” என்று கூறினான். இதைத்தான் அந்த ஸ்திரீயிடம் கூற வேண்டுமென்று அவன் விரும்பினான். இதைத்தான் செய்ய வேண்டுமென்று அவன் விரும்பினான். “எவ்வாறு அதை அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் உனக்குக் காண்பிப்பேனாக”. அதற்கு ஏவாள், “நாங்கள் மரித்துப் போய் விடுவோமே” என்றாள். அதற்கு அவன், “நிச்சயமாக தேவன் அவ்விதமாக செய்ய மாட்டார். ஆனால் நீங்களும் கூட அறிவாளியாகி விடுவீர்கள் என்பதை அவர் அறிந்திருக்கின்றார்” என்று கூறினான். பாருங்கள்? தேவனுடைய வார்த்தைக்கு எதிராக தன்னுடைய அறிவுக்கூர்மையை வைத்தல். இந்த அறிவுக் கூர்மையைக்குறித்து தான் நான் பேசுகின்றேன். பாருங்கள்? விசுவாசமும் அதற்கு எதிரான அறிவுக்கூர்மை. இதோ, அங்கே முதல் யுத்தம் நடந்தது, அப்பொழுது தேவனுடைய வார்த்தை உண்மையாக இருந்து அப்படியே அசையாமல் தரித்து நின்றது. செய்யத்தகாதது என்ற காரியத்தை அவர்கள் செய்த போது அவர்கள் மரித்தனர், அதிலிருந்து மரித்த நிலையிலாயினர். பாருங்கள்? அங்கே தான் .... ஒரு சிறு சந்தேகத்திற்கும் இடமில்லாமல் சரியாக அங்கே நிரூபிக்கப்பட்டது. இப்பொழுது, அதைக்குறித்துச் சற்று நேரம் நாம் பேசலாம். 52இப்பொழுது, அறிவுக்கூர்மை, சொந்த மூளையைக் கொண்டு யோசிக்கின்றது என்று காண்பிக்கத்தக்கதாக ஆதியாகமம் 3:1-17 வரை இல்லை 1-7 வரைக்கும் நான் காண்பித்தேன். இப்பொழுது எத்தனைப் பேர் அதை விசுவாசிக்கிறீர்கயீள, “ஆமென்!'' என்று கூறுங்கள் (சபையார் ”ஆமென்“ என்று கூறுகின்றனர் - ஆசி) பாருங்கள்? இப்பொழுது நீங்கள் .... டாக்டர்கள் “பார், நான் கூறுவதாவது ... ” என்று கூறுவார்கள். சற்று முன்னர் ஒரு சாட்சியாக கூறின இந்த சிறு பெண்ணை நாம் எடுத்துக்கொள்வோம். மருத்துவர் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று கூறிவிட்டார். “நீ ஏறக்குறைய மரித்தநிலைக்கு வந்து விட்டாய்; நீ குணமாக எந்த ஒரு வழியும், நம்பிக்கையும் இல்லை. அங்கே இருக்கின்ற அந்த மனநலக் காப்பகத்திற்குச் சென்று விடு; இவளை அங்கே கொண்டு சென்று விடுங்கள்' என்றார். அதற்கு அந்தப் பெண், “அந்த மனநலக் காப்பகத்தின் சிறு அறைகளுக்குள்ளே நான் செல்வதற்கு முன்னதாகவே, நான் தற்கொலை செய்துக் கொள்வேன்” என்றாள். அப்பொழுது நடந்ததென்ன? தேவன் காட்சியில் வந்தார். அவளின் மூலமாக - செய்தித்தாளில் எங்கோ ஒரு விளம்பரத்தில், கான்சாஸில், புளூமிங்டனிலுள்ள இல்லினாயி செய்தித்தாளில் “விசுவாசம் கேள்வியினாலே வரும்” என்றிருப்பதை அவள் கேட்டாள், பாருங்கள்? பாருங்கள். அவள் கணவன் அவளைப் பார்த்துக் கொண்டார் (அவர்கள் மிகவும் ஒருவருக்கொருவர் நேசித்தனர்) சற்று சிந்தித்துப் பாருங்கள். நான்கு ஆண்டுகளில் நான்கு பெரிய அறுவைச் சிசிச்சைகள், பதினைந்து, பதினாறு மயக்க மருந்து ஊசிகள் ஒரு மானிடனைக் கொல்வதற்கு அது போதும். பாருங்கள்? இந்த எல்லா மயக்க ஊசிகளும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செலுத்தப்படும் ..... அந்த ஊசிகளோடு லெக்ஸ்ட்ரான் (Lextron) என்ற மருந்தும், மனநலத்திற்கென்று மற்றொரு மருந்தும், (அதன் பெயரை நான் மறந்து விட்டேன்) சேர்த்து கலந்து செலுத்தப்பட்டன. இந்த மருந்துகளெல்லாம் ஊசியாக அவளுக்கு செலுத்தப் பட்டன. இதனோடு மேலும் இரண்டு தூக்க மாத்திரைகளை அவள் உட்கொள்ள வேண்டியிருந்தது, ஆனாலும் அவளால் தூங்க முடியாது. கடுந்துயரம் நாள் முழுவதும், இரவு முழுவதும், வருடத்துவக்கத்திலும் வருட முடிவிலும் முழுவதுமாக வியாதியான நிலையிலேயே இருத்தல் ; ஒன்றுமே செய்யப்பட முடியவில்லை. ஆனால் விசுவாசம் கேள்வியினாலே வரும். பாருங்கள்? 53இப்பொழுது, அவள் அந்த இடத்தைச் சென்றடைந்த போது, தேவன் அவளை முதல் நபராக பிரசங்க மேடையின் மீது நிற்க வைத்தார். பாருங்கள்? அப்பொழுது என்ன நடந்தது தெரியுமா? நான் அவளை நோக்கி நடந்து சென்று, “சகோதரியே, எப்படி இருக்கிறீர்கள்?” என்றேன். “எப்படி இருக்கிறீர்கள்” (இதைக்குறித்து ஒன்றுமே அவள் கேள்வி பட்டதேயில்லை ; இதைக்குறித்து ஒன்றுமே அவளுக்குத் தெரியாது). நான் அவளிடம், “நீங்கள் திருமதி இன்னார் - இன்னார், நீங்கள் கான்சாஸிலிருந்து வருகிறீர்கள்'' என்று கூறினேன். இப்பொழுது, இக்காரியமானது அவளை உடனடியாக இவ்விதமாகச் சிந்திக்கச் செய்கின்றது, “இதோ பார். கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று இப்பொழுது தான் அவர் கூறினதைக் கேட்டேன். கடைசி நாட்களிலே கிறிஸ்து தம்முடைய சபையில் தோன்றுவார் என்றும் வாக்குத்தத்தம் செய்துள்ளதை ; அன்று அவர்கள் சோதோமில் செய்த காரியங்கள், இன்னும் போன்றவற்றை இவர் இன்றிரவு பிரசங்கிக்கையில் கூட்டத்தில் செய்வார் என்பதே என்னுடைய ஆரம்ப பிரசங்கமாக அது இருந்தது. வேதாகமத்தில் உள்ளதை அப்படியே நிரூபித்து காண்பித்தாரே, இப்பொழுது அக்காரியம் அப்படியே அதே விதமாக நடப்பிக்கப் படுவதை இதோ நான் காண்கின்றேனே.” பாருங்கள்? 54அப்பொழுது நான், “நீங்கள் அநேக மருத்துவர் களிடம் சென்றீர்கள் ; உங்களுக்கு நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது” என்று கூறினேன். “இவ்விவரங்களை எங்கிருந்து இவர் அறிந்து கொண்டார்? எங்கிருந்து இவ்விவரங்கள் இவருக்கு வந்தன? இந்தச் சிறு வழுக்கைத் தலை மனிதனுக்கு அவைகளைக் குறித்து ஒன்றுமே தெரியாதே. எங்கிருந்து இக்காரியங்கள் இவருக்கு அறிவிக்கப்பட்டன?' என்று அவள் நினைத்தாள். “நீ இங்கே வந்து கொண்டிருக்கையில் உனக்குக் குறிப்பிட்ட இந்த - இந்த காரியங்கள் இருந்தன ”. என்றேன். “அடே (பார்?) சரியாக இதைக் குறித்துத் தானே அவர் பிரசங்கித்து முடித்தார். அது தான் வார்த்தை ”, என்று நினைத்தாள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா, சாத்தான் அவளிடம், “இதோ பார், நீ அதை ஏற்றுக்கொள் வாயானால் உன்னுடைய மேய்ப்பர்.... ” என்றிருப்பான். அதற்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. பாருங்கள்? சுயயோசனையை அப்பாலே போட்டு விடுங்கள். பாருங்கள்? “ஆனால் உன்னுடைய மருத்துவர் நீ மனநலக் காப்பகத்திற்கு செல்லத்தான் வேண்டும் என்று கூறியிருக்கின்றாரே” சுயபுத்தியைக் கொண்டு யோசித்தலை அப்பாலே போட்டு விடுங்கள். “இதைக்குறித்து தேவன் என்ன கூறப்போகிறார் என்பதைக் காண நான் காத்துக்கொண்டிருக்கின்றேன் பாருங்கள்? அப்பொழுது தேவன் .... என்னக்கூற வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அதை எடுத்து வெளியரங்கமாக அதை அறிவித்தார். அவள் அதை விசுவாசித்தாள். அவள் சொந்த புத்தியைக் கொண்டு யோசித்துப் பார்க்கவில்லை. “ஒரு ஆண்டிற்குப் பிறகு, அடுத்த ஆண்டு, அதற்குப்பிறகு அடுத்த வருடம் இப்படியாக தொடர்ந்து நரம்புத் தளர்ச்சி, மன அழுத்தம், அறுவைச் சிகிச்சைகள் மற்றும் எல்லாச் சிகிச்சைகளும், என்ன, இங்கே ஒரே நொடிப்பொழுதில் நான் சுகமாக்கப்படுவேனோ என்று யோசிப்பது காரணமற்ற ஒன்றாகும்” என்று எண்ணினாள். ஆகவே அவள் சொந்த மூளையைக் கொண்டு யோசித்தலைக் குறித்து அவள் முயலக்கூடவில்லை; அவள் அப்படியே விசுவாசித்தாள். விசுவாசம் அதைச் செய்தது; அந்த நொடிப் பொழுதிலே அவள் சுகமாக்கப்பட்டாள். அவளுக்கு நீங்கள் கடிதம் எழுத வேண்டுமென்றால், பில்லி அவளுடைய வீட்டு முகவரியை உங்களுக்கு அளிப்பான். சரி. 55இப்பொழுது, இப்பொழுது, விசு ..... அறிவுக்கூர்மை சொந்த மூளையைக் கொண்டு யோசிக்கும். ஆனால் விசுவாசத்திற்கு சொந்த மூளையைக் கொண்டு யோசித்தல் என்பதையுடையதாக இருக்காது ; வார்த்தையைப் பற்றிக்கொள்வதைத் தவிர வேறொன்றையும் அது செய்யாது. அது வாக்குத்தத்தத்தைக் கொண்டிருக்கின்றது. இப்பொழுது நாம் சிறிது வாசிப்போம். நாம் ரோமர் 4வது அதிகாரத்துக்குத் திருப்பி சிறிது நாம் வாசிப்போம். (நாம் பொருளிற்கு ஆழமாகக் கடந்து போகும் சமயம் வரைக்கும் இவ்வேத வசனங்களை நாம் வாசிப்போமாக). ரோமர் 4 வது அதிகாரம், ஏனெனில் நான் அதிகமாக வார்த்தையை வாசிப்பது எனக்கு மிகவும் விருப்பம். அதை வாசிப்பது உங்களுக்கு நன்மையைத் தருவிக்கிறது. ரோமர் 4 வது அதிகாரம், 17வது வசனத்திலிருந்து நாம் ஆரம்பிப்போமாக. 56ஆபிரகாமின் வாழ்க்கையைக் குறித்து பவுல் விளக்கி எழுதுவதைச் சற்று கவனியுங்கள். ஆபிரகாம் கேராருக்கு சென்று இருந்ததைப் பற்றி எதுவுமே கூறப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியும் ; விளக்கவுரையிலும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்குத் தெரியும் ; அதில், “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான்'' என்று மாத்திரமே உள்ளது. அந்த மகத்தான அப்போஸ்தலனாகிய பவுல், ஆபிரகாமைப் பற்றிய ஒரு விளக்கவுரையை எழுதுகின்றான், 17வது வசனம். .....என்று எழுதியிருக்கிறபடி ..... (இது எனக்கு மிகவும் பிடிக்கும், பவுல் வார்த்தையோடு அப்படியே தரித்து நிற்கின்றான்) .... அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி... “ஏற்படுத்தினேன்”. ஆபிரகாமிற்கு எழுபத்தைந்து வயதாயிருந்தது, அவனும் தன்னுடைய மனைவியுடன் ... இருவரும் வாலிப வயதாயிருந்த முதற்கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவள் அவனுக்கு ஒன்றுவிட்ட சகோதரியாக இருந்தாள். ஆனால் பிள்ளைகள் பிறக்கவில்லை, அவனும் அவளும் மலடான நிலையில் இருந்தனர். ஆனால் தேவன் அவனைச் சந்தித்து “அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன்” (கடந்த காலம் வினைச்சொல், (Past tense) ஆம், உலகத் தோற்றத்துக்கு முன்னர்) “ஏற்படுத்தினேன்”. அநேக பிள்ளைகளுக்குத் தகப்பனாக அல்ல, ஆனால் அநேக தேசங்களுக்குத் தகப்பனாக, இதைக்குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். 123........ அவன் தான் விசுவாசித்தவருமாய்... (தேவன்) ..... மரித்தோரை உயிர்ப்பித்து இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனான். 57ஆகவே சொந்த மூளையைக் கொண்டு ஆலோசிக்கவே வேண்டாம் . . . கவனியுங்கள். “ இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கிறவருமாயிருக்கிற....'' உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்ட படியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும்.... (என்னே, நம்பிக்கைக்கு இடமே இல்லாதிருக்கின்ற ஒரு நிலை! அவன் மட்டும் தன் சொந்த மூளையைக் கொண்டு யோசித்துப் பார்த்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? நம்பிக்கை என்பது கூட இல்லாதிருக்கின்ற ஒரு நிலை...) அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். வேறென்ன கூறப்பட்டிருந்தாலும் சரி அதைக் குறித்து கவலையே கிடையாது, தேவன் அவ்விதமாகக் கூறியுள்ளார், அவ்வளவுதான். அது காரியத்தை முற்றுபெறச் செய்து விட்டது. ஓ, ஏவாள் மாத்திரம் அதனோடு அப்படியே தரித்திருந்திருப்பாளானால் (பாருங்கள்?). ஆனால் அவள் சிறிது அறிவுக்கூர்மையைப் பெற்றுக் கொள்ள, சிறிது யோசித்து ஆலோசனைப்பண்ண நின்று விட்டாள். ஆபிரகாம் அறிவுக்கூர்மையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை ; அவன் வார்த்தையை மாத்திரமே பெற்றிருக்க விரும்பினான் : “தேவன் அவ்விதம் கூறியுள்ளார், அவ்வளவு தான், எல்லாம் முற்றுப் பெற்று விட்டது”. அதன் பேரில் அநேக முறை நான் பிரசங்கித்திருப்பது உங்களுக்குத் தெரியும் ; அவன் சென்று குழந்தைக்குத் தேவையான கைத்துண்டுகள், அணையாடைகள், துணிகளை ஒன்றோடு இணைக்கும் குண்டூசிகள் மற்றும் குழந்தைக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கி குழந்தைக்காக தயாரானான், சாராள் காலணிகளைச் செய்தாள் ; வருடத்திற்குப் பிறகு வருடம் கடந்து சென்று கொண்டேயிருந்தது, “தேவனுக்கு ஸ்தோத்திரம், எப்படியாயினும் நாம் அதைப் பெற்றுக் கொள்ளத்தான் போகிறோம்”. அது சரியே. 'என்ன, சாராளுக்கு .....? அந்த மருத்துவர் “ஆம், அவளாலும் குழந்தை பெற்றெடுக்க முடியாது, உன்னாலும் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது” என்று கூறினார். “அஹ். அவ்வாறு என்னிடம் கூறாதீர்கள்; எப்படியாயினும் அதை நாங்கள் பெற்றுக்கொள்ளத்தான் போகிறோம்.” அது தான் காரியம். 58நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், இன்னுமாக நம்பிக்கையோடே விசுவாசித்தான். நம்பிக்கைகள் முற்றுமாக அற்றுப்போயிருந்தன, ஆனாலும் அவன் அதில் விசுவாசம் கொண்டிருந்தான். அவனுடைய காரியத்தில் நம்பிக்கையானது முற்று மாக அற்றுப் போயிருந்தது, ஒவ்வொரு விஞ்ஞான ஆராய்ச்சியின்படியும், ஒவ்வொரு அறிவுப்பூர்வமான காரியத்தின்படியும் நம்பிக்கை என்பது முற்றுமாக இல்லாமல் போயிருந்தது, ஆனாலும் இன்னுமாக அதில் விசுவாசம் கொண்டிருந்தான், அது என்னவாயிருந்தது? அக்காரியத்தில் விசுவாசம் கொண்டிருத்தல், நம்பிக்கை கொள்வதற்கு ஏதுவில்லாதிருந்தும், நம்பிக்கை யோடே விசுவாசிப்பது, உம்ம்ம், சிறிது நேரம் அதின் பேரில் சற்று பேச எனக்கு விருப்பம், அக்காரியத்தில் நம்பிக்கை என்கின்ற ஒன்று இல்லாதிருக்கையில், அந்த நம்பிக்கையில் விசுவாசம் கொண்டிருத்தல். ஆனாலும் இன்னுமாக அவன் அந்த நம்பிக்கையில் விசுவாசம் கொண்டிருந்தான். (பாருங்கள்?) ஏனெனில், “உன் வித்துக்கள் இவ்வள வாயிருக்கும் என்று அவர் என்னிடம் கூறியுள்ளார்” என்று அவன் கூறினான். இப்பொழுது 19வது வசனம். அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை ... (அறிவுக்கூர்மையிலா? அறிவினாலா? தன்னுடைய பட்டங்களைக் கொண்டா? இல்லை, இல்லை, இல்லை!) ..... அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை . (ஆ, உங்களுக்குப் புரிகின்றதா!) .... அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும் போது, தன் சரீரம் செத்துப் போனதையும், ...... (நம்பிக்கை கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை, அவனுடைய சரீரமும் செத்துப் போயிருந்தது ; சாராளுடைய கர்ப்பமும் செத்துப்போயிருந்தது. அவன் என்ன செய்தான்? அடுத்த வசனம்:) தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்..... (அறிவுக்கூர்மை) ..... சந்தேகப்படாமல் (ஓ, என்ன)... சந்தேகப்படாமல் .... (ஓ, என்னே ... என்ன ?) தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனானான் 59உம்ம்ம் ! எப்படியிருந்தாலும் சரி . . . அக்காரியத்தைக் குறித்து மூளையை உபயோகித்து யோசிப்பதென்பது கிடையவே கிடையாது ; அது வார்த்தையை மாத்திரம் எடுத்து அதன் பேரில் அதை அப்படியே பற்றிக்கொண்டிருத்தலாகும். இப்பொழுது, இது தேவனுடைய வார்த்தை என்றால் (நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?) அதின் எந்த ஒரு வார்த்தையையும் அதின் எந்த ஒரு வாக்குத்தத்தத்தையும் ஏன் சந்தேகிக்க வேண்டும்? இந்த பாகம் இப்படி, இந்த பாகம் சரியில்லை, இந்த பாகம் அப்படித்தான் என்று உங்களுக்கு வேண்டியதை மாத்திரம் எடுத்துக் கொள்கின்றீர்கள்? அவ்விதமாக நீங்கள் செய்ய முடியாது. ஒன்று அது முழுவதுமாக எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும். அல்லது அதில் ஒன்று கூட நல்லதாக இருக்கக்கூடாது. அது சரி! அது சத்தியம் என்று நீங்கள் எவ்வளவு சீக்கிரமாகக் காண்கிறீர்களோ, உடனடியாக அதை அப்படியே பிடித்துக் கொள்ளுங்கள். “ஆம் உன்னால் அது முடியாது'' சூழ்நிலைகள் எவ்விதமாக இருந்தாலும் சரி, அதைக்குறித்து சுய யோசனைகளை அவர்கள் கூறினாலும் சரி, வார்த்தையிலிருந்து பிடியைத் தளர்த்தி விடாதீர்கள். அவ்விதமாகச் செய்யவே செய்யாதீர்கள், சரியாக வார்த்தையோடு தரித்து நில்லுங்கள் ; தேவன் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார். 60இப்பொழுது நான் கிறிஸ்துவிற்கான என்னுடைய நிலையை நான் எடுத்து, அவர் பரிசுத்த ஆவியை எனக்கு அளித்திருப்பாரென்றால், அவருடைய ஆவி அவருடைய ஜீவனைக் குறித்து என்னுள்ளாக சாட்சி கொடுக்கின்றது, பிறகு நான் மரிக்க வேண்டிய சமயம் வரும் போது, சாத்தான், “இதோ பார், நீ ஒரு ஸ்தாபனத்தைச் சார்ந்திருக்க வில்லை” என்று கூற முயற்சிப்பான். வார்த்தையுடன் தரித்து நில்லுங்கள்! “நீ இதைச் செய்யவில்லை; நீ அதைச் செய்யவில்லை.'' என்னயிருந்தாலும் பரவாயில்லை..... அதைக் குறித்து சாத்தானுடைய சுய யோசனைகள் கிடையவே கிடையாது ; அது தேவனுடைய வார்த்தை. வார்த்தையோடு அப்படியே தரித்து நில்லுங்கள். பாருங்கள்? அது எல்லா சொந்த யோசனைகளையும் புறம்பே தள்ளிப் போடுகின்றது. பாருங்கள்? நீங்கள் எந்த ஒரு சொந்த மூளையைக் கொண்டு யோசிக்கும் சுய யோசனைகளைக் கொண்டிராதீர்கள், வார்த்தையை அப்படியே பற்றிக்கொண்டிருக்க மாத்திரம் செய்யுங்கள். பாருங்கள்? 61இப்பொழுது, விசுவாசம் அவருடைய வார்த்தையில் மாத்திரமே அப்படியே நம்பிக்கைக் கொள்கின்றது. பாருங்கள்? அவர்கள் அதைத்தான் செய்ய வேண்டுமென்று அவர் விரும்பினார். அது .... அது... இப்பொழுது நீங்கள் இதன் பின்னணியைப் புரிந்து கொள்கிறீர்களல்லவா, சரியாக அதை மானிட வர்க்கம் செய்ய வேண்டுமென்று தேவன் விரும்பினார் ; அது, அவர் கூறின ஒவ்வொரு வார்த்தை யிலும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதே. ஆகவே ஏவாள் ஒரு சிறு காரியத்தைத்தவிர அதன் முழுவதையுமே நம்பினாள். அவள் “சரி, ஓ, நான் முழுவதுமாக அறிவுக்கூர்மையால் நிரப்பப்பட வேண்டு மென்றால் ஒருக்கால் . . . ஒருக்கால் அந்த விதமாகத்தான் செய்ய வேண்டும். ஒருக்கால் அறிவுக் கூர்மையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் இந்த விதமாகவும் செய்தாலும் முடியும் அல்லவா?'' என்று ஏற்றுக் கொண்டாள். பாருங்கள்? சரியாக இந்தக் கட்டத்தில் தான் அவள் தான் பற்றிக்கொண்டிருந்த பிடிப்பை இழந்து போனாள். சரியாக இந்தக் கட்டத்திலிருந்து தான் அவள் அமிழ்ந்து வீழ்வுற ஆரம்பித்தாள். அந்தக் கட்டத்திலிருந்து தான் முழு மானிட வர்க்கமும் நேராக கல்லறைக்குள் செல்லத் துவங்கியது. ஏன் அப்படி ஆனது? அவள் ஒரு வார்த்தையை மாத்திரம் சந்தேகித்ததால் அப்படியானது. 62அவர்களில் சிலர், “ஆம், இது உண்மையென்று நான் விசுவாசிக்கின்றேன். அது உண்மையென்று நான் விசுவாசிக்கின்றேன். தேவனால் இரட்சிக்க முடியும் என்று நான் விசுவாசிக்கின்றேன். ஆனால் அவரால் சுகமளிக்க முடியும் என்று நான் விசுவாசிப்பதில்லை. பெந்தெ கோஸ்தே நாளிலே நிச்சயமாக பரிசுத்த ஆவி இறங்கினதென்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் பெந்தெகோஸ்தேவிற்குப் பிறகு பரிசுத்த ஆவி இறங்கினதென்று எந்த இடத்திலும் கூறப் படவில்லையே” என்று கூறுகின்றனர். ஓ , சசோதரனே, அந்த விதமாகத்தான் அவர்கள் அதைக் காண்கின்றனர், தங்களைக் கிறிஸ்துவின் சபைகள் என்று அழைத்துக் கொள்கின்றனர். பாருங்கள். புரிகின்றதா? தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அந்த வார்த்தையை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள். உஹ். அஹ்! அது தான். பாருங்கள்? அப்படியே விசுவாசிக்கத்தான் வேண்டும் ; சொந்த மூளையை யோசிக்கச் செய்யாதீர்கள்; விசுவாசியுங்கள். அறிவுக்கூர்மையை கொண்டிருக்க முயற்சி செய்யாதீர்கள் ; வார்த்தையை அப்படியே விசுவாசியுக்ள். அறிவுக்கூர்மை சொந்த மூளையைக் கொண்டு யோசித்து இன்னுமொரு சிறந்த வழியை உனக்கு முன்பாக வைக்கும். இப்பொழுது, அதைத் தான் சரியாக சாத்தான் ஏவாளிடம் கூறினான், “இதோ, பார், நீங்கள் சாகவே சாவதில்லை. நிச்சயமாக நீங்கள் சாகமாட்டீர்கள், ஏனென்றால் தேவன் மிகவும் நல்லவர்”, என்றான். 63அவர் நல்ல தேவன் தான், அவர் நல்ல தேவன் என்று நான் நம்பிக்கை கொள்ளத்தக்கதாகவுள்ள ஒரே வழி என்னவென்றால், அவர் தம்முடைய வார்த்தையோடே அப்படியே தரித்து நிற்பார் என்பதே. நான் உண்மை யுள்ளவனாக இல்லாதிருக்கும் போது நான் உண்மை யுள்ளவனாக இருக்க வேண்டுமென்று எப்படி நீங்கள் எதிர்பார்க்கலாம்? நான் ஒரு காரியத்தைக் கூறி வேறொன்றைச் செய்வேனானால், என் வார்த்தை நிலையற்ற ஒன்றாக ஆட்டம் கண்டுள்ளதாக இருக்கும். பாருங்கள்? அவரை ஒரு நல்ல தேவனாக ஆக்குவது என்னவென்றால் அவர் அந்த வார்த்தையை உரைத்திருக் கின்றார். நாம் அந்த வார்த்தையின்படியே வாழ வேண்டும். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” அப்படியானால் அந்த வார்த்தையோடே தேவன் அப்டியே தரித்திருக்க வேண்டியவராக இருக்கிறார்; அது தான் அவரை ஒரு நல்ல தேவனாக ஆக்குகின்றது. 64இப்பொழுது அவர், “நல்லது, இவர்கள் சற்று இதைச் செய்யும்படிக்கு நான் விட்டு விடுகிறேன். அவர்கள் அதைச் செய்யும்படிக்கு நான் அனுமதித்து விடுவேனாக. ஆம், அதனால் பரவாயில்லை. ஓ, நான் இந்த இடத்திற்கு வந்து விடுகிறேன்” என்று கூறுவாரானால், அவர் ஒரு காரியத்தை செய்யலாமா, வேண்டாமா என்று உறுதியற்ற வகையிலான ஒருவராகவே காணப்படுவார். பாருங்கள்? அவர் தேவனாக இல்லை ; அவர் ஒரு சாதாரண மனிதனே. புரிகின்றதா? அவர் ஒரு நல்ல தேவனாக இருக்க வேண்டுமென்றால், அவர் தம்முடைய வார்த்தையுடன் தரித்திருக்க வேண்டும், அது ஒவ்வொரு பிள்ளையையும் ...... அவர் ஒருவரை விபச்சாரம் செய்யும்படிக்கும், மற்றொருவரை சிறிது மது அருந்தும்படிக்கும், வேறொருவரை ஒரு சிறு பொய்யை கூறும்படிக்கும், இன்னுமொருவரை சிறிது திருடும் படிக்கும், இவர் அதை இதைச் செய்யலாம் என்று விட்டு விடுவாரானால், அப்படியானால் நான் எதையாகிலும் செய்யலாம் அல்லவா? அவர் ஒரேயொரு வழியைத்தான் கொண்டிருக்கிறார், எல்லாம் அந்த வழியில் தான் செல்கின்றன, அந்த வாசலிற்குள்ளாகத்தான் செல்கின்றன. “ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமா யிருக்கின்றது. தீட்டுள்ள எதுவும் அதில் பிரவேசிக்காது”. 65இங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில், “சூனியக் காரரும், விபச்சாரக்காரரும், நாய்கள் அதைப்போன்ற மற்ற ஏனையோரும், யாவரும் புறம் பே இருப்பார்கள். ஜீவவிருட்சத்தின் மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், அவருடைய எல்லா கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்” என்று அவர் கூறியிருக்கின்றார். அது சரி. ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது, அது தேவனாகும். வேறொரு வழியில் செல்லலாம் என்று சொந்த மூளையைக் கொண்டு யோசித்து செயல்படாதீர்கள். சரி. ரோமன் கத்தோலிக்க சபை “நாங்கள்தான் உண்மையான சபை. அந்த வேதாகமானது ..... அந்த வேதாகமமானது ஒன்றும் உதவாதது ...... ஏன்... ஏன்..... உங்களால் ...” என்று கூறுகின்றது. பிஷப் ஷீன் “அதனுடன் வாழ்வதென்பது சேரான தண்ணீர்களினூடாக நடந்து செல்வது போன்றதாகும்,' என்று கூறினார். 66பாருங்கள், பாருங்கள்? எப்படி நீங்கள் அதைச் செய்யப் போகின்றீர்கள்? பாருங்கள்? அப்படியானால் அவர் கூறுவது சரியென்றால் ; வேதம் தவறாகும். வேதம் சரியென்றால், அவர் (பிஷப் ஹீன்) தவறாயிருக்கிறார். அப்படியானால் நீங்கள் என்ன கூறப்போகின்றீர்கள்? தேவனுடைய வார்த்தை சரியாக இருக்குமென்றால், ஒன்று பிஷப் ஷீன் அல்லது ...... அல்லது வேதாகமம் சரியாக இருக்க வேண்டும். பிஷப் ஹீன் மாத்திரமல்ல. ரெவரெண்ட் இன்னார் - இன்னார் மற்றும் டாக்டர் இன்னார் - இன்னார் மற்றும் இன்னார் - இன்னார் கூட. வானொலியில் அந்த மனிதன் இவ்விதமாகக் கூறிடாவிடில் அவருடைய பெயரை நான் கூறியிருக்க மாட்டேன். ஆகவே அவர் அதை வானொலியில் கூறினதினாலே அவருடைய பெயரை நான் கூறலாம் என்று நான் நினைக்கிறேன். டாக்டர் இன்னார் - இன்னார் மற்றும் டாக்டர் இன்னார் - இன்னார் “இவ்விதமாக மற்றும் இவ்விதமாக” கூறினார். இப்பொழுது யாரை நீங்கள் விசுவாசிக்கப் போகின்றீர்கள், தேவனையா அல்லது அவர்களையா? 67“சரி, உண்மையாகவே அதன் அர்த்தம் அதுவல்ல'' என்று கூறலாம். அது எழுதப்பட்டவிதமாகத்தான் அதன் அர்த்தமும் கூட. ஏனென்றால் அதுதான் பிசாசின் முதல் பொய்யாகும். அவன் ஏவாளிடம் “அதன் அர்த்தம் அதுவல்ல”. நிச்சயமாக. அவ்விதமாக அவர் செய்யமாட்டார். தேவன் கொடூரமானவர் அல்ல, தேவன் மிகவும் நல்லவர், நீ சாகவே மாட்டாய்“, என்று கூறினான். (a) ஆனால் அவர்கள் செய்தனர் ; ஒவ்வொருமுறையும் அவர்கள் அவ்விதமே செய்வார்கள். நீ வார்த்தையைச் சந்தித்தாக வேண்டும். அறிவுக்கூர்மை சற்று வேறு விதமாக காரியத்தைச் செய்ய முயற்சிக்கும் ; அதி நவீன விதத்தில், புகழின் விதத்தில், சுலபமான வழியில் செய்ய முயற்சிக்கும்; தன்னைத்தானே அது.... 68இப்பொழுது, இங்கே ஒரு ஆளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருக்கால் தேவன் அவனுடன் ஈடுபடச் செல்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது அவன், தான் எல்லாவற்றையும் விட வேண்டும் என்று நினைக்கிறான், தன்னுடைய மனைவியை சரியான வழிக்குக் கொண்டு வரவேண்டும். தன்னுடைய சீட்டு விளையாட்டு விருந்துகளுக்கு போவதை விட்டு விட வேண்டும். நடனங்களுக்குச் சென்று ஆடுவதை விட்டு விட வேண்டும்; தன் மனைவி அவளுடைய முடியை நீளமாக வளரவிடும்படிக்குச் செய்ய வேண்டும்; அவள் அழகொப்பனை பொருள்கள் உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். அவன் புகைப்பிடிப்பதையும், மது குடிப்பதையும் நிறுத்தியாக வேண்டும் ; அவன் இருக்கின்ற தன்னுடைய பெரிய அந்தஸ்து வாய்ந்த சமுதாயத்தை விட்டு வெளியே வந்தாக வேண்டும் ; பீடத்தண்டை தன்னைத் தானே தாழ்த்த வேண்டும். அவன் ஒரு அதி தீவிர முடபக்திவைராக்கியம் கொண்டவன் என்றும், ஒரு பரிசுத்த உருளையன் என்றும், பெயல்செபூல், மற்றும் எந்தப் பெயரைக் கொண்டும் அழைக்கப்பட்டாலும் அவன் அப்படியே தரித்து நிற்க வேண்டும். “ஓ, நான் பக்தியாக இருப்பேன், ஆனால் நான் - நான் - நான் - சென்று அங்கே இருக்கின்ற அந்த சபையில் நான் சேர்ந்து விடுவேன்; நீங்கள் மிகவும் குறுகின மனப்பான்மை கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு புரிகின்றதா (பாருங்கள்?), இதோ சொந்த மூளையைக் கொண்டு யோசித்தல், இப்பொழுது, இதைக்குறித்து இன்னும் சில நிமிடங்களில் ஒரு பெரிய முக்கிய காரியத்தை நாம் காணப்போகிறோம். பாருங்கள்? அப்படி யானால் எப்படி நீங்கள் சரி எது, தவறு எது என்று அறிந்துக்கொள்ளப்போகின்றீர்கள்? பாருங்கள்? 69இப்பொழுது, வார்த்தை எதையோ ஒன்றைக் கூறுகின்றது என்று காண்பிக்க அறிவுக்கூர்மையானது முயல்கின்றது, அப்படியே செய்து விடுகின்றது. அறிவு - அறிவுக்கூர்மை சொந்த மூளையைக் கொண்டு யோசிக்க முயற்சி செய்கின்றது ; அறிவுக்கூர்மை காரியத்தை சற்று வேறுவிதமாகச் செய்யும் வழியைக் கண்டு பிடிக்கின்றது. ஆனால், தேவனுடய வழியைத் தவிர வேறுவிதமான ஒரு வழி என்பது கிடையவே கிடையாது! அறிவுக்கூர்மை, “ஓ சரிதான், இப்பொழுது, அந்த விதமான ஒன்றை இந்த காலத்தில் நம்மால் செய்ய முடியாது என்பது உனக்குத் தெரியுமா” என்று சுட்டிக்காட்டிக் கூற முயற்சிக்கும். ஆனால் எப்படி யாயினும் அதை நாம் செய்தேயாக வேண்டும். பாருங்கள். சுலபமான ஒரு வழியைக் கண்டு பிடிக்க முயற்சி செய்கின்றது. வேதாகமம் கூறியிராத காரியங்களை, கூறியுள்ளதாகக் காண்பிக்க அது முயற்சி செய்கின்றது. 70இப்பொழுது நீங்கள், “ஓ, சகோதரன் பிரன்ஹாம், இப்பொழுது நீங்கள் .....” எனலாம். சற்று பொறுங்கள்! நாம் மறுபடியுமாக மூலமுதலுக்கு திரும்பிச் செல்வோம். அறிவுக்கூர்மையைக் கொண்டு பிசாசு என்ன செய்ய முயன்றது? தேவனுடைய வார்த்தை கூறியிராத ஒன்றை, அவ்வாறு கூறியிருக்கின்றது என்று காண்பிக்க முயற்சி செய்வதேயாகும், நான் கூறுவது சரியே. தேவனுடைய வார்த்தை கூறியிராத ஒன்றை, அது அவ்வாறே தான் கூறியுள்ளது என்னும் விதத்தில் ஆக்க அவன் முயற்சித்தான். ஆகவே இன்றைக்கும் அவ்விதமாகத் தான் அது வருகின்றது. தேவனுடைய வார்த்தை கூறியிராத ஒன்றை , அது கூறியுள்ளது என்று அவர்கள் காண்பிக்க முயற்சிக்கையில், ஆம் அவர்கள், “இதோ நான் கூறுவது என்னவெனில், சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, அதற்குச் சரியான வியாக்கியானம் உங்களிடத்தில் இல்லை” என்று கூறுகின்றனர். ஆனால் வேதாகமம், தீர்க்கதரிசனமானது எந்த ஒரு தனிப்பட்ட வியாக்கியானத்திற்குரியது அல்ல என்று கூறியிருக்கின்றதே. ஏன்? ஏன் அது தனிப்பட்ட வியாக்கியானத்திற்குரியது அல்ல? ஏன்? கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளினிடத்திற்குத்தான் வந்தது. அது ஒரு தீர்க்கதரிசியினால்தான் வியாக்கியானப்படுத்தப் படுகிறது. அது தனிப்பட்ட வியாக்கியானத்திற்குறிய ஒன்றாக இருக்க முடியாது. தீர்க்கதரிசிகள் ஏற்கனவே அதை உங்களுக்கு வியாக்கியானப்படுத்தியிருக்கின்றார்கள். இதோ அது அங்கே எழுதப்பட்டிருக்கின்றது. அந்த விதமாகத்தான் அது இருந்தாக வேண்டும். 71எல்லா மக்களுக்கும் நியாயத்தீர்ப்பு செய்யப்படும் படிக்காக அடிப்படையான ஒரு காரியமாகிய ஒன்றை தேவன் கொண்டிருக்கத்தான் வேண்டும். ஒரு சபையைக் கொண்டு நியாயத்தீர்ப்பு செய்ய வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் எந்த சபையைக் கொண்டு செய்யப்பட வேண்டும் (ஏறக்குறைய தொள்ளாயிரம் சபைகள் இருக்கின்றதே. தொள்ளாயிரம் வித்தியாசப்பட்ட ஸ்தாபனங்கள் இருக்கின்றதே)? (சகோதரன் பிரன்ஹாம் இருமுகிறார் - ஆசி) (என்னை மன்னிக்கவும்) அவைகளில் எது சரியானது? நீங்கள் உள்ளே போகப்போகிறீர்களென்று எப்படி அறிவீர்கள்? நீங்கள் ஒரு மெதோடிஸ்டாக இருக்கையில் பாப்டிஸ்டுகள் சரியானவர்களாக இருந்தால் எப்படியிருக்கும்? நீங்கள் ஒரு பெந்தெகோஸ்தேயாக இருக்கையில், பிரஸ்பிடேரியன்கள் சரியானவர்களாக இருந்தால் எப்படியிருக்கும்? நீங்கள் ஒரு கத்தோலிக்கனாக இருக்கையில் லுத்தரன்கள் சரியானவர்களாக இருந்தால் எப்படியிருக்கும்? நீங்கள் ஒரு லுத்தரனாக இருக்கையில் கத்தோலிக்கர்கள் சரியானவர்களாக இருப்பார்களானால் எப்படியிருக்கும்? பாருங்கள்? ஆகவே ஏதோ ஒரு அடிப்படை எங்கோ ஓரிடத்தில் இருக்கத்தான் வேண்டும். ஆகவே வார்த்தையானது .... 72ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. பாருங்கள்? அந்த வார்த்தை தேவனுக்குள் இருந்தது ; அது தேவனாயிருந்தது. அவருடைய நினைவுகள் தான் எப்பொழுதுமே அவருடன் இருந்து கொண்டிருக்கின்றது. ஆங்கே ... எவ்விதமாக தேவன் நித்தியமானவராக இருக்கின்றாரோ அது போன்றே தேவனுடைய நினைவுகளும் நித்தியமானவைகளே. .. ஆமென் ! இது நழுவிச் செல்கின்ற ஒரு காரியம் அல்ல சகோதரனே, புரிகின்றதா? இதோ அது! தேவனுடைய நினைவுகள் தான் அவருடைய வார்த்தையாகும். ஆதியிலே ...... (அது நித்தியத்தில் ஆகும், காலமானது, துவக்கமானது முதல் முதலாக ஆரம்பித்த பொழுது) ... ஆதியிலே வார்த்தை இருந்தது . . . (தேவனுடைய நினைவுகள்) . . . அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. பாருங்கள்? அவர் என்னவாக இருந்தாரோ அவ்விதமே அவருடைய நினைவுகளும் இருந்தன. நீங்களும் கூட அவ்விதமே இருக்கின்றீர்கள். நீங்கள் எதைக்கொண்டு வாழ முயற்சித்தாலும் பரவாயில்லை. உங்கள் நினைவுகள் எவ்விதமோ அவ்விதமாகத்தான் நீங்களும் இருக்கின்றீர்கள். நீங்கள் சென்று ஒரு அருமையான ஆளைப்போன்று நடிக்கலாம், ஆனால் உங்கள் இருதயத்திலோ நீங்கள் ஒரு விபச்சாரியாக இருக்கிறீர்கள். ஆகவே அது என்னவாயிருந்தாலும் சரி, உங்கள் நினைவுகள் என்னவோ அந்தப்படியே தான் நீங்களும் இருக்கிறீர்கள். ஆகவே தேவனுடைய நினைவுகள் தான், அவருடன் இருந்த மற்றும் அவருக்குள் இருந்த அவருடைய வார்த்தையாகும். அது தேவனாகும். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாம்சமானது. தேவனுடைய நினைவுகள் ஒரு மாம்ச சரீரத்திற்குள்ளாக வெளிப்படுத்தப்பட்டு, மாம்சமாகி நம் மத்தியில் வாசம் பண்ணினார். உங்களுக்குப் புரிகின்றதா? 73சரி. இன்று நீங்கள் நித்திய ஜீவனை கொண்டிருக் கிறீர்களென்றால், நீங்கள் தேவனுக்குள் இருக்கின்றீர்கள். ஆகவே தேவன் உங்களுக்குள் இருப்பதனால் நீங்கள் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட நினைவாக இருக்கின்றீர்கள். வியப்பு! அப்படியானால் உங்கள் கிரீடம் உங்களிடத்திலிருந்து எடுக்கப்பட்டு வேறொருவருக்குக் கொடுக்கப் படாதபடிக்கு, சொந்த மூளையைக் கொண்டு கொடுக்கப் படும் எந்த ஒரு கருத்துக்கும் செவி சாய்க்கவே சாய்க்காதீர்கள். சொந்த மூளையைக் கொண்டு யோசித்து எந்த ஒரு காரியத்தையும் எடுத்துக்கொள்ளவே கொள்ளாதீர்கள். தேவன் கூறியுள்ளதைச் சத்தியம் என்று விசுவாசிக்க மாத்திரம் செய்து அதனுடன் அப்படியே தரித்து நில்லுங்கள். அறிவுக்கூர்மையின் மூலமாக வரும் சொந்த யோசனைகள், வார்த்தை கூறியிராத ஒன்றை, அது அவ்வாறே தான் கூறியுள்ளது என்னும் விதத்தில் சித்தரித்துக் காண்பிக்க முயற்சிக்கும். நீங்கள் “அது அப்படித்தானா சகோதரன் பிரன்ஹாம்?” என்று கேட்கலாம். சரி, நாம் ஆதியாகமத்திற்குச் சென்று அதை நாம் பார்க்கலாம். நாம் ஆதியாகமம் 3வது அதிகாரத்திற்குத் திருப்பு வோம், நாம் 4வது வசனத்தை வாசிக்கப் போகின்றோம். அறிவுக்கூர்மையானது வார்த்தை கூறியிராத ஒன்றை, அப்படியாகக் கூறியிருக்கின்றது என்னும் விதத்தில் காண்பிக்க முயற்சிப்பதை நீங்கள் பாருங்கள். ஆதியாகமம் 3ம் அதிகாரம், 4வது வசனம். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி : நீங்கள் சாகவே சாவதில்லை ... என்றது. அது எதை அளிக்க முயற்சிக்கின்றது என்று பாருங்கள்? அது என்ன? வார்த்தை கூறியிராத ஒன்றை, அப்படியாகக் கூறியிருக்கின்றது என்று காண்பிக்க முயற்சித்தல், பாருங்கள்? தேவனோ “நீ சாகவே சாவாய்!'' என்று கூறியிருந்தார். 74ஏவாளுக்கு சாத்தான் அளித்துக்கொண்டிருந்த அந்த காரியம், அறிவுக்கூர்மை “நீங்கள் சாகவே சாவதில்லை !'' என்று கூறினது பாருங்கள்? வார்த்தையில் இல்லாதிருக் கின்ற ஒன்றை, உள்ளது என்று வார்த்தையே கூறும்படிக்கு செய்ய அறிவுக்கூர்மை முயற்சிக்கின்றது. அந்த விதமாகவே இன்றைக்கும் அறிவுக்கூர்மை உள்ளது. ஓ, சகோதர்னே, அதன் பேரில் எப்படி நம்மால் தரித்திருக்க முடியும். வேத கலாசாலைகள், வேத பாண்டியத்திய பள்ளிகள், அது தான் அவர் களுடைய கூடாக இருக்கிறது ; அதுதான் அவர்களுடைய அடிப்படையான காரியமாக இருக்கிறது. அவைகள் தேவனுடைய வார்த்தை கூறியிராத ஒன்றை, அவ்வாறே கூறியிருக்கிறது என்கின்ற விதமாகக் காண்பிக்க விழைகின்றது. யாராவது ஒருவர் அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம் என்கிற ஒன்றை வேதாகமத்திலிருந்து எனக்கு எடுத்து காண்பிக்க நான் சவாலிடுகிறேன். வேதாகமத்திலிருந்து ''பரிசுத்தவான்களின் மத்தியஸ்தம்“ என்கின்ற ஒன்றை எனக்கு யாராவது காண்பிக்க நான் சவாலிடுகிறேன். பிராடெஸ்டெண்டுகள் மற்றும் கத்தோலிக்கர்கள் இருவரும் அதை விசுவாசிக்கின்றனர். அக்காரியங்களின் ஏதாவதொன்றை வேதாகமத்திலிருந்து எனக்கு எடுத்துக் காட்ட நான் உங்களுக்கு சவாலிடுகிறேன். 75பாருங்கள்? அது அறிவுக்கூர்மையின் அடித்தளமானது சுய யோசனையைக் கொண்டு யோசிக்க முயற்சித்தல் ஆகும். நம்முடைய யுத்தமானது மாம்சப் பிரகாரமானது அல்ல, ஆனால் மகத்தானது. எல்லா சுய யோசனை களையும் புறம்பே தள்ளுவதாகும் (பாருங்கள்?), மிகவும் சொல் நயமிக்கவனான, மிகவும் அழகான பட்சியான சாத்தானின் கோட்டைகளை இடித்துத் தள்ளுவதேயாகும். சாத்தான் வழவழப்பான மிடுக்கான தந்திரசாலி தான், ஓ, இல்லை. உட்பிரகாரமாக அவன் அப்படி இருக்கின்றான் ; ஆனால் வெளிப்பிரகாரமாக பாவமானது இரு மடங்கு மிகவும் அழகு வாய்ந்ததாகும். பாவம் அழகான ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா? ஐம்பது வயது கடந்த ஆண் மற்றும் பெண் இங்கு எத்தனை பேர் இருக்கின்றீர்கள், உங்கள் கரங்களை சற்று உயர்த்துங்கள். (நான் பெண்களைக் கேட்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் நான் - நான் - நாமெல்லாரும் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும்) நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். உலக முழுவதுமாக இன்று பார்ப்பீர்களானால், சராசரியாக, அன்று இருந்த பெண்களை விட இன்றைய பெண்கள் இருமடங்கு மிக அழகு வாய்ந்தவர்களாக உள்ளதை உங்களால் காண முடிகிறதல்லவா? அப்படித்தான் என்றால் உங்கள் கரங்களை மேலே உயர்த்துங்கள். நிச்சயமாக. அவர்கள் அன்று இருந்ததை விட இரு மடங்கு அழகாக உள்ளனர். பழைய புகைப்படங்களை சற்று எடுத்துப் பாருங்கள். 76நம்முடைய பாட்டி நீண்ட பாவாடையுடன், பின்னப்பட்ட தலைமயிர் நீளமாக பின்புறமாக தொங்கிக் கொண்டு நின்றிருப்பதை பாருங்கள். பார்ப்பதற்கு மிக அழகாக அவர்கள் இருக்கவில்லை. இன்றைக்கு உள்ள நவீன பெண்ணைப் பாருங்கள் ; தோலோடு ஒட்டியுள்ள ஒரு சிறிய ஆடை , ஒவ்வொரு அங்க வடிவும் (அவள் அசைந்து நடக்கும் போது பாவம் செய்யாமல் அவளால் இருக்க முடியாது) அவள் நடக்கையில் அசைகின்றன. மேக்ஸ் ஃபாக்டர் ஒப்பனை (மேக் அப்) தொழிற்சாலை தயாரிக்கின்ற ஏறக்குறைய ஒவ்வொரு அலங்கார ஒப்பனை பொருட்களைக் கொண்டு சாயம் தீட்டிக்கொண்டு வீதிகளில் ஒய்யாரமாக நடக்கின்றாள் ; ஒரு சிறுமியைப் போன்று தன் தலை முடியை அமைத்துக்கொண்டு, தன் முழங்காலிற்கு மேலே, அங்கே ஒரு துணி என்பது இருக்கிறது போல் காணப்படாதிருக்கிற, ஒரு சிறிய குட்டைப் பாவாடையை அணிந்திருக்கின்றாள். ஆனால் அவளை நீ நோக்கிப்பார்க்கையில், அவள் அழகுள்ளவளா யிருக்கிறாள். அதை எவ்விதம் செய்ய வேண்டுமென்று சாத்தான் அறிந்திருக்கிறான். அவன் அழகின் ஆக்கியோன், அவ்விதமான அழகு, அந்த அழகின் விளைவு பாவமாகும். 77இப்பூமியே ஒரு கர்ப்பப்பையாகும், தேவன் தம்முடைய வித்துக்களை எங்கே வைத்தார்? வித்துக்கள் எங்கே வைக்கப்பட்டிருக்கின்றன? ஒரு கர்ப்பப்பையில் தேவன் வித்துக்களை வைக்கின்றார். மனிதன் என்ன செய்கின்றான்? ஒரு கர்ப்பப்பையில் பிசாசுகள் போல, அவனால் முடிந்த வரை ஒரு குழந்தையை உருக்குலைக்கின்றான்; அதைத்தான் பிசாசுகள் பூமியின் மீது செய்துள்ளன - கலப்பினமாக்குதல், வழக்கமாக இல்லாதிருக்கிற ஜீவராசிகளை உருவாக்குதல், இந்த காரியத்தை நான் தொடர்ந்து பேசாமல் விட்டுவிடுவது நலம்; இல்லையென்றால் நான் இங்கு எழுதிவைத்துள்ள மற்றவற்றை என்னால் எடுத்துப் பேச இயலாது. நான் என்ன கூற விழைகின்றேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதன் காரணமாகத்தான் ஒரு உருக்குலைந்த சிருஷ்டி போடப்பட விருந்தது ; தேவன் அதை முடித்துப் போட்டார். உலகம் ஒழுங்கிலிருந்து வழி விலகிப் போயிருக்கின்றது ; எல்லாமே தாறுமாறாக தவறான நிலையில் உள்ளது. நீரோடைகள் மாசுபடிந்துள்ளன ; காற்று மாசுபடிந்து நாற்றமெடுக்கின்றது. சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு வயதான இந்தியன் ஒருவன் இவ்விதமாகக் கூறினான். அவன் “வெள்ளை மனிதனே, இன்னுமாக உயிர் வாழ எனக்கு விருப்பம் இல்லை. நான் சண்டையிட்டுவிட்டேன். எங்கே என்னுடைய குழந்தைகள்? அவர்கள் பட்டினிக் கிடந்து மடிந்து போனார்கள்? எங்கே என்னுடைய மனைவி? நீ உன்னுடைய பெண்கள் மற்றும் விஸ்கி மற்றும் பாவத்துடனே இங்கே நீ வரும்முன் நாங்கள் இங்கே சமாதானத்தோடு அமைதியாக வாழ்ந்து வந்தோம். இது எங்களுடைய நிலங்கள் ; தேவன் இதை எங்களுக்குக் கொடுத்தார். ஆனால் நீயோ அதை எங்களிடத்திலிருந்து எடுத்துக் கொள்கின்றாய். இந்த காரியத்திற்காக ஒரு நாளிலே - நீ துன்பத்தை அனுபவிப்பாய்” என்று கூறினான். 78இன்றைக்கு அதைப் பாருங்கள், அந்தப் பெரிய பாலைவனங்கள், மலைகள் பீர்பாட்டில்களாலும், விஸ்கி பாட்டில்களாலும், நாற்றத்தாலும், பாவத்தாலும் முழுவதுமாக நிறைந்து சிதறிக் கிடந்து துர்நாற்றமெடுத்துக் கொண்டிருக்கின்றது! ஒவ்வொரு இடமும் மதுபானக் கடைகளாலும், முட்டாள் தனமான அசுத்தத்தாலும் முழுவதுமாக நிறைந்திருக்கின்றன. நெவடாவிலுள்ள ரெனோ, இந்த பெரிய பாலைவனத்தில் விபச்சாரத்தைத் தவிர வேறெதுவுமே நடப்பதில்லை. அந்த பெரிய நகரங்களில்.... அவற்றில் காற்று மற்றும் சுற்றுச் சூழலும் கூட மாசுபடிந்துள்ளது: ஒரு காலத்தில் அழகான மலைகளால் நிறைந்திருந்தது. இப்பொழுதுதோ எல்லா விதமான காரியங்களைக் கொண்டு அவை வெட்டப் பட்டுள்ளன. பாலைவனங்கள், தண்ணீர்கள் தாராளமாக புரண்டோடின. இப்பொழுதோ அவை மாசுபடிந்துள்ளன. முழு உலகமே முற்றிலுமாக புறம்பே வீசியெறியப்படப் போகின்றது. அந்த வித்திலிருந்து பூமியானது தன்னுடைய குழந்தையைப் பெற்றெடுக்கப் போகின்றது. அது பிசாசு களால் பிய்த்தெறியப்பட்டு கிழிக்கப்பட்டு தாறு மாறாக்கப் பட்டுள்ளது. நிச்சயமாக அவ்வாறே இருக்கின்றது. அது தாறுமாறாக்கப்பட்ட சிருஷ்டிப்பாகும். தேவன் அதை முற்றிலுமாக புறம்பே வீசியெறிந்து விட்டு மறுபடியுமாக புதியதை உருவாக்குவார். அது சரியே. 79இக்காரியமெல்லாம் எங்கிருந்து வந்தன? ஒரு நபர் ஒரு சிறு காரியத்தை விசுவாசித்து - தேவனுடைய வார்த்தையின் ஒரு சிறு கட்டத்தை அவிசுவாசித்ததன் காரணத்தாலேயே . அதனால் முழு உலகமே வேதனையால் முணகிக்கொண்டிருக்கின்றது. இயற்கையும் கூட இந்த துன்பத்தின் முடிவின் நாளுக்காக வேதனைப்பட்டு தவித்துக் கொண்டிருக்கின்றது என்றும், தேவனுடய புத்திரர் வெளிப்படுவதற்கு காத்துக்கொண்டிருக்கின்றது என்றும் வேதாகமம் கூறுகின்றது. மரங்களெல்லாம் கூட பயனற்ற விதத்தில் பிரயாசப்பட்டுக்கொண்டிருக்கின்றது ; மலர்களெல்லாம் நமக்குப் பாதையை பிரகாசமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை வேதனைப்பட்டு தவித்துக்கொண்டிருக்கின்றது - தாறு மாறாக்கப்பட்டுள்ளது. கர்ப்பமானது அந்த பரிபூரணமான ஒன்றைக் கொண்டு வர இயலாதிருக்கிறது. ஏனென்றால் அவள் தாறுமாறாக்கப்பட்டிருக்கின்றாள். நிலமானது நாற்றமெடுத்துக்கொண்டிருக்கின்றது ; அது குற்றமற்றவர் களுடைய ரத்தத்தினாலே மூழ்கடிக்கப் பட்டிருக்கின்றது. அது . . . அது எப்படியிருக்கிறதென்றால் ...... (நான் இவ்வாறு கூறமுடியும், அது மிக அழகின்மையாக காணப்படுகின்றது) அது - அது - அது நாற்றமெடுத்துக் கொண்டிருக்கின்றது. இது தமக்கு முன்பாக நாற்ற, மெடுத்துக் கொண்டிருக்கின்றது என்று தேவன் கூறுகின்றார் - மிக அசுத்தமாயிருக்கின்றது. 80நீங்கள் சிறுநீர் கழிக்கும் அறை, ஒரு கழிவறைக்குள் செல்வீர்களானால், அங்கே மிகவும் நாற்றமெடுக்கும். மிகவும் அசுத்தமாயிருக்கும். அதே விதமாகத் தான் உலகமும் தேவனுக்கு முன்பாக நாற்றமெடுத்துக் கொண்டிருக்கிறது. மிக அசுத்தத்துடன் துர்நாற்றமாக இருக்கின்றது! அந்த முழு காரியமும் அசுத்தமாக காணப்படுகின்றது. தேவன் உலகை சுக்குநூறாக வெடித்து சிதறச் செய்வார். “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்'' என்று அவர் கூறியிருக் கின்றார். ஆம் ஐயா. அது என்ன? பூமியினுடைய கர்ப்பம் ஒரு ஆயிரவருட அரசாட்சியை இன்னுமாக பிறப்பிக்கவில்லை. அது தாறுமாறாக்கப்பட்ட ஒன்றை பிறப்பித்திருக்கின்றது. ஏன்? அறிவுக்கூர்மையுடன் இருக்க முயற்சித்ததினாலேயே. ஃபிளாரிடா மாநிலத்திற்கு எதிராக எனக்கு எந்த ஒரு காரியமும் கிடையாது. ஃப்ளாரிடாவிலிருந்து வந்துள்ள மக்களாகிய உங்களுக்கு எதிராக இதை நான் கூற விழைய வில்லை. ஆனால் நான் எல்லையைத் தாண்டி முதல் முறையாக ஃபிளாரிடாவிற்குச் சென்று அங்கே ஜார்ஜியாவின் எல்லைக் கோட்டிற்கு நான் திரும்பி வந்தேன். சரியாக நான் அங்கே நின்றேன். “ஒரு அமெரிக்க குடிமகனாக நான் இதின் என்னுடைய ஒரு பாகத்தை நான் இதின் பூர்வ இனத்தாராகிய செமினோல்களுக்கு (Seminoles) நான் திருப்பி தருகிறேன்” என்று கூறினேன். (செமினோல்கள் என்றால் வட அமெரிக்க இந்திய மக்களினத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். அவர்கள் குறிப்பாக ஃப்ளாரிடா மற்றும் ஓக்லஹாமா பகுதிகளில் வசிக்கின்றனர் - தமிழாக்கியோன்) ஏன், நான் என் தலைமுடிக்கு செய்வதை விட தங்களுடைய வீட்டின் அருகிலுள்ள முற்றங்களை நன்றாக கவனித்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு காரியமும், மிக துல்லியமாகச் செய்கின்றனர்; அங்கே இருக்கின்ற பனை மரங்கள் எல்லாவற்றிலும் ஒளி விளக்குகள் பொருத்தப் பட்டிருக்கின்றன. பெரிய பகட்டான உல்லாசப் படகுகள் மற்றும் காரியங்கள், மனந்திரும்பாமலே ஒரு ஆயிரவருட அரசாட்சியை அவர்கள் கொண்டுவர முயற்சிக்கின்றனர். என்னைப் பொருத்தவரையில் அவை எல்லாமே அர்த்தமற்ற காரியங்களாகும். நானோ பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒரு மலையின் உச்சிக்குச் சென்று, மனிதனின் கைகள் பட்டிராத, தேவன் சிருஷ்டித்த மலைகளை, அக்காரியங்களை விட இலட்சக்கணக்கான முறைகள் உற்று பார்த்துக் கொண்டிருப்பேன். நிச்சயமாக. 81இந்த நகரங்களுக்குள்ளாக செல்கையில் : அந்த பெரிய வீடுகளைக் காண்கையில், அவை - அவை என் கவனத்தை ஈர்ப்பதேயில்லை. அந்த விதமான காரியத்தை நான் வெறுக்கிறேன். பாருங்கள்? ஆனால் ஒரு நாளிலே, ஒரு நாளில் அவை மாற்றப்படும் என்பதை நான் அறிவேன் ; அவள் தன்னுடைய பாதிக்கப்பட்ட குழந்தையை புறம்பே தூக்கி எறிவாள். ஒரு நாளிலே பூமியானது மாற்றப்படும். சரியே. அவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்று விசுவாசமானது நம்புகின்றது. 'வார்த்தை எந்த ஒரு பிழையும் கொண்டிராத ஒன்றாகும்,“ என்றும் கூறுகின்றது. “இதோ, நான் உனக்கு கூறுகிறேன், ஜேம்ஸ் அரசனின் வேதாகம பதிப்பானது, அல்லது இந்த திருத்தப்பட்ட பதிப்பைப் பார், அல்லது இங்கே இருக்கின்ற அந்த ... இது சற்று வித்தியாசமானது. உண்மையாகவே அது, அது அவ்விதமான அர்த்தமுடையதல்ல' என்று போதகர்கள் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அவ்விதமாக அவர்கள் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? ஓ, என்னே உலகம் முழுவதும் அந்தப் பாதிப்பினால் மாசுப் படுத்தப்பட்டுள்ளது. பாருங்கள் ? ஆனால் விசுவாசம் அதை விசுவாசிப்பதில்லை. என்னை உண்டாக்கின அந்த தேவன் தாமே, நான் அந்த வேதாகமத்தின்படியே வாழத்தக்கதாக அந்த புஸ்தகத்தை அதே ஒழுங்கிலேயே அப்படியே காத்து வைப்பார் என்று விசுவாசமானது நம்புகின்றது. என்னை உண்டாக்கின தேவன் என்னை நியாயந்தீர்க்க வேண்டி யிருக்க, தம்முடைய புஸ்தகத்தை ஒழுங்காக வைத்திருக்க முடியாமற்போனால், அப்படியானால் அவர் ஒரு திறமை யில்லாத தேவனாக இருப்பார். அதினுடைய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று நான் விசுவாசிக்கின்றேன். ஆம், ஐயா! 82அதை விசுவாசிக்க இது நமக்கு என்ன செய்கின்றது? அது விசுவாசத்திற்கு, வேதாகமத்திற்குள்ளாக ஒரு பரிபூரண ஓய்விடத்தை அளிக்கின்றது. பாருங்கள்? வார்த்தை சற்று திருத்தப்பட்டுள்ளது என்று நீ எண்ணி அதை அவிசுவாசிக்காமல் இருக்க முடியாது. வார்த்தை எவ்விதமாக இருக்கின்றதோ அவ்விதமாகவே அதை நீங்கள் அப்படியே விசுவாசிக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் அறிவுக் கூர்மையை உபயோகப் படுத்த முயற்சித்தால் .... அவர்கள் “இப்பொழுது, இதோ பார், இதைப்போன்ற ஒன்றை அது செய்யும் என்று தேவன் கூறியுள்ளார் என்பது செய்முறைக்கு ஒத்ததாக இல்லை” என்கின்றனர். ஆனால் தேவன் அதைச் செய்யவே செய்தார். பாருங்கள்? அது சரி. இப்பொழுது, நீங்கள் “சரி இதோ, தேவன் இதை செய்திருக்கின்றாரே. தேவனுடைய பெட்டி கீழே விழ ஆரம்பித்த போது லேவியன் அல்லாத ஒரு மனிதன் தேவனுடைய பெட்டியினிடமாய் தன் கையை நீட்டி அதைப் பிடித்த போது அவர் அந்த மனிதனுடைய ஜீவனை எடுப்பாரானால் . . .'' என்று கூறலாம். அதைச் செய்ததற்காக அவர் அவனுடைய ஜீவனை எடுத்த போது அவர் என்னவாக இருந்தார் என்பது பொருட்டல்ல, ஒரு லேவியன் மாத்திரமே அதைத் தொட வேண்டும் என்று தேவன் கூறியிருந்தார். ஆகவே அவனுடைய ஜீவனை எடுத்தார். அதுதான் தாவீதுக்கு கிளர்ச்சியையுண்டு பண்ணினது என்று உங்களுக்குத் தெரியுமா? பாருங்கள்? 83ஒரு லேவியன் ..... ஒரு லேவியனைத் தவிர யாருமே அதைக் கையாளக்கூடாது. அங்கே ஒரு எழுப்புதலுக்காக தேவனுடைய பெட்டி அங்கே திரும்பவுமாக வந்து கொண்டிருந்தது. அப்பொழுது லேவி கோத்திரத்தைச் சேராத ஒரு மனிதன் அந்த வார்த்தையைக் கையாள முயற்சித்தான். அது எதைக் காண்பிக்கிறதென்றால் தேவனால் அபிஷேகிக்கப்பட்டவர்கள் மாத்திரமே அந்த வார்த்தையைத் தொட வேண்டும். இந்த ஸ்தாபன உபதேசங்களுக்கும் மற்றும் ஸ்தாபனங்களுக்கும் அந்த வார்த்தையை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் கிடையாது. அந்த வார்த்தையோடு இடைபடுவதற்கு பரிசுத்த ஆவிக்கு மாத்திரமே அதிகாரமுண்டு ; அதைத் தொடுகின்ற மற்றவர்களுக்கு மரணம் தான் கிட்டும். அந்த வார்த்தையின் எந்த ஒரு பாகத்தை அவிசுவாசித்தாலோ அல்லது அதை உபதேசித்தாலோ, ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கு எடுத்துப்போடப்படும். பாருங்கள்? அதன் மீது உங்கள் கையைப் போடாதீர்கள். அதிலிருந்து சற்று அப்பாலிருங்கள். கவனியுங்கள்; அது என்ன கூறியுள்ளதோ அதை அப்படியே விசுவாசியுங்கள். வேறு யாரோ ஒருவருடைய வார்த்தையை எடுத்துக் கொள்ளாதீர்கள். வேதாகமம் என்ன கூறுகின்றதோ அதை மாத்திரமே எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு மாற்றத்தையோ, எதையாவதையோ செய்தால் மரணம் நிச்சயம். இப்பொழுது, ஏனென்றால் அது ..... விசுவாசம் என்ன செய்கின்றது? வார்த்தை எவ்விதமாக இருக்கின்றதோ, அது இருக்கின்ற வண்ணமாகவே அதை அப்படியே விசுவாசிக் கின்றது. காலாகாலமாக அது தேவனாலே காக்கப்பட்டு மாறாமல் அப்படியே இருந்து வருகின்றது. இதோ இங்கே அது அப்படியே இருக்கின்றது. எனக்கு அது தேவனுடைய வார்த்தையாகும். அதை தேவன் கனம் பண்ணுகின்றார். அதன் உண்மையுடன் கலந்திருக்கின்ற ஒரு பரிபூரண விசுவாசத்தை அது அளிக்கின்றது. 84ஒரு வாலிபப் பெண் ஒருவள் வீட்டை விட்டு ஓடிப்போய், எல்லா காரியத்தையும் செய்து, விபச்சாரம் மற்றும் எல்லாவிதமான கெட்ட காரியங்களிலும் ஈடுபட்டிருந்து ; நீ போய் அவளை விபச்சார வீட்டில் சந்திக்கின்றாய் ; அவள் வெளியே வந்து, “சரி ஒரு நல்ல பெண்ணாக இருக்க நான் முயற்சிக்கின்றேன்” என்று கூறுகிறாள் என்றால், அந்த விதமான ஒரு பெண்ணை உன்னால் எப்படி விவாகம் செய்ய முடியும்? அந்த பெண்ணிடமாக உன்னால் நம்பிக்கை கொள்ள முடியாது. பாருங்கள்? உங்களால் அதைச் செய்ய முடியாது. அவ்வாறே ஒரு மனிதனும் அதே விதமான ஒரு காரியத்தில் இருப்பானென்றால் எப்படி ஒரு பெண்ணால் அந்த மனிதனில் நம்பிக்கை கொள்ள முடியும்? அந்த விதமான ஒரு காரியத்தில் உங்களால் நம்பிக்கையைக் கட்டி எழுப்ப முடியாது ; அங்கே கட்டுவதற்கு ஒன்று மே இல்லை. பாருங்கள்? உங்களால் அதைச் செய்ய முடியாது. 85நீங்கள் ஒரு படகைக் கண்டு, “இதோ ஒரு படகு இருக்கின்றது; படகில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன; ஆனாலும் நான் அதில் புற்களால் நிறைக்கப்பட்ட சாக்கு பைகள் சிலவற்றை வைப்பேன். ஒருக்கால், அச்சாக்கு பைகளை ஓட்டைகளின் மேல் வைத்து ஆற்றின் அலைகள் படகிற்குள் வராமல் செய்து ஆற்றைக் கடந்து விடலாமே” என்று உங்களால் எப்படி கூற முடியும்? ஏற்கனவே ஒரு நல்ல படகு அங்கே இருக்கையில், ஓட்டைகள் நிறைந்த இப்படகைக் கொண்டு செல்ல எந்த ஒரு முயற்சியும் நான் எடுக்கமாட்டேன். நிச்சயமாக. அது தவறான ஒன்று என்று நிரூபிக்கப்பட்டுள்ளதே (பாருங்கள்?) ஒவ்வொரு கடுமையான சூறாவளி மற்றும் புயலிலும் அலைகளை அடக்கின அந்த உண்மையான தேவனுடைய வார்த்தை யானது இங்கே இருக்கையில், முழுவதுமாக ஓட்டைகளால் நிறைந்துள்ள, மனிதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏதோ ஒரு வேத கலாசாலை போதகத்தை நாம் ஏன் எடுக்க வேண்டும்; அது தவறான ஒன்று என்று நிரூபிக்கப் பட்டுள்ளதே (பாருங்கள்?). அவள் தன்னால் முடிந்த வரையில் உண்மையாக அதைப் பற்றிக்கொண்டிருந்தாள். ஆகவே அது எப்பொழுதுமே அது அப்டியே செய்துக் கொண்டிருக்கும். சரி. “வானமும் பூமியும் ஒழிந்து போம். என் வார்த்தைகளோ ஒழிந்துப் போவதில்லை” என்று இயேசு கூறினார். ஏன்? அவை நித்தியமானவைகள் ; ஆதியிலேயே அவை இருந்தன. தேவனுடைய வார்த்தையை வெளிப் படுத்த மாத்திரமே அவர் இங்கே வந்தார். அவர் தேவனுடைய திட்டவட்டமான வெளிப்பாடாக இருந்தார். தேவன் தம்முடைய குமாரன் மூலமாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். 86இவையெல்லாம் மூல அதிகாரமாகிய ஆதியாகமத்தில் துவங்கினது. அதற்குப் பிறகு இவையெல்லாம் தொடர்ந்து ..... அது காட்சியில் வந்தது முதற்கொண்டு அதே விதமாகத்தான் இருந்துக்கொண்டு வருகின்றது. அறிவுக் கூர்மைக்கும் விசுவாசத்திற்கும் இடையே நடக்கின்ற போராட்டம் - எப்பொழுது மே போராட்டம் தான். ஆகவே அறிவுக்கூர்மையானது பிசாசினால் உண்டான, அவனுடைய பிள்ளைகளுக்காக அவனால் உண்டாக்கப் பட்ட ஒன்றாகும். நீங்கள் இதை எப்பொழுதாவது கவனித்ததுண்டா? நீங்கள் எல்லாரும் செம்மறியாட்டைப் பார்த்திருப்பீர்கள்; நீங்கள் எல்லோரும் வெள்ளாடுகளைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், ஒன்றை நீங்கள் அறிவீர்களா, அவையிரண்டின் சத்தமானது எவ்வித வித்தியாசமில்லாமல் இருப்பது போல மிக நெருங்கி இருக்கும். ஆனால் அதன் வித்தியாசத்தை அறிந்து கொள்ள ஒரு உண்மையான மேய்ப்பனால் தான் முடியும். நீங்கள் ஒரு வயதான வெள்ளாட்டை அங்கே. நிறுத்தி அதனை சத்தமிட - சத்தமிடச் செய்யுங்கள். பிறகு நீங்கள் சென்று ஒரு செம்மறியாட்டைக் கொண்டு வந்து அதனைச் சத்தமிடச் செய்யுங்கள். இவை இரண்டின் சத்தத்தை கவனித்துக் கேளுங்கள்; அவை இரண்டின் சத்தமும் ஒரே விதமாகவே இருக்கும். ஆனால் ஒரு உண்மையான மேய்ப்பன் அந்தச் சத்தத்தை கண்டறிவான். இயேசு, “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக் கின்றன” என்று கூறினார். பாருங்கள்? அது ஒரு வெள்ளாடா என்று அவர்களால் கூறமுடியும். எப்படி, அவனே ஒரு ஆடாகவே இருக்கின்றான். அவர், “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன”. பாருங்கள்? அவை யாரோ ஒருவர் “சரி, இப்பொழுது பார், நானும் கூட தேவனுடைய வார்த்தையைத் தான் பேசிக்கொண்டிருக்கிறேன். இது இங்கே இந்த விதமாகக் கூறுகிறது” என்று கூறும்படிக்கு விடவே விடாது. ஆனால் அது சாத்தானாகும் (பாருங்கள்?) நாம் அதை சற்று பார்ப்போம். அதை உங்களுக்கு தெளிவாக்குவோம். 87இப்பொழுது, இப்பொழுது, நீங்கள் பாருங்கள், வார்த்தை விதையானது அறிவு என்னும் சூழலில் வளரவே முடியாது. அது சரி தானே? பாருங்கள்? அறிவானது விசுவாசத்துடன் கலந்த உடனே சரியாக அந்த இடத்திலேயே விசுவாசமானது மரித்துவிடுகின்றது. ஏவாள் வந்து, “ எந்த நாளிலே அதை நாங்கள் புசிக்கின்றோமோ அதைப்புசிக்கும் நாளிலே சாகவே சாவோம் என்று கர்த்தராகிய தேவன் கூறியிருக்கின்றார்', என்று கூறினாள். பிறகு சாத்தான் என்ன கூறுகிறான் என்று பார்க்கலாம் என்று சற்று நிறுத்தினாள். அப்பொழுது சாத்தான், “என் அன்புள்ளவளே, சற்று கவனி, அருமையான சிறு பெண்ணே (பார்) நிச்சயமாக, உன்னை ஒரு நோக்கத்திற்காகவே தேவன் உண்டாக்கி யிருக்கின்றார். உனக்குத் தெரியுமா? அது சரியே, பாருங்கள்? நீ ஒரு ஸ்திரீயாவாய் ; நீ இந்த காரியத்திற்காகவே உண்டாக்கப்பட்டிருக்கின்றாய். அதுதான் காரியமாகும். இப்பொழுது அது என்ன என்று உனக்குத் தெரியாது. ஆனால் நீ இந்த காரியத்திற்காகத் தான் உண்டாக்கப் பட்டிருக்கின்றாய். ஓ, என் அன்புள்ளவளே, நீ ஒரு அருமையான சிறு பெண்ணாவாய். உன்னுடைய அழகான சிறு கைகளைப் பார். (பாருங்கள்?) ஏன் நிச்சயமாக அவர் .... நிச்சயமாக .....” என்று கூறினான். “ஆனால் அவ்வாறு நாங்கள் ..... நாங்கள் செய்தால் நாங்கள் சாகவே சாவோம் என்று அவர் கூறியுள்ளாரே” அதற்கு அவன், “ஆனால், ஓ, ஒரு அருமையான தகப்பனாகிய தேவன் அவ்விதமான ஒரு காரியத்தை செய்வார் என்று நீ நினைக்கிறாயா?” என்று கூறினான். ஆகவே அவள் என்ன செய்தாள்? அவள் தன்னுடைய சொந்த மூளையைக் கொண்டு யோசித்து விட்டு அவனுடைய அறிவுக்கூர்மையை எடுத்துக்கொண்டாள். “அது பெருமகிழ்ச்சி தருகின்ற ஒரு மரமாயிருக்கின்றதே ; ஒருவர் அதன் மீது ஆசை கொள்ளத்தக்கதாக அது இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாயிருக்கிறது'' என்று கூறினாள். அதற்காக அவள் விழுந்து போனாள். அது முற்றிலுமாக சரி. அவள் அந்த விதமாகச் செய்த போது சம்பவித்தது என்ன? எந்த ஒரு பெண்ணிற்கும் சம்பவிக்கிற காரியம் தான் அவளுக்கும் நடந்தது. நீ அந்த காரியத்திற்காக விழுகின்ற மாத்திரத்தில், சரியாக எல்லாமே அங்கேயே முடிந்துபோய்விடுகின்றது. அது சரி. இப்பொழுது, நீங்கள் பாருங்கள். அவள் தன்னிடமாக கொண்டிருந்த அந்த வித்தைக் கொண்டு முடிவில் அவள் ஒரு தாயாகியிருப்பாள்.... தேவனுடைய சித்தத்தினாலே, ஒரு உரைக்கப்பட்ட வார்த்தையின் மூலமாக, அவள் கடைசியாக தாயாகியிருப்பாள். ஆனால் அவளால் காத்திருக்க முடியவில்லை. அக்காரியத்திற்குள்ளாக அவள் பிரவேசித்தாள். 88இப்பொழுது (பாருங்கள்?), அவ்விதமாக அவள் செய்தவுடனே, வார்த்தையுடன் அறிவுக்கூர்மையையும் ஏற்றுக்கொண்ட உடனே ..... அறிவுக்கூர்மை வார்த்தைக்கு முரண்பாடான ஒன்றாகும். (நீங்கள் புரிந்து கொண்டீர் களென்றால் “ஆமென்” என்று கூறுங்கள்). (சபையார் “ஆமென்! என்று பதில் கூறுகின்றனர் - ஆசி) (பாருங்கள்?) அறிவு கூர்மையானது வார்த்தையுடன் இருந்து, அது வார்த்தையுடன் தான் இருக்கின்றது என்று நிரூபிக்கு மானால், அப்பொழுது வார்த்தையானது அதே அறிவுக் கூர்மையைக் கொண்டு தம்மையே பிறப்பித்துக் கொள்ளும். அப்பொழுது அது வார்த்தையாக இருக்கும். ஆனால் வார்த்தையானது அறிவுக்கூர்மைக்கு எதிராக இருந்து, வார்த்தையுடன் இல்லாதிருந்து வார்த்தையோடு ஒன்றைக் கூட்ட அல்லது குறைக்க ஏதாவதொன்றை அது கண்டெடுக்க முயற்சிக்குமானால், அப்பொழுது அந்த அறிவுக் கூர்மையானது பிசாசினால் உண்டான ஒன்றாயிருக்கிறது. ஆகவே வேதாகமத்தினுடைய பரிசுத்த ஆவியின் வித்துக்கள் அறிவுக்கூர்மையின் சூழலில் வளரவே முடியாது. அது தேசத்திலுள்ள ஒவ்வொரு வேதாகம கல்லூரியையும் கொன்று போடுகின்றது. அது ஒவ்வொன்றிற் குள்ளும் ஒரு பெரிய துளையை போட்டு .... நியாயத்தீர்ப்பு உள்ளே வரும் வரைக்கும் அதைப் பாழாக்கிக் கொண்டிருக் கின்றது. அது சரி, அது நிச்சயமாக அவ்விதமாகத்தான் செய்கின்றது (பாருங்கள்?), ஏனென்றால் அறிவுக்கூர்மையை - உலகப்பிரகாரமான ஞானத்தைக் கொண்டு வார்த்தையாலே வளரவே முடியாது. 89ஏவாள் தன்னிடமாக வார்த்தை கொடுக்கப்பட்ட போது கொடுக்கப்பட்ட விதமாகவே அவ்வார்த்தையை அவள் விசுவாசிக்கவேண்டியவளாக இருந்தாள். அது சரி தானே? யாராவது ஒருவர் வார்த்தையைக் குறித்து ஏதாவதொன்றைக் கூறும் போது அதற்கு அவள் செவி கொடுக்கக்கூடாது - எந்த விதமாக அவ்வார்த்தை அளிக்கப்பட்டதோ அந்த விதத்திலேயே அதை அவள் பற்றிக் கொண்டிருக்க வேண்டியவளாக இருந்தாள். அந்த விதமாகத்தான் அவள் அதை விசுவாசித்தாக வேண்டியவளாக இருந்தாள். அவள் அதை அப்படியே விசுவாசித்திருந்தால், மரணமென்பது இருந்திருக்காது. அது சரி, ஒரு மனிதனோ அல்லது ஒரு பெண்ணோ தேவனுடைய வார்த்தையை, நமக்கு அளிக்கப்பட்ட விதமாக எந்த ஒரு மாற்றமுமில்லாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு, தேவன் அதை எப்படி உரைத்திருந்தாரோ அந்தப்படியே அதை அப்படியே பற்றிக்கொண்டால் அது ஜீவனாகும். ஆனால் வார்தையோடு ஏதோ ஒரு ஸ்தாபனத்தின் அறிவுக்கூர்மையைக் கலந்து விடுவீர்களானால், சரியாக அந்த இடத்திலேயே நீங்கள் மரித்து விடுவீர்கள். ஆதியிலே நடந்த விதத்தைப் போலவே .... அது தான் வித்து. அது அவ்விதமே முதல் முறையாக அந்த விதமாகத்தான் அது நடந்தது ; ஒவ்வொரு முறையும் அந்த விதமாகத்தான் அது செயல்படும் ; அந்த விதமாகத்தான் அது இருந்து வருகின்றது. தேவன் அனுமதிப்பாரானால் இக்காலை அதை வேதாகமத்தின் மூலமாக நாம் நிரூபிப்போம். சொந்த மூளையைக் கொண்டு யோசித்தல் அல்லது மற்றக்காரியங்களிலிருந்து வேறு பிரிந்து, வார்த்தையை மாத்திரம் அப்படியே விசுவாசித்து தரித்திருப்போமானால், அதுவே அது வளருவதற்காக இருக்கின்ற ஒரே வழியாகும். 90தேவன் அதை நமக்கு அளித்த விதமாகவே அப்படியே ஏவாள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியவளாக இருந்தாள். நான் ஏற்கனவே உங்களிடமாக அதை திட்டவட்டமாக கூறினபடியே நான் விசுவாசிப்பது என்னவென்றால் தேவன் இந்த வேதாகமத்தை எந்த ஒரு இழப்புமில்லாமல் இருக்கின்ற விதமாகவே அப்படியே பேணிக் காத்து வந்துள்ளார். அந்த விதமாகவேதான் தேவன் என்னிடம் அதை இங்கே அளித்துள்ளார். ஆகவே வேறு எந்த ஒரு அறிவுக்கூர்மையும் ஞானமும் எனக்கு வேண்ட வே வேண்டாம். இங்கே தேவன் கூறியுள்ள விதமாகவேதான் அது எனக்கு வேண்டும். இப்பொழுது, நான் உங்களை புண்படுத்தவில்லை என்று நம்புகிறேன். நான் மனந்திரும்ப வேண்டும் என்று வேதாகமம் கூறியிருக்குமானால், மனந்திரும்பு என்பது தான் அதன் அர்த்தம். சரீரத்தை ஒடுக்கி தவமிருத்தல் அல்ல, மனந்திரும்ப வேண்டும் என்பதே! 91நான் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று வேதாகமம் எனக்குக் கூறியிருக்கின்றது ; வேறெதையோ ஒன்றை அது கூறவில்லை. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று அது கூற முனையவில்லை . இயேசுவின் நாமம் தான் என்று அது கூறியுள்ளது. நீங்கள், “சரி, மத்தேயு 28: 19 பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் என்று கூறுகிறதே” என்று கூறலாம். சரியாக அதே காரியம் தான். இப்பொழுது, அது சரியில்லையெனில், அவர்கள் சரியான காரியத்தை பெற்றிருக்க வில்லையெனில், பேதுருவும் மற்றும் வேதாகமத்தில் இருந்த மற்ற ஏனையோரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தாக வேண்டும் என்கின்ற விசுவாசமானது எப்படியிருக்குமென்றால் தேவன் ஆசீர்வதித்திருந்த பொய்யான வெளிப்பாட்டை பெற்றிருந்தார்கள் என்பதாக இருக்கும். அப்படியானால் அது தேவனை..... அப்படியானால் ஆதியிலே அவர் ஏவாளை ஆசீர்வதித்திருக்க வேண்டும். 92பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம், அவை மூன்று பட்டப் பெயர்களாகும். ஒரே ஒரு நாமம்தான் உண்டு. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்படும் வரைக்கும் பிதா குமாரன் பரிசுத்த ஆவியினால் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளவே முடியாது. ஏனெனில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் அதுவே. முழு வேதாகமத்திலும் அந்த விதமாகத்தான் எழுதப்பட்டுள்ளது. வேதாகமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட ஒவ்வொருவரும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமமாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்னும் பட்டப் பெயர்களைக் கொண்டு ஞானஸ்நானம் பண்ப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு நாமமற்ற, பெயரே இல்லாத ஒரு ஞானஸ்நானத்தைத் தான் பெற்றுள்ளனர் ! அவை போதகர், சங்கை, டாக்டர் மற்றும் அதைப் போன்று, தந்தை, மகன், மானிடன், மனைவி, என்பவைப் போல பட்டப்பெயர்களே. “அது எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டாக்க வில்லையே” எனலாம். அப்படியானால் உங்களுடைய காசோலையில் உங்கள் பெயருக்கு பதிலாக உங்கள் பட்டப்பெயரை கையெழுத்திடுங்கள். பிறகு அது எங்கே செல்கிறதென்று பாருங்கள். “நான் இந்த காசோலையில் இல்லத்தரசி என்று கையெழுத்து இடுகிறேன்” என்பதைப் போன்று. ஆம், இங்கே வெளிப்பாடானது சரியாக உங்களுக்கு முன்பாகவே இருக்கையில், தேவனுடைய வார்த்தையை அவிசுவாசிப்பதும் கூட அர்த்தமுள்ள ஒன்றாக அது செய்து விடும். நிச்சயமாக அவ்விதம் செய்யும். பாருங்கள். நிச்சயமாக. அது சரி. 93வார்த்தையை தேவன் கூறியுள்ள விதமாகத்தான் விசுவாசிக்க வேண்டும். அது தன்னைத் தானே ஒரு போதும் முரண்படுத்திக் கொள்ளாது. அப்படி அது தன்னை முரண்படுத்திக் கொள்ளுமானால் நீங்கள் அதை எனக்கு காண்பியுங்கள் பார்க்கலாம். அது தன்னைத் தானே முரண்படுத்திக்கொள்ளாது. ஒரு போதும் அல்ல. ஒருக்கால் சாத்தான் அதை உங்களுக்கு முரண்படுத்திக் காண்பிப் பான். ஆனால் வார்த்தையை அவனால் முரணாக்க முடியாது ; வார்த்தை அதை பொறுத்துக் கொள்ளாது. இல்லை, ஐயா! வெகு காலமாக அவ்விதமாக அவ்வாறு யோசிக்கப்படு வருகின்றது. ஆனால் இன்னுமாக அது நிரூபிக்கப்படாதிருக்கின்றது. இப்பொழுது இந்த இரு மூல முதல்களை நாம் தொடர்ந்து பார்ப்போமாக. நீங்கள் அதை ஒருக்கால் சூழ்நிலைக்குரியவைகள் என்று அழைக்கலாம். அவை எதை உருவாக்குகின்றன என்று நாம் பார்ப்போமாக. சிறிது நிமிடங்களுக்கு நாம் அவைகளை கவனித்துப் பார்க்கலாம். 94சூழ்நிலைகளுக்குரியவைகள், இந்த மூலமுதல்களும் ஒரு சூழ்நிலையை உருவாக்குகின்றன. நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் ஒரு சபைக்குச் சென்றிருக்கின்றீர்களா ...... நான் .... நான் இப்பொழுது இதை பயபக்தியுடன் கூறுகிறேன். ஒரு காரியத்தை மாத்திரம் குறிப்பிட விரும்புகிறேன். தேவன் என்னை மன்னிப்பாராக! மிகவும் விரைப்பான நிலையிலுள்ள போதகரைக் கொண்டிருக்கின்ற ஒரு சபைக்கு நீங்கள் எப்பொழுதாவது சென்றதுண்டா? சென்றிருக்கிறீர்களா? அந்த சபையாரும் அவ்விதமாகவே இருப்பார்கள். அது சரியே. பாருங்கள்? அது என்னவாயிருக்கிறது? அந்த சூழ்நிலைதான் அதை பிறப்பித்திருக்கிறது. “இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். அந்த விதமான காரியமானது அர்த்தமற்ற ஒன்றாகும். தெய்வீக சுகமளித்தல் மற்றும் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் போன்ற காரியங்களை நான் விசுவாசிப்பதில்லை” என்று கூறுகின்ற போதகரின் இடத்திற்குச் சென்று பாருங்கள். நீங்கள் காண்பதெல்லாம் அச்சபையார் ஒவ்வொருவரும் ... . அங்கே ஒரு ... அக்கூட்டத்தில் எங்கோ ஓரிடத்தில் ஒரு கழுகு இருக்குமானால், அந்த கோழிகளின் கூட்டத்தின் மத்தியிலிருந்து அக்கழுகு வெளியே வந்து விடும். நிச்சயமாக அது வெளியே வந்து விடும். அது முற்றிலும் உண்மையே. அக்கழுகு அதை விட்டு வெளியேறும். நிச்சயமாக அவ்வாறே அது செய்யும். அக்கழுகால் அதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது; ஏனெனில் அது ஒரு கழுகாகும். அது வானத்தில் இருப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஒரு குப்பை கூளத்திற்காக அல்ல, ஆம் ஐயா, இப்பொழுது இதோ அது. 95ஆகவே இப்பொழுது, நாம் பார்ப்பது என்ன என்றால் அந்த சூழ்நிலைகள் ..... அக்காரியங்கள் இருக்கின்ற எந்த ஒரு இடமானாலும் அங்கே செல்லுங்கள் ...... விசுவாசம் போதிக்கப்படுகின்ற ஒரு சபையைப் பாருங்கள், நீங்கள் அந்தச் சபையானது அந்த சூழலிலே இருப்பதை உங்களால் காணமுடியும். ஓ, தேவனே, நீங்கள் அதைக்காணும் விதத்தில் புரியும்படியாக உங்களிடமாக நான் இதைக் கூறுவேனாக. பாருங்கள்? சென்று ... ஜெபிக்கின்ற பரிசுத்தவான்கள் - விசுவாசிகள் மத்தியில் மக்கள் வருவதற்கான காரணம் அது தான். தீமோத்தேயு மாத்திரம் தான் விலையேறப்பெற்ற விசுவாசத்தையுடையவனாக இருந்தான். அவனைத் தவிர வேறு யாரையுமே பட்டணத்தில் தான் காணவில்லை என்று பவுல் கூறினான். மற்றவர்கள் எல்லோரும் ஸ்தாபனத்தவர்களாக இருந்தனர். பாருங்கள். 96ஆகவே அவன் அந்த சூழ்நிலைகளுக்குள்ளே சென்ற போது (பாருங்கள்?), அவன் - நீங்கள் அந்த சூழ்நிலை உருவாக்கியுள்ள அந்த சூழலில் காரியங்கள் நடப்பிக்கப் படுவதை காண்பீர்கள். “என்னே, ஆம் வேதாகமம் உண்மையானது, தேவன் சுகமளிக்கிறார்” என்று கூறப்படுகின்ற ஒரு இடத்திற்கு நீங்கள் செல்லும் போது, விசுவாசத்தினாலே மக்கள் பிழைப்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் அந்த ஜனக்கூட்டத்தின் மத்தியில் நீங்கள் நடந்து செல்லும் போது, “ஆம் ... ஆம், நான் புற்று நோயால் மரித்துக் கொண்டிருந்தேன் ; நான் சுகமாக்கப் பட்டேன்” என்று மக்கள் கூறுவதை நீங்கள் காணலாம். “ஒரு காலத்தில் நான் குருடாயிருந்தேன்; இப்பொழுது நான்..... என்று கூறப்படுவதைக் காண்பீர்கள். அப்பொழுது வெளியாட்கள் வந்து “வியூ! என்னே ! என்ன அது? நீங்கள் ..... உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்பார்கள். “நான் உங்களுக்கு என்னுடைய காரியத்தைக் காண்பிக்கட்டும். என்னுடன் வீட்டுக்கு வாருங்கள் ; இரவு ஆகாரத்தை என்னுடன் உண்ணுங்கள், நான் உங்களுக்கு ஒன்றை காண்பிக்க விரும்புகின்றேன். ஒரு காரியத்தை சான்றிதழோடு உங்களுக்கு நான் காண்பிக்கட்டும். என் அண்டை வீட்டார் நான் எந்நிலையில் இருந்தேன் என்பதை அறிவார்கள். நான் அநேக வருடங்களாக பக்கவாதத்தால் முடங்கிப் போயிருந்தேன் ; எனக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. பாருங்கள்? அது என்ன? அந்த சபையிலிருந்த அந்த வார்த்தை, அந்த விசுவாசிகளின் குழு அந்த சூழலை உருவாக்கியிருந்தனர். 97“அவ்விதம் இருக்க முடியாது” என்று கூறி, அறிவுக் கூர்மையானது அதை முற்றிலுமாக நிழலிட்டிருக்கின்ற ஒரு சூழலில், வார்த்தையானது தன்னுடைய எளிமையிலும் மற்றும் தன்னுடைய முழுமையிலும் எப்படி வளரப் போகின்றது? பாருங்கள்? அதனால் முடியாது. ஆகவே ஒரு வேதாகமக் கல்லூரியிலிருந்து வருகின்ற ஒரு அறிவுக் கூர்மையானது பிரசங்கிக்கப்படும் போது பிள்ளைகள் மரித்துப் போகின்றனர். வார்த்தையிலிருந்து வருகின்ற விசுவாசமானது பிரசங்கிக்கப்படும் போது பிள்ளைகள் ஜீவிக்கின்றனர். ஆமென்! அதுதான் விசுவாசம், ஜீவன் மற்றும் மரணம். இந்த அதே காரியம் தான் ஏதேன் தோட்டத்தில் சம்பவித்தது. சரியாக அங்கே இருந்த அந்த இரண்டு சூழ்நிலைகளுக்கும் அதுதான் சம்பவித்தது; ஏவாள் சரியான ஒன்றை விட்டு விட்டு தவறான ஒன்றிற்கு சென்ற போது அவள் மரித்து போனாள். பாருங்கள்? ஒவ்வொரு முறையும் அதைச் செய்யும் போது மரணம் தான் சம்பவிக்கும். ஆகவே அவர்களால் தரித்திருக்க முடியவில்லை. உங்கள் சபையானது அவ்விதமான ஒரு சூழலை பெற்றிருக்குமானால், ஓ, பிள்ளையே, நீ ஜீவிக்க விரும்பினால், வார்த்தையை நீ விசுவாசி. 98இப்பொழுது, இங்கே நான் கூறுவது சற்று கடுமை யானதாகக் காணப்படும். இதைக் கடுமையாக கூற வேண்டும் என்று நான் விழையவில்லை. நான் முயற்சிப்பது ..... இது ஒரு போதித்தல். நீங்கள் இதை .... இக்காரியங்களைப் பற்றிப் பார்க்கையில் சற்று கடுமையாகவும் பொசுக்கும் விதத்திலும் பேசியாக வேண்டும். உங்களுக்குப் புரிகின்றதா? இப்பொழுது சற்று பொறுமையாக கேளுங்கள். இது ஒரு கன்று குட்டிக்கு சூட்டுக்குறி இடுவது போன்றதாகும். ஒரு கன்று குட்டிக்கு அவ்விதமாக நான் செய்யும் போது அக்காரியத்தை நான் வெறுப்பதுண்டு. பரிதாபத்துக்குரிய அந்த கன்றுகுட்டி, நாங்கள் அங்கே சென்று . . . நீங்கள் ஒரு கன்றுகுட்டியைக் கயிற்றைக் கொண்டு கட்டியுள்ளீர்களா என்று எனக்குத் தெரியாது. ஒரு பன்றியைக் கட்டுவது போல அதைக் கட்டுவீர்கள் (பாருங்கள்?) அதைச் சுற்றி ...... பரிதாபத்திற்குரிய அந்த கன்றுகுட்டி, நீங்கள் அதை அங்கே ஓட்டிச் சென்று அந்த மிகச் சூடாக உள்ள அந்த சூட்டுகுறியிடும் இரும்பை எடுத்து அக்கன்றின் மீது குறியிடுவீர்கள். ஓ, சகோதரனே, பார்ப்பதற்கு அது மிக பயங்கரமாக இருக்கும்! அக்கன்று எழுந்து நின்று மிக வேகமாக ஓடத் துவங்கும். அது தன் கால்களை உதைத்துக் கொண்டு கதறிச் சத்தமிட்டு, ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் உங்களுக்குத் தெரியுமா? அக்குறியிட்டபிறகு அது யாரைச் சார்ந்தது என்று மக்கள் அறிந்து கொள்வர். அது சரியே. அக்கன்று எந்தப் புல்வெளியைச் சார்ந்தது என்று தெளிவாக அறிந்து கொள்ளப்படும். அக்கன்றைக் குறித்து எந்த ஒரு தேவையற்ற சந்தேகமும் கிளம்பாது. ஆகவே நாம் குறியிடுவோமாக. பாருங்கள்? நாம் குறியிடு வோமாக. ஆம் ஐயா, அவர்கள்..... உங்களுக்கு அந்த ..... உங்களுக்கு ....... உங்களில் அநேகர் அந்த மாடு மேய்ப்பவனின் பாடலைப் பாடியிருப்பீர்கள் அல்லது கேட்டிருப்பீர்கள். அப்படித் தானே? மாடுகள் வளைத்துக் கொள்ளப்பட்டு ஒன்றாக கட்டப்படும் போது ஒரு வழி தவறின கன்றுக் குட்டி யொன்று கண்டுபிடிக்கப்படுமானால், அது எடுக்கப்பட்டு சூப் தயார் செய்வதற்கு கொண்டு போகப்படும். ஏனெனில், அதன் மேல் அடையாள சூட்டுக்குறியானது இல்லை. குறியிடப்பட்ட மற்ற கன்றுகள் தங்களுடைய சொந்த புல்வெளிக்குச் செல்கின்றன, மாடுகள் வளைத்துக் கொள்ளுதலின் போது முதலாளிக்கு தன்னுடைய மாடுகள் எது என்று நன்றாகத் தெரியும். நீங்கள் . . . சூட்டுக்குறியிடுதல் நோவூட்டத்தான் செய்யும். 99இப்பொழுது கவனியுங்கள்! சாத்தானால் தன்னுடைய அறிவுக்கூர்மையைக் கொண்டு விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியும் (இப்பொழுது, சில நிமிடங்களுக்கு ஒரு மருத்துவரைப் போல உங்களிடம் நான் பேசப் போகிறேன்), சாத்தான் அளித்திருக்கும் விளைநிலத்தில் மானிட வர்க்கம் வளரத்தக்கதாக ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் உள்ளன என்று அவனால் விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியும். அவன் நிச்சயமாகவே வைத்திருக்கின்றான். அவனால் அதை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியும். அவர்கள் விரும்புகின்ற எந்த ஒரு காரியத்தையும் விஞ்ஞானப் பூர்வமாக அவர்களால் நிரூபிக்க முடியும். பாருங்கள் நிச்சயமாக. 100அது வைட்டமின் “P” யைக் கொண்டிருக்கின்றது. (இன்ப ம் Pleasure), (புகழ், Popularity), அவனுடைய அறிவுக்கூர்மை விளைநிலத்தில் அந்த வைட்டமின்கள் இருக்கின்றன. நிச்சயமாக, நிச்சயமாக! எல்லாவிதமான உலக இன்பங்கள், எல்லாவிதமான திரைப்படக் காட்சிகள், எல்லாவிதமான நடனங்கள், எல்லா காரியங்கள், எந்தவிதமான ஒன்றும், “தொடர்ந்து செய், அதனால் ஒன்றும் பரவாயில்லை , அது உனக்கு எந்தவிதத் தீங்கும் விளைவிக்காது.'' நிச்சயமாக, பாருங்கள்? புகழ் (Popularirty). ”ஆம், நீ செல்கின்றது நகரத்தில் இருக்கின்ற மிகப் பெரிய சபையாகும். அது சரி. அந்த அறிவுக்கூர்மையின் விளைநிலத்தில் வைட்டமின் C' உள்ளது. அது என்னவென்றால், (Common sense, நல்லறிவு' என்பதே. அப்படியென்றால் சொந்த மூளையைக் கொண்டு யோசி, பாருங்கள்? அதில் வைட்டமின் “R'” இருந்தது அதற்கு “Reasoning, சொந்த மூளையைக் கொண்டு யோசித்தல்” என்பதே யாகும். ஆமாம், அவனால் சொந்த மூளையைக் கொண்டு யோசிக்க முடியும். ஆனால் அது கிரியைச் செய்யாது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். 101அதில் வைட்ட மின் அழ . . . 'B' இருந்தது. அது Beauty அழகு என்பதாகும். சாத்தான் அழகானவன். பாவம் அழகு வாய்ந்ததாகும். பாவம் மேலும் மேலும் அதிகரிக்கும் போது அதன் அழகு கூடிக்கொண்டே போகும். கட்டைகளால் கட்டப்பட்ட ஒரு குடிலைக் காட்டிலும் இன்னுமாகச் சிறந்த ஒரு வீடு நம்மிடையே இருக்கின்றதா? அதை விட எவ்வளவு அழகாக அது இருக்கின்றது? பெண்கள் அன்று இருந்ததை விட இன்று எவ்வளவு அழகாக இருக்கின்றனர் பாருங்கள்? ஃப்ளாரிடா மாநிலமானது (Florida) தேவன் எவ்விதமாகச் சிருஷ்டித் திருந்தாரோ அதை விட இன்றைக்கு எவ்வளவு அழகாக இருக்கின்றது பாருங்கள்? பாவம் அழகைக் கொண்டிருக் கின்றது. சாத்தான் அழகைச் சார்ந்தவன் என்றும், அவன் அழகை விரும்பினவன் என்றும், மிக அழகான ஒரு இராஜ்ஜியத்தை அவன் உண்டாக்க முயன்றான் என்றும் எத்தனைப் பேர் அறிவீர்கள்? நிச்சயமாக, நாம் அதை அறிவோம். சாத்தான் அழகில் இருக்கின்றான். இப்பொழுது கவனியுங்கள் ! அவன் கொண்டிருக் கின்ற வைட்டமின்களாவன : “சொந்த மூளையை கொண்டு யோசித்தல், Reasoning” என்கின்ற வைட்டமின் “R”, அழகு , beauty“ என்கின்ற வைட்ட மின் 'B' ” நவீன Modern என்கின்ற வைட்டமின் “M” என்பதே, ஆ, நீ நவீன மனிதனாக இருக்க விரும்புகின்றாய்“. 102அவனுடைய அறிவுக்கூர்மையை எடுத்து நீங்கள் அந்தக் காரியத்தை விசுவாசிப்பதில்லையா என்று நீங்கள் கண்டறியுங்கள். அது சரியாக உங்களுக்குள்ளாகவே அது வளரும். நீங்கள் உட்கார்ந்திருக்கின்ற இடத்திற்கே அந்த வைட்டமினானது வந்தடையும். யாரோ ஒரு ஆள் எழுந்து நின்று அவனுடய அறிவாற்றலின் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்வான், “நண்பர்களே இதோ பாருங்கள், இங்கே இந்த அழகான பிரம்மாண்டமான தேவாலயத்தில் மிக அதிகமாகக் கூச்சலிட்டு, அழுது, அந்நிய பாஷையில் பேசி, மேலும் கீழுமாக தரையில் புரண்டோடி, வெறி பிடித்த நாய்களைப் போல வாயில் நுரை தள்ளிக் கொண்டிருந்தால் காண்பதற்கு எப்படி இருக்கும் ? நகரத்தில் மேயர் இதைப் பார்த்து என்ன கூறுவார் என்று சற்று யோசித்துப் பாருங்கள். டீக்கன்மார்கள் குழுவே, இப்படிப்பட்ட காரியத்தையுடைய இதை நாம் உள்ளே அனுமதித்தால் என்னவாகும்?” என்பான். ஓ , நிச்சயமாக அது நவீன காரியமாகும். ''நம்முடைய மக்கள் அங்கே தெருவில் கஞ்சீரா இசைக்கருவியை (tambourine) வைத்துக் கொண்டு நிற்பார்களென்று நீங்கள் நினைக்கின்றீர்களா... நகரத்தின் ஏனைய பெண்கள் அங்கே சென்றுக்கொண்டிருக்கையில் நம்முடைய சகோதரிகள் தங்களுடைய பெரிய நீண்ட தலைமயிரானது கீழே தொங்கிக் கொண்டிருக்கும்படியாக செய்து அங்கே நின்று கொண்டிருக்கும் போது எப்படியிருக்கும், அதோ பார், அதோ பார், அந்த சபையின் தலைவர் (என்னவாயிருந்தாலும் சரி, அதை நீங்கள் அறிவீர்கள்).... ஓ, அங்கே அங்கே பார், அவள் ஒரு பழங்கால பெண்ணைப் போல இருக்கிறாள் அல்லவா? அப்படித்தானே? அவள் பின் புறத்தில் நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும் அவளுடைய தலைமயிரானது காற்று வெளியேறி தட்டையாக இருக்கின்ற உதிரி டயரைப் போல இருக்கின்றதல்லவா?“ அதைப் போன்று கூறுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். 103“நீங்கள் நவீனமாக இருக்க விரும்புகிறீர்கள்” பாருங்கள்? அது பிசாசின் ஞானமாகும். அது தான் அங்கே வளருகின்றது. விளைநிலத்திலிருக்கின்ற அந்த வைட்ட மினானது உற்பத்தி செய்கின்ற அந்தப் பொருளாக அது வெளி வருகின்றது. நவீன யேசபேலே இன்னும் தொடர்ந்து செய்து கொண்டேயிரு. சரி. நவீனம், இன்றைக்கு இருக்கின்ற பெண்களைப் போலவே, நிச்சயமாக. ஓ, நவீனமானது! “ஓ, நகரத்தின் மக்களிலே மிக நவீனமானவர்கள் சபைக்கு வருவார்கள்” நிச்சயமாக. அது ..... ஏன்? அவர்கள் நவீன வைட்டமினாகிய சொந்த மூளையைக் கொண்டு யோசித்தல் வைட்டமினில் வளருகின்றனர். அது சரியே, அவர்கள் அந்த வைட்டமினைக் கொண்டு வளருகின்றனர். பாருங்கள்? அதுதான் காரியம், சொந்த மூளையைக் கொண்டு யோசித்தல் என்பதே. ஆனால் நீங்கள் அந்த வைட்டமினைக் கொண்டு வளர ஆரம்பித்த உடனே, வார்த்தைக்கு மரித்து விடுகிறீர்கள். நீங்கள் அந்த வைட்டமினைக் கொண்டு வளரத்துவங்கும் முன் நீங்கள் வார்த்தையை மறுதலிக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். பாருங்கள்? நீங்கள் பாவியாக இருப்பதற்கு இருக்கின்ற ஒரே வழி தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பதேயாகும். பாவம் என்றால் என்ன? அவிசுவாசம். எதில் அவிசுவாசம்? தேவனுடைய வார்த்தையில். பாருங்கள்? முதலாவதாக நீங்கள் தேவனுடைய வார்த்தையை மறுதலிக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். 104இப்பொழுது, என்ன இங்கே நான் இன்னும் பத்து “வைட்டமின்”களை குறிப்பெழுதி வைத்துள்ளேன். ஆனால் அவன் அவர்களிடம் கூறியிராத ஒரு வைட்டமின் இருக்கிறது. அவன் அங்கே அதில் வைட்டமின் “D” யையும் வைத்திருக் கின்றான். அதில் இருக்கின்ற வைட்டமின்களிலே மிகப் பெரிய வைட்டமின் அதுவாகும். அதன் விளைவு என்ன ..... “Death” மரணம்“. பாருங்கள்? மிக அழகாக உடுத்தியிருக்கின்ற மக்கள் கூட்டம், இருப்பதிலேயே மிக நவீனமான ஒன்று. மிக அழகான சபை, மிகப் பெரிய ஸ்தாபனம் அதுவாகும் (பாருங்கள்?) இருப்பதிலேயே மிக நவீனமான ஒன்று. இதுவரை இருந்ததைக் காட்டிலும் மிக அழகான ஒன்று. மிக விவேகமான மதிநுட்பமான காரியங்கள் அங்கே கூறப்படுகின்றன : ”தேவன் நம்மை தம்முடைய சிருஷ்டி யாக உண்டாக்கியிருப்பாரானால், பெண்கள் குட்டை தலைமயிரைக் கொண்டு சிறந்த விதத்தில் காணப்படும் போது ஏன் அவர் அதைக் கடிந்து கொள்கின்றார்? சிறிது அழகொப்பனை “மேக் அப் செய்து கொண்டால் ஏன் அவர் கடிந்து கொள்கின்றார்?” சரி, அவ்விதமாக “மேக் அப்” செய்த ஒருவளை அவர் வேதாகமத்தில் வைத்திருக்கின்றார் ; அவர் அவளை நாய்களுக்கு உணவாக அளித்தார். ஆகவே நீங்கள் அதைப் பற்றிச் சற்று நினைத்துப் பாருங்கள். புரிகின்றதா? அது முற்றிலும் சரி. “ஏன் தேவன் ..... ஏன் தேவன்.... ஏன், என்னே , நாம் அந்த வேதாகமத்தின்படியே தான் வாழ வேண்டும் என்று தேவன் எதிர்ப்பார்ப்பதில்லையே”. நிச்சயமாக அவர் எதிர்ப்பார்க்கிறார் ; ஏவாள் அதன்படி வாழ வேண்டும் என்று அவளிடம் கூறினார். அவர் கூறினது ..... மனுஷன் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைக்கின்றான் என்று இயேசு கூறியிருக்கின்றார். அதைக் கூறினது யார்? இயேசு அது சரிதானே? அவர், “வேறு ஒரு மனிதன் வந்து வித்தியாசமான காரியத்தைக் கூறுவானானால், அவன் பொய்யனாக இருக்கக் கடவன், அவருடைய வார்த்தை மாத்திரமே உண்மையானதாக இருப்பதாக. வானங்களும் பூமியும் ஒழிந்து போம். என் வார்த்தையோ ஒழிந்து போவதில்லை” என்று கூறினார். உங்களுக்குப் புரிகின்றதா? ஆகவே வைட்டமின் “D”ல் தான் அவன் தன்னுடைய சூத்திரத்தை வைத்துள்ளான். நவீனம். அது சரி. 105கவனியுங்கள், ஆனால் வேதாகமத்தின் வார்த்தை வித்தினால் அப்படிப்பட்ட ஒரு விளைநிலத்தில் வளரவே முடியாது. தேவனுடைய ஆவியானது தன் மீது வரும் போது “தேவனுக்கு மகிமை! அல்லேலூயா” என்று கூக்குரலிட விரும்புகிற ஒரு மனிதன் அப்படிப்பட்ட நவீன சபைகளில் ஒன்றிற்கு செல்ல முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அங்கு சென்று அப்படிச் செய்வீர்களானால் அச்சபை பிரசங்கி தன் பிரசங்கத்தை விழுங்க வேண்டியதாக இருக்கும்! அப்படித்தான் என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். அந்த பிரசங்கி “ம்ம்ம்ம்ம்ம்ம்!'' என்று கூறுகூதை என்னால் காணமுடிகின்றது. அங்கே உட்கார்ந்திருக்கின்ற எல்லாரும் நாரைக்கொக்கு தன் கழுத்தை திருப்புவது போல தங்கள் கழுத்துக்களை விநோதமான முறையில் திருப்பி “ஓ, அப்படி சொன்னது யாராயிருக்கும்?” என்று சுற்றுமுற்றும் பார்ப்பார்கள். பிறகு சில நிமிடங்களில் அந்தப் பிரசங்கி “தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து... ”என்று கூறுவார். “தேவனுக்கு மகிமை! அது சரி,” 106“உம்ம்ம்ம் ! டீக்கன்மார்களே. . .'' அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் கதவண்டையில் இருப்பீர்கள்; அவர்கள் உன்னை வெளியே வீசி எறிவார்கள். பாருங்கள்? வார்த்தையினால் அங்கே வளரவே முடியாது. முடியாது. அதனால் முடியாது. வளர முடியாது. பாருங்கள் ? வார்த்தை அங்கே வளரவே வளராது. பாருங்கள்? அதன் பிறகு அவன் அதற்கு மேலாக தன்னுடைய விஷத்தைத் தெளித்து உனக்குள் இருக்கும் ஜீவ விதையை கொல்ல முயற்சிப்பான், “இதோ, நாங்கள் ..... தேவன் சுகமளிக்கின்றார் என்று விசுவாசிக்கும் ஒரு மக்கள் குழுவினர் தேசத்தில் இருக்கின்றனர். அப்படியா, நடைமுறைக்கு ஒத்ததாக யோசிப்போமானால் நமக்கு சுகத்தை அளிக்க மருத்துவர்களைத் தான் தேவன் நமக்கு கொடுத்திருக்கின்றார் என்பது தெளிவாக விளங்குகிறதல்லவா!” இப்பொழுது, நீங்கள் நல்லறிவுள்ள நேர்மையான ஒரு மருத்துவரை அணுகி சுகமளிப்பது நீங்கள்தானா என்று கேட்டுப்பாருங்கள். அதற்கு அவர், “இல்லை ஐயா, என்னால் ஒரு பல்லைத்தான் வெளியே எடுக்க முடியும். ஆனால் நான் வெளியே எடுத்த பிறகு அந்த பல் இருந்த பற்குழியை என்னால் சுகப்படுத்த முடியாது” என்று உங்களிடம் கூறுவார். அது சரி. “உடைந்த ஒரு கையை இணைக்க முடியும், ஆனால் அதை என்னால் சுகப்படுத்த முடியாது”. நிச்சயமாக அது சரியே. தேவன்தான் சுகமளிப்பவர் ஆவார். பாருங்கள்? ஆகவே அப்படிப்பட்ட காரியங்களில் ஏதாவதொன்று வளருமா? அப்படிப்பட்ட ஒரு காரியத்தில் வார்த்தை விதையானது எப்படி வளரும்? அது வளரவே வளராது. அந்த விதமான ஒரு சூழலில் அதனால் வளரமுடியாது. நிச்சயமாக அது வளராது. 107ஆனால் விசுவாசம் ஒரேயொரு வைட்டமினில் தான் வளர்கின்றது. அதற்கு ஒரே ஒரு வைட்டமின் தான் இருக்கின்றது. எந்த ஒரு கலவையையும் கொண்டிருக்க வேண்டிய அவசியம் அதற்குக் கிடையாது. விசுவாசம் ஒரு வைட்டமினில் தான் வளருகின்றது ; அந்த வைட்டமின் வார்த்தை ஆகும்! அந்த ஒன்றில் தான் விசுவாசத்தினால் வளரமுடியும். அது வார்த்தையாகும். அது வளரத்தக்கதாக இருக்கின்ற ஒரே வழி என்னவென்றால், அது வார்த்தையில் கொண்டிருக்கின்ற விசுவாசமேயாகும், அது முழு வார்த்தையும் எடுத்து அதுதான் சத்தியம் என்று விசுவாசிக்க வேண்டும். ஆகவே அந்த விசுவாச வைட்டமின் நான்கு எழுத்துக்களை கொண்டிருக்கின்ற வார்த்தையாகும். (ஆங்கிலத்தில் உள்ளவாறே - தமிழாக்கியோன்) அது “L-i-f-e, Life, p-வ-ன், ஜீவன் என்பதாகும். விசுவாசம் வைட்டமின் ”ட“ஐ கொண்டிருக்கின்றது. விசுவாசத்திற்கு ”ட“ வைட்டமின் இருக்கின்றது. 108அறிவுக்கூர்மை வைட்டமின் “P” மற்றும் வைட்டமின் “R'” ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது (“Pleasure”) (இன்பம்), மற்றும் வைட்டமின் “Reasoning” (சொந்த மூளையைக் கொண்டு யோசித்தல்) வைட்டமின் ... மற்ற எல்லா வைட்டமின்களும் ; அது - என்ன - ஞா - ஞானம் அவை எல்லாவற்றையும் கொண்டிருக்கின்றது. பாருங்கள்? அறிவுக்கூர்மை அவை எல்லாவற்றையும் கொண்டிருக் கின்றது. அவைகளை மூளையைக் கொண்டு யோசிக்கின்றது. ஆனால் விசுவாசம் ஒரேயொரு காரியத்தை மாத்திரம் கொண்டிருக்கின்றது - ஜீவன்! அது ஒன்று மாத்திரமே அதற்கு உண்டு. உம்முடைய வார்த்தை ஜீவனாகும். உம்முடைய வார்த்தை சத்தியமாகும். அவர் தான் அந்த வார்த்தை. அந்த வழி, சத்தியம், ஜீவன், விசுவாசம் சரியாக அங்கேயே தரித்திருக்கிறது ; அவ்வளவு தான். அது அதை எடுக்காது. பரிசுத்த ஆவியின் ஜீவன், நித்திய ஜீவன், அதில்தான் விசுவாசமானது வளருகின்றது. “zoe, சோயி,” என்கின்ற வார்த்தை, (கிரேக்க வார்த்தை - தமிழாக்கியோன்) தேவனுடைய சொந்த ஜீவன் என்பதே. விசுவாசமானது வார்த்தையைக் கேட்டு அது தேவனுடைய வார்த்தை என்று விசுவாசிக்கையில் அந்த ஒரு இடத்தில் மாத்திரமே விசுவாசத்தினால் கிரியை செய்ய முடியும். அப்பொழுது அதில், Zoe, சோயி வளர்ந்து வார்த்தை என்ன கூறியிருக் கின்றதோ அதைப் பிறப்பிக்கின்றது. 109தேவன் ..... அவர் உலகத்தை எப்படி உண்டாக்கினார்? உலகமானது தேவனுடைய சிந்தையில் இருந்ததென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக அது இருந்தது ; அவ்வாறுதான் இருக்க வேண்டும். “எப்படி அவர் அதை உண்டாக்கினார்?” அவர் உரைத்தார் ...... “பொருட்களை யெல்லாம் அவர் எங்கிருந்து எடுக்கப்போகின்றார்?'' தேவனைக் குறித்து உங்கள் சொந்த மூளையைக் கொண்டு உங்களால் சிந்திக்க முடியுமா? ”தேவனே கற்பாறைகளை உண்டாக்க அதற்கு வேண்டிய பொருட்களை எங்கிருந்த எடுத்தீர்“ என்று கேட்பீர்களா? எங்கிருந்து நீர் ..... “அவை வாயுப் பொருளிலிருந்து வந்தன” “அப்படியானால் கர்த்தாவே, வாயுப்பொருளை எங்கிருந்த எடுத்தீர்?” பாருங்கள்? “தண்ணீ ரை எப்படி நீர் உண்டாக்கினீர்? அதற்கான சூத்திரம் என்ன?.....' “H,O” (தண்ணீ ரின் வேதியியல் சூத்திரம் - தமிழாக்கியோன்) “அப்படியானால் எங்கிருந்து நீர் நீர்வாயு (hydrogen) மற்றும் பிராணவாயு (Oxygen) ஆகியவற்றை எங்கிருந்து எடுத்தீர்?” பாருங்கள்? அது தான் பாருங்கள்? அப்படி கேட்பது அர்த்தமற்ற ஒன்றாகிவிடுகின்றது. தேவன் என்ன கூறினார்? அது அவருடைய சிந்தையில் இருந்தது. அவருடைய சிந்தைகள்தான் அவருடைய வார்த்தையாகும். அவருடைய சிந்தை “உண்டாகக்கடவது” என்று கூறினபோது அது அங்கே வந்து நிகழ்ந்தது. அதுதான். அங்கே தான் விசுவாசம் தரித்திருக்கிறது. 110எபிரெயர் 11 “விசுவாசத்தினாலே உலகம் உண்டாக்கப் பட்டது” என்று கூறுகிறது. உலகமானது விசுவாசத்தினாலே உண்டாக்கப்பட்டது. தோன்றப்படாதிருக்கின்ற காரியங் களைக் கொண்டு தேவன் உலகத்தை உண்டாக்கினார். விசுவாசத்தினாலே தேவன் உலகத்தைப் பேசிச் சிருஷ்டித்தார். ஏனென்றால் அது முன்னரே ஆழ்ந்தாதாரமாய் சிந்தையிலே திட்டமிட்டுச் செய்யப்பெற்ற வார்த்தையாகும். ஆகவே அவர் உரைத்த உடனே அது ஜீவனானது. இப்பொழுது நீங்கள், “சகோதரன் பிரன்ஹாம், அதை நான் விசுவாசிக்கிறேன்” என்று நீங்கள் கூறலாம். நீங்கள் அதை உங்கள் இருதயத்தில் விசுவாசித்து “அதை நான் விசுவாசிக்கிறேன்” என்று உங்களால் கூற முடியுமானால், அந்தக் கருத்தை விட்டு மாறவே மாறாதீர்கள், அதனோடு அப்படியே தரித்திருங்கள். அதிலிருந்து என்ன வளர்ந்து வெளிவருகின்றது என்று கவனித்துப் பாருங்கள். அது வார்த்தையைப் பிறப்பிக்கும். ஏனெனில், அது விசுவாசமாகும். பாருங்கள்? அறிவுக்கூர்மை உங்களை வார்த்தையினின்று அகற்றிவிடும் ; விசுவாசமோ உங்களை வார்த்தையி னிடத்திற்கு கொண்டு வரும். 111உங்களால் காண முடிகின்றதா? அது மனிதனால் உண்டாக்கப்பட்ட போதகம் ஒவ்வொன்றையும், மனிதனால் உண்டாக்கப்பட்ட வேதபாண்டித்திய கலாசாலைகள் ஒவ்வொன்றையும் வெட்டியெடுக்கின்றது; அவைகளை அடித்து கீழே வீழ்த்துகின்றது. அதோ உங்களுக்கு புரிகின்றதா, வேதாகமத்தில் முனைவர், டாக்டர் (DD) பட்டம், Ph.D., L.L., Q.U.D., பட்டங்களை பெற்றுள்ளவர்கள், பேராசிரியர்கள் இவர்களெல்லாம் வேத பள்ளிகளுக்குச் சென்று உளவியல், மற்றும் எல்லாக் காரியங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும். அவன் ஒரு காரியத்தை மாத்திரம் கற்றுக்கொண்டு வெளியே வருகின்றான். அவன் உளவியல் பிரகாரமாக எப்படி மக்கள் முன்பாக தன்னை காண்பித்துக் கொள்ள வேண்டும் என்றும், எந்தவிதமான உடைகளை உடுத்த வேண்டும் என்றும், “ஆமென்” ஐ எப்படி உச்சரித்து கூற வேண்டும் என்றும், மற்றவைகளை மாத்திரமே கற்றுக்கொள்கிறான். ஓ, அர்த்த மற்றது! (nonsense), அது .. ? ... பரிசுத்த ஆவியால் நடத்தப்படுவார்கள். தேவனுடைய குமாரர் பரிசுத்த ஆவியாலே நடத்தப்படுவார்கள், வேதாகமக் கல்லூரியின் அறிவுக்கூர்மையினால் அல்ல, தேவனுடைய குமாரரும் குமாரத்திகளும் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படு கிறார்கள். நிச்சயமாக, அது உண்மையே, ஆமென்!. 112இப்பொழுது அது ஒவ்வொரு போதகத்தையும், வேதக்கல்லூரி பாடத்திட்டம் ஒவ்வொன்றையும், மனிதனால் உண்டாக்கப்பட்ட வேதாகம போதகம் ஒவ்வொன்றையும் வெளியே அனுப்புகின்றது. அதனால் தான் அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை . அவர்கள் வளரத்தக்கதாக ஒரு காரியமும் அங்கே இல்லை, பாருங்கள்? அவர்கள் வைட்டமின் “R” “Reasoning”, சொந்த மூளையைக் கொண்டு யோசித்தல்' வைட்டமினை வைத்திருக்கின்றனர். கூறப் போனால் அவர்கள் அதை வெளியே தூக்கியெறிய வேண்டிய தாயிருக்கிறது. வைட்டமின் “புகழ், Popularity”, வைட்டமின் “இன்பம், Pleasure” வைத்துள்ளனர். சிறிது தமாஷாக கேளிக்கை செய்வோம். “எந்தவிதமான கேளிக்கை?” “ஓ வெளியே சென்று என்றைக்காவது ஒரு நாள் சிறிது மது அருந்தினால் கூட சற்று தமாஷ் செய்து கேளிக்கையாக இருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா. அது எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டாக்காது”. அதைப் போன்று சிறு காரியங்களை நீங்கள் அறிவீர்கள், அவையெல்லாம் அந்த வைட்டமின்களே. உங்களுக்குப் புரிகின்றதா? அப்படி யானால் அந்த விதமான வைட்டமின் உண்மையல்ல என்று அறிவிக்கும் வார்த்தையை அந்த வைட்டமின் வளரவிடுமா? எப்படி அது வளர விடும்? பாருங்கள்? அது உண்மையான ஒன்றல்ல என்று வார்த்தை அறிவிக்கின்றதே, “நீங்கள் உலகத்தையும், உலகத்தின் காரியங்களையும் அன்புகூர்ந்தால் உங்களிடத்தில் தேவனின் அன்பு இல்லை”, என்று வேதாகமம் கூறுகின்றது. பாருங்கள்? ஆகவே அப்படிப்பட்ட வைட்டமின் களின் கீழ் எப்படி தேவனுடைய - எப்படி தேவனுடைய வார்த்தையானது வளரும்? 113“ஓ வெளியே சென்று என்றைக்காவது ஒரு நாள் சிறிது மது அருந்தினால் கூட சற்று தமாஷ் செய்து கேளிக்கையாக இருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா. அது எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டாக்காது”. அதைப் போன்று சிறு காரியங்களை நீங்கள் அறிவீர்கள், அவையெல்லாம் அந்த வைட்டமின்களே. உங்களுக்குப் புரிகின்றதா? அப்படி யானால் அந்த விதமான வைட்டமின் உண்மையல்ல என்று அறிவிக்கும் வார்த்தையை அந்த வைட்டமின் வளரவிடுமா? எப்படி அது வளர விடும்? பாருங்கள்? அது உண்மையான ஒன்றல்ல என்று வார்த்தை அறிவிக்கின்றதே, “நீங்கள் உலகத்தையும், உலகத்தின் காரியங்களையும் அன்புகூர்ந்தால் உங்களிடத்தில் தேவனின் அன்பு இல்லை”, என்று வேதாகமம் கூறுகின்றது. பாருங்கள்? ஆகவே அப்படிப்பட்ட வைட்டமின் களின் கீழ் எப்படி தேவனுடைய - எப்படி தேவனுடைய வார்த்தையானது வளரும்? நிலத்தில் இருக்கின்ற ஒரு குறிப்பிட்ட வைட்டமினால் தான் தானியங்களை வளரச் செய்ய முடியும். அது சரியான ஒரு விளைநிலமாக இருக்க வேண்டும். நாம் அதை இன்னும் சிறிது ஆழமாகப் பார்ப்போமாக. பாருங்கள்? அது ஒரு சரியான ஒரு விதமான விளைநிலமாக அது இருக்க வேண்டும். இல்லையென்றால் அது தானியத்தை வளரச்செய்யாது. நீங்கள் குறிப்பிட்ட விளைநிலங்களை எடுத்துக் கொள்வீர்களானால்; அது சில தானியங்களை வளர்த்து விக்காது, வேறு சில தானியங்கள் வளரச் செய்யும். மணற்பாங்கான நிலம் மற்றும் வேறுவிதமான வைட்டமின் ஒரு குறிப்பிட்ட வகையைத் தான் வளரச் செய்யும். அது வளரச் செய்யவில்லை யெனில் அதினிடம் வளரச் செய்வதற்கு ஒன்றுமேயில்லை. ஆகவே அது ஒரு தானியத்தை வளர்த்துவிக்காது; அவ்வளவு தான். இப்பொழுது, களைகள் எந்தவிதமான தானியத்திற் கருகிலும் வளரும், எந்தவிதமான நிலத்திலும் வளரும். அது சரிதானே? பழைய ஸ்தாபன களைகள் எந்த இடத்திலும் வளரும், ஆனால் சகோதரனே நான் உனக்கு சொல்லுகிறேன், நீ ஜீவ கனிகளை உற்பத்தி செய்ய விரும்புவாயானால், அது வார்த்தையிலிருந்து தான் வெளி வர வேண்டும். அது சரி, சரியே. நிச்சயமாக! சரி. இக்காலை வேளையில் நான் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளவில்லை என்று நான் நம்புகிறேன். அப்படித்தானே? இப்பொழுது நான் ..... பாருங்கள்? சரி. 114அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை என்பதும், ஜீவிப்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை . மத்தேயு 13ஆம் அதிகாரம் 1ஆம் வசனத்தில் அவர்களைக் குறித்து இயேசு கூறியுள்ளார். நாம் வேதாகமத்தை அப்பகுதிக்குத் திருப்பி, நாம் பேசிக் கொண்டிருக்கும் இக்காரியங்களைக் குறித்து இயேசு என்ன கூறியுள்ளார் என்று நாம் பார்ப்போம். மத்தேயு 13ஆம் அதிகாரம் 1ஆம் வசனத்தில் ; இயேசு அன்றைய தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப் போய், கடலோரத்தில் உட்கார்ந்தார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடி வந்த படியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார் ; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள். அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர் களுக்குச் சொன்னார் ; கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைகளை விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப் போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது ; மண் ஆழமாயிராததினால் அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறின போதோ அவை தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது ; முள் வளர்ந்து அதை நெருக்கிப் போட்டது. .... மற்ற விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, கனிகளைக் கொண்டு வந்தது. (ஆங்கில வேதாகமத்தில் உள்ளவாரே - தமிழாக்கியோன்) சில நூறாகவும் ..... அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். (அறிவுக்கூர்மையல்ல, காதுகள், பாருங்கள்? அது சரியே, கேட்டல்). 115சரி. கவனியுங்கள். விதைக்கப்புறப்பட்டார்கள் என்று அவர் கூறினார். விதையானது புறப்பட்டுச் செல்கையில், வார்த்தையைப் பிரசங்கித்தது. சில விதைகள் வழியருகே விழுந்தது. ஒரு வாத்தின் முதுகில் தண்ணீர் ஊற்றப்படுகையில் அது எப்படி வழிந்தோடிவிடுகிறதோ அது போல, சில விதைகள் கல் நிறைந்த கற்பாறை நிலத்தில் விழுந்தது. அந்நிலத்தில் காற்றினால் கொண்டுவரப்பட்ட சிறிது தூசி மாத்திரம் இருந்தது. அது முளைத்தெழும்பினது. ஆனால் அதற்கு வேரில்லாமல் இருந்தது. வேர் விட அதற்கு இடமே இல்லாதிருந்தது. (இப்பொழுது, இங்கு நான் சில உதாரணங்களைக் கூறப்போகிறேன், யாருடைய உணர்வு களையும் நான் புண்படுத்தமாட்டேன் என்று நான் நம்புகிறேன். பாருங்கள்?) அது கத்தோலிக்க சபையாகும். அவர்கள்தான் தாங்கள் கற்பாறையின் மேல் கட்டப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். அவர்களின் கூற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன்; நிச்சயமாக அவர்கள் கூறுவதை நான் ஆமோதிக்கிறேன். அது சரி. அது சரி. அவர்களுக்குக் கீழ் மண் இல்லாதிருந்தது, வளர்வதற்கு மண் இல்லவே இல்லை. ஏன்? அவர்களால் பலன் கொடுக்கவே முடியவில்லை; ஒரு வேதாகம வைட்டமினை அவர்களால் வளர்த்து விக்க முடியவில்லை, ஏனெனில் அவர்கள் அதில் துளி நம்பிக்கை கூட வைப்பதில்லை. அவர்கள் . . . அவர்களுடைய கோட்பாடுகள்தான் அதிகாரப்பூர்வமான உபதேசங்கள் ஆகும் (அது சரி), ரோம உபதேசங்கள், அதில் ஒரு சிறு துளி வார்த்தை கூட கிடையாது. பாருங்கள்? 116கற்பாறைகளின் மேல் விழுந்தது ; அது மிக நேர்த்தியான அறிவுக்கூர்மையாகும். ஓ, சகோதரனே, நான் உங்களுக்குக் கூறுகிறேன் - அவர்கள் அதை மிகவும் நேர்த்தியான விதத்தில் கொண்டிருந்தனர். அவர்கள் அதை மன உளவியல் பூர்வமாகவும், பெரிய மகத்தான கட்டிடங்கள், மிக அழகாக அங்கி உடுத்தி பரிசுத்த தேவர்கள் போல காணப்பட்ட குருமார்கள், மற்றும் எல்லா காரியங்களின் வழியாக அதை மக்கள் முன்னிலையில் வைக்கின்றனர். சபையை விட்டு இப்பொழுது வெளியே வந்த அந்தக் கத்தோலிக்க கன்னியாஸ்திரீயின் சாட்சியை எத்தனைப்பேர் கேட்டீர்கள்? அதின் பதிவை நீங்கள் வைத்துள்ளீர்களா? இங்கே சபையில் என்றாவது ஒரு புதன் இரவு அந்த ஒலிநாடாவை நான் உங்களுக்கு போட்டுக் காண்பிக்க விரும்புகிறேன். இங்கே இருக்கின்ற ஒவ்வொரு நபரும் அந்தச் சாட்சியை கேட்க வேண்டும். 117அவர்களில் ஒருவர் நீண்ட காலமாக என்னைப் பின்பற்றினார்கள். எப்படி அவர்கள் ...... நான் அங்கே மெக்சிகோவிற்குச் சென்று அந்த சுண்ணாம்புக் குழிகளை என் கண்களால் கண்டேன். அதில் கத்தோலிக்க கன்னியா ஸ்திரீகளின் குழந்தைகளைக் கண்டேன். (கத்தோலிக்க குருமார்கள் அக்குழந்தைகளை கன்னியாஸ்திரீகள் மூலமாக...) - அக்குழந்தைகள் சுண்ணாம்புக்குழிகள் மற்றும் அதைப் போன்றவைகளில் போடப்பட்டு எரிக்கப்பட்டன. அதன் காரணமாகத்தான் மெக்சிக்கோவில் கம்யூனிசம் தோன்றி வளர்ந்தது. அது அந்த அர்த்தமற்ற மூடத்தனத்தை உடைத்துப் போட்டது. அக்காரியம்தான் கம்யூனிசம் எழும்பி வளரக் காரணமாயிருந்தது. நீங்கள் ஒரு போதும் கம்யூனிசத்தின் மீது பயங்கொள்ள வேண்டாம். தேவன் கம்யூனிசத்தை உபயோகப்படுத்து கின்றார். நான் அதில் நம்பிக்கை வைப்பதில்லை; அது பிசாசினால் உண்டானது. ஆனால் நேபுகாத்நேச்சார் ராஜா வந்து இஸ்ரவேலை பிடிக்கும்படிக்குத் தேவன் அவனை உபயோகித்தது போல பிசாசையும் அவர் எடுத்து அதே விதமாக மறுபடியுமாகக் கிரியை செய்கின்றார். புரிகின்றதா? வேதாகமம் அதை நிரூபிக்கிறதா என்று நீங்கள் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். வருகின்ற என்றாவது ஒரு நாளிலே நாம் அதை ஆராய்ந்து பார்ப்போம். தேவனுடைய பிள்ளை களைக் கொன்ற அந்த பழைய மகாவேசியைப் பழி வாங்குவதற்கென தேவன் கம்யூனிசத்தை எழுப்பினார். அதைத்தான் வேதாகமமும் சரியாகக் கூறுகின்றது. அவர்கள் அவளை அக்கினியால் சுட்டெரிப்பார்கள் என்றும் அவளின் முடிவாகிய அழிவுக்கு அவள் தள்ளப்படுவாள் என்றும் கூறுகிறது. அவளுக்கு அதுதான் சரியாக நடக்கப் போகின்றது. இதோ அவள் ; கற்பாறைகளின் மேல் விழுந்த விதை அவள்தான், மிகக் குறைந்த மண் இருந்ததால் அந்த விதையால் வளரவே முடியவில்லை ; அது மரித்துப் போனது. ஆகவே அது என்னவென்றால் மிக நேர்த்தியான அறிவுக் கூர்மையாகும். 118பிறகு, சில விதைகள் பிராடெஸ்டன்டின் நிலத்தில் விழுந்தன. அதற்குச் சிறிது காலத்திற்கு பிறகு பெரிய ஸ்தாபனங்களின் மகத்தான அறிவுக்கூர்மை அந்த விதையை நெருக்கிப் போட்டது. பரிசுத்த ஆவியை நெருக்கி வெளியே போட்டு விட்டது. “அற்புதங்களின் நாட்கள் கடந்த காலத்தின் ஒன்றாகும்.'' ”டாக்டர் இன்னார் - இன்னார், மற்றும் இன்னார் கூறியுள்ளார்.“ பாருங்கள்? ”அப்படிப்பட்ட ஒன்று கிடையவே கிடையாது'' எல்லாம் துல்லியமாக கிரியைச் செய்தது. எல்லாவற்றையும் நெருக்கிப்போட்டது - எதை நெருக்கிப்போட்டது? அறிவுக்கூர்மையை எடுத்துக் கொண்டு பரிசுத்த ஆவியை நெருக்கிப் போட்டது. பாருங்கள்? மார்டின் லூத்தரின் நாட்களில் பரிசுத்த ஆவி விழுந்தது. ஜான் வெஸ்லியின் நாட்களில் பரிசுத்த ஆவி விழுந்தது. ஆதி பெந்தேகொஸ்தே சபையின் நாட்களில் பரிசுத்த ஆவி விழுந்தது. ஆனால் ஸ்தாபனங்கள் என்ன செய்தன? தங்களுடைய அறிவுக்கூர்மையை எடுத்துக்கொண்டு பரிசுத்த ஆவியை நெருக்கிப் போட்டது. எதை நெருக்கிப் போட்டது? அந்த விதையை, அந்த விதை என்ன? வார்த்தை, “அதன் அர்த்தம் அதுவல்ல ; அது இதைத்தான் குறிக்கின்றது,'' பாருங்கள்? அவர்கள் அதை புரிந்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அது அவ்வளவு தான். 119அப்போதகர்களில் அநேகர் உத்தம இருதயம் கொண்ட மனிதர் ஆவர், அவர்களை நான் சந்தித்தித்திருக்கிறேன். அவர்களோடு உட்கார்ந்து பேசியிருக்கின்றேன். ஞானஸ்நானம் மற்றும் அநேகக் காரியங்களைக் குறித்தும் நான் பேசியிருக் கின்றேன். அதைக்குறித்து யாரேனும் என்னிடம் வந்து விவாதிக்கலாம் என்று நான் கூறியிருக்கின்றேன். அதற்கு அவர்கள் “சகோதரன் பிரன்ஹாம், அதை நாங்கள் செய்வோமானால் எங்கள் சபை எங்களை வெளியே தள்ளி விடும்” என்று கூறினர். அதற்கு நான், “எது உங்களுக்கு பெரியது, உங்கள் சபையா அல்லது தேவனுடய வார்த்தையா?” என்று கேட்டேன். ஸ்தாபனம் என்னும் தூசியில் உங்களால் தொடர்ந்து வளரவே முடியாது. பாருங்கள்? பாருங்கள்? அது சரி, அது வார்த்தையை மறுதலிக்குமானால் அது தவறாயிருக் கின்றது. பாருங்கள்? அது மனிதனால் உண்டான அறிவுக் கூர்மையே என்று அது காண்பிக்கின்றது. 120இப்பொழுது, பிராடெஸ்டன்டினரும் நெருக்கப் பட்டு விட்டனர். அவர்கள் வார்த்தையில் விசுவாசம் கொள்வதற்கு பதிலாக அறிவுக்கூர்மையை எடுக்க ஆரம்பிக்கையில் - ஸ்தாபனத்தில் இருக்கும் அறிவுக் கூர்மையை, வார்த்தையில் இருக்கும் விசுவாசத்திற்குப் பதிலாக ஸ்தாபன ஞானத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த போது, அது பரிசுத்த ஆவியை நெருக்கிப்போட்டு அவர்களிடமிருந்து வெளியே தள்ளிப்போட்டது. (இதைப் புரிந்து கொண்ட எல்லோரும் “ஆமென்'' என்று கூறுங்கள். சபையார் ”ஆமென்' என்று கூறுகின்றனர் - ஆசி. பாருங்கள்?) மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே, சுவிசேஷகஸ்தாபன குழுவினரின் மனிதர் கூறுகிறவைகளில் விசுவாசம் வைத்தல், வெகு விரைவில் அவர்கள் எல்லோரும் ஒன்றாகி, மிருகத்திற்கு சொரூபமாக இருக்கப்போகிற சபைகளின் ஐக்கிய சங்கத்தை வெகு விரைவில் உருவாக்கப் போகிறார்கள். அங்கே அவர்கள் கொண்டிருந்த அதிகாரத்தைப் போலவே (வெளி 13 : 11) இந்நாட்டிலும் அவன் அதே அதிகாரத்தைக் கொண்டிருப்பான், ஆதியிலே ரோமன் கத்தோலிக்க சபையில் அவர்கள் செய்தது போல, இங்கே அவன் பரிசுத்தவான்களின் மீது அடக்குமுறையைக் கொண்டு வருவான். பாருங்கள்? சரியாக அதை நோக்கித்தான் காரியங்கள் சென்று கொண்டிருக்கின்றன. அதனால்தான் வார்த்தையானது சரியாக இப்பொழுதே எல்லா இடங்களிலும் விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது ; அதிலிருந்து அப்பால் நில்லுங்கள்! அதிலிருந்து வெளியே வாருங்கள். 121இப்பொழுது, அறிவுக்கூர்மை அதை நெருக்கிப் போட்டு வெளியேற்றியது. அவர்களுடைய சொந்த அறிவுக்கூர்மையானது பரிசுத்த ஆவியை நெரித்து அவர் களிடமிருந்து அப்பாலே சென்றுவிடும்படிக்குச் செய்து விட்டது. அதை நான் உங்களுக்கு வேதாகமத்தில் வெளிப்படுத்தல் 3வது அதிகாரத்திலிருந்து எடுத்து நிரூபித்துக் காண்பிப்பேனாக, இந்த அதிகாரத்திலிருந்து சபையின் காலங்களைக் குறித்து சற்று முன்னர் நாம் தியானித்தோம். இயேசு தம்முடைய சபையிலிருந்து குரல்வளை நெரித்து திக்குமுக்காடச் செய்யப்பட்டு (Strangle) வெளியேற்றப் பட்டார். சபையின் வெளியே அவர் நின்று திரும்ப உள்ளே வர வாசற்படியில் நின்று கதவைத் தட்டிக் கொண்டிருக் கின்றார். (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகின்றார் - ஆசி) சரியாக அதைத்தான் அது குறிப்பிடு கின்றது. “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் தாகமாயிருந்தால், என்னை உள்ளே அனுமதித்தால் அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்.” ஆனால் யாருமே கதவைத் திறக்கவில்லை . பாருங்கள்? அவரை அவர்கள் வெளியே தள்ளிவிட்டனர். அது என்ன? அவர்கள் ...... 122அந்த - அந்த விதை அவர்களின் மேல் விழுந்தது (பாருங்கள், புரிகின்றதா?), ஆனால் சில விதைகள் துன்பம் என்னும் பள்ளத்தாக்கில் விழுந்தன ; சில விதைகள் துன்பம் என்னும் பள்ளத்தாக்கிற்குள் சென்றன. இப்பொழுது, பள்ளத்தாக்கில் தான் தண்ணீர் மற்றும் சிறந்த வளமிக்க நிலத்தை நீங்கள் காண வகையுண்டு. நன்றாக காரியங்கள் அடித்து வெளியேற்றப்பட்ட ஒருவனை, அவனிலிருந்து எல்லா வேதாகம கல்லூரி அறிவு அடித்து வெளியேற்றப் பட்டு, எல்லோராலும் சிரிக்கப்பட்டு, கேலி செய்யப்பட்டு, சகல பரியாச மற்றும் புண்படுத்தலினூடாக அவன் கடந்து வந்து அவனிலிருந்து எல்லா காரியங்களும் எடுத்துப் போடப்பட்டு, கிரியை செய்வதற்காக ஆயத்த நிலையில் இருக்கின்ற ஒருவனை நீங்கள் எடுப்பீர்களானால், அவனில் சிறிது ஈரமிருப்பதை நீங்கள் காணலாம். அது சரி. 123பள்ளத்தாக்கிற்குள்ளாக, தன்னுடைய ஸ்தாபனத் திலிருந்து எட்டி உதைத்துத் தள்ளப்பட்ட, வெளியே தள்ளப் பட்டு நேரடியாக பள்ளத்தாக்கில் விழுகின்ற அந்த மனிதன், “அவன் மிகவும் பள்ளமான இடங்களில் (dumps) தள்ளப் பட்டான்” (அவர்கள் அவ்விதம் அதை அழைக்கின்றனர்). பாருங்கள்? “பள்ளமான” இடமல்ல. ஆனால் அந்த பள்ளத் தாக்கில், அங்கே கீழே பள்ளத்தாக்கில் என்று நாங்கள் அழைக்கின்றோம். அங்கே தான் லீலி புஷ்பம் வளருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். (உங்களுக்குத் தெரியும். அது சரி) , பள்ளத்தாக்கில் தான் அது வளருகின்றது. அது சரி. சில விதைகள் கடும் சோதனைகளான உபத்திரவத்தின் பள்ளத்தாக்கில் விழுந்தன. அந்த விதைகளில் சில உபத்திரவம் என்னும் பள்ளத்தாக்கில் விழுந்தன. அது என்னவென்றால் கடும் சோதனை, எல்லாவிதமான பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுதல் போன்றவை, பெயல்செபூல் என்று லீலி புஷ்பம் அழைக்கப்பட்டு பரியாசம் செய்யப்பட்டது போல, ஆனால் இந்த பள்ளத்தாக்கில் தான் நீர்க்கால்கள், நதிகளின் தண்ணீ ர், இருக்கின்றன. 124“.... மனுஷன் பாக்கியவான்” என்று சங்கீதம் 1 கூறுகின்றது. சற்று நான் அதை வாசிப்பேனாக, இந்த பள்ளத் தாக்கில் என்ன உள்ளது என்று நான் உங்களுக்குக் காண்பிப்பேன். சங்கீதம் என்ன ...... எனக்கு நேரம் இருக்காது என்று நான் நினைத்தேன். ஆனால் நேரத்தை நாம் எடுத்துக் கொள்வோம் (பாருங்கள்?) அந்த வசனத்தை வாசிக்கத்தான் (பாருங்கள்?), இதை இங்கே காண்பதற்குத்தான், நாம் இதை இங்கே வாசித்து அவன் எங்கே நடப்பட்டிருக்கின்றான் என்றும், எப்படிப்பட்டவனாக இருக்கிறான் என்றும் நாம் பார்க்கப்போகிறோம். அவன் நிலமே இல்லாத, தூசி நிறைந்த பாலைவன கற்பாறையில் நடப்பட்டிருக்கின்றானா அல்லது பள்ளத்தாக்கில் நடப்பட்டிருக்கின்றானா ..... சரி. “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும் ... (இந்த அறிவுக்கூர்மை .... ஆமென், ஆமென், ஆமென், ஆமென்!) ....... துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும் ... பாவிகளுடைய வழியில் நில்லாமலும். பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து... (அந்த வார்த்தை) .... இரவும் பகலும் அவருடைய வேதத்தில்.... (வார்த்தை) ..... தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் (நதிகள்) ஓரமாய் நடப்பட்டு ... (நதிகள், அது என்னவாயிருக்கின்றது? ஒன்பது ஆவிக்குரிய வரங்கள், ஒரே நதியிலிருந்து புறப்பட்டு வருகின்ற பல நீர்க்கால்கள், ஒரே ஆவி - ஒரே நதி, ஆனால் ஒன்பது பலவிதமான வழித்துறைகள், நீர்க்கால்கள், பாருங்கள், நீர்க்கால்கள்).... தன் காலத்தில் அவருடைய கனியைத் ..... (ஆவிக்குரிய கனிகள்) .... தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். 125பாருங்கள்? சில விதைகள் அங்கே இந்த நீர்க்கால்கள், நதிகள் ஓடின பள்ளத்தாக்கில் விழுந்தன ...... நீங்கள் கவனிப்பீர்களானால் ... நான் உங்களுக்கு வேறொன்றைக் காண்பிக்க விரும்புகின்றேன். அதற்கு என்ன சம்பவித்தது? அந்த விதை நதியில் விழுந்தது. அது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்படவில்லை, “ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்ட மரத்தைப் போலிருப்பான்” என்றாயிருக்கிறது? அவன் நடப்பட்டிருந்தான். அது என்ன? முன் குறிக்கப்பட்டிருந்தான். உலகத் தோற்றத்திற்கு முன்பே இருந்த அந்த தேவனுடைய சிந்தை அவனை அந்த இடத்தில் வைத்தது. பாருங்கள்? ஏதோ தற்செயலாக அங்கே அது மாட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அங்கே அது முன் குறிக்கப்பட்டிருந்தது. நடப்பட்டிருந்தது! எங்கே? அந்த நதியின் நீர்க்கால்களின் ஓரமாக, ஓ, “அவனுடைய வேர் உதிர்ந்து போகாது,'' ஓ, அல்லேலூயா, ”அவன் மரித்துப் போனாலும், கடைசி நாளில் அவனை நான் எழுப்புவேன்''. அது சரி. தற்செயலாக அல்ல, அவன் அங்கே இருக்கும் படியாக முன் குறிக்கப்பட்டிருக்கின்றான். அவன் நடப்பட்ட உடனே அந்த வார்த்தையை பிடித்துக் கொள்ளும் படியாக அவன் முன் குறிக்கப்பட்டிருக்கின்றான். அவன் .... அவன் சரியாக அங்கே இருப்பான். அம்மரம் அங்கே நடப்பட்டு இருக்கின்றது. அவன் நடப்பட்டிருக்கின்றான். தற்செயலாக சிக்கிக்கொள்ளவில்லை; அவன் உண்மையாகவே அங்கே நடப்பட்டிருக்கின்றான். ஒரு மரக்குச்சி நிலத்தில் சிக்கிக் கொள்வதற்கும், மற்றும் நடப்படுவதற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கின்றது. அது வித்தியாசப் பட்டது. 126அந்த விதை விதைக்கப்பட்டிருந்தது. அவ்விதை தன்னுடைய சொந்த வேரை ஊணத்தக்கதாக நிலத்துக் குள்ளே தன் பாதையை கண்டுபிடித்துச் சென்றது. தண்ணீர் உள்ளே வந்து, அதனுடைய ஜீவனை, (ஆவியை) வெளிக் கொணர்ந்த போது அது கூற ஆரம்பித்தது (நீங்கள் கூறு...) “ஒன்பது ஆவிக்குரிய வரங்கள் உள்ளன ”. அது ஆமென்' என்று கூறினது “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்” “ஆமென்!'' “அவர் எப்பொழுதும் செய்கின்ற விதமாகவே இன்னமும் அவர் நோய்களை சுகமாக்கிக்கொண்டிருக் கின்றார்” “ஆமென், ஆமென், ஆமென்!” பாருங்கள்? அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டிருக்கின்றான். நதிகளின் தண்ணீர்கள் எல்லாப் பக்கங்களிலும் வந்து பாய்ந்துக் கொண்டிருக்கின்றன. அவன் பட்டுப் போகாதிருப்பதில் வியப்பொன்றுமில்லை. வியப்பொன்றும் இல்லை. ஏனெனில் அவன் நடப்பட்டிருக்கின்றான். சில விதைகள் அவ்விடத்தில் விழுந்தன. அவனால் மரிக்க முடியாது. ஜீவனைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிற ஜீவ நீரோடையில் சரியாக அது நடப்பட்டிருக்கின்றது. அது சரி, அந்த நீர்க்கால், நதியிலிருந்து நேராக அது ஜீவனை உறிஞ்சிக்கொண்டிருக்கின்றது. புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடுகளாகிய நீர்க்கால்கள், ஆமென்! அது போஷிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஓ சகோதரனே. நீங்கள் அவரை நேசிக்கப் போகிறீர்களா? ஆமென். நீங்கள் அவரை ஸ்தோத்தரிக்கப் போகிறீர்களா? ஆமென். நீங்கள் அவரைத் தொழுது கொள்ளப்போகிறீர்களா? ஆமென். ஆமென், ஆமென்! 127ஆம், ஐயா ; ஆம் ஐயா! ஓ, அதை நான் நேசிக்கின்றேன். நீங்களும் தானே? ஆமாம்! தன் காலத்தில் அவருடைய கனியை தருவான் (ஆதியாகமம் 1: 11). அவருடைய கனியைத் தருவான். எந்தக் கனிகள் ? எதனுடைய கனிகள்? அவருடைய கனிகள். எந்தக் கனிகள்? அவருடைய சொந்தக் கனிகள். என்ன கனி அது? வேதாகமம் . பாருங்கள்? அந்தக்கனி , அவையாவும் இதில் இருக்கின்ற : அன்பு .... அது இங்கே வேதாகமத்தில் இருக்கின்றது. சந்தோஷம் அது இங்கே வேதாகமத்தில் உள்ளது. வல்லமை ; பரிசுத்த ஆவி ; எல்லா காரியங்களும் இங்கே உள்ளது. தெய்வீக சுகமளித்தல் ; தேவனுடைய வாக்குத்தத்தங்கள். இங்கே அது உள்ளது, ஆகவே அவன் இதில் நடப்பட்டிருப்பானானால், இது சரியான நிலத்தில் நடப்பட்டுள்ளது. விசுவாசத்தில், விசுவாசம் என்ன செய்கின்றது? விசுவாசம் அதை வளரும்படிக்குச் செய்கின்றது. பாருங்கள்? அதுதான் ; மேலே வளரும்படிக்குச் செய்கின்றது. நிச்சயமாக! அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு தன் காலத்தில் அவருடைய கனியைத் தருவான். இப்பொழுது, எந்த விதமான கனியை அது தரும்? யோவான் 14 : 11, யோவான் 14 : 11, அவர் கூறினார். இயேசு கூறினார், 'அவர் ......'' (அது 14 : 12 என்று நான் நினைக்கின்றேன்) அவர்... இயேசு கூறினார், “... என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” ஏன்? அந்த அதே வார்த்தை அவனுக்குள்ளாக இருக்கின்றது. அவர்தான் அந்த வார்த்தையானவர். அது சரி தானே? “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ. 128அங்கே பின்பாக நான் சகோதரன் ஈவான்ஸுடன் பேசிக் கொண்டிருந்தேன். சிறிது காலத்திற்கு முன் அவர் இங்கே வருகின்றபோது (இவ்வளவு தூரம் அவர் காரோட்டிக் கொண்டு வருகின்றார்) ; அவருடைய கார் தொலைந்து போனது. அங்கே மில்லர் கடையின் அருகில் சாவியுடனே காரை நிறுத்திச் சென்று விட்டார். யாரோ ஒருவன் வந்து அதைத் திருடிச் சென்று விட்டான். அவர் எல்லா பொருளையும் காருக்குள்ளாக வைத்திருந்தார். அவர் வந்தார். (அவர், மற்றும் சகோதரன் ஃபிரட், சகோதரன் டாம், மற்றும் சிலரோடு என் வீட்டிற்கு வந்திருந்தார்). அவர் வந்து என்னிடம் கூறினார்...... ஆம், ஒரு சிறு பிள்ளை தன்னுடைய மிட்டாயை யாரோ ஒருவர் பிடுங்கிவிடும் போது எப்படி காணப்படுகின்றதோ அது போல அவர் காணப்பட்டார்; மிகவும் நொந்து போன நிலையில் அவர் இருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா. அவர் “என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லையே” என்றார். நான் “சரி....” என்றேன். இப்பொழுது, அது என்னவாயிருந்தது? இப்பொழுது அவர்கள் வருகின்றனர். முதலாவதாக காரியம் என்ன? வார்த்தையிடம் செல்வது, பிதாவிடம் கேட்பது, “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ,” என்ன? வார்த்தையுடன் தரித்து நில்லுங்கள்; சரியாக வார்த்தையுடன் அப்படியே தரித்து நில்லுங்கள். 129“சரி நாம் ஜெபிக்கலாம்” என்று நான் கூறினேன். நாங்கள் தரையில் முழங்காலிட்டு ஜெபிக்க ஆரம்பித்தோம். அப்போது நான் “ பிதாவே, நான் உம்மிடத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வருகிறேன். இவர் ஒரு வாரத்தில் சில நாட்களே வேலை செய்கின்ற ஒரு சகோதரன். இதோ இங்கே இருக்கின்றார் (அந்த பழைய நொறுங்கின நிலையில் உள்ள கார்களை சரி செய்து பொருத்தும் வேலையைத் தொடர்ந்து செய்து அவருடைய கைகளெல்லாம் மிகவும் தேய்ந்த நிலையில் இருந்தது) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூட்டத்திற்கு வருவதற்கான பயண காசுக்காகக் கடுமையாக உழைக்கும் ஒரு சகோதரன். போஷிக்கப்படத்தக்கதாக அவருக்கு சிறு பிள்ளைகளும் உள்ளன. சபைக்கு வருவதற்கான பயண செலவுக்கு மட்டும் சுமார் ஐம்பது அல்லது எழுபத்தைந்து டாலர்கள் அவருக்குச் செலவாகும். (ஆம்? அது சரியே!) நாங்கள் வார்த்தைக்காக தைரியமாகப் போராட பிரயத்தனம் செய்ய முயற்சிக்கையில் அந்த வார்த்தையைக் கேட்பதற்காக அவர் இங்கே வருகின்றார்,” என்று ஜெபித்தேன். மேலும் நான், “இப்பொழுது, யாரோ ஒரு தீய நபர் இவருடைய காரை திருடிச் சென்றுவிட்டான்” என ஜெபித்தேன். அது என்ன வாயிருந்தது? நான் “இப்பொழுது, கர்த்தாவே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவருடைய காரை இவரிடம் திரும்பத் தருமாறு நான் உம்மிடம் ஜெபத்தை ஏறெடுக்கிறேன்” என்று ஜெபித்தேன். 130நான் என்ன செய்தேன்? நான் வார்த்தையை, அந்த வாக்குத்தத்தத்தை தேவனுக்கு முன்பாக நான் வைத்து, இயேசுவின் நாமத்தில் அதை முத்திரையிட்டு, அந்த வார்த்தையை நான் அனுப்பினேன். அது நேராக சாலையில் சென்று, சரியாக எந்த இடத்திலிருந்து திருடு போனதோ அங்கிருந்து ஆரம்பித்துச் சென்றது. ஒரு வேட்டை நாய் முயலின் தடம் பற்றிச் சென்று வேட்டையாடுவது போல. பாருங்கள்? இதோ அவர் கூக்குரலிட்டுக் கொண்டே சாலையில் சென்றார். கெண்டக்கியிலுள்ள பௌலிங் கிரீனிற்கு அரை மைல் தூரத்திற்கு சென்றடைந்தார். என்ன சம்பவித்தது? வார்த்தை அவனைக் கண்டுபிடித்தது. அப்பொழுதே ஒரு தரிசனம் என்னிடம் வந்தது ; ஒரு மனிதனை நான் கண்டேன், மஞ்சள் நிறம் போல் காணப்பட்ட சட்டையை அவன் அணிந்தவனாக அவன் அந்தக் காரை ஓட்டிக் கொண்டிருந்தான், அவன் ஒரு வாலிபன், ஒரு காலத்தில் அவன் ஒரு கிறிஸ்தவனாக இருந்தவன், அந்த வார்த்தை அவனை அடித்து, 'நீ தவறு செய்கின்றாய்!“ என்றது. வார்த்தை அவனைப் பிடித்தது. அவர் தம்முடைய வார்த்தையை அனுப்பினார் (பாருங்கள். பாருங்கள்?) அவனைப் பிடித்தார். ”நீ ஒரு நாளிலே இக்காரியத்திற்காக பிடிபடப் போகின்றாய், இந்த காரியத்தை செய்ததற்காக சட்டம் உன்னைப் பிடிக்கப் போகின்றது. திரும்பு, இந்தக் காரை அங்கே எடுத்துச் செல்.'' 131வார்த்தை அவனைப் பிடித்தது. ஒரு காலத்தில் அவன் ஒரு கிறிஸ்தவனாக இருந்தான். அவன் அந்தக் காரை அந்த இடத்திற்கு கொண்டு வந்து தெரு ஓரமாக அவன் நிறுத்துவதை நான் பார்த்தேன். அப்பொழுது நான், 'சகோதரரே, நீங்கள் அந்த குறிப்பிட்ட வழியில் செல்லுங்கள். அங்கே உங்கள் கார் இருப்பதைக் காண்பீர்கள். அவன் அந்த இடத்திற்கு வரும் வரைக்கும் இங்கே காத்திருங்கள். சரி, காரில் எரிபொருள் முழுவதுமாக நிரப்பப்பட்டிருந்ததா?“ என்றேன். அதற்கு அவர், “ஆம்” என்றார். நான், “எந்தப் பொருளும் எடுக்கப்படவில்லை , ஆனால் பாதி எரிபொருள் மட்டுமே இருக்கும் ; ஏனெனில் பௌலிங் கிரீன் இடத்திற்கு செல்ல பாதி தூரத்திற்கே, சுமார் 100 மைல் தூரம் செல்வதற்கு பாதி எரிபொருள் செலவாகும்” என்று கூறினேன். அவர் சென்று பார்த்த போது, கூறப்பட்ட பிரகாரமாகவே அந்தக் கார் அப்படியே நின்று கொண்டிருந்தது. அது முற்றிலும் சரியாக அப்படியே நின்றிருந்தது. அது என்னவாயிருந்தது? வார்த்தை சென்று அவனைப் பிடித்தது. திரும்ப வந்து கூறினார்... 132சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு மனிதன் அவனுக்குக் கார் வாங்கிக் கொடுக்கையில், அவன் அதற்கான பணத்தைக் கொடுக்காமல் காரை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான். பாருங்கள்? அவர் கூறினார், 'சகோதரன் பிரன்ஹாம், நான்...'' 'பாவம் இந்த மனிதன்“ என்று நான் நினைத்தேன் (இவருக்கு அவன் 400 டாலர்கள் கடன் கொடுக்க வேண்டிய வனாக இருந்தான்). அதற்கு நான் ”நான் ஜெபிக்கிறேன்'' என்றேன். நான் வார்த்தையை அனுப்பினேன். அந்த வார்தை அவன் சென்ற பாதையில் சென்று அவனைக் கண்டுபிடித்தது. நாங்கள் அந்த மனிதனைக் காணச் சென்றபோது, அவன் ஒரு கிறிஸ்தவன் அல்ல என்று நாங்கள் அறிந்துக் கொண்டோம். பாருங்கள்? அவன் ... அவன் ... அவன் சிரித்தான்... ஒரு சமயம் அவனை ஒரு சபைக்குச் செல்லும்படிக்குக் கூறினார்கள். அதற்கு அவன், 'உம், அந்தப் பிரசங்கி பிரசங்கம் செய்கையில் நான் அழகான பொன் மேனியுடைய இளம் பெண்கள் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருப்பேன்“ என்றான். ஆகவே (நீங்கள் பாருங்கள்?) உங்களால் அதை .... ஆமாம், அது...அது .... அது பிசாசாகும், அது ... பாருங்கள்? 133ஆகவே வார்த்தையினால் அவனிடம் நேரடியாகத் தொடர்பை வைக்க முடியவில்லை. ஆனால் வார்த்தை என்ன செய்தது? அவனை கண்காணித்துக் கொண்டேயிருந்தது. பாருங்கள்? அது மாத்திரம் . . . சகோதரன் வெல்ச் நம்பிக்கையை உறுதியாகப் பற்றியிருந்தார், “எல்லாம் சரியாகி விடும், எல்லாம் சரியாகிவிடும்' என்று கூறினார். அந்த வார்த்தை அவனைத் தொடர்ந்து சென்று கொண்டே யிருந்தது. ”நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ,'' பாருங்கள் ? வார்த்தை அவனைப் பின்தொடர்ந்து சென்றது. முதலாவதாக காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, அவருடைய பையன்களில் ஒருவன் அங்கே சாலையில் காரோட்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது அது அங்கே இருந்தது. அந்தக் காரில் ஒரு மனிதன் இருப்பதைக் கண்டு, அவனுடைய எண்ணை குறித்துக் கொண்டு, சகோதரன் உட்டிடம் (wood) வந்து அதைத் தெரிவித்தான். அது எங்கே இருக்கிறதென்று கண்டுபிடிக்க அவர்கள் தொலைபேசியில் அழைத்தனர். அவன் பௌலிங் கிரீனில் இருந்தான். பரலோகத்தின் தேவன் அதை அறிவார். அதைக் குறித்து ஒரு வார்த்தை கூட நான் கேள்விப்படவில்லை, அதைக் குறித்து ஒன்றுமே எனக்குத் தெரியாதிருந்தது. 134கடந்த ஞாயிறு மதியவேளையில், (ஒரு வாரத்திற்கு முன்னர்), நாங்கள் பிரசங்கத்தை முடித்தப் பிறகு அங்கே சென்று என்னுடைய உடைகளை மாற்றிக்கொண்டு, சகோதரன் வெல்ச்சின் இடத்தில் அடுத்த நாள் இரவு கூட்டத்திற்காக ஃபிளாரிடாவிற்கு புறப்பட ஆயத்தமானேன். நான் காருக்குள்ளாக சென்றவுடனே அந்த மனிதனை நான் பார்த்தேன். அப்பொழுது நான் கூறினேன், 'சகோதரன் வெல்ச்.....'' (அப்பொழுதே என்னால் அதை அவரிடம் கூறக்கூடாதிருந்தது. அவரே காரியத்தைக் குறித்து பேசவேண்டியவராயிருந்தார். பாருங்கள், அங்கே மேடா தன்னுடைய தீர்மானத்தை செய்ய வேண்டியிருந்தது போல, பாருங்கள்?) நான், “நாம் பௌலிங்க் கிரீன் வழியாக செல்லப் போகிறோம்” என்று கூறினேன். அவர், “அது வழியிலிருந்து முப்பது மைல் தூரமிருக்கும்” என்றார். சாலையில் சென்றுக்கொண்டிருந்தோம் ; அப்பொழுது நான் “ஓ, இவர் - இவர் இதைப் புரிந்து கொள்வார் (பாருங்கள்?) , இவர் அறிந்து கொள்வார். இவர் கண்டிப்பாக அதை அறிந்து கொள்ளத்தான் வேண்டும்” என்று நினைத்தேன். சகோதரி ஈவான்ஸ் மற்றும் நானும் இவருடன் கூட பிரயாணித்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரம் கழித்து அவர் என்னிடம், “என்ன சகோதரன் பிரன்ஹாம், எனக்கு ஒன்றுமே புரிந்து கொள்ள முடியாது என்று எண்ணுகிறீரா? சற்று முன்னர் நீர் பௌலிங்க் கிரீன் என்று கூறினீரே” என்றார். “ஆமாம்” அவர் மேலும், “என்னுடைய பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிப்போன அந்த மனிதனைத் தெரியுமா?” என்றார். “ஆமாம்” “அந்த மனிதன் பௌங்க் கிரீனில் தான் இருக்கின்றான், அதைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான் அந்த இடத்திற்குள் போய் அவன் எங்கே இருக்கின்றான் என்று கண்டுபிடிக்கப் போகிறேன். ஆகவே நான் போகப் போகிறேன்......” அதற்கு நான், “நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் அங்கே சென்று உங்கள் பணத்தை அவனிடமிருந்து வாங்கப் போகிறீர்களா?” என்றேன். இப்பொழுது, (பாருங்கள்), நான் அவரிடம் அதை கூறுவேனானால் அப்பொழுது அவர் ... பாருங்கள்? அவர் தாமாகவே ஒன்றைச் செய்ய வேண்டியவராக இருந்தார். பாருங்கள்? அவர் ஒன்றைச் செய்ய வேண்டியவராக இருந்தார். இப்பொழுது நான் அதைக்கூறினால், சரியாக நான் கண்டிருந்த தரிசனத்தின் போக்கு சரியாக அமையாமல் அதை உடைத்து விடும். பாருங்கள்? ஆகவே நான் அப்படியே சற்று விட்டு விட வேண்டியிருந்தது..... 135பாருங்கள்? அது .... ஏன் இயேசு அங்கே நின்று கொண்டு மரியாள் மற்றும் மார்த்தாளிடம், “கல்லை எடுத்துப் போடுங்கள்” என்று கூற வேண்டியிருந்தது? அவர் தேவன். அவர், “கல்லே, நீ இல்லாமல் போகக் கடவாய்'' என்று கூறியிருப்பாரென்றால், அப்பொழுதே அது இல்லாமல் போயிருக்கும். ஆனால் அவள் செய்ய வேண்டியது ஒன்று இருந்தது. அவர் ஏன் அங்கே நின்று கொண்டு அறுவடையைப் பார்க்க வேண்டியதாக இருந்தது? (அவர் அறுப்புக்கு எஜமான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?) அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி, “ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக் கொள்ளுங்கள்” என்று கூறினார். வேறு விதமாகக் கூறுவோமானால், “நான் என்ன செய்யப் போகின்றேனோ அதை நான் செய்யும்படிக்கு நீங்கள் என்னைக் கேளுங்கள்” என்பதேயாகும். 136பாருங்கள்? நாங்கள் நண்பர்கள் ஆவர், நாங்கள் - நாங்கள் - அது ஒரு சபையாகும். நாங்களாகவே செய்ய வேண்டிய காரியங்கள் தனித்தனியே எங்களுக்கு உண்டு. நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களும் உங்களுக்கு உண்டு. இதோ சுவிசேஷம் இங்கே இருக்கின்றது. அதை நான் அறிவேன். ஆனால் நீங்கள் இங்கே அப்படியே உட்கார்ந்திருக்க மாத்திரம் செய்து சுவிசேஷத்தை பிரசங்கிக்க வில்லை என்றால், அது எந்தவித நன்மையை உங்களுக்கு பிறப்பிக்கும்? நீங்கள் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டியவர் களாக இருக்கிறீர்கள். நீங்கள்..... “சரி, தேவனால் சுகமாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஆனால் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை ” என்று நீங்கள் கூறலாம். எழுந்து நின்று அந்த வார்த்தை உங்களுடைய வார்த்தையாக மாறட்டும். அதை விசுவாசியுங்கள். அதை மூளையைக் கொண்டு யோசிக்காதீர்கள்; அதை அப்படியே விசுவாசியுங்கள். நான் கூறினேன், “சரி....'' (அவர் போகவில்லையெனில் தன்னுடைய பணத்தைப் பெற்றுக்கொள்ளாமல் இழக்கப் போகின்றார் என்பது எனக்குத் தெரியும்). நான் அது நானாக இருக்குமென்றால், அது நானாக இருக்குமென்றால், சரியாக இப்பொழுதே நான் சென்று என்னுடைய பணத்தைத் திரும்பப் பெறுவேன்” என்று கூறினேன். ஆகவே அவர் சென்றார். அவர் சென்று கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த அந்த மனிதனை எழுப்பும் போது அவன் சிறிது பணத்தை வைத்திருந்தான். பிறகு அவன் பக்கத்து வீட்டு நபரிடம் பணம் பெற்று மீதமுள்ள தொகையையும் அவன் திரும்பக் கொடுத்தான். அது என்ன? அதுதான் வார்த்தையாகும். பாருங்கள். அது இடத்தைக் கண்டுபிடிக்குமானால், அது சூழ்நிலையையே திருப்புகின்றதாக இருக்கிறது. 137இப்பொழுது, தெய்வீக சுகமளித்தலைக் குறித்தும் அதே தான். இப்பொழுது, சகோதரன் வெல்ச், “சரி, என்னால் அங்கே செல்ல முடியாது என்று நினைக்கின்றேன், வேறு வழியாக நாம் சென்று விடலாம் என்று நான் நினைக்கின்றேன்” என்று கூறியிருப்பாரானால் எப்படி யிருக்கும். அந்த மனிதனும் ''சரி நானும் அங்கே போகப் போவதில்லை . என்ன, இந்த கார் .....“ என்று கூறியிருந்திருப் பாரானால் எப்படியிருக்கும். பாருங்கள்? அது நடந்தே இருக்காது. ஆகவே நீங்கள் விசுவாசித்தாக வேண்டும். அதை நீங்கள் விசுவாசித்துத்தானாக வேண்டும். அப்பொழுது .... அந்த விசுவாசம் என்னும் ஒரு சூழ்நிலைக்குள் விழுகின்றது. அப்பொழுது அது காரியத்தைப் பிறப்பிக்கத்தான் வேண்டிய தாயிருக்கிறது. அது காரியத்தைப் பிறப்பிக்கத்தான் வேண்டும். ஓ, அது ... 138மரித்துப் போயிருக்கின்ற ஒருவர் உயிரோடெழுப்பப் படும் போது என்ன சம்பவிக்கின்றது என்பதைக் குறித்து நீங்கள் எப்பொழுதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? ஃபின்லாந்து தேசத்தில் மரித்துப் போயிருந்த அந்த சிறு பையன் உயிரோடெழுப்பப்பட்டதைக் குறித்து நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா? அவனுடைய ஆவி அவனை விட்டுப் போயிருந்தது. ஆகவே வார்த்தையானது விண்வெளிக்கு அப்பால் சென்று அந்த சிறு ஆத்துமாவை எடுத்து, அதை நேராக அந்த இடத்திற்கு திரும்பிக் கொண்டு வர வேண்டியதாக இருந்தது. பாருங்கள்? எப்படி அதனால் அதைச் செய்ய முடியும்? அது அந்த வார்த்தையாகும் : அது வியாதியஸ்தரை சுகப்படுத்து கின்றது. மரித்தோரை உயிரோடெழுப்புகின்றது. பாருங்கள்? எப்படி அவர் அதைச் செய்யப்போகின்றார்? அது தண்ணீர் பாய்ச்சப்பட்ட வார்த்தையினாலே மாத்திரம் தான் வரவேண்டியதா யிருக்கின்றது. அவர் தரிசனத்தை காண்பித்திருக்கிறார். ஆகவே அது நடந்தேயாக வேண்டும். அந்தப் பையன் அங்கே மரித்துக் கிடந்தான் ; இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் கூறியிருந்தபடியே எல்லா காரியமும் ஒரு துளியும் மாறாமல் அப்படியே அங்கே அமைந்திருந்தது. அங்கே அது இருந்தது. மலையிலிருந்து இறங்கி வந்த கரடியைக் குறித்தும், மற்றும் என்னவாயிருந்தாலும் அதைக் குறித்து நான் கூறுவதுண்டு. அது நடந்தேயாக வேண்டும். அந்த விதமாகவே அது இருந்தேயாக வேண்டும். பாருங்கள்? 139அது என்ன செய்கின்றது? ஒரு வார்த்தை , நான், “பரலோகப் பிதாவே, என்னுடைய தேசத்தில் நான் இருக்கும் போது, இந்த சிறு பையன் மரித்த நிலையிலிருந்து உயிரோடெழுந்திருப்பான் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னரே நீர் என்னிடம் கூறியிருந்தீர்; ஆதலால், உம்முடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு, உம்முடைய வாக்குத்தத்தத்தை ..... முதலாவதாக ” விசுவாசிக்கிறவர்களை அந்த அடையாளங்கள் பின் தொடரும்“ என்று வார்த்தை கூறியுள்ளது. நீர் உம்முடைய சீஷர்களை முன்பாக அனுப்பி, வியாதியஸ்தர்களை சுகமாக்கவும், மரித்தோரை உயிரோ டெழுப்பவும், பிசாசுகளைத் துரத்தவும் அவர்களுக்குக் கூறினீர். பிறகு, நான் என்னுடைய தேசத்தில் இருக்கும் போது ஒரு தரிசனத்தின் மூலமாக இந்தச் சிறிய பையன் திரும்பவுமாக உயிர் பெற்று ஜீவிக்கப் போகிறான் என்று எனக்கு காண்பித்தீர் அல்லவா. ஆகவே மரணமே, நீ இன்னுமாக இவனை பிடித்து வைத்திருக்க முடியாது. நான் கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினேன். நானல்ல, நான் அந்த வார்த்தையல்ல, அவர்தான் அந்த வார்த்தையாவார். பாருங்கள்? நான் வார்த்தையாக இருந்திருந்தால் ..... 140வார்த்தையாக இருக்கக்கூடிய நபர் ஒருவர் தான் உண்டு. அவர் இயேசு. ஒரு கன்னிப் பிறப்பின் மூலமாக வந்த தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தை அவராவார். நான் ஒரு தாறுமாறாக்கப்பட்டவன். பாருங்கள்? என் தந்தையும் தாயும் சேர்ந்ததினால் ஏற்பட்ட ஒரு விளைவே நானாவேன். நானாகிய இது மரிக்க வேண்டும் (பாருங்கள்?) சரீரம் மரிக்கத்தான் வேண்டும். ஆனால் இயேசுவைப் பொறுத்த வரையில் அப்படிக் கிடையாது; அவர் வார்த்தையாக இருந்தார். ஒரு கன்னிப் பிறப்பில் அவர் பிறந்தார். சகோதரனே, எந்த ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் அல்லது வேறெந்த ஒன்றும் அவருடைய பிறப்பினோடு எந்த விதமான ஒரு தொடர்பும் கிடையாது. அந்தப் பெண் ஒரு ஈனும் கருவியாக (Incubator) மாத்திரமே இருந்தாள். அவர் அவளிடமிருந்து பால் அருந்தினார். அது எல்லாமே உண்மையானது தான். ஆனால் ஒன்றை நான் உங்களுக்குக் கூறட்டும்; அவர் தேவனாக இருந்த அதே தேவன் தான்! அந்த பிறப்பில் பாலுணர்வுக்கான எந்த ஒரு காரியமும் இல்லை. அந்த இரத்தத்தின் மூலமாக ஜீவனைக் கொண்டு வர வேண்டியிருந்ததால் அவர் பாலுணர்வுக்கு அப்பாற் பட்டதாக அவருடைய பிறப்பு இருக்க வேண்டியதாயிற்று. இன்னும் சில நிமிடங்களில் அதை நாம் பார்ப்போமாக. 141ஆகவே சற்றுப் பாருங்கள். அவர் அந்த வார்த்தையாக இருந்தார். ஆனால் கர்த்தருடைய வார்த்தையானது .... தீர்க்கதரிசிகள் அந்த வார்த்தையாக இருக்கவில்லை, ஆனால் கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளுக்கு வந்தது. வார்த்தை அவர்களிடம் வந்தது. இன்றைக்கும் அந்த விதமாகத்தான் நடக்கின்றது. அந்தச் சிறு பையனுக்காக வார்த்தை வந்தது. அது என்ன? ஒரு தரிசனம். அந்தக் கரடியைக் குறித்தென்ன? அது மற்ற காரியங்களை அப்படியே காத்துக்கொள்கின்றது. இப்பொழுது முதலாவதாக அது பேசப்பட வேண்டும். “மரணமே, அவனை திரும்பக் கொடு! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அந்த வார்த்தையை நான் அனுப்புகிறேன். திருடப்பட்டக் காருடன் பெளலிங்க் கிரீனில் சென்று கொண்டிருந்த அந்த பையனை அது பிடித்தது போல அது உடனடியாக அது பிடித்துக் கொள்ளும். இதோ அது சென்று அதை மறுபடியுமாக பிடித்துக் கொள்கின்றது. அது என்ன செய்கின்றது? அந்த சிறு ஆவியை அது பிடித்து அதைத் திரும்பி நேராக இங்கே கொண்டு வந்து, அவ்வாறு செய்யும் என்று வார்த்தை கூறியிருந்தபடியே, அந்த ஆவியைக் கொண்டு வந்து சரீரத்திற்கு அதை அளிக்கின்றது. புரிகின்றதா. அதைச் செய்வது என்ன? விசுவாசம், அறிவு அல்ல. 142நீங்கள், “இதோ பாருங்கள். அந்த காற்று மண்டலம் இது - அது போன்றவைகளைக் கொண்டு உருவாகியுள்ளது. அதில் நிறைய அமிலங்களும், வாயுக்களும் உள்ளன. அதில் மிக அதிக அளவில் மின்காந்த ஒளி உள்ளது. இன்னும் எவ்வளவு இருக்கிறதென்று என்னால் விளக்கிக் காட்ட முடியும். ஒருக்கால் என்னால் அதை .....” என்று கூறலாம். ஓ, நீங்கள் நீங்கள் உங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக் கிறீர்கள். அறிவுக்கூர்மையல்ல, விசுவாசம்! அது செய்யப்பட முடியாது என்று அறிவுக்கூர்மை உங்களிடம் கூறும். அது செய்யப்பட்டாயிற்று என்று விசுவாசம் நிரூபிக்கின்றது. பாருங்கள்? அது சரி. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று காண்பிக்கின்றது. அது சரி. (நாம் சற்று துரிதமாகப் பார்ப்போம். நாம் சீக்கிரம் முடிக்க வேண்டியுள்ளது). 143தங்கள் தங்கள் ஜாதிகளின்படியே கனிகளைக் கொடுக்கும். யோவான் 14 அதைக் கூறுகின்றது ...... ''படி செய்கிறவனே - என்னை விசுவாசிக்கிறவன் நான் (செய்கிற அடையாளங்களை) கிரியைகளை .......“ இப்பொழுது, நீங்கள் “அவர் செய்கின்ற அடையாளங்களா அது?” என்று கூறலாம். மிகவும் உரைந்து குளிர்ந்த நிலையில், இரத்த ஓட்டம் அற்று மரித்துப் போய் கீழே கிடத்தப்பட்டுக் கிடந்த ஒரு சிறுமியின் வீட்டிற்குள் அவர் சென்றார். அந்தச்சிறுமி போதகனின் ஒரே மகளாவாள். அவர் அங்கே செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் அவள் மரித்துப் போயிருக்கலாம். அவளுடைய சரீரத்தை எடுத்து அதற்கு தைலமிடுவதற்காக அவளை ஒரு சிறு கட்டிலில் கிடத்தியிருந்தார்கள். அவள் கிடத்தப்பட்டுக்கிடந்த அறைக்குள்ளாக இயேசு நேராக நடந்துச் சென்றார். அவர்கள் அங்கு அழுது புலம்பிக் கொண்டிருந்தனர். “இங்கிருந்து வெளியேறுங்கள்,” “இங்கிருந்து வெளியேறுங்கள்,'' என்று அவர்களெல்லாரையும் அவர் வெளியே அனுப்பினார். பிறகு அவர், ”பேதுரு, யாக்கோபு, யோவான், நீங்கள் இங்கே வாருங்கள்; நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்“ என்றார். அப்பொழுது அவர் அந்தத் தகப்பனிடம், ”நீ விசுவாசிக்கிறாய் அல்லவா இல்லையென்றால் நீ என் பின்னே வந்திருக்கமாட்டாய்“ என்று கூறினார். அப்பொழுது அந்தத் தாய், “கர்த்தாவே, நானும் விசுவாசிக்கிறேன்” என்று கூறினாள். பாருங்கள்? அவர், “இங்கே வந்து நில்” என்றார். அவர் அங்கே நோக்கிப் பார்த்து அந்தச் சிறுமியினருகே நின்றார். அவர், “தபித்தா” என்றார். அதற்கு “சிறு பெண்ணே ” என்பதாகும். அல்லேலூயா. அவர் ஜெபிக்க வேண்டிய அவசியமேயில்லை ; அவர் வார்த்தையாயிருந்தார். என்னால் தரிசனத்தைப் பார்க்கமுடிகிறதென்றால் நான் ஜெபிக்க வேண்டிய அவசியமேயில்லை. ஏனெனில் வார்த்தை ஏற்கனவே தயார் படுத்தப்பட்டுள்ளது. அந்த வார்த்தையைப் பெறுவதற்கும், தேவன் என்ன கூறப்போகின்றார் என்பதை பெறுவதற்கு மாத்திரமே நான் ஜெபிக்க வேண்டும். பிறகு நான் பேசுவதற்கு ஏதுவாக இருக்கும். ஆனால் அவரோ வார்த்தையாக இருந்தார். ஆமென். “பிள்ளையே, நான் உனக்கு சொல்லுகிறதாவது, எழுந்திரு,” அவளுடைய கையைப் பிடித்து எழுப்பினார். அது தான் காரியம். பாருங்கள்? ஓ, என்னே அதுதான் வெளிப்படையாக செய்து காண்பிக்கப்படுதலாகும். அதனுடையதை அது பிறப்பிக்கின்றது. “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கின்ற கிரியைக ளைத் தானும் செய்வான்” என்று இயேசு கூறினார். 144ஆகவே இவைகளெல்லாம் (பாருங்கள்?) - இப்பூமி தன்னுடைய கருப்பையில் சிருஷ்டியைக் கொண்டிருப்பது போலவே இந்த ஸ்தாபனங்களின் மற்றும் இதர எல்லா காரியங்களும் எல்லாம் ஒன்று கலந்து அருவருக்கத்தக்க பாவமாக ஆகியிருக்கின்றது. அது சரியே. ஓ. என்னே. எப்படி அது நடைபெறும்? இந்தக் குட்டை மயிரைக் கொண்டிருப்போர், குட்டைக்கால் சட்டை அணிந்திருப் போர், சிகரெட் பிடித்துக் கொண்டிருப்போர், பந்து விளையாட்டு அரங்கங்களில் இருந்து கொண்டிருப்போர், சபையைச் சேர்ந்து கொள்பவர் போன்றோரின் பேரில் உண்மையான தேவனுடைய வார்த்தை எப்படி வளரும்? சுகப்போகப் பிரியர். அப்படிப்பட்ட மக்கள் கூட்டங்களை தேடிச்சென்று, அந்த இடங்களில் நேரத்தைக் கழித்து, அதைப்போன்ற காரியங்களை விரும்பி உலகத்தின் காரியங்களை அன்பு கூர்ந்து இப்படியாக இருக்கையில், எப்படி காரியமானது ஆகும். எப்படி தேவனுடைய அன்பு உள்ளே வரும்? இப்படிப்பட்ட ஒரு நிலத்தில் தேவனுடைய விதை எப்படி வளரும்? அவ்விதமான நிலத்தில் வேர் பிடிக்காது; எந்த வித ஒரு ஜீவனும் அதில் வளராது. அது அந்த பழைய தூசி படிந்த ஸ்தாபன கற்பாறைகளில் விழுந்து அழுகிப் போகும். அதில் ஜீவன் உருவாகாது. ஆமாம் ஐயா. ஆமாம் ஐயா. சுகப்போகத்தை நாடித் தேடுபவர்கள், தேவப்பிரியரா யிராமல் அதைக்காட்டிலும் சுகபோகப்பிரியர்கள் - பயங்கரமானவர்கள். ஆனாலும் அவர்கள் கூரறிவுத்திறம் வாய்ந்தவர்கள். அவர்கள் மற்ற சாராரைக் காட்டிலும் இருமடங்கு சாமார்த்தியமுள்ளவர்கள் ஆவர். பாருங்கள்? நிச்சயமாக. கூரறிவுத்திறம் வாய்ந்தவர்கள், கல்வியறிவு பெற்றவர்கள், ஏவாளைப் போன்ற அறிவுக்கூர்மையை நாடித் தேடுபவர்கள், அவள் கொண்டிருந்த அதே அறிவைப் போன்றே இவர்களும் கொண்டிருக்கின்றார்கள். அது உண்மையே. 145ஒரு லீலிப்புஷ்பம் எவ்விதமாக ஜீவிக்கின்றது. எவ்விதமாக ஒரு லீலிப்புஷ்ப விதை வளர்ந்து ஜீவிக்கின்றது (தண்ணீர்களின் மேல் அது எப்படி செழித்தோங்குகிறது) - அந்தத் தூசி படிந்த ஸ்தாபனங்களில் ஒன்றில் எவ்விதமாக அது வளருகின்றது? தண்ணீ ரின் மீது அதனால் எவ்விதமாக வளர்ந்து செழித்தோங்க முடிகிறது. தண்ணீர் பரிசுத்த ஆவியாகும். அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்கள். பாருங்கள்? வார்த்தை அவர்கள் மீது விழுந்த போதிலும் அதனால் வளர முடிகிறதில்லை . அதனால் வளர முடியாது. எப்படி ஏவாளின் மீது வார்த்தை விழுந்து வளர முடியாமல் போனதோ அதே போன்று தான். ஏன் வார்த்தையால் வளரமுடியவில்லை? ஏனெனில் ஏவாள் அறிவுக்கூர்மையை, சாத்தானின் ஞானத்தை ஏற்றுக் கொண்டாள். 146அந்த வார்த்தை அவர்களிடம் வருகின்றது. அந்த வார்த்தை அவர்களின் மீது விழுகின்றது. நிச்சயமாக அது விழுகின்றது. வளர் .... அது அவர்களின் மீது விழுகின்றது. வார்த்தை பிரசங்கிக்கப்படுவதை அவர்களால் கேட்க முடிகின்றது. சபைகளில் அம்மக்கள் உட்கார்ந்திருப்பதை நீங்கள் எப்போதாவது கண்டிருக்கிறீர்களா? அவர்கள் அசையவே மாட்டார்கள். குட்டை முடியைப் பற்றி பெண்களிடம் பிரசங்கிக்கப்படுகிறது. வருடங்கள் கடந்து கொண்டேயிருக்கின்றது. அவர்கள் இன்னுமாக குட்டை முடியுடனே தான் இருக்கின்றார்கள். மனிதனிடம் புகைப் பிடிப்பதைக் குறித்து பேசப்படுகின்றது. மது குடிப்பதைக் குறித்து பெண்களிடம் பேசப்படுகின்றது. ஆனால் அவர்கள் சரியாக அப்படியே குடித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். ஒரு வாத்தின் முதுகின் மீது தண்ணீரை ஊற்றுவது போல. வார்த்தை வளருவதற்காக இடமே அங்கே இல்லை. பாருங்கள்? சுகபோகத்தை, புகழை நாடித் தேடுகின்ற அந்த பழைய பழக்கம், “சரி, மற்றைய பெண்கள் முதலாவதாக அவ்விதம் செய்யட்டும், பிறகு நான் அதைச் செய்கின்றேன்' தேவனுடைய வார்த்தையைப் பின்பற்ற வேண்டியது உங்களுடைய கடமையாகும். அது சரி. பாருங்கள்? 147வார்த்தையானது அவர்கள் மீது விழுகின்ற போதிலும், அதினால் வளரமுடிவதில்லை . அது சாத்தானின் அறிவுக் கூர்மையாகும் (பாருங்கள்?). ஆகவே அது வெறும் ஸ்தாபன தூசியாக ஆகிவிடுகின்றது. அவர்களால் எபிரெயர் 13:8ல் விசுவாசம் கொள்ள முடிவதில்லை ; முற்றிலும் அறிவுக் கூர்மையால் செருக்குக்கொள்கின்றனர். வார்த்தை வளருவதற் கென ஒன்றுமே அங்கு இல்லை. பாருங்கள்? எப்படி அவர்களால் “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கின்றார்'' என்கின்ற எபிரெயர் 13:8 விசுவாசிக்க முடியும்? அவர்களால் முடியாது. பாருங்கள்? ஓ, தாங்கள் அதை விசுவாசிப்பதாக கூறுகின்றனர். ஓ, நீங்கள் அதை அவர்களிடம் கூறும்போது, அதற்கு அவர்கள், ”நிச்சயமாக நாங்கள் அதை விசுவாசிக்கின்றோம்“ என்பார்கள். அப்படியானால் அதின் கனிகளை எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். அதை நான் காணட்டும். அது செய்யப்படுவதை நான் காணட்டும். வார்த்தையை விசுவாசித்த, முதல் அப்போஸ்தல சபையில் அவர்கள் செய்ததையே, நீங்கள் பிரசங்கிக்கின்ற உங்கள் சபையானது செய்கின்றதா என்பதை நான் காணட்டும். உங்கள் ஞானஸ்நானங்களை திரித்துள்ளீர்கள். உங்கள் அத்தாட்சி களை திரித்துப் போட்டுள்ளீர்கள். வார்த்தையை எடுத்து அந்த வார்த்தை தன்னுடைய சொந்த கனியைத்தர விடுவதற்கு பதிலாக, அதை ஏதோ ஒரு விதமான பிரமாணத்திற்குள் நுழையச் செய்து விடுகின்றீர்கள். வார்த்தைக்கான அத்தாட்சியை கொண்டு வரத்தக்கதாக ஏதோ ஒரு விதமான காரியத்தை நீங்கள் செய்கின்றீர்கள். நீங்கள் கொண்டு வர முயற்சிக்கின்ற அந்த ஒவ்வொரு அத்தாட்சிக்கும் சாத்தானால் . ஒரு வியாக்கியானத்தை அளிக்க முடியும். நிச்சயமாக அவனால் முடியும் ; நிச்சயமாக அவனால் முடியும். அவனால் வார்த்தையை உற்பத்தி செய்ய முடியாது. அது மாத்திரம் தான் அவனை சுட்டெரிக்கின்ற ஒன்றாயிருக்கின்றது. அவனால் அதைச் செய்யவே முடியாது. ஆமாம். ஐயா ஓ, ஆமாம்! 148இப்பொழுது, காயீனையும் ஆபேலையும் கவனியுங்கள். அவர்கள் இருவருமே உத்தமமாய்க் காரியத்தைச் செய்தார்கள். காயீன் தன்னுடைய தாய்ச் சபையாகிய ஏவாளைப் போன்றே தன்னுடைய அறிவுக்கூர்மையைக் கொண்டு ..... (ஏவாள் அவனுடைய தாயாவாள். காயீனுடைய தாய் ஏவாள் என்பதை எத்தனைப் பேர் அறிவீர்கள்? நிச்சயமாக! அது சரி). தன்னுடைய தாயைப் போலவே அவன் சொந்த மூளையைக் கொண்டு - யோசனை செய்துப் பார்த்தான் (பாருங்கள்?), அறிவுக்கூர்மை, தன்னுடைய சொந்த ஞானம். ஒரு அழகான பலியை அவன் உண்டாக்கினான். மலர்களைக் கொண்டும், நிலத்தின் கனிகளைக் கொண்டும் அதைச் செய்தான். “சரி, நிச்சயமாக....'' என்றான் (பாருங்கள்?) ”தேவன் ..... (சாத்தான் ஏவாளிடம் 'நிச்சயமாக, நிச்சயமாக' என்று கூறினது போலவே) 'நிச்சயமாக தேவன் என்னுடைய பலியை ஏற்றுக்கொள்வார். ஒரு அழகான பீடத்தை நான் கட்டியுள்ளேன். அதை மிக அழகாக அமைத்துள்ளேன். அது மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. “இந்த ஈஸ்டர் பண்டிகையைப் போன்றே. பீடங்கள் மேல் ஈஸ்டர் மலர்களை வைக்கத்தக்கதாக லட்சக்கணக்கான டாலர்களை அவர்கள் செலவு செய்வார்கள். பலிப்பீடமானது மலர்களுக்காக உண்டாக்கப்படவில்லை : அது ஒரு பலிக்காகத்தான் உண்டாக்கப்பட்டிருக்கின்றது. பாருங்கள்? அந்தப் பழைய காயீனின் ஆவியைத்தான் அதே விதத்திலேயே நீங்கள் காண்பித்துக் கொண்டிருக்கின்றீர்கள் (பாருங்கள்?) ஏதேனிலிருந்த அந்த அதே பழைய பிசாசைத்தான் நீங்கள் பிரதிபலிக்கிறீர்கள். பாருங்கள்? 149என்ன - என்ன சம்பவித்தது? “நிச்சயமாக .....'' என்று காயீன் நினைத்தான். அந்த மனிதன் உத்தமமாக அதைச் செய்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் அது அவனுக்கு வாழ்வு அல்லது சாவு என்னும் நிலையில் இருந்தது. அம்மக்கள் மாய்மாலக்காரர்கள் என்று நீங்கள் நினைக்காதீர்கள். அவர்கள் உத்தமமாய் அதைச் செய்தார்கள். “அப்படியானால், அவர்கள் உத்தமமாயிருந்தும் தவறாயிருக்க முடியுமா?'' என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக! ஒரு மனிதன் தான் குடிப்பது விளக்கெண்ணை என்று நினைத்துக் கொண்டு அரிதார நஞ்ஞை (Arsenic ஆர்செனிக் இரசாயனத்தையோ) அல்லது வேறெதோ ஒரு எண்ணையையும் கூட குடிக்கலாம். பாருங்கள். அவன் உத்தமமாக அதைச் செய்கிறான். சத்தியம் தான் முக்கியம். உத்தமம் அல்ல. சத்தியம். 150ஆப்பிரிக்காவிலுள்ள பெண்கள் தங்கள் சிறு குழந்தைகளைத் தங்கள் தெய்வங்களான முதலைகளுக்குப் பலியாக அளிப்பார்கள். அந்த விதமான ஒரு உத்தமம் உங்களுக்கு இருக்கின்றதா? கிடையாது. அவர்களின் எத்தனைப் பேர். . . மேலும், சீனர்கள் சமையலறைக் கடவுள்களுக்கென தங்கள் எலும்புகளை உடைத்துக் கொள்வர். அங்கிருக்கின்ற முகமதியர்களைக் குறித்தென்ன, அவர்கள் நெருப்பில் நடப்பார்கள். தங்கள் வாயில் கொக்கிகளைக் குத்திக்கொண்டு தங்கள் வாயைத் தைத்துக் கொள்வார்கள். அவர்களில் சிலர் ஒரு குச்சியை எடுத்து ..... அங்கே ஒரு சிலையை நான் வைத்திருக்கிறேன். ஒரு மனிதன், தான் பரலோகத்திற்கு செல்ல வேண்டுமென்று தன்னுடைய தேவனுக்குப் பலி செலுத்துகிற முறையை அந்தச் சிறு உருவச் சிலை சித்தரிக்கின்றது. ஒரு மதக்குருவானவன் அந்த மனிதனின் வாயில் ஒரு குச்சியை வைத்து அதில் பொருத்தப் பட்டிருக்கின்ற சங்கிலியால் அவனுடைய தலையில் கட்டி சுற்றி, கைகளைப் பின்புறமாக வைத்து அந்த சங்கிலியால் பிணைத்து, அப்படியே சங்கிலியைக் கீழே இழுத்து அவனுடைய கால்களையும் கட்டி விடுகின்றான். அந்நிலையில் அந்த மனிதன் மரிக்கும் வரைக்கும் குடிக்கவோ, சாப்பிடவோ அல்லது எந்த ஒன்றையுமே செய்ய முடியாது. ஒரு கிறிஸ்தவன் அந்த விதமான ஒரு பலி செலுத்துவதை நீங்கள் கண்டதுண்டா ? சத்தியமாகிய வார்த்தையைக் கூட நீங்கள் விசுவாசிப்பது கிடையாதே. பாருங்கள்? 151இப்பொழுது, அழகு. “நிச்சயமாகவே தேவன் இதை ஏற்றுக்கொள்வார். என் பலிப்பீடம் எவ்வளவு அழகாக இருக்கின்றது பார்” என்று காயீன் கூறினான். பாருங்கள். அந்த ஆவியான அறிவுகூர்மை இன்றைக்கும் இருக்கின்றது. “சரி, நாம் இந்தப் பெரிய ஸ்தாபனத்தைக் கட்டு வோமானால் நிச்சயமாக தேவன் நம்மை ஏற்றுக்கொள்வார்”. தேவனோ தம்முடைய வார்த்தையைத் தவிர மற்ற வேறொன்றையும் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஏற்றுக்கொள்ள மாட்டார். பாருங்கள்? “சரி, இப்பொழுது பாருங்கள், சகோதரன் பிரன்ஹாமே இப்படியாக நாம் அதிக அளவில் மிஷனரிகளை ஒவ்வொரு வருடமும் அனுப்புவோமானால் . . . கடந்த ஆண்டு மிஷனரிகளை அனுப்பும் திட்டத்தினால் எங்களுக்கு ஒரு இலட்சம் டாலர் செலவிட நேரிட்டது,'' என்று அவர்கள் கூறுகின்றனர். அது மிக அருமையான ஒன்றாகவே இருக்கும். சகோதரனே, ஆனால் நீ அந்த வார்த்தையை உண்மையென்று ஏற்றுக்கொண்டு வார்த்தையினிடம் வரும் வரைக்கும் நீ மரித்த நிலையில் தான் உள்ளாய். அது முற்றிலும் சரியே. 152“என்ன சகோதரன் பிரன்ஹாமே, எங்கள் சபை ... நீங்கள் உங்களை என்னவென்று நினைத்துக் கொண்டிருக் கின்றீர்கள், அங்கே இருக்கின்ற நீங்கள் வெறும் 'நிலக்கடலை மூளையுடைய (ஒன்றுக்கும் உதவாத மூடன்) ஆள் தானே?”. அது உண்மையே. அது முற்றிலும் சரியே. அது உண்மை . ஆனால் நான் என்னவாக இருந்தாலும் சரி. அந்த வார்த்தை யோடே நான் நிற்பேனாக ; அது என்றாவது ஒரு நாளிலே மதிப்பு வாய்ந்த அளவிற்கு அது வளரும். பாருங்கள்? அது என்னவாக இருந்தாலும் சரி. அந்த வார்த்தை யோடு அப்படியே தரித்து நில்லுங்கள். இப்பொழுது நம்மிடம் இங்கே இருக்கின்ற இந்த சிறிய கூடாரத்தைத் தவிர வேறொன்றும் நம்மிடம் கிடையாது. தற்பொழுதின் தேவைக்கு இந்த கூடாரமே போதுமானதாக இருக்கின்றது. இது நாம் கூடுவதற்கென இருக்கின்ற ஒரு இடமாகும். ஏனெனில் இயேசு வருவதற்காக நாம் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் வார்த்தையைப் பிரசங்கிக்க முயற்சி செய்து, அங்கே சாப்பிட ஒன்றுமில்லாமல் கஷ்டத்தில் அவதிப்படுவோரோடு இவர்களும் இருக்கையில், ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான டாலர்கள் செலவழிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஸ்தாபன கட்டிடங்கள் நமக்கு வேண்டாம். ஜனங்களுக்கு என்ன ஆயிற்று...? ஓஓஓ, ஜனங்கள் எழும்புவார்கள் போலிருக்கிறது. 153ஆனால் யார் வேண்டுமானாலும் கத்தோலிக்கத்தை ஏற்றுக் கொள்ளலாம். எந்த ஒன்றையும் ஏற்றுக்கொள்வதற்கு குருடாகவும் இருக்கலாம். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகின்றேன். தங்கள் கழுத்தை அங்கே நீட்டுகின்ற யாராக இருந்தாலும் சரி. அவர்களுக்கு .... ஒரு அறிவாளி. “அவளோடே பூமியின் ராஜாக்களும் வேசித்தனம் பண்ணினார்கள்” என்று வேதாகமம் கூறியுள்ளதில் வியப்பொன்றுமில்லை. ஆகவே அறிவாளி - அறிவு. பாருங்கள்? அவர்கள் அவ்விதமாகவே செய்கின்றனர் .... குருவானவர்கள், சாமர்த்தியசாலிகள். மனிதனே - ஓ - மனிதனே! கல்வியறிவு பெற்றவர்களைக் குறித்து நீ பேசுகின்றாய்! பையனே, வருடாவருடங்களாக அநேக வருடங்களுக்கு அவர்கள் பயிற்சி பெற வேண்டும். 154அவர்கள் அந்தக் கன்னியாஸ்திரீகளோடு வாழ்வதில்லை என்று கூறுகின்றனர். அப்படியானால் நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகின்றேன். ஏன் அவர்கள் மலடாக ஆகவில்லை? அவர்கள் மணப்பெண்கள் போல அந்த கன்னியாஸ்திரீகள் தான் மணப்பெண்கள். மற்றவர் மணமகன். நிச்சயமாக. அது சரியே. கன்னியாஸ்திரீகளின் திருமடத்தலைவர் (Mother Superior - மதர் சுப்பீரியர்) கன்னியாஸ்திரீகள் பெற்றெடுக்கும் குழந்தைகளை மூச்சு திணர வைத்து சாகடித்து சுண்ணாம்புப் பள்ளங்களில் போட்டு விடுகிறார்கள். நீங்கள் அதை நம்பவில்லை யென்றால், உண்மையாகவே அந்த இடத்தில் இருந்து, அதைக் கண்டு, அதைக் குறித்து சாட்சியிடுகிறவர்கள் இருக்கின்றனர். அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். “வாருங்கள். சட்டம் என்னைக் கைது செய்யட்டும் பார்க்கலாம்” என்று அதைக் கண்டவர்கள் கூறுகின்றனர். “கத்தோலிக்கத்திற்கு ரஷியா என்ன செய்ததோ, மெக்சிகோ என்ன செய்ததோ அதையே நாமும் கூட செய்வோம். அந்த காரியம் அரசாங்கத்தை எட்டும் வரையில் அதை வெட்ட வெளியாக்கி அம்பலப் படுத்துவோம்” என்று கூறுகின்றனர். ஆனால் அதன் தலைமையே இப்பொழுது அரசாங்கத்தில் இருக்கும்படிக்கு நாம் செய்திருக்கையில் எப்படி அதை நீங்கள் செய்யப் போகின்றீர்கள்? பாருங்கள். பாருங்கள்? அந்த - அந்த வார்த்தை நிறைவேறவேண்டியதாக இருக்கின்றது. அங்கே அமர்ந்திருக்கின்ற அந்த மிருகத்திற்கு அவர்கள் ஒரு சொரூபத்தை ஒருங்கிணைந்து உண்டாக்கி, அவர்கள் இருவரும் ஐக்கியங் கொண்டு அந்த மிருகம் பேசத்தக்கதாக அதற்கு அதிகாரம் கொடுத்தார்கள். ஓ, சகோதரனே, அந்த வார்த்தை சரியாக அங்கே நிற்கப் போகின்றது, கம்யூனிசம் எல்லாவற்றையும் ஆதிக்கம் செய்யப் போவதில்லை. ரோமன் கத்தோலிக்கமே ஆதிக்கம் செலுத்தப் போகின்றது. 155இப்பொழுது, இதோ, இதைக் கவனியுங்கள். காயீன், “நிச்சயமாக தேவன் என்னுடைய பலியை ஏற்றுக்கொள்வார்” என்றான். ஆனால் எந்தவிதமான .... “ஒரு பலியை நான் உண்டாக்கினேன், என்றான். ஆனால் அது எந்தவிதமான ஒரு பலியாக இருந்தது? தாவரவியல் செடிகள், மலர்கள், காய் கனிகள் - தாவரவியல். அது என்ன? அப்பலியில் கஷ்டப்படுதல் என்கின்ற ஒன்று இருக்கவில்லை. தண்டனை என்பது இருக்கவில்லை . ஜனங்கள் கஷ்டப்பட விரும்புவதில்லை . அதுதான் இன்றைக்கு இருக்கின்ற காரியமாகும். அவர்கள் தங்கள் சபையிலிருந்து வெளியே வரத்தேவையில்லாத ஒருநிலை இருக்குமாயின், ஏளனமாய்ப் பரிகசிக்கப்படாமலும், தங்களை மக்கள் பார்த்து சிரிக்காமல் இருக்கின்ற ஒரு சூழ்நிலை இருக்குமானால் அவர்கள் நேராக இப்பொழுதே வந்து உடடினயாக இந்த வார்த்தையை விசுவாசிப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் செய்வதில்லை. அவர்கள் தாவரவியல் வாழ்க்கையை விரும்புகின்றனர். ஏதோ ஒரு விதமான அறிவுக்கூர்மையை விரும்புகின்றனர். “உம், இந்த வாழ்க்கையே மிக அருமையாக திருப்திகரமாக இருக்கின்றது” அப்படிப்பட்ட ஒரு நிலை என்பது கிடையவே கிடையாது! கர்த்தருக்குச் சித்தமானால் அது எங்கிருந்து வருகிறதென்று இன்னும் சற்று நேரத்தில் நான் காண்பிப்பேன். 156ஆனால் ஆபேல், விசுவாசத்தினாலே (மகிமை!) ... காயீன் அறிவுக்கூர்மையைக் கொண்டு, “நிச்சயமாக தேவன் இதை ஏற்றுக்கொள்வார். இதோ ஒரு பலிபீடம் இருக்கின்றது; எனக்கு ஒரு சபையும் இருக்கின்றது,'' என்று கூறினான். (அப்படித்தான் சபை இருக்கின்றது. ஒரு பீடம், ஆராதனையின் இடம், அது சரி) ”எனக்கு ஒரு பீடம் இருக்கின்றது. என் சகோதரனைப் போலவே நானும் உத்தமமாக ஆராதிக்க விரும்புகிறேன். மேலும் இங்கே ஆராதிப்பதற்கென்று அழகான ஒரு காரியத்தையும் வைத்திருக்கின்றேன். நிச்சயமாக தேவன் அதை ஏற்றுக் கொள்வார்.“ என்று காயீன் கூறினான். தன்னுடைய தாயிடம் பிசாசு அதே காரியத்தை - அதே பொய்யைக் கூறினான். அறிவுக்கூர்மை. இப்பொழுது ஆபேல் . . . எபிரெயர் 11, “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான். அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.” பாருங்கள்? 157எதைக்கொண்டு ஆபேல் செயல்பட்டான்? அறிவுக் கூர்மையைக் கொண்டா? வேத கலாசாலை கல்வியினாலேயா? விசுவாசத்தினாலே மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான். எதில் அவன் விசுவாசம் வைத்திருந்தான்? எதில் அவன் விசுவாசம் வைத்திருந்தான். அவன் தன்னுடைய விசுவாசத்தைக் கொண்டிருந்தானானால் எப்படி இருந்திருக்கும்? அவனுக்கு இருந்ததெல்லாம் தன்னுடைய தகப்பன், தாய் மற்றும் அவனுடைய ஒன்று விட்ட உடன் பிறந்த சகோதரன் (half Brother) மட்டுமே. அப்படியானால் எப்படி அவன் விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டான்? எங்கிருந்து அவன் அதைப் பெற்றான்? எதில் அவன் விசுவாசம் கொண்டிருந் தான்? தாவரவியல் விசுவாசத்தை வைத்திருந்தானா? இதிலே விசுவாசம் வைத்திருந்தானா? இல்லை ஐயா! அவன் வார்த்தையில் விசுவாசம் கொண்டிருந்தான். ஏனெனில் அவன் ஏன் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அப்புறப்படுத்தப் பட்டு இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ள அவன் விரும்பினான். “ஏன் நாங்கள் வெளியே துரத்தப்பட்டோம்?” “ஏனெனில் நான் பிசாசின் பொய் ஒன்றைக் கேட்டதினால், இந்தப் பையன் இன்னின்ன விதமாகப் பிறந்த காரணத்தினால், அதனாலேயே தேவன் எங்களை தோட்டத்தை விட்டு வெளியே துரத்தினார்,” என்று அவனுடைய தாய் கூறியாக வேண்டும். “சரி, தோட்டத்தின் வாயில் அருகே கூட என்னால் செல்ல முடியவில்லையே, அங்கே ஒரு கேரூபீன் ஜீவ மரத்தை, விருட்சத்தை ஒரு பட்டயத்தை வைத்துக் கொண்டு காவல் காத்துக்கொண்டிருக்கின்றதே” என்று கூறினான். ஆகவே விசுவாசத்தினாலே... 158பாருங்கள். காயீன் அறிவுக்கூர்மையினாலே பலி செலுத்தினான்.... வார்த்தையை அறியாமல், சொந்த சிந்தனையினால், அறிவுக்கூர்மையைக் கொண்டு அவன் ஒரு அருமையான இடத்தை உண்டாக்கி அதை மெருகேற்றி அழகுப்படுத்தினான் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் ஆபேலோ (அவனுக்கு யாருமே எதையுமே கூறவில்லை. அவன் ஒரு பையன் மாத்திரமே) அது தாவரவியல் ஜீவனினால் அல்ல. அது ஒரு உடலுறவின் மூலமாக நடந்தேறிய இரத்தக் கலப்பினால் தான் என்று விசுவாசத்தினாலே அறிந்து கொண்டான் ! சகோதரனே, இது உங்களுக்குப் புரிகின்றதா. ஒரு முறை அப்புறமாக வந்து அதைச் சற்று நோக்கிப் புரிந்துக் கொள்ளுங்கள்! அவருடைய பிள்ளைகள் விசுவாசத்தினாலே இன்னும் அதைக் காண்கின்றார்கள். அவர் சிறிது அறிவுக்கூர்மையைக் கொண்டு அதை இப்பொழுது போதிக்கவில்லை. அது விசுவாசத்தினாலே வந்ததாகும். அது விசுவாசத்தினாலே வருகின்றது. “விசுவாசத்தினாலே ஆபேல் . . .'' என்று வேதாகமம் கூறுகின்றது. அவன் பலியாக எதைச் செலுத்தினான்? ஜீவிக்கின்ற மிருக ஜீவனிலிருந்து வந்த இரத்தத்தை அளித்தான். நாமே ஒரு மிருகம் போன்ற ஒன்று தான். நாம் வெப்பநிலைக் குருதியை கொண்டவர்கள் ஆவோம். அது முற்றிலும் சரியே. மேம்பட்ட மிருக சிருஷ்டியில் மேம்பட்ட இனம் ஆவோம். ஆனால் உள்ளே இருக்கின்ற ஆத்துமா அது தான் ஜீவன் ஆகும். 159இப்பொழுது கவனியுங்கள். விசுவாசத்தினாலே ஆபேல் அந்த வெளிப்பாட்டை, அந்த தரிசனத்தைக் கண்டு, உயிரோடிருந்து ஓடிக் கொண்டிருந்த இரத்தத்தை அவன் கொண்டு வந்தான் ; ஏனென்றால் இரத்தத்தில் தான் ஜீவன் இருந்தது. ஒரு மலரின் தண்டில் தான் ஜீவன் இருக்கின்றது. ஆகவே ஒர தாவர ஜீவன் உணர்ச்சியே இல்லாத ஒன்று. (நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்பியிருந்தேன்). விசுவாசத்தினாலே ஆபேல் வார்த்தையோடு தரித்திருந்தான். விசுவாசத்தினாலே, அறிவுக்கூர்மையினால் அல்ல. விசுவாசத்தினாலே அது இரத்தம், உடலுறவு என்று அவன் கண்டிருந்தான். இரத்த அணு ஆணிடமிருந்து தான் வருகின்றது. ஒரு மனிதனின் விந்தில் தான் இரத்த அணு இருக்கின்றது. செந்நிற இரத்த அணு - இரத்தம். ஒரு ஆணின் மூலமாகத்தான் வருகின்றது. ஆகவே ஆப்பிள் பழமோ, பீச் பழமோ, உருளைக்கிழங்கோ அல்லது எந்த ஒன்றா யிருந்தாலும் அது பாவத்தைப் பிறப்பித்து, அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே கொண்டு வரக் காரணமாக அமைந்திருக்கவில்லை என ஆதாம் (ஆங்கில செய்தியில் உள்ளபடி) அறிந்திருந்தான். உடலுறவு இரத்தம், ஆகவே அவன் இரத்தத்தைத் திரும்பவுமாக பலியாகச் செலுத்தினான். விசுவாசத்தினாலே அதைச் செய்தான். அறிவுக்கூர்மையினால் அல்ல. முழு வேதாகமம் மற்றும் தேவனுடைய முழு சபையும் விசுவாசத்தினாலான தெய்வீக வெளிப்பாட்டின் மேலாகக் கட்டப்பட்டிருக்கையில் எவ்வாறு ஒரு மனிதன் அறிவுக் கூர்மையைக் கொண்டு இதைப் புரிந்துக் கொள்ளக் கூடும்! “இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்”. பாருங்கள்? “ஓவ், நிச்சயமாக அதை நாங்கள் விசுவாசிக்கின்றோம்.” என்று அவர்கள் கூறுகின்றனர். அப்படியானால் இந்தக் காரியங்களினூடாக கிறிஸ்துவின் ஜீவன் எங்கே? கிறிஸ்துவின் ஜீவன் எங்கே ? 160இரண்டாவதாக. இந்த வேத வசனங்களில் சிலவற்றை நீங்கள் குறித்துக் கொள்ள விரும்புகிறீர்களா? பாருங்கள்? “ஆம், நாங்கள் விசுவாசிக்கின்றோம். நாங்கள் விசுவாசிக்கின்றோம் ; நாங்கள் விசுவாசிக்கின்றோம் என்று கூறுவார்களானால், ஜீவன் எங்கே ? அப்படி நீங்கள் விசுவாசிப்பீர்களானால், “விசுவாசிக் கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்” (பின் தொடரலாம் என்றல்ல, பின் தொடரும்) என்று இயேசு கூறியுள்ளாரே. மேலும், “என்னை விசுவாசிக்கிற ஒரு மனிதன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் கூட செய்வான். என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளையே அவனும் கூட செய்வான்”, என்று இயேசு கூறியுள்ளார். அவர் விளையாட்டிற்குச் சொல்லியிருக்க மாட்டார். அவர் கூறியுள்ளாரென்றால் நிச்சயமாக அதை அவர் செய்வார். அது எப்படி நடக்கின்றது? ஏனென்றால் கிறிஸ்துவுக்குள் இருந்த அந்த அதே ஜீவனானது உனக்குள்ளாக இருக்கின்றது. அது அறிவுக்கூர்மையை பிறப்பிக்காது; அறிவுக்கூர்மையில் அது வளராது. விசுவாசத்தை எடுக்க வேண்டுமென்றால் அது அறிவுக்கூர்மையை நிராகரிக்க வேண்டும். வார்த்தையில் விசுவாசம். வார்த்தையில் அறிவுக்கூர்மை கொண்டிருப்பதல்ல. வார்த்தையில் விசுவாசம் வைத்தல். 161எல்லா பிரசங்கிமார்களும், மத குருக்களும் மற்ற எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து அவர்கள் வார்த்தையைக் குறித்துக் கொண்டிருக்கிற அறிவைக் காட்டிலும் சாத்தான் வார்த்தையைக் குறித்து இன்னும் அதிக அறிவுக்கூர்மையைக் கொண்டிருக்கிறான். அவன் அதிக அறிவுக்கூர்மையை பெற்றிருக்கிறான். ஆனால் அவனால் விசுவாசத்தைக் கொண்டிருக்க முடியாது. விசுவாசம் வார்த்தையை வாழ்ந்து காண்பிக்கச் செய்யும். விசுவாசம் சாத்தானை மனந்திரும்பச் செய்து அவனைத் தன்னுடைய ஸ்தாபனத்திலிருந்து வெளியே வரும்படிக்குச் செய்யும். அவன் அறிவுக் கூர்மையைக் கொண்டிருக்கின்றான். அதனால்தான் அவன் ஸ்தாபனத்தோடே இருக்கின்றான். சரி. ஆனால் ஆபேல் விசுவாசத்தினாலே அது உடலுற வினால் வந்த ஒரு காரியமாகும் என்பதைக் கண்டு கொண்டான். அதனால் அவன் இரத்தத்தை, இரத்தத்தின் உயிரைச் செலுத்தினான். அப்பொழுது தேவன் அதை ஏற்றுக்கொண்டார். 162இப்பொழுது II தீமோத்தேயு 2:3 கூறுகின்றது (வார்த்தை இப்பொழுதும் அவர்களிடம் வருகின்றது. அது கெட்ட நிலத்தில் விழுகின்ற போதிலும் சரி. அது வருகின்றது) “அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக் கொண்டிருக் கின்றனர். ஆனாலும் அதின் பலனை .... ஆவியானவருடைய வல்லமையை மறுதலிக்கிறவர்களாயிருக்கின்றனர்” (II தீமோத்தேயு 3, நீங்கள் குறித்துக் கொள்கிறீர்கள் என்றால் சரி) தேவ பக்தியின் வேஷத்தைத்தரித்துக்கொள்ளுதல். நித்திய ஜீவனைக் குறித்த பரிசுத்த ஆவியின் அடையாளங்களை அவர்கள் நிராகரிக்கின்றனர். “ஜனங்கள் அந்நிய பாஷையில் பேசத் தேவையில்லை. இல்லை! தெய்வீக சுகமளித்தல் என்பதும், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பதும் கிடையவே கிடையாது. அந்தக் காரியங்கள் அப்போஸ்தலர்களுக்குத் தான் தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து..... பவுல் அதைத் தீர்க்கதரிசனமாக உரைக்கின்றான். “கடைசி நாட்களில், கடைசிக் காலங்களில், இந்த காரியங்கள் சம்பவிக்கும்” என்கிறான். அவர்களுடைய நாட்களில் அல்ல. “ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே, சிலர் விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள். இந்த எல்லாக் காரியங்களையும் விட்டுப் போவார்கள். பாருங்கள். இதோ அது ; தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்திருத்தல். 163இப்பொழுது ஆவியின் தண்ணீரே இல்லாதிருக்கின்ற இப்படிப்பட்ட மதச்சம்பந்தமான தூசியில் எவ்விதம் பரிசுத்த ஆவியின் நித்திய ஜீவனிற்குரிய அடையாளங்கள் வளரும்? பாருங்கள். ஸ்தாபன கேளிக்கை கும்மாளம் மற்றும் அறிவுகூர்மையின் நிலங்களில் அது வளரவே முடியாது. ஒரு பெண்மணியைப் போல நடந்து கொள்ளாத அளவிற்கு பொதுவான பண்பு நலத்தைக் கூட கொண்டிராத ஒரு பெண்ணிடம் ஜீவனுள்ள தேவனுடைய அடையாளங்களும் அற்புதங்களும் எவ்விதமாக வளரும்? இதை உங்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். ஒரு அற்பமான உணவுச் சீட்டிற்காகவும், அல்லது ஏதோ ஒரு ஸ்தாபன தயவிற்காகவும் பிரசங்க பீடத்தில் நின்று, தேவனுடைய சத்தியத்தை அப்பாலே தள்ளுகின்ற ஒரு மனிதனுக்குள் அது எவ்விதமாக வளரும்? எப்படி ஆவிக்குரிய அடையாளங்கள் அதைப் பின் தொடரும்? அவ்விதமாகச் செய்யவே செய்யாது. 164தன்னுடைய ஸ்தாபன சபையை அழைத்துக் கொண்டு அங்கிருக்கின்ற நதிக்கரையோரத்திலே சென்று அவர் களுடைய ஆடைகளைக் களையச் செய்யும் ஒரு பிரசங்கிக் குள்ளாக அது எப்படி வளரும்? இங்கே முன்னொரு இரவு ஒரு குறிப்பிட்ட இடத்தை நான் கடந்து செல்கையில் அங்கே ஒரு குறிப்பிட்ட சபையில் எல்லோரும் மிகப்பெரிய நடன விருந்தில் கூச்சலிட்டு நடனமாடிக் கொண்டிருந்தனர். அவ்விதமான ஒரு இடத்தில் எப்படி ஆவியின் கனிகள் வளரும்? அது மதச்சம்பந்தமான கற்பாறையில் விதை விழுந்துள்ளது (அது சரி), பரியாசம் செய்யப்பட்டு ஏளனம் செய்யப்படும்படியான துன்பப்படுதல் என்னும் பள்ளத் தாக்கில் அது விழவில்லை . 165லீலிப்புஷ்பம் மிகவும் பிரயாசப்படுகின்றது. திரு. லீலியைக் குறித்து சிறிது காலம் முன்னர், சில வருடங்களுக்கு முன்னர் நான் பிரசங்கித்த என்னுடைய செய்தி உங்களுக்கு நினைவில் இருக்கும். “அது நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அதைப் போன்றதாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்கு நான் சொல்லுகிறேன்”. அந்த லீலிப்புஷ்பம் தன்னை அழகாக்கிக் கொள்ள எப்படி அது வளர்ந்து வெளி வருகின்றது. எதற்காக? அது வெளியே காண்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக. (சகோதரன் பிரன்ஹாம் முகர்ந்து பார்க்கும் சத்தத்தைப் பிறப்பிக்கின்றார் - ஆசி) அது நறுமணத்தை வெளியே பரப்பத் தக்கதாக வெளியே வருகின்றது. தேனீக்கள் நேராகப் பறந்து அதனுடைய இருதயத்திற்குள் வந்து அதற்குள் இருக்கும் தேனை எடுத்துச் செல்கின்றன. லீலிப்புஷ்பமும் அதை இலவசமாகத் தருகின்றன. அந்த தேனைப் பிறப்பிக்க அது பாடுபடுகின்றது! அல்லேலூயா, அப்படித்தான் ஒரு உண்மையான தேவனுடைய மனிதனும் இருப்பான். பாஸ்டர் லீலி, சங்கை திரு. லீலி (ஆமாம் ஐயா!), வார்த்தையில் கடுமையாக உழைத்து, முகங்குப்புற விழுந்து தேவனை நோக்கி, “தேவனே இந்த வசனம் எங்கே பொருந்துகின்றது. இங்கே பொருந்து கின்றதா என்பதை என்னால் காண முடியவில்லையே” என்று கூப்பிடும். அது தேவனுடைய வார்த்தையின்படியே தான் வரும். தேவன் அதை அளித்து அதை நீங்கள் காணும் போது, இலவசமாக அதை அளியுங்கள் ; ஏதோ ஒரு பெரிய கன்வென்ஷன் கூட்டத்தை நடத்த, 'எனக்கு இவ்வளவு ஆயிரம் டாலர்கள் தருவீர்களென்று உறுதியளித்தால் தான் நான் வருவேன்“ என்றல்ல. ஆனால் இலவசமாக ”அது டிம்புக்ட்டூ (Timbuktu) (ஆப்பிரிக்காவில் சஹாரா பாலைவனம் அருகில் இருக்கும் ஒரு இடம் - தமிழாக்கி யோன்) ஆனாலும் அல்லது எங்கிருந்தாலும் சரி, தேவனே எங்கெல்லாம் நான் விதையை விதைக்க வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ அங்கெல்லாம் சென்று இலவசமாக இதை நான் அளிப்பேன்.“ - அல்லேலூயா. 166இயேசு “சாலோமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அதைப் போன்றாகிலும் உடுத்தியிருந்த தில்லை ” என்று கூறினார். “லீலிப்புஷ்பத்தை (lilies) பாருங்கள்”, அந்த பரிதாபத்திற்குரிய ஆள், தான் பெறவிருக்கின்ற ஒவ்வொன்றிற்காகவும் அது பிரயாசப்பட வேண்டியிருக் கின்றான். பரியாசம் செய்யப்படுகிறான். ஏளனமாக சிரிக்கப்படுகின்றான். மேலும் எல்லா மதசம்பந்தமானவை களாலும் எட்டி உதைத்துத் தள்ளப்படுகின்றான். எல்லா விதமான அவப்பெயர்களாலே அழைக்கப்படுகின்றான். ஆனாலும் அவன் தேவனுடைய வார்த்தையுடன் தரித்து நிற்கின்றான். இரவும் பகலும் பாடுபட்டு உழைக்கின்றான். பள்ளத்தாக்கில் கிடக்கின்றான். ஆம். அந்த லீலி இருக்கின்ற இடத்திலிருந்து நீர்க்கால்களில் ஓரத்திலிருந்து தண்ணீரை எடுக்கின்றது. எதற்காக அது பாடுபடுகின்றது? மற்றவர்களுக்கு அளிக்கும் படியாகத்தான். “ இலவசமாய்ப் பெற்றீர்கள். இலவசமாய்க் கொடுங்கள்,'' ஆம், ஐயா, ஓ, என்னே , எவ்விதமாக அது மதசம்பந்தமான கற்பாறையில் இருக்கின்ற அந்த தூசியில் வளரும்! 167காயீனின் பிள்ளைகள் அறிவுக்கூர்மை கொண்டவர் களாயும் விஞ்ஞானப்பூர்வமாகவும் இருந்தனர். காயீனிற்கு பிறகு வந்த அவனுடைய பிள்ளைகளைக் கவனியுங்கள். அவர்களை ஒரு நிமிடத்திற்குப் பார்ப்போமாக. காயீனின் பிள்ளைகள் எப்படிப்பட்டவர்களாக இருந்தனர்? மகத்தான கட்டடம் கட்டுபவர்கள், புதிய காரியங்களைக் கண்டு பிடிக்கும் கண்டுபிடிப்பாளர்கள், விஞ்ஞானப்பூர்வமாக மகத்தான மனிதர்கள். அவர்கள் அறிவுக்கூர்மையைக் கொண்டிருந்தார்கள். பாருங்கள்? அவர்கள் - அவர்கள் - அவர்கள் பெரிய கட்டிங்களைக் கட்டினார்கள். இரும்புகளை உருவாக்கினார்கள். எல்லாவற்றையும் ஒன்று சேர்ந்து பொருட்களை உருவாக்கினார்கள். அவர்கள் விஞ்ஞானிகளாக சாமர்த்தியசாலிகளாக, கல்வியறிவு கொண்டவர்களாக, பக்தியுள்ளவர்களாக இருந்தார்கள். ஆனால் அந்த அறிவுக்கூர்மை எதைப் பிறப்பித்தது? தேவனுடைய நியாயத்தீர்ப்பு விழுந்த போது அந்த முழு மானிட வர்க்கத்திற்கும் மரணத்தைக் கொண்டு வந்தது. அது சரிதானே? அந்த அறிவாளிகளின் குழு என்ன செய்தது? மரணத்தைப் பிறப்பித்தது. தங்களுடைய அறிவுக்கூர்மையினாலும், சாதுரியத்தாலும் அவர்கள் சாதித்தது என்ன? அவர்கள் மரித்தனர். தேவனுடைய நியாயத்தீர்ப்பில் ஒவ்வொருவரும் மரித்தனர். அது உண்மைதானே? தேவன் அவ்விதமாகக் கூறியுள்ளார். அவர்கள் மிகவும் சாதுரிய முள்ளவர்களாக, அதிகக் கல்வியறிவு உடையவர்களாக, மெருகேற்றப் பட்டவர்களாக, பக்தியுள்ளவர்களாக, மிக அருமையானவர் களாக, சாமார்த்தியசாலிகளாக, கல்வியறிவு பெற்றவர்களாக, தங்களுடைய அறிவுக்கூர்மையில் சார்ந்துக் கொண்டு முழு மானிடவர்க்கத்தையுமே கொன்று போட்டார்கள். 168இப்பொழுதும் அதே காரியத்தைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். தங்களுடைய அணு குண்டுகளைக் கொண்டு இந்த அறிவாளிகளான விஞ்ஞானிகள் செய்யப் போவதெல்லாம் என்னவென்றால் - இந்த முழு மானிட இனத்தையே அழியச் செய்வதுதான். அந்த குண்டுகளை இப்பொழுதே அவர்கள் போட்டுள்ளார்கள். அது உங்கள் கண்கள் எரிந்துப் போகும்படிக்குச் செய்யும். உங்களுக்கு புற்று நோயை மற்றும் எல்லாவற்றையும் அளிக்கும். போதுமான அளவிற்கு அவர்கள் சமுத்திரத்தில் அவைகளைக் கொட்டியுள்ளார்கள். அதை அவர்களால் திரும்பவும் கண்டெடுக்க முடியவில்லை. அக்குண்டுகள் வெடிக்கும் போது முழு உலகத்தையுமே அது அழித்து விடுமென்று அவர்கள் கூறுகின்றனர். மக்களுடைய மாம்சங்கள் அப்படியே எரிந்து விடும். “வானத்தின் மத்தியில் பறக்கின்ற சகல பறவைகளும் சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும்' மற்றும் விழும் அழுகின மாம்சங்கள் மற்றும் எல்லாவற்றையும் பட்சிக்கும்”, என்று வேதாகமம் கூறியுள்ளதில் வியப்பொன்றுமில்லை. அவர்கள் தங்களுடைய அறிவுக்கூர்மையைக் கொண்டு தாங்களே காரியங்களைச் செய்துக்கொள்கிறார்கள். அறிவுக்கூர்மை, புத்தி சாதுரியத்தால்தான் மரணமானது வரும்படியாகச் செய்திருக்கின்றது. எளிமையாயிருங்கள். தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து பிழைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அறிவுக்கூர்மையை எடுத்துக் கொள்வீர்களானால் மரிப்பீர்கள். அது சரி. முடிவு சமயத்தில் அறுவடையில் அவர்கள் அழிந்து போவார்கள். 169ஆம். ஆபேலில் பிள்ளைகள் எளிமையானவர்களாய், விவசாயிகளாக, ஆட்டிடையர்களாக (மேய்ப்பர்கள், அதை நீங்கள் அறிவீர்கள்), ஆட்டிடையர்களாக, விவசாயிகளாக, எளிமையானவர்களாக இருந்து தாங்கள் கூரறிவுத் திறம் வாய்ந்தவர்கள் என்று அவர்கள் உரிமை கோரவில்லை. ஆனால் அவர்கள் வார்தையோடு அப்படியே தரித்திருந் தார்கள். கடைசிக் காலத்தில் அவர்கள் பிறப்பித்தது என்ன? ஒரு தீர்க்கதரிசியைப் பிறப்பித்துள்ளார்கள். எதற்காக ஒரு தீர்க்தரிசியை பிறப்பித்துள்ளார்கள்? கடைசி கால அடையாளங் களுக்காக. நோவா அந்த வாசலில் நிற்கையில், பேழையைச் செய்து கொண்டு “மழை பெய்யப்போகின்றது” என்று கூறினான். அவன் அதிதீவிர மத பக்தி வைராக்கியம் கொண்டவன் என்றழைக்கப்பட்டான். ஆனாலும் அவன் ஒரு தீர்க்கதரிசியாவான். ஆமென்! அவன் என்ன செய்தான்? விசுவாசித்தவர்களுக்கும் தப்பிக்க விரும்பியவர்களுக்கும் அவன் இரட்சிப்பைக் கொண்டு வந்தான். விசுவாசத்தில் நம்பிக்கை கொண்டிருந்தவர்களைத்தான் அந்த எளிய படிப்பறிவு இல்லாத இனமானது பிறப்பித்தது. மற்றவர்கள் அறிவில் நம்பிக்கை வைத்து முழு மானிட வர்க்கத்திற்கு மரணத்தை கொண்டு வந்தனர். எளியவர்கள் விசுவாசத்தைக் கொண்டு என்ன செய்தார்கள்? முடிவின் சமயமானது சமீபித்திருக்கிறது என்றதான அடையாளத்தை அளித்த ஒரு கர்த்தருடைய தீர்க்கதரிசியை, இரட்சிப்பை பிறப்பித்தனர். கல்வியறிவு பெற்றவர்கள் அதை விசுவாசிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கோபத்தோடே தங்கள் மூக்கை இழுத்து உறுமலொளி எழுப்பி “எங்கிருந்து மழை வரும்? அங்கே மேலே தண்ணீர் ஏதாவது உள்ளதா என்று விஞ்ஞானப்பூர்வமாக எனக்கு நிரூபியுங்கள் பார்க்கலாம்”, என்று உறுமி அப்பாலே நடந்து சென்று விடுவார்கள். அந்த விஞ்ஞானிகள், கூரறிவுத்திறம் வாய்ந்த கூட்டத்தினர், தேவன் இல்லையென்று விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முயற்சி செய்கின்றனர். 170அக்கினி ஸ்தம்ப புகைப்படமானது எடுக்கப்பட்ட பொழுது, அது அவர்களை நிலைதடுமாறச் செய்தது. அவர்களால் அதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. “புகைப்படக் கருவியின் கண்ணாடியில் பட்டிருக்கின்ற ஏதோ ஒரு வெளிச்சம்” என்றனர். அவர்களுடைய சொந்த விஞ்ஞானக் கருவியான புகைப்படக்கருவி காமிராதான் அந்த புகைப்படத்தை எடுத்தது. ஜார்ஜ் லேசி இவ்விதமாகக் கூறினார். “ஐயா, இந்த புகைப்படக் கருவி உளவியலைப் புகைப்படமாக எடுக்காது. அந்த ஒளி அங்கு இருந்ததால் தான் அது புகைப்படக் கருவியின் கண்ணாடியில் பதிந்தது. அது என்னவென்று என்னால் உங்களுக்குக் கூற முடியாது. ஆனால் அது அங்கு இருந்தது. இந்த அறிக்கைக்கு என் பெயரை எழுதி என் கையொப்பத்தை நான் இடுகிறேன்” என்றார். அவர் கையொப்பமிட்டிருக்கிறார். அதன் பிரதியை நீங்களே வைத்திருக்கிறீர்கள். ஆம், ஐயா, அந்தப் புகைப்படம் அமெரிக்க காவல் துறையான FBIல் இருக்கின்றது. பாருங்கள்? 171இந்தக் கடைசி நாளில் நம்முடைய தேவன் எல்லா காரியங்களைக் கொண்டும் தம்மை வெளிப்படுத்திக் காண்பிக்கிறார். ஆனால் தாம் காண்பிப்பதை இந்த உலகத்தினால் ஜீரணிக்க முடிவதில்லை. அறிவுக்கூர்மையும் ஞானமும் வளர்ந்து கொண்டே போகின்றது. பறவைகளைப் போல - ஜெட் விமானம் போல் மேலே சீறிக்கொண்டே செல்கின்றது. தண்ணீருக்குள்ளும் யுத்தம், மேலும் எல்லா விதமான அழிவு மற்றும் பாவத்தில் வாழ்ந்து கொண்டு தங்களை காத்துக் கொள்ள ஏதோ ஒன்றைக் கட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு காரியம் மாத்திரமே இருக்கின்றது. தேவனுடைய நீதியானது பேழையின் கதவண்டை நின்றுக் கொண்டிருக்கின்றது. 172வாசல் யார்? நான் என் பொருளில் வாசித்தபடி, “ஆட்டுத் தொழுவத்துக்கு நான் வாசல்'' என்று கிறிஸ்து கூறியுள்ளார். ”என் ஆடுகள் என் சத்தத்துக்குச் செவி கொடுக்கிறது. அந்நியனை அவை பின் தொடராது. “நீங்கள் அங்கே இருக்கின்ற அந்த ஸ்தாபனங்களில் ஏதாவதொன்றில் நெளிந்து கொண்டிருக்கமாட்டீர்கள். உலகம் எவ்வளவு நிச்சயமாக இருக்கின்றதோ அவ்வளவு நிச்சயமாக அவன் வெளியே வருவான். ”தொழுவத்துக்குள்ளிலிருந்து அவர்களை நான் எடுத்து அவர்களை நான் வழிநடத்துவேன். நான் அவர்களுக்கு முன் செல்வேன்.'' ஆமென்! “அது நான் என்று அவர்கள் அறிந்துகொள்ளுவார்கள். என்னைப் போல வேறே யாரும் செய்ய முடியாது,” என்று அவர் கூறுவார். ஆமென்! 'ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்தவர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடன் தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்'. அது சரியே. அது நிக்கொதேமுவின் அறிக்கையாகும். அதுவே தான். 173அந்த எளிய சிறிய சந்ததியானது ஒரு தீர்க்கதரிசியைப் பிறப்பித்தது. அந்தத் தீர்க்கதரிசி ஆபேலுடைய பிள்ளைகளின் கடைசி நாட்களிலே, கடைசி நாளின் அடையாளங்களைக் காண்பித்து எச்சரிக்கையும் விடுத்த ஒரு தீர்க்கதரிசியை பிறப்பித்தார். இன்றைக்கும் அதே விதமாகத்தான் உள்ளதென்று நான் நினைக்கின்றேன். “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்”. ஆகவே பாருங்கள். அறிவுக்கூர்மையின் சூழலிலே ஜீவ வார்த்தை விதையானது வளர முடியாது. அதனால் வளரவே முடியாது. 174மோசேயும் யோசுவாவும் வார்த்தையில் விசுவாசம் கொண்டிருந்தனர். மற்றவர்களோ நடனமாடவும், பெண் களின் ஆடைகளை களையவும் விருப்பங்கொண்டனர். கோராகு அதைச் செய்தான். என்ன? தன்னுடைய எகிப்திய அறிவுக்கூர்மையால் அதைச் செய்தான். மோசேக்கு அது தேவையில்லாதிருந்தது. இன்றைக்கு உள்ள கோராகுகளை பாருங்கள். சுலபமான வழிகளைத் தெரிந்து கொள்கிறார்கள். நடனமாடுகிறார்கள். முழு இரவு கேளிக்கை விருந்துகளுக்குச் செல்கிறார்கள். பெண்கள் தங்கள் தலைமயிர்களைக் கத்தரித்துக் கொள்கிறார்கள். குட்டை உடைகளை அணிகிறார்கள். எந்தவிதமான காரியத்தையும் செய்கிறார்கள். ''அதற்கும் இதற்கும் எந்த ஒரு வித்தியாசமுமில்லை. அவ்விதம் செய்வது சரி தான்,“ என்கிறார்கள். அது சரியானதுதானா! அது சரி அல்ல என்று வார்த்தைக் கூறுகிறது. ஆம். அதே காரியம் தான் பாருங்கள்? 175அவர்களெல்லோரும் ஒவ்வொருவரும் ஞானஸ்நான் பெற்றிருந்தாலும், கோராகும் மற்ற எல்லோரும் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் ... பக்தி பூர்வமானதை மறுபடியுமாக நிழலாக அது காண்பிக்கிறது. “என்ன, அவர்கள் ஞானஸ்நானம் எடுத்தவர்களா?” என்று நீங்கள் கேட்கலாம். 1 கொரிந்தியர் 10 : 1 மற்றும் 2, அதை சற்று வாசித்துப் பாருங்கள். நாம் . . . நேரம் கடந்து கொண்டிருக்கின்றது என்றறிவேன். இரவு ஆகாரம் சூடாக இருக்காது. கர்த்தர் நமக்கு போஷித்துக் கொண்டிருப் பாரானால் இந்த இரவு ஆகாரம் இன்னும் சற்று நீண்டு வரும். பாருங்கள்? 1 கொரிந்தியர் 10, இப்பொழுது சற்று கவனியுங்கள். 1 கொரிந்தியர் 10 : 1 லிருந்து 2 வரை, நான் அதை எடுத்து விட்டேன். (இல்லை, நான் II கொரிந்தியரை எடுத்து விட்டேன்) 1 கொரிந்தியர் 10 : 1-2. இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறிய வேண்டு மென்றிருக்கிறேனென்றால், நம்முடைய பிதாக்களெல்லோரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள். எல்லோரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்து வந்தார்கள். எல்லோரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள். 176கோராகு தான் ... மற்றவர்கள் பெற்றிருந்த ஞானஸ் நானத்தைத்தான் அவனும் பெற்றிருந்தான். ஆனால் அவன் செய்ய விரும்பினது என்ன? பெண்களை நடனமாட வைத்து, சிறிது மதுவை அளித்து சிறிது நேரம் களிகூரச்செய்து, ஆடைகளைக் களையச்செய்து விபச்சாரம் செய்ய வைத்தான். அவர்கள் அவ்விதம் செய்தனர் என்று வேதாகமம் கூறுகின்றது. அவர்கள் அந்தப் பெண்களை எடுத்து அவர்களுடைய ஆடைகளை அவிழ்த்துப் போட்டு அவர்களை நடனமாடச் செய்தார்கள். அப்பொழுது மோசே அவர்கள் மேல் கோபங் கொண்டான். அந்த சமயத்தை நீங்கள் நினைவு கூறுகிறீர்களா? ஏன்? அறிவுக்கூர்மையைக் கொண்டிருந்த டாக்டர் கோராகைத் தங்களுடன் கொண்டிருந்தார்கள். “நான் உங்களை எகிப்துக்குத் திரும்பக் கொண்டு செல்வேன்” என்று அவன் கூறினான். அவர்களும் கூட அங்கேதான் சென்றிருப்பார்கள். ஆனால், சகோதரனே, மோசே கீழே வந்த போது வித்தியாசமாக இருந்தது! அவனும் யோசுவாவும் அந்த வார்த்தையோடே தரித்து நின்றார்கள். தேவன் ஒரு வாக்குத் தத்தத்தை அளித்திருந்தார். அவர்கள் அதனோடேதரித்திருந்தார்கள். அதுசரி. கோராகுவின் அறிவுக் கூர்மையைக் கேட்டு, மற்றவர்கள் நடனமாடவும், ஆடைகளைக் களையவும் விரும்பினார்கள். அவர்கள் எல்லோரும் ஒரே ஞானஸ்நானதைப் பெற்றிருந் தார்கள் என்பதைக் கவனியுங்கள். 177இஸ்ரவேலும் மோவாபும், ஓ, நான் ஒரு முறை அதைக் குறித்து பேசியுள்ளேன். நான் அதைக் குறித்து பேசவில்லை. நான் துரிதமாக முடிக்க வேண்டும். சரி. இஸ்ரவேல் மற்றும் மோவாப். அங்கே எப்படி இருந்ததென்று உங்களுக்குத் தெரியும். ஒன்று அறிவுக்கூர்மையுடனும், மகத்தான பெரிய ஸ்தாபனங்களையும் உடையதாக இருந்தது. மற்றவையோ ஒரு சிறிது பொது சபையாக இருந்தது. 178பிறகு மற்றொரு நாள் .... (நாம் முடிக்கும் முன்பாக இதை நாம் பார்ப்போமாக.) ஒரு நாள் இந்த மகத்தான மூலாதாரங்கள் - அல்லது வல்லமைகள் தேவனுடைய வார்த்தையின் பேரில் ஒரு பலப்பரீட்சையில் சந்தித்தன. இப்பொழுது நாம் அதன் உச்சக்கட்டத்தைப் பார்ப்போமாக. நாம் சற்று பின்னால் செல்வோம் ; என்னால் ஒரு டஜன் (12) உதாரணங்களை ..... என்னால் இங்கே ஒரு வாரத்திற்கு நின்று கொண்டு அதன் பேரில் அதன் முதல் கட்ட நிலையிலே பேசிக்கொண்டேயிருக்க முடியும். நான் எதைக்குறித்து பேசிக் கொண்டிருக்கிறேனோ, அதை சரியாக என்னால் நிரூபிக்கவும் முடியும். இதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? ஒரு நாளில் அது ஒரு பலப்பரீட்சைக்கு வந்தது. அறிவுக்கூர்மையும் விசுவாசமும் ஒரு பலப்பரீட்சைக்கு வந்தது. இயேசுவும் சாத்தானும் சந்தித்தனர். அது சரியே. இயேசுவும் சாத்தானும் சந்தித்தனர். அந்த இரண்டு பெரிய சக்திகளான அறிவுக்கூர்மையும் மற்றும் ஞானமும் ஒரு பலப்பரீட்சைக்கு வந்தன. பாருங்கள்? இப்பொழுது, அவர்கள் இருவரும் வார்த்தையை உபயோகித்தனர். அது சரியா சகோதரனே? (ஓ, சகோதரனே, இது என்னை மிகவுமாக உற்சாகப்படுத்துகின்றது! இதை இப்பொழுது தவற விட வேண்டாம். ஓ “தேவனே என் இருதயத்தை திறந்தருளும்” - நான் கூறுகிறேன்). அவர்கள் இருவரும் தேவனுடைய வார்த்தையை, இதே வேதாகமத்தை உபயோகித்தனர். ஆனால் வார்தையானது மனமாற்றப்படாத (unconverted) வாய்க்காலிலே கிரியை செய்யவே செய்யாது. அது நிச்சயமாகக் கிரியைச் செய்யாது. நிச்சயமாகச் செய்யாது. அவர்கள் இருவரும் தேவனுடைய வார்த்தையை உபயோகித்தனர். ஆனால் சாத்தான் தன்னுடைய தலையில் உள்ள மூளை அறிவைக்கொண்டு வார்த்தையை உபயோகித்தான் (பாருங்கள்?), மூளை அறிவை வைத்து காரியத்தைச் செய்தான். அப்பொழுது வார்த்தைக் கிரியை செய்யவில்லை. 179இங்கே நான் ஒரு வேத வாக்கியத்தை வைத்திருக்கிறேன். நான் அதை வாசிக்கலாமா. உங்களுக்கு ஆட்சேபணையா? எபிரெயர் 4வது அதிகாரத்தைச் சீக்கிரமாக எடுப்போமாக. ஒரு நிமிடத்திற்கு மாத்திரம். இதை நான் வாசிக்க விரும்புகிறேன். இது சரியாக இந்த நேரத்திற்கு எனக்கு சரியான வசனமாகத் தோன்றுகிறது. எபிரெயர் 4, நாம் எபிரெயர் 4 அதிகாரத்திற்கு திருப்பி 1 லிருந்து 2 வரை பார்ப்போம். ஆனபடியினாலே அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண் டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப் போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக் கடவோம். ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போல நமக்கும் அறிவிக்கப்பட்டது (அறிவு கூர்மை கொண்டா? ஞானத்தைக் கொண்டா?)... விசுவாசமில்லாமல் ....... (எதினால், விசுவாசமில்லாததால் தானே?) . . . கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை. 180முழு வார்த்தையுமே நீங்கள் கொண்டிருக்கலாம் : A முதல் Z வரையிலும், துவக்கத்திலிருந்து முடிவு வரையிலும் நீங்கள் வார்த்தையை முழுவதுமாக அறிந்திருக்கலாம். ஆனாலும் அது உங்களுக்குக் கிரியை நடப்பிக்காது. மனிதன் அந்த வார்த்தையை எடுத்து அதைக் கிரியை செய்ய வைப்பதை நீங்கள் எப்பொழுதாவது கண்டிருக்கிறீர்களா? “சகோதரனே, தேவனுக்கு மகிமை ...” என்று கூறினாலும் கூட, அது கிரியைச் செய்யவே செய்யாது. நீங்கள் வார்த்தையோடு கோமாளித்தனம் செய்து விளையாடிக் கொண்டிருக்க முடியாது! முடியாது! முடியாது! முடியாது! நீ என்ன சாட்சி கொடுத்தாலும் சரி அது ஒரு பொருட்டல்ல. வார்த்தையே தனக்குத் தானே சாட்சி கொடுக்கும். நீ என்ன உரிமை கோரினாலும் சரி, வார்த்தை சாட்சி கொடுக்கின்றது. அது சரியே. இப்பொழுது, சாத்தான் வார்த்தையை அறிந்திருந்தான். அவன் வார்த்தையை A முதல் Z வரைக்கும், துவக்கம் முதல் முடிவு வரைக்கும் மிக நன்றாக அறிந்திருந்தான். ஆம், அதை நீங்கள் அறிவீர்களா? சாத்தான் பட்டத்தைக் கொண்டிருக் கின்றான் என்றால், அவன் பெற்றிருக்கும் பட்டங்கள் எழுதப்படுவதற்கு நான்கு முதல் ஐந்து பக்கங்கள் வரை தேவைப்படும். அந்த அளவிற்கு அவன் பட்டங்களைப் பெற்றிருப்பான் என்று நான் கற்பனை செய்து பார்க்கின்றேன். டாக்டர் பட்டம், சங்கை , மூப்பர். பி.எச்.டி. L.L.Q.D., மற்றும் எல்லா எழுத்துகளிலும், எல்லா விதங்களிலான பட்டங்களை சாத்தான் கொண்டிருப்பான். வேதாகமத்தின் பேரில் அவனுடைய பட்டப்படிப்புகள் இருக்கும். வார்த்தையிலுள்ள ஒவ்வொரு எழுத்தையும் அவனுக்குத் தெரியும். நிச்சயமாக அவனுக்குத் தெரியும். பாருங்கள்? 181ஆகவே சாத்தான், “இதோ, எனக்கு வார்த்தை நன்றாகத் தெரியும்” என்று கூறினான். அவன் ஏவாளிடம் வந்த போது வார்த்தையை அறிந்திருந்தான் என்பதை நான் அறிவேன். ஆகவே அவன் வார்த்தையைத் தன்னுடைய மூளை அறிவினாலே நன்றாக அறிந்திருந்தான். ஆனால் அது கிரியை செய்யாது .. இயேசுவோ தம்முடைய சொந்த முன் குறிக்கப்பட்ட ஜீவனுக்குள்ளாக உள்ள தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாட்டினால் வார்த்தையை விசுவாசத்தினால் அறிந்திருந்தார். மகிமை! இது உங்கள் இருதயத்திற்குள்ளாக செல்கின்றது என்று நான் நம்புகிறேன். தாம் யாராயிருக்கிறோம் என்று இயேசு அறிந்திருந்தார். சாத்தானோ அவரைக்குறித்து ஆச்சரியமுற்றுக் கொண்டிருந் தான். தேவன் தாமே அவருக்குள்ளாக வெளிப்பட்ட, முன் குறிக்கப்பட்ட தேவனுடைய சிருஷ்டியாக அவர் இருந்தார் என்பதை அவர் அறிந்திருந்தார். கிரியைகளைச் செய்தது அவரே தான். பிதாவானவர் அவருக்குள்ளாக வாசம் செய்தார். ஆமென்! பிசாசு தன்னுடைய எல்லா வேதாகம கலாசாலை அறிவுடனே பறக்கட்டும். 182இயேசு ... சாத்தான் அதை அறிந்திருந்தான். அவன் வார்த்தையை அறிந்திருந்தான். அவனால் வேத வசனத்தை மேற்கோள் காட்ட முடியும். அவன் ஒரு நடமாடும் வேதாகமத்தைப் போல வேத வசனத்தை அவனால் மேற்கோள் காட்ட முடியும். பாருங்கள். (சகோதரன் பிரன்ஹாம் தன்னுடைய விரல்களை தொடர்ந்து சொடுக்குகின்றார் - ஆசி) ஆனால் இயேசு அப்படியே தரித்திருந்தார். ஏனென்றால் தாம் எந்த ஸ்தானத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அவர் அறிந்திருந்தார். தாம் முன் குறிக்கப்பட்டவரென்றும் உலகத்தோற்றத்துக்கு முன்னர் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் என்பதை அவர் அறிந்திருந்தார். தாம் தான் அந்த நபர் என்பதை அவர் அறிந்திருந்தார். பாருங்கள்? அது கிரியைச் செய்தது நிச்சயமாக! சாத்தான் அறிவுக்கூர்மையைக் கொண்டு வார்த்தையை அறிந்திருந்தான். அதனால் அது தோற்றுப் போனது. இயேசு மேற்கோள் காட்டின அதே வார்த்தையை அதே வேதாகமத்தை அவனும் மேற்கோளாகக் காட்டினான். அவன் சங்கீதத்திலிருந்து “உன்னைக்காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உம்மை ஏந்திக்கெண்டு போவார்கள்” என்று சாத்தான் கூறினான். அதற்கு அவர், “என்றும் எழுதியிருக்கிறதே” என்றார். பாருங்கள்? 183சாத்தான் அதை அறிவினால் அறிந்திருந்தான். இயேசு அதை அனுபவத்தின் மூலமாக அறிந்திருந்தார். அவர் அதை வெளிப்பாட்டின் மூலமாக அறிந்திருந்தார். உலகத்திற்குள் வரவிருந்த தேவனுடைய குமாரன் தாம் தான் என்பதை அவர் அறிந்திருந்தார். தம்முடைய ஸ்தானத்தை அவர் அறிந்திருந்தார். அந்த நோக்கத்திற்காகத்தான் அவர் இந்த உலகத்தில் பிறந்துள்ளார் என்பதை அவர் அறிந்திருந்தார். தாம் யாராக இருக்கின்றார் என்பதை அவர் அறிந்திருந்த காரணத்தால்தான் தேவனுடைய வார்த்தை தம் மூலமாக கிரியை செய்கின்றது என்பதையும் அவர் அறிந்திருந்தார். மகிமை! (இதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா) தாம் யார் என்பதை அவர் அறிந்திருந்தார் ! அதன் பின்பாக இருந்த சாத்தானும் தான் யார் என்பதை அறிந்திருந்தான். வார்த்தை தேவனாயிருந்தபடியால், அறிவுக்கூர்மையினால் வார்த்தையை அவன் அறிந்திருந்தாலும் வார்த்தையுடன் அவனுக்கு எந்த அலுவலும் கிடையாது என்பதையும் அவன் அறிந்திருந்தான். உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா? 184இப்பொழுது, இயேசுதாம் யார் என்பதை அறிந்திருந்தாலும் .... அந்த சமயத்தின் முன் குறிக்கப்பட்ட சிருஷ்டியாக அவர் இருந்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சரீரமாகிய இயேசு தாம் தான் முன் குறிக்கப்பட்ட வார்த்தை என்றும், பாவத்திற்கான பலியை அந்நாளிலே நிற்கும்படியான தேவனுடைய நபர் தாம் என்றும் அவர் அறிந்திருந்தார். அவர் தம்முடைய சத்துருவையும் அறிந்திருந்தார் (இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் நான் பிரசங்கித்த விதமாக), தம்முடைய சத்துருவை அவர் அறிந்திருந்தார். தாம் யார் என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆகவே இந்த இரண்டு சக்திகளான அறிவுக்கூர்மையும் விசுவாசமும் நேருக்கு நேர் நின்றன. இயேசு தாம் யாராக இருக்கிறோம் என்பதை அறிந்திருந்தார். இயேசு அறிந்திருந்த விதமாக சாத்தானும் வேதாகமத்தை அறிந்திருந்தான். ஆனால் வேத அறிவு சாத்தானுக்கு கிரியை செய்யாது. பாருங்கள்? நீ எவ்வளவு தான் வேத அறிவைக் கொண்டிருந்தாலும் சரி. அது கிரியை செய்யவே செய்யாது. இப்பொழுது இதை இங்கேயிருக்கின்ற பெரிய ஸ்தாபனங்கள் சிலவற்றுடன் பாருங்கள். அதைக் குறித்து சற்று சிந்தியுங்கள். அவர்கள், “ஆம் நாங்கள் வார்த்தையைக் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகின்றனர். அது கிரியை செய்கிறதை நான் காணட்டும். உங்கள் கிரியைகளை எனக்குக் காண்பியுங்கள். உங்கள் விசுவாசத்தை உடையவர்களாக இல்லாமல் உங்கள் கிரியைகளை எனக்கு காண்பியுங்கள் பார்க்கலாம். என்னுடைய விசுவாசத்தைக் கொண்டு நான் என்னுடைய கிரியைகளை நான் காண்பிக்கிறேன் பாருங்கள்? வார்த்தை என்ன கூறியுள்ளது என்று பாருங்கள். 185ஒரு விதை விதைக்கப்பட்டு அவ்விதை தன்னுடைய வகை எது என்று வெளிப்படுத்தாவிடில் அவ்விதமான ஒரு விதையை உங்களால் விதைக்கக்கூடுமா? வளர்ந்து தானியத்தைப் பிறப்பிக்காத ஒரு செடியை நீங்கள் நடுவீர்களா? உருளைக்கிழங்கு செடியாக இருந்து உருளைக் கிழங்கை மாத்திரம் பிறப்பிக்கின்ற செடியைத்தானே நீங்கள் நடுவீர்கள்? அப்படி அல்லாதிருக்கின்ற ஒரு செடியை நீங்கள் நடுவீர்களா? ஒரு குறிப்பிட்ட விதமான மலர் செடியாக ஒரு செடி இல்லாவிடில் அந்தச் செடியை நீங்கள் நடுவீர்களா? உங்களுடைய இருதயத்திலே தேவனுடைய விதை நீங்கள் விதைத்திருப்பீர்களென்றால் அது தேவனுடையதைத்தான் பிறப்பிக்கும். “என்னை விசுவாசிக்கிறவன் என்னுடைய கிரியைகளைச் செய்வான்” என்று இயேசு கூறினார். அவன் வார்த்தையை விசுவாசிக்கின்றான் என்று கூறி இவைகள் அவனைப் பின் தொடரவில்லை என்றால், அவன் ஒரு பொய்யனாவான், “நான் என் பிதாவினிடத்திற்கு போகிற படியால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வான். ஏனென்றால் அது மிக பலமுள்ளதாக இருக்கின்றது. அந்த விதையானது வழுக்குகின்ற ஒரு இடத்தின் மேல் விழுந்து ஒரு பாறையின் மேல் விழுந்து நிற்காது. அது நேராக ஒரு பள்ளத்தாக்கில் விழும். காற்று அதை அடித்துச் சென்று விடாது. பறவைகள் அதைத் தின்று விட முடியாது. அவ்விதையானது வளரும். அதை உங்கள் உள்ளத்திற்குள்ளாக (heart) வையுங்கள். 186“உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் ((heart) இருக்கின்றது (ஆதலால் எந்த ஒரு ஸ்தாபனமும் அதை எடுத்துப் போட முடியாது. பறவைகளால் அதை எடுக்க முடியாது ) ; நான் அதை என் உள்ளத்திற்குள் வைத்துள்ளேன். இரவும் பகலும் அதை நான் தியானிக்கிறேன். என் கட்டில்கள் மேல் அதை வைத்துள்ளேன். எல்லாவிடங்களிலும் அதை நான் கொண்டிருக்கிறேன். அதை நான் என் விரல்களில் மாட்டியுள்ளேன். அவைகள்” ..... என்று தாவீது கூறினான். ''உங்கள் பெயர்களை என் உள்ளங்கையில் வைத்துள்ளேன் என்று இயேசு கூறினார். ஆகவே எப்படி - எப்படி அது மறந்து போகப்படும்“. மறக்கப்பட முடியாது. சரி. 187தாம் யார் என்றும், தாம் முன் குறிக்கப்பட்ட ஒரு சிருஷ்டி என்பதை அறிந்து அதன் பேரில் உள்ள விசுவாசத்தைக் கொண்டு இயேசு சாத்தானைத் தோற்கடித்தாரென்றால், இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் முன்குறிக்கப்பட்ட மணவாட்டியைக் குறித்தென்ன? (நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?) மணவாட்டி முன்குறிக்கப்பட்டிருக்கின்றாள் என்பதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? இப்போதையை முன் குறிக்கப்பட்ட கிறிஸ்துவின் மணவாட்டி, சபை, வார்த்தை, வித்து மற்றும் எல்லா காரியங்களுடனும் சரியாக இப்பொழுது சபையை அதற்குள் வைப்பாரென்றும் தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ளார். அது அப்பொழுது அதற்குள் இருக்கின்றது. எல்லா காரியமும் ஒழுங்கிற்குள் உள்ளது. பரிசுத்த ஆவி அளிக்கப்பட்டுள்ளது. விதை விதைக்கப்பட்டுள்ளது ; சாயங்கால வெளிச்சங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. இயேசு வாக்களிதிருந்த சோதோமின் அடையாளம் மற்றும் மல்கியா 4, முன் குறிக்கப்பட்ட சபை இங்கே இருக்கின்றது. ஓ, பிசாசு ... 188ஜீவனுள்ள தேவனுடைய சபையே மற்றும் ஒலி நாடாக்களைக் கேட்பவர்களே, நீங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிகின்றதா? நீங்கள் தேவனால் அழைக்கப்பட்டவர்கள் என்றும் பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயங்களில் அரசாளுகிறார் என்றும் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் உங்களுக்கு உண்மையான ஒன்று என்றும் உங்களுக்குத் தெரியுமா? ஓ, சகோதரனே, எப்படி சாத்தானால் அதற்கு எதிராக நிற்க முடியும்? அது வளர்வதை எப்படி அவனால் தடுக்க முடியும்? அடையாளங்கள் பின் தொடருவதை அவனால் எப்படித் தடுக்க முடியும்? என்ன, அவர்களை நீங்கள் சிறையில் போடலாம். அவர்கள் ..... உங்களால் ..... அவர்களுக்கு நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அது ஒரு பொருட்டே அல்ல. ஏற்கனவே அவ்விதம் செய்து பார்த்தாயிற்று. அவர்கள் சிறையில் வாடினார்கள். அவர்கள் சிங்கங்களுக்கு இரையாக கொடுக்கப்பட்டார்கள். வாளால் அறுப்புண்டார்கள்; துண்டு துண்டாக எரிக்கப்பட்டார்கள். முன் குறிக்கப் பட்டிருக்கின்ற ஒரு சபையை உங்களால் கொல்லவே முடியாது (சரியே!) “எவர்களை அவர் முன்னறிந்தாரோ (இயேசுவை அவர் அறிந்தது போல), அவர்களை அழைத்து மிருக்கிறார், எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார் ; எவர்களை நீதிமான் களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். முன் குறித்திருக்கிறார்”. ஆகவே இப்பொழுது இந்தக் கடைசி நாட்களில் ஒவ்வொரு விதையும் விதைக்கப்பட்டிருக்கையில், ஒவ்வொன்றும் ஒழுங்கில் இருக்கையில் (உலகம் அதன் ஒழுங்கில் உள்ளது. நேரம் அமைக்கப்பட்டிருக்கிறது. சபை, வித்து, சாயங்கால வெளிச்சம் அதன் ஒழுங்கில் உள்ளது) : அவர் கூறின அடையாளங்கள், “சோதோமின் நாட்களில் நடந்தது போல . . .'' (தேவனுடைய தூதன், பரிசுத்த ஆவியானவர் கீழே வந்து அன்றைக்கு' செய்த அதே அடையாளங்களை இன்றும் செய்கின்றார்) ; கடைசி நாளுக்கென தாம் அனுப்புவதாக வாக்களித்திருந்த மல்கியா 4; அவை எல்லாவற்றையும் சரியாக இங்கே இருப்பதை நாமெல்லாரும் காண்கிறோமல்லவா? எங்கே? ஆமென், ஆமென், ஆமென், ஆமென், ஆமென். நீங்கள் அவரை விசுவாசிக்கின்றீர்களா? ஆமென்! (நிச்சயமாக!) சரியாக இங்கே கடைசி நாட்களில், தாம் எங்கே நிற்கிறோமென்றும், விதையினால் விதைக்கப்பட்டோம் என்றும், சபையில் பரிசுத்த ஆவி உள்ளதென்றும் அறிந்திருக்கின்ற ஒரு முன் குறிக்கப்பட்ட சபையானது இருக்கின்றது. சாத்தானே, ஜாக்கிரதையாயிரு 189என்ன சம்பவித்தது? (இப்பொழுது ஒரு நிமிடத்திற்கு பார்ப்போம்) என்ன சம்பவித்தது? சபைக்கென வாக்குத் தத்தம் செய்யப்பட்டிருக்கின்ற ஒவ்வொன்றும், மல்கியா 4ன் வாக்குத்தத்தங்களும் கூட ... சாத்தான் இயேசுவை சந்தித்த போது என்ன செய்தான்? அவன், “எனக்கும் வார்த்தை நன்றாகத் தெரியும்” என்று தான் கொண்டிருந்த எல்லா மதசம்பந்தமான சக்தியோடும் அவரை நோக்கி நேராகப் பறந்து பாய்ந்தான். அவன் கொண்டிருந்த ஸ்தாபன தூசியுடன் பாய்ந்தான். அந்தத் தூசியைத் தான் நாம் அவன் மேலேயே வீசியெறிந்தோம். அதில் எந்த ஒரு ஜீவனும் கிடையாது. அவன் பறந்து மோதினானா? எந்த வேகத்தில் பாய்ந்தானோ அதைவிட அதிகமான வேகத்தில் அவன் திரும்பி வந்து விழுந்தான். ஏன்? அவன் கோடிக்கணக்கான மின் சக்தி வல்லமை பாய்ந்து கொண்டிருந்த அந்த மின் கம்பியின் மீது மோதினான். தன்னுடைய இறகுகளையெல்லாம் பொசுக்கிக் கொண்டான். அவரை விட்டு அப்பாலே வந்து விழுந்தான்! அவரை விட்டு வெளியே வந்தான். ஏனெனில் இயேசுவுக்குள் (மின்கம்பியில்) மின்சாரசக்தி (Volt) பாய்ந்துக் கொண்டிருந்தது. 190சாத்தானும் ஒரு மின்சாரக் கம்பியைக் கொண்டிருக் கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த செம்புக் கம்பிகள் எவ்வளவு அழகாகக் காணப்பட்டாலும் அதில் ஜீவன் இல்லை . அது மரித்திருக்கிறது. அந்த மின்சாரக் கம்பி வேலை செய்யாது. அதே மின்சாரக் கம்பி. ஒரு கம்பி மின்சார சக்தியில் இணைக்கப்பட்டு வல்லமையுடையதாக இருக்கிறது. மற்றொரு கம்பியோ மின்சார இணைப்பே இல்லாமல் இருக்கின்றது. அவ்வளவு தான். அதன் காரணமாகத்தான் அது ஒரு முன் குறிக்கப்பட்ட பாத்திரத்தில் அது கிரியை செய்கிறது. அதன் காரணமாகத்தான் வார்த்தை எங்கே இணைக்கப்பட்டிருக்கின்றதோ அங்கே கிரியை செய்கின்றது. எங்கே அது இணைக்கப்பட்டிருக்கின்றது? ஸ்தாபனத்தினோடா? இல்லை ஐயா! அது மரித்துப் போயிருக்கின்ற மின் பொத்தானாகும். தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பலனை மறுதலிக்கின்ற ஒன்றாகும். ஆனால் வார்த்தையோடு இணைக்கப் பட்டிருக்குமானால் அது எப்பொழுதுமே ஒழிந்து போகாது. எந்த நேரத்திலும் அதே அளவிலான மின்சாரத்தையே அது பிறப்பித்துக் கொண்டிருக்கும்? அங்கே தான் அது இருக்கின்றது. மகிமை! ஆமென், ஆமென்! நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நீங்கள் அவருக்குச் சேவை செய்வீர்களா? ஆமென்! நிச்சயமாக, ஏதோ ஒரு ஸ்தாபனத்துக்குள்ளாக இணைக்கப் பட்டிருப்பதல்ல, இங்கே உள்ள மின் ஆக்கப் பொறியியல் (Dynamo) இணைக்கப்பட்டிருங்கள். சகோதரனே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த அதே வார்த்தையில் இணைக்கப்பட்டிருப்பதால் அது கிரியை செய்கிறது. 191மோவாபியரும் கூட இணைக்கப்பட்டிருந்தனர். இஸ்ரவேலும் கூட இணைக்கப்பட்டிருக்கின்றது. மோவாபியர், மரித்துப் போன கோட்பாடுகளையும் ஒரு கள்ள தீர்க்க தரிசையை மாத்திரமே கொண்டிருந்தனர். ஆனால் இஸ்ரவேலரோ அடிக்கப்பட்ட கன்மலை, வெண்கல சர்ப்பம், அக்கினி ஸ்தம்பம் (அல்லேலூயா) மற்றும் ஜீவனுள்ள தேவனுடைய அடையாளங்களை உடையவர்களாயிருந்தனர். அது முற்றிலும் சரி. அது கிரியை செய்தது! ஏன்? விசுவாசத்தின் பேரிலே தான் அது கிரியை செய்தது (ஆம் ஐயா!) அறிவுக்கூர்மையின் பேரிலோ, ஏதோ ஒரு மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளின் பேரிலோ அல்ல. ஆனால் வார்த்தையில் கொண்டிருக்கும் விசுவாசத்தினாலேயே. வார்த்தை தாமே கிரியை நடப்பிக்கின்றது. வார்த்தையிலிருந்து தான் ஜீவன் வருகின்றது. “என் வார்த்தை ஜீவனாயிருக்கிறது”. அந்த மின்சாரம் வார்த்தையின் மூலமாக வருகின்றது. சாத்தான் மிக வேகமாக அதிலிருந்து திரும்பி விழுந்தான். அவனுடைய வேத கலாசாலை தூசியைக் கொண்டு அவன் எடுத்த முயற்சி இயேசுவினிடத்தில் எடுபட வில்லை . சாத்தானுடைய மின்சாரக் கம்பியில் மின்சாரம் இல்லாதிருந்தது. அது மரித்துப் போன கோட்பாடு களாயிருந்தது. அதில் மின்சார சக்தி கிடையாது.... இப்பொழுது, பாருங்கள். அது அதே மின் கம்பியாகும். இயேசு பிதாவின் வார்த்தையை உபயோகித்தார். சாத்தானும் பிதாவின் வார்த்தையை உபயோகித்தான். சாத்தான் சாத்தானாக இருந்தான்; இயேசு தேவனாக இருந்தார். அது தான் வித்தியாசமாகும். அதுதான் உண்மையாகும். ஒன்று கோட்பாடாக இருந்தது. மற்றொன்றோ வார்த்தையாக இருந்தது. ஒன்று உண்மையானதாக இருந்தது. மற்றொன்று பொய்யானதாக இருந்தது. ஒன்று காரியங்களைப் பிறப்பிக் கின்ற ஒன்றாக இருக்கின்றது. மற்றொன்றினால் எதையுமே பிறப்பிக்க முடியாது. உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா? அதே விதமான மின்கம்பிகள், அது முற்றிலும் சரியாகும். அதே மின் கம்பிகள். எபிரேயர் 2, நாம் இப்பொழுது எபிரேயர் 4:2, நாம் அதைப் பார்த்தோம். பாருங்கள்? 192அறிவுக்கூர்மையினாலே ஸ்தாபனங்கள் இவ்விதமாக கூறுகிறது போல, (பாருங்கள்?) ஸ்தாபனங்கள் “மின்சாரத்தின் நாட்கள் கடந்த காலத்திற்குரியது” என்று அறிவுக்கூர்மையைக் கொண்டு கூறுகின்றன. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! நீங்கள் அவருக்குச் சேவை செய்வீர்களா? ஆமென். நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? ஆமென். ஆமென். ஆமென்! நான் அவரை விசுவாசிக்கின்றேன். ஆம், ஐயா, ஆமென் என்றால் “ அப்படியே ஆகக்கடவது.” கர்த்தாவே, இக்காலை என்னுடைய ஜெபம் என்னவென்றால், இருக்கின்ற விசுவாசிகள் ஒவ்வொருவரையும் எடுத்து அவர்களை மின்சாரத்திற்குள்ளாக இழுத்துக்கொள்ளும் என்பதேயாகும். ஓ, அவர்களுக்குள்ளாக ஜீவனை வைத்தருளும். அவர்கள் தாமே தேவனுடைய மகிமையை மெல்லப் பரவ விட்டு பிரகாசிப்பிக்கச் செய்வார்களாக. ஆம், ஐயா, மின்சாரத்தை இயக்குவாராக. 193நான் என்ன விசுவாசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த மகத்தான சபைக்காக, விதையானது விதைக்கப்பட்டாயிற்று (அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?) எப்படி ஒரு கட்டிடம் முழுவதுமாக மின் கம்பிகள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு மின்சார இயக்கிகளும் வார்த்தையினால் சோதிக்கப்பட்டு (ஓ, என்னே!), ஒவ்வொரு மின்சார இணைப்பும் வார்த்தையினால் சோதிக்கப்படுவது போலவே, “உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெறிகிற அக்கினியைக் குறித்து (ஆங்கில வேதாகமத்தில் ”கடும் சோதனை , fiery trial என்று உள்ளது - தமிழாக்கியோன்) ஏதோ புதுமையென்று திகையாமல். . .“ மின்சார இணைப்பில் ஒரு மின்வலிக் குறுக்கு வெட்டுப் பாய்வு (short) வருமானால் அது முழு இடத்தையுமே முழு இயக்கும் கருவியையுமே வெடிக்கும்படிக்குச் செய்யும். அதைப் போன்றவைகளை தேவன் தம்முடைய சபையில் வைத்திருக்க விரும்புவதில்லை. இந்தக் கடைசி நாட்களில் மின்காப்பு எரியிழை (Fuse),எரிந்துப் போய் செயலிழத்து மின் இயக்கங்கள் வெடிக்கும் ஒரு காரியமானது இருக்கவே இருக்காது. இல்லை ஐயா, சரி அவர் வந்து அவளை அங்கே சரியான இடத்தில் வெல்டிங் செய்து பொருத்துகிறார். ஒவ்வொரு விளக்கும் தன்னுடைய இடத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. எல்லாமே தயாராய் ஒரே ஒரு காரியத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றது. எதற்காக வென்றால் எஜமான் வந்து வார்த்தையில் சுவிட்சை இயக்குவதற்கே. நிச்சயமாக! சகோதரனே அது சரியாக இப்பொழுது கூட இருக்கலாம். உனக்கு சுகம் பெற வேண்டுமா, அந்த சுவிட்சை மாத்திரம் தொடு. நீ செய்ய வேண்டியதெல்லாம் அதுவே தான். உன்னிடம் உண்மையான மின் கம்பியிலிருந்து உன் இணைப்பு வைக்கப்பட்டு இயேசுவிலிருந்து வரும் இணைப்பானது இல்லாமலிருக்கு மானால், நீ செய்ய வேண்டியது என்ன என்றுதான் நான் கூறிக்கொண்டிருக்கிறேன். ஆமென்! அது சரி. 194இப்பொழுது, அற்புதங்களின் நாட்களானது கடந்து விட்டது என்று ஸ்தாபன அறிவுக்கூர்மையானது கூறுகின்றது. மின் கம்பிகளில் மின்சாரம் இல்லை. ஆனால் விசுவாசம் மேலான காரியத்தை அறிந்திருக்கின்றது; அவர்கள் அதை உணர்கின்றனர் ; அது கிரியை செய்வதைக் காண்கின்றனர். அது ஒளியேற்றுகிறது என்று அவர்கள் அறிந்திருக்கின்றனர்; அது என்ன செய்கிறதென்று அவர்கள் அறிந்திருக்கின்றனர். விசுவாசம்தான் மின்சாரமாகும். மின்சாரம், ஆவியானவராகும்; அறிவுக்கூர்மையானது ஸ்தாபனங்களின் வடிவுகளில் இருக்கின்றது. பிதாவின் வார்த்தையிலான விசுவாசத்திலேதான் இயேசுவை சாத்தான் சோதிக்க முற்பாட்டான். இதோ அவன் செய்தது என்னவென்றால், அவன் பூமியிலுள்ள தன்னுடைய பெரிய மதசம்பந்தமான ஸ்தாபனங்களை அவருக்குக் காண்பிக்க முற்பட்டான். ஆனால் அவனால் அவரை நயங்காட்டி சோதிக்க முடியவில்லை. “இங்கே வந்து என்னுடைய ஸ்தாபனத்தில் சேர்ந்துக் கொள்ளுங்கள், நான் இந்த ஸ்தாபனங் களுக்கெல்லாம் உங்களை பிஷப்பாக உயர்த்துவேன்” என்றான். “எழுதியிருக்கிறதே” என்று இயேசு கூறினார். ஆம், ஐயா, சாத்தானால் அவரைச் சோதிக்க முடியவில்லை. முடியவே முடியாது ஐயா! அவர் இந்த காரியத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவராவார். 195ஆனால் இயேசு வார்த்தையாயிருந்தார். அவர் தாமே வார்த்தையென்றும் தம்மைக்குறித்து அறிந்திருந்ததில் உள்ள விசுவாசத்தினாலே, மோசேயைப் போல ...... தான் யார் என்பதை மோசேயும் கூட அறிந்திருந்தான். தான் தேவனுடைய ஊழியக்காரனென்றும், தான் தேவனால் அழைக்கப்பட்டவன் என்பதையும் மோசே அறிந்திருந்தான். அதன் காரணமாகத்தான் சாத்தான் என்ன கூறினாலும் அதற்கு அவன் பயப்படவேயில்லை. சாத்தான் அவனைச் சோதிக்க முயன்றான். அந்தக் காரியத்தைச் செய்யாமல் ஓடிவிடும் படிக்கு மோசேயை பயமுறுத்த முயன்றான். ஆனால் மோசேயோதான் எங்கே நின்று கொண்டிருந்தான் என்பதை அறிந்திருந்தான். அது சரியே. இப்பொழுது, நான் சற்று வேகமாக முடிக்க வேண்டும். நான் அநேக பக்கங்களை ஒன்றன் பின் ஒன்றாக திருப்பிக்கொண்டே இருக்கின்றேன். 196பவுல் (இங்கே நான் முடிக்கும் முன்பாக ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன்), பவுல் தன்னுடைய கால மணவாட்டிக்கு இதைத் தெளிவாகக் கூறினான் (மணவாட்டியின் ஒரு பகுதியை பவுல் அளிப்பான் ; அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?), அவன் அளிப்பான், கடைசி நாட்களில் இயேசு கிறிஸ்துவுக்கு தான் அளிக்கவிருக்கின்ற தன்னுடைய கால மணவாட்டிக்கு பவுல் அறிவுக் கூர்மையைக் குறித்தும் அல்லது விசுவாசத்தைக் குறித்தும் தெளிவுபடுத்தினான். அதை நாம் சற்று வாசிப்போமாக. நீங்கள் 1 கொரிந்தியர் 4வது அதிகாரத்திற்கு - 1 கொரிந்தியர் 4 வது அதிகாரத்திற்குத் திருப்ப வேண்டு மென்று நான் விரும்புகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால் நாம் அதை வாசித்து இன்னும் சற்று நேரத்தில் நாம் முடிப்போமாக. 1 கொரிந்தியர் 4வது அதிகாரம். 18லிருந்து 20 வரை நான் வாசிக்க விரும்புகிறேன். சரி, இதோ அதை வாசிப்போமாக. நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதற்காகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள். ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, அவர்களில் இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்து கொள்வேன். இதை நீங்கள் அறிவீர்களா... ரோம சபையானது உள்ளே வர ஆரம்பித்த நேரம் அது, உள்ளே வர ஆரம்பித்தது. பாருங்கள்? அவர் அறிந்திருந்தார். “ அவர்கள் நம்மை விட்டு பிரிந்து போனார்கள். ஏனென்றால் அவர்கள் நம்முடையவர் களாயிருக்கவில்லை' என்று வேதம் கூறியிருப்பது உங்களுக்குத் தெரியுமல்லவா. உங்களால் காணமுடிகின்றதா? அது சரி. தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல. பெலத்திலே உண்டாயிருக்கிறது. 197பாருங்கள்? பேச்சிலே அல்ல: 'உம், நான் கல்வியறிவு பெற்றவன். சகோதரனே, நீ கொண்டிருப்பதைக் காட்டிலும் நான் அதிகக் கல்வியறிவு கொண்டிருக்கிறேன். நான் ஒரு சபைக்குரு. நான் ...'' என்பார்கள். அதற்கும் வார்த்தைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது : நீ ஒரு பன்றி அல்லது மற்றேதோ ஒன்று என்பதைத்தான் அது காட்டுகின்றது. பாருங்கள், பாருங்கள்? அதனுடன் எந்த ஒரு தொடர்பும் கொள்ளாதீர்கள். பாருங்கள்? பிசாசும் கூட அதிகமான அறிவைக் கொண்டிருக்கின்றான். பாருங்கள்? அது சரி. பாருங்கள்? தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது (பாருங்கள்?) உங்களுக்கு என்ன வேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வர வேண்டுமா? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமா? 198இப்பொழுது 2ம் அதிகாரம் (நாம் முடிக்கும் முன்னர், ஒரு நிமிடத்திற்கு இதை நான் பார்க்க விரும்புகிறேன்), 2ம் அதிகாரம் (அந்த பக்கத்திற்கு திருப்புங்கள்), இங்கே ஆரம்பத்திலிருந்து நாம் பார்ப்போம். இப்பொழுது பவுல், மணவாட்டிக்கு என்ன கூறுகின்றான் என்பதைப் பாருங்கள். மணவாட்டியின் இந்த பகுதியினரை கிறிஸ்துவிடம் அவன் அளிக்கப் போகின்றான். அவர்கள் இதை அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறான்... இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். பவுல் அதே விதமான அறிவை கொண்டிருந் திருப்பான்... அவன் அறிவாளி, ஆனால் அதை மறக்க வேண்டியவனாக இருந்தான் என்று அவர் கூறினார். அவன் எல்லாவிதமான பட்டங்களையும் கல்வியறிவையும் கொண்டிருந்தான். ஆனால் அவன் (இப்பொழுது கவனியுங்கள்!) கிறிஸ்துவை அறிந்து கொள்ள ஏதுவாக அதை மறக்க வேண்டியவனாக இருந்தான். சகோதரரே நான் உங்களிடத்தில் வந்த போது, தேவனைப் பற்றிய சாட்சியை சிறந்த வசனிப்போடாவது அல்லது . . . ஞானத்தோடாவது...... (பாருங்கள்? நான் அறிவுக்கூர்மையோடு வரவில்லை) .... அளிக்கிறவனாக வரவில்லை. 199“இதோ, நான் டாக்டர். இன்னார் - இன்னார் ஆவேன். எனக்கு எல்லா அறிவும் உண்டு..... நான் ..... எங்களுக்கு இந்த புகழ் பெற்ற வேத கலாசாலையில் பயிற்சியளிக்கப் பட்டுள்ளது.'' இல்லை, இல்லை! ”நான் அதைப் போன்ற அறிவுக்கூர்மையோடு நான் வரவில்லை“ என்று பவுல் கூறினான். இப்பொழுது நான் பேசிக்கொண்டிருப்பதன் பொருள் என்ன? விசுவாசமும் அதற்கெதிரான அறிவுக்கூர்மையும், பாருங்கள்? ”நான் அறிவுக்கூர்மையைக் கொண்டு உங்களிடம் நான் வரவில்லை'' என்று பவுல் கூறினான். “தேவனைப் பற்றிய சாட்சியை ஞானத்தோடு (அறிவுக்கூர்மையோடு) வந்து 'இதோ பார்! நான் உங்களுக்குக் கூறுகிறேன். அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டது என்றும், இந்தக் காரியங்களின் அர்த்தம் இதுவல்ல என்று வேதாகமக் கல்லூரியில் நான் படித்தேன்” என்று கூற நான் வரவில்லை .'' அவன் “சகோதரரே அவ்விதமாக நான் வரவில்லை” என்றான். இப்பொழுது அவன் என்ன கூறினான்? இயேசு . . . சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன். (நான் உங்களிடத்தில் இருந்தேன்). உங்கள்.... (வி - சு - வா - ச - ம்) ...... விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல. தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு (சகோதரன் பிரன்ஹாம் விசிலொலி எழுப்புகிறார் - ஆசி) என் பேச்சும் என் பிரசங்கமும் . . . மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல்... (அஹ்? “ஹலோ, யார் தட்டினார்கள்” என்று பூத் க்ளிப்பார்ன் கூறுவது போல, நான் வேதாகமக் கல்லூரி அறிவைக் கொண்டு நான் உங்களிடத்தில் வரவில்லை). . - ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்பட்டதாயிருந்தது. ஆமென்! நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? உங்கள் விசுவாசம் ஏதோ ஒரு ஸ்தாபனத்தின் ஞானத்திலே நிற்காமல், தேவனுடைய பெலத்திலே நிற்கும்படிக்கு தேவனுடைய பெலத்திலுள்ள விசுவாசத்தினாலே நிற்கும்படிக்கு உங்கள் நம்பிக்கை ...'' 200ஏதேன் முதற்கொண்டு இந்த இரண்டு மூலாதார சக்திகளும் யுத்தம் செய்து வந்தன ; தேவனுடைய விசுவாசமும் அதற்கெதிரான அறிவுக்கூர்மையும், அது ஒன்று கலவாதென்று தேவன் எல்லாக் காலங்களிலும் நிரூபித்தார். அது வளரத்தக்கதாக வேறு பிரிக்கப்பட வேண்டும். இப்பொழுது, ஒவ்வொன்றைக் குறித்தும் நான் இங்கே எழுதி வைத்திருக்கின்ற ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளைச் சீக்கிரமாக கூறுவேனாக. ஏசாவும் யாக்கோபும் ஒரு பரிபூரண நிழாலாயிருக் கின்றனர். இருவரும் பக்தியானவர்கள். இருவரும் இரட்டைப்பிறவிகள். ஏசா மதசம்பந்தமான ஒன்றுக்கு அடையாளமாக உள்ளான். சாமர்த்தியசாலியாக அவன் இருந்தான். அவன் நல்லொழுக்கத்தில் சிறந்து விளங்கின ஒருவனாவான். ஆனால் அந்த சேஷ்டபுத்திரபாகத்திற்கு அவனுடைய காரியமானது எந்தவிதத்திலும் உதவவில்லை . என்னென்ன செய்ய வேண்டும் என்பதில் யாக்கோபிற்கு எந்தவித அக்கறையும் இல்லை. அவன் சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற்றுக்கொண்டான். அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தவரையிலும் அவர்களால் ஒன்றும் பிறப்பிக்க முடியவில்லை. அது சரிதானே? ஒருவன் மற்றொருவனுக்கு எதிராக இருந்தான். உங்களால் இதைக் கிரகித்துக் கொள்ள முடிகின்றதா? ஆமென்! “நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து போய், அவர்களுடைய அசுத்தமானதைத் தொடாதிருங்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன் என்று தேவன் சொல்லுகிறார்.” பாருங்கள்? தேவன் யாக்கோபை ஆசீர்வதிக்கும் முன்னர், அவன் தன்னுடைய ஸ்தாபன சகோதரனிடமிருந்து பிரிந்து வர வேண்டியவனாக இருந்தான். ஆபிரகாமிடமும் தேவன் அதைத்தான் கூறினார். இஸ்ரவேல் மற்றும் மோவாப். நானூறு இஸ்ரவேல் தீர்க்கதரிசிகள் மிகாயாவிற்கு முன்னர் நின்றனர். மிகாயாவும் அவர்களிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு சென்று கர்த்தருடைய வார்த்தையைப் பெற்றுக் கொண்டு அதனோடே திரும்பி வந்தான். மோசே மற்றும் கோராகு, அதேவிதமாக இருவரும் கலவவில்லை . அவர்கள் பிரிய வேண்டியதாயிற்று. அது உண்மை தானே? 201ஆபிரகாமும் லோத்தும், லோத்து மத பக்தி வாய்ந்தவன் ஆவான். குளிர்ந்து போன சபைக்கு அவன் ஒரு அடையாளமாக இருந்தான். ஆனால் லோத்து ஆபிரகாமோடு இருந்து அவனுடன் அநேக வருடங்கள் அவனுடய பிரயாணம் செய்த வரையிலும் தேவனால் ஆபிரகாமை ஆசீர்வதிக்க முடியவில்லை. அவன் அவருக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து தன்னை, ஸ்தாபன சபையாகிய லோத்தினினிடமிருந்து பிரித்துக்கொள்ளும் வரையிலும் தேவனால் ஆசீர்வதிக்க முடியவில்லை. ஆகவே ஆபிரகாம் தன்னைப் பிரித்துக் கொண்டு தனியாக நடக்க வெளியே வந்த போது தேவன், “இதோ ஆபிரகாமே, எழுந்துநில், கிழக்கேயும், மேற்கேயும், வடக்கேயும், தெற்கேயும் நோக்கிப்பார். அவை யாவும் உன்னுடையதாகும்” என்று கூறினார். ஆனால் ஆபிரகாம் தன்னை முற்றிலும் பிரித்துக் கொள்ளும்வரைக்கும் தேவன் ஆசீர்வதிக்கவில்லை . அது முற்றிலும் சரியே. 202சேத்தை காயீனிடத்திலிருந்து தேவன் வேறு பிரிக்கும் வரையிலும் அவரால் சேத்தை ஆசீர்வதிக்க முடியவில்லை. அவர்காயீன் மேல் ஒரு அடையாளத்தைப் போட்டு அவனை நோத் தேசத்திற்கு அனுப்பினார். காயீனிலிருந்து அவனுடைய சாமர்த்திய அறிவுக்கூர்மையினால் நிறைந்த விஞ்ஞானிகளும் மற்றவர்களும் வெளிவந்தனர். அந்தப் பயிரிலிருந்து வெளிவந்தனர். சேத், தன்னுடைய நீதியிலும், அன்பிலும், தேவனுடைய வார்த்தையிலும் உள்ள விசுவாசத்திலும் ஒரு பயிரைப் பிறப்பித்தான். அந்தப் பயிர், கடைசி நாட்களில் எச்சரிக்கையை அளித்த ஒரு தீர்க்கதரிசியை பிறப்பித்தது. (அது சரி) ஒவ்வொரு விசுவாசியையும் காத்தது. அறிவுக்கூர்மையோ அவர்களில் ஒவ்வொருவரையும் அழித்துப் போட்டது. அவர்களுடைய ஒவ்வொருவரும் மரித்தனர். ஒவ்வொருவரும் மரித்தனர். உளவியலில் எத்தனைப் பட்டங்களை அவர்கள் வைத்திருந் தாலும் அது ஒன்றுக்கும் உதவவில்லை . அவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்புகளில் மாண்டு போயினர். 203தேவனுடைய ஆவியினாலே மறுபடியும் பிறந்து, அதின் ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசித்து அதன் பேரில் நிற்கின்ற ஒன்றிற்குப் புறம்பாக வெளியே இருக்கும் ஒவ்வொன்றும் தேவனுடைய நியாயத்தீர்ப்புகளில் மாண்டு போகும். இங்கே வீதிகளில் உடலை ஆட்டிக்கொண்டும் குலுக்கிக்கொண்டும் மற்றவற்றைச் செய்து கொண்டும் செல்கின்ற இவர்களைக் காணும் போது, இவர்கள் ஒன்றுமல்லவென்றும் இவர்கள் நியாயத்தீர்ப்பில் எரிக்கப்படுவதற்கென தேவைப் படுகின்ற பொருட்களே இவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது அழுகிப் போகும். அது கட்டப்படும். பெண்களே. விழித்துக் கொள்ளுங்கள்! 204ஒரு சிறு சாட்சியைக் கூறுகிறேன். ஆனால் விரிவாகச் சொல்வதற்கு நேரமில்லை. இங்கே சில சமயங்களுக்கு முன்னர் கலிபோர்னியாவில் ஒரு சிறிய பெண்ணைக் குறித்த ஒன்று. கூடாரத்துக்குள்ளாக அழைக்கப்படும் படிக்கு எதிர்பார்த்து நான் சாலையில் காரோட்டிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சிறு பெண் அங்கே சென்று கொண்டிருந்தாள். (பார்ப்பதற்கு அவமானகரமாக இருந்தது) அவள் மிக அழகாக இருந்தாள் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. அவள் தன்னுடைய உடலை நெளித்து குலுக்கிக் கொண்டு ஒரு சிறு குதிரை மேய்ப்பவனின் தொப்பியை அணிந்து நடந்து சென்று கொண்டிருந்தாள். கால்களில் அரைகுறையாக மூடப்பட்ட ஒரு செருப்பு வகையை அணிந்து அதிலிருந்து குச்சிகள் தொங்கிக்கொண்டிருந்தன. சாலையில் தன்னுடைய உடம்பை நெளித்து குலுக்கி நடந்துக் கொண்டிருந்தாள். அவளைக் கடந்து சென்ற ஒவ்வொரு மனிதனும் அவளை நோக்கி வண்டியின் ஒலியை எழுப்பி கையை அசைத்துச்சென்றான். அப்பொழுது நான் “காரை நிறுத்தி (நான் ஒரு பிரசங்கியாயில்லையெனில் ...... மேடா என்னோடு இருந்தாள், நான் .....) சகோதரியே, சற்று இங்கே பார். நான் உனக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீ அழகான பெண்ணாக இருக்கலாம். இதை நிரூபிக்கவும் முடியும்; பார்? உன்னால் கார்களில் வருபவர்கள் வேகமாக பிரேக்குகளை இயக்கி சாகச செயலாக வழுக்கிச் செல்லவும் இங்குமங்கும் திரும்பும்படிக்குச் செய்ய முடியும். பையன்கள் நரிகளைப் போல விசில் அடிக்க வைக்கவும் மற்றவைகளைச் செய்யவும் உன்னால் முடியும். ஆனால் வருகின்ற ஒரு நாளிலே உன்னுடைய சிறு உடலிலே வண்டுகளும் புழுக்களும் நெளியும். ஒருக்கால் இன்றிலிருந்து ஆறு வாரங்களில் அந்த உன் சரீரம் அந்த நிலையில், அழுகிக் கல்லறைக்குள்ளாக இருக்கும். ஆனால் உனக்குள் இருந்து அந்த இச்சையில் உழன்று கொண்டிருக்கும் உன்னுடைய ஆத்துமாவானது வருகின்ற காலங்கள் முழுவதுமாக பிசாசின் நரகத்திலே இருக்கும். 205மோசேயும் கோராகும்; லோத்தும் ஆபிரகாமும்: யோவான் ஸ்நானனும் ஆயக்காரரும்:இயேசுவும் தம்முடைய நாளின் ஸ்தாபன சபைகளும் (பாருங்கள்?) - விசுவாசம். அறிவுக்கூர்மை. சரி. அந்த ஆசாரியர்கள் எழுந்து நின்று “ஆம், நாங்கள் .....'' என்பார்கள். அவர் “ஆம்” என்பார். “நாங்கள் எங்கள் பிதாவிற்கு செய்தோம். நான் இன்னிதைச் செய்தோம்”. “ஆம்! உங்கள் பாரம்பரியங்களினாலே தேவனுடைய பிரமாணங்களை அவமாக்கி வருகிறீர்களே, மனிதனின் பிரமாணங்களை போதகமாக போதித்து வருகிறீர்களே,'' என்றார். அதற்கு அவர்கள், “உம், எங்களுக்குப் போதனை செய்ய நீ யார்? எந்த பள்ளிக்கூடத்திலிருந்து நீ வருகிறாய்?” என்றனர். அவர், “நான் செய்கிற கிரியைகள் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கின்றன. நான் மேசியாவின் கிரியைகளைச் செய்யாவிடில் என்னை விசுவாசிக்க வேண்டாம். நான் மேசியாவின் கிரியைகளைச் செய்வேனானால் அதை நீங்கள் அறிவீர்கள், அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள். அவைகள் என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கின்றன. நான் கிரியைகளைச் செய்யாவிடில் அதை நீங்கள் விசுவாசிக்க வேண்டாம்” என்றார். அங்கே அவர் இருந்த போது அந்த ஸ்தாபனங்கள் தங்களுடைய அறிவுக்கூர்மையினால் ஸ்தாபிக்கப்பட்டிருந்தனர். இயேசுவோ விசுவாசத்தைக் கொண்டிருந்தார். எதில் விசுவாசம்? தேவனுடய குமாரனாக தாம் இருந்தாரே, அதில் தான். பாருங்கள்? சரி. 206சீர்திருத்தலின் நாட்களிலே ரோம சபையினரோடு இருந்த பரி. மார்ட்டீன்-நான் கூற விழைவது என்னவென்றால் - அவர்கள் அஞ்ஞான காரியத்துக்குள்ளாக செல்வதற்கு முன்னர், ரோமாபுரியர் ரோமன் சபைக்கு வரத்துவங்கின போது, மார்ட்டீன் அங்கே வெளியே நின்று அந்த கத்தோலிக்க சபையின் போதகத்திற்கு விரோதமாகப் போராடினார். அற்புதங்களையும் அடையாளங்களையும் ஆச்சரியமான காரியங்களையும் செய்தார். அவருடைய சபைகள் மற்றும் அவருடைய எல்லோரும் அந்நிய பாஷைகளில் பேசி தீர்க்கதரிசனம் உரைத்து மகத்தான காரியங்களைச் செய்தனர். தேவனுடைய வல்லமை அவருடன் இருந்தது. அவர் மரித்தோரை எழுப்பினார். வியாதியஸ்தரை சுகப்படுத்தினார். மற்ற காரியங்களையும் செய்தார். ஆனால் அப்பொழுது அங்கே இருந்த அந்த கத்தோலிக்க சபையானது அவரை எதிர்த்து அவருக்கு எல்லா கொடுமையையும் செய்து அவரை சுட்டெரிக்க முயற்சித்தது. அது என்னவாயிருந்தது? அறிவுக்கூர்மை மற்றும் விசுவாசம் ஆகும். இப்பொழுதும் அதே தான் சம்பவிக்கின்றது. இது எல்லாவற்றைக்காட்டிலும் மேலான ஒன்றை நாம் கேட்போமாக. சகரியா 4 : 6ல் இங்கே இப்பொழுது இன்றிரவு நான் முடிக்கப்போகின்றேன். “பராக்கிரமத்தினாலும் அல்ல, பலத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே ஆகும்”, என்று கர்த்தர் சொல்லுகிறார். அறிவுக் கூர்மையினாலும் அல்ல, அறிவினால் அல்ல. ஸ்தாபனங்களால் அல்ல. ஆனால் என்னுடைய ஆவியைக் கொண்டு நான் என்ன செய்வேன்? என்னுடைய வார்த்தையை நான் ஊக்கமூட்டுவேன்,“ என்று வேதாகமம் கூறுகின்றது. 207சீஷர்கள் வார்த்தையைத் தங்களுக்குள்ளாக விதைத்துக் கொண்டனர். அப்பொழுது பரிசுத்த ஆவி வார்த்தையை ஊக்கப்படுத்த வந்தது. பாருங்கள்? 'பராக்கிரமத்தினாலும் அல்ல, இதனால் அல்ல, அதனால் அல்ல, அறிவுக்கூர்மை யினால் அல்ல, புரிந்து கொள்ளுதலினால் அல்ல, இதனால் அல்ல, அதனால் அல்ல, ஆனால் என்னுடைய ஆவியினால் என்னுடைய வார்த்தையை ஊக்கமூட்டுவேன். என்னுடைய ஆவியினால் தான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.“ விசுவாச வார்த்தையின் தண்ணீர் தான் தேவனுடைய வார்த்தையை ஊக்கமூட்டி அது கிரியை செய்யும்படிக்குச் செய்யும். 208எது ஜெயிக்கும்? இப்பொழுது அறிவுக்கூர்மைதான் கிரியைச் செய்யப்போகிறது போலத் தோன்றும்; ஆனால் அது கிரியைச் செய்யாது; அது கிரியைச் செய்யாது. தேவனுடைய வார்த்தையை முழுவதுமாக விசுவாசிக்கின்ற அந்தச் சிறு சபையானது சரியாக இப்பொழுது சிறுபான்மை யானதாக இருக்கின்றது. ஆனால் அதைக்குறித்து கவலைக் கொள்ளாதீர்கள். ''பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா சித்தமுள்ள வராயிருக்கிறார்,'' என்று வேதம் கூறுகின்றது. அது சரி, பாருங்கள்? பயப்படாதீர்கள், விசுவாசத்தில் அப்படியே நிலைத்திருங்கள். வார்த்தையோடு அப்படியே சரியாக தரித்து நில்லுங்கள். வார்த்தையை விட்டுவிடாதீர்கள். வார்த்தையோடு தரித்து நில்லுங்கள். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! அவருக்குச் சேவை செய்வீர்களா? ஆமென்! அவரை விசுவாசிப்பீர்களா? ஆமென்! ஆமென்! ஆமென்! நாம் இப்பாடலைப் பாடுவோமாக. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! அவருக்குச் சேவை செய்வீர்களா? ஆமென்! அவரை விசுவாசிப்பீர்களா? ஆமென்!ஆமென்! ஆமென்! நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! அவருக்குச் சேவை செய்வீர்களா? ஆமென்! அவரை விசுவாசிப்பீர்களா? ஆமென்!ஆமென்! ஆமென்! ஓ, நான் அவரை நேசிக்கின்றேன், நீங்களும் தானே? அது என்ன? விசுவாசத்தினாலே மட்டுமே, அறிவுக்கூர்மையினால் அல்ல, விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்படுகிறோம். அது சரி தானே? “அறிவுக்கூர்மையினால் அல்ல, அறிவினால் அல்ல, என்னுடைய ஆவியினால் ஆகும்” என்று கர்த்தர் சொல்லுகிறார். 209இப்பொழுது மின்சாரத்தைச் சீராக எடுத்துச் செல்லும் அந்த மின்ஊடு கடத்தியாகிய (conductor) செம்புக் கம்பியை (Copper wire) சபைக்குள்ளாக ஆழமாக வைப்போமாக. இப்பொழுது அலுமினியம் கம்பியானது மின்சாரத்தைக் கொண்டு செல்கின்ற ஒரு சரியான கருவியல்ல (பாருங்கள்?); அது சரியான மின் ஊடு கடத்தி அன்று. அது அல்ல! ஒரு ரப்பர் குழாய் மின்சாரத்தைக் கொண்டு செல்லும் ஒன்றல்ல ; அது மின்சார கம்பியைச் சுற்றி சுற்றப்படுகின்ற ஒன்றாகும் (insulation). மரக்கட்டையும் ஒரு மின்சாரத்தைச் சுற்றி பாதுகாக்க வைக்கப்படுகின்ற (insulator) ஒன்றாகும். நமக்கு அப்படிப்பட்ட இன்சுலேட்டர் கருவிகள் நமக்கு வேண்டாம். அவை தேவைக்கு அதிகமாக நம்மிடையே உள்ளன. அது சக்தியை தனிமைப்படுத்தி விடுகின்றது. ஆகவே நமக்கு தேவையானதெல்லாம் என்னவென்றால் மின்சாரத்தை சீராக எடுத்துச்செல்லும் மின் ஊடு கடத்திகள் (Conductor) மாத்திரமே. தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும் மறுபடியும் பிறந்த ஆண்களும் பெண்களும் மாத்திரமே. 210இப்பொழுது, மின் ஆக்கப்பொறியானது (Dynamo) கூறியுள்ளது என்ன? “என் நாமத்தினாலே நீங்கள் பிதாவை எதை வேண்டுமானாலும் கேளுங்கள், நான் அதைச் செய்வன்' என்பதே. இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்ன? இந்த மின் ஆக்கப்பொறிக்குள் (Plug) சொருகப்பட்டு இணைக்கப்படுவதேயாகும். ஆமென்! அது சரிதானே? இணைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவேண்டிய தெல்லாம் அதுவே. சொருகப்பட்ட பிறகு மின்சாரம் சரியாக கம்பியினூடாக பாய்ந்து வர ஆரம்பிக்கும். நடந்தது என்ன? வார்த்தை பாய ஆரம்பிக்கின்றது. “அவன் நதிகளின் தண்ணீர்களண்டையில் நடப்பட்ட மரத்தைப் போலிருப்பான். அவனுடைய இலைகள் உதிராது; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் (செழிக்கும், prosper ஆங்கில வேதத்தின் படி - தமிழாக்கியோன்), துன்மார்க்கனோ அப்படியிருப்பதில்லை, துன்மார்க்கனோ அப்படியிருப்ப தில்லை.'' இப்பொழுது கவனிப்பீர்களானால் இங்கே பாவி என்று குறிப்பிடப்படவில்லை. துன்மார்க்கன் என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பாருங்கள்? தான் தேவபக்தியுள்ளவன் என்று கூறிக்கொண்டு துன்மார்க்கனாக இருக்கின்ற ஒருவனைத் தான் குறிக்கின்றது. உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? அது சரி. துன்மார்க்கன் அவ்வாறு இருக்க மாட்டான்; துன்மார்க்கர் நீதிமான்களோடே நியாயத்தீர்ப்பில் நிற்க முடியாது. நிற்கமாட்டார்கள். ஐயா, நிச்சயமாக அவர்களால் நிற்க முடியாது. ஆகவே காலமானது வந்திருக்கின்றது, விதையானது விதைக்கப்பட்டாயிற்று. முன் குறிக்கப் பட்டவர்கள் மாத்திரமே அங்கே ..... 211நான் இப்பொழுது வெளிப்படுத்தல் 12 மற்றும் 13ஐ எடுத்து நிரூபிக்க என்னால்.... பூமியின் மேல் வருகின்ற இந்த அந்திக்கிறிஸ்து எல்லாரையும் வஞ்சிப்பான். மோசம் போக்குவான் (deceive) - எல்லோரையும் - இந்த ஸ்தாபனங்கள் மற்றும் அவன் போதகங்களில் இருக்கின்ற பூமியின் குடிகள் எல்லோரையும் அவன் மோசம் போக்குவான். உலகத் தோற்றத்திற்கு முன் முன் குறிக்கப்பட்டவர்களைத் தவிர ஏனைய ஒவ்வொருவரையும் பூமியின் மேல் இருக்கின்ற எல்லோரையும் மோசம் போக்குவான். ஆகவே அதைக் குறித்து உன்னால் ஒன்றுமே செய்ய முடியாது. ''ஆமென்' என்று மாத்திரமே கூச்சலிடு. ஓ, என்னே, அதை நான் நேசிக்கின்றேன். ஆம், ஐயா, நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! அவருக்குச் சேவை செய்வீர்களா? ஆமென்! அவரை விசுவாசிப்பீர்களா? ஆமென்! ஆமென்! ஆமென்! இப்பாடலை நீங்கள் எல்லோரும் பாடி பயிற்சி எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு அந்த பாடல் மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் தானே? எங்களுடைய ஃபீனிக்ஸ் கன்வென்ஷன் கூட்டங்களில் பாடப்பட்ட பாடலாகும். ஓ, அந்தப் பாடல் எனக்கு விருப்பமான ஒன்றாகும். நான் அதை நேசிக்கின்றேன். அதை நாம் மறுபடியும் பாடுவோமாக. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஆமென்! அவருக்குச் சேவை செய்வீர்களா? ஆமென்! அவரை விசுவாசிப்பீர்களா? ஆமென்!ஆமென்! ஆமென்! 212ஆம், நீங்கள் பாடிக்கொண்டேயிருக்கலாம். “அவரை ஆராதிப்பீர்களா?” என்ற பாடல் தெரியுமா? அவர்கள் எல்லோரும் தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தனர். ஓ, அங்கே ஃபீனிக்ஸில் நாங்கள் பாட ஆரம்பித்து அந்த இடமே சுக்கு நூறாக ஆகிவிடும் போலிருந்தது. ஆம், ஐயா, ஆமென், ஆமென், ஆமென்! இக்காலை நீங்கள் இணைக்கப்பட்டிருக்கிறீர்களா? ஆமென். சுவிட்சை இயக்கு! ஆமென்! மின்சாரத்தைப் பெற்றுக்கொண்டாயா? ஆமென். ஆமென். ஆமென்! அது இப்பொழுது பெருகும். ஆமென்! கனி கொடுக்கும். ஆமென்! நீங்கள் அதைக் காண்பிப்பீர்கள். ஆமென். ஆமென். ஆமென். ஓ இது அற்புதமானதல்லவா? இவ்வளவு நேரமாக நான் உங்களை இங்கே இருக்க வைத்ததற்கு என்னை மன்னிக்கவும். ஆனால் நான் ஒரு பூபிலி நேரத்தை, ஒரு அற்புதமான தருணத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். சரி, 213இங்கே சுற்றுமுற்றும் இருப்பவர்களே சற்று கவனியுங்கள். இப்பொழுது அடுத்த ஞாயிறன்று நாள் சகோதரன் லிட்டல் பீல்டின் இடத்திற்கு சிறு வார்த்தையை பரப்புவதற்கு செல்கின்றேன். ஒருக்கால் இங்கே நாம் பார்த்த வார்த்தையின் சிலவற்றை எடுத்து அந்த தேவனுடைய சபையாகிய அவர்களிடம் தூவுவேன். இங்கே நான் பேசின காரியத்தின் பேரில் சிலவற்றை அங்கே நான் பகிர்ந்து கொள்வேன். நீங்களும் அங்கே வரவேற்கப்படுகிறீர்கள். ஆனால் 1500 பேர் உட்காரக்கூடிய ஒரு சிறிய சபையை அவர்கள் கொண்டிருக்கின்றனர். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் அச்சபையைப் பிரதிஷ்டை செய்தேன். ஆகவே அங்கு இடமானது நிறைந்து விடப் போகின்றது. ஆனால் நான் வருவதாக சகோதரன் லிட்டில் பீல்டுக்கு வாக்கு கொடுத்திருந்தேன். அவர் விலையேறப் பெற்ற ஒரு சகோதரன் ஆவார். தன்னால் முடிந்த வரைக்கும் ஒரு மனிதன் தன்னுடைய வாக்குறுதியை காத்துக் கொள்வான். கர்த்தருக்குச் சித்தமானால் நான் அங்கு செல்வேன். இங்கே கூடாரத்தில் ஆராதனை இருக்கும். இங்கே இருக்கும் மக்களாகிய நீங்கள் இங்கு வரலாம். பிறகு வருகின்ற அடுத்த ஞாயிறன்று சகோதரன் ரோலுடன் சகோதரன் ஆர்கன்பிரைட்டும் இங்கே இருப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சகோதரன் ரோல் பேசுவதை நீங்கள் கேட்டு மகிழ்வீர்கள் என்பது நிச்சயம். அது சரி. இப்பொழுது நாம் ஆராதனையை சகோதரன் நெவிலிடம் ஒப்படைத்து அவர் நமக்கு என்ன கூறப்போகின்றார் என்று நாம் கேட்போமாக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.